இரத்தக்கட்டு இரகசியம்!

irathakkattu irakasiyam!

மனிதனுக்கு ஏற்படும் உபாதைகளில் மிகவும் முக்கியமானது ரத்தக்கட்டு. அடிபட்ட இடத்தில் ரத்தம் வெளியேறாமல், கன்றிப்போய், சிவந்து, வீக்கத்துடன் பார்க்கவே பயங்கரமாக காணப்படும். ரத்தக்கட்டு ஏற்படக் காரணம், முதலுதவி சிகிச்சை, ரத்தக்கட்டு பாதிப்பில் இருந்து உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் விதம் என எல்லாம் பேசுகிறார்

Continue reading →

வாட்ஸ் அப் பயன்பாட்டில் பாதுகாப்பு குறைவு

உடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வதில், இன்று மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்ட தளமாக வாட்ஸ் அப் வளர்ந்துவிட்டது. நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவராக இருந்தால், அதில் உள்ள பாதுகாப்பு குறைவான வழிகள் சிலவற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இணைய மால்வேர் புரோகிராம்கள்: இப்போது வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பெர்சனல் கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகப் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. இதனால், பல ஹேக்கர்கள், வாட்ஸ் அப் தளத்திலிருந்து வருவதைப் போன்ற செய்திகளை உலா விட்டுள்ளனர். பல வாடிக்கையாளர்கள், இந்த போலியான தளங்களில் சிக்கி, கொத்து கொத்தாகத் தங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்து இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆண்ட்டி வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் காஸ்பெர்ஸ்கி லேப்ஸ், வாட்ஸ் அப் போல, போலியாக இயங்கும், அதுவும் பல்வேறு மொழிகளில் இயங்கும் தளங்களைக் கண்டறிந்துள்ளனர். இவை, வங்கிக் கணக்குகள் போன்றவற்றைக் கண்டறிந்து கறந்துவிடும் வகையில் இயங்கும் மால்வேர்களாக உள்ளன. இதிலிருந்து தப்பிக்கும் வழி எளியதுதான். பெர்சனல் கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் செயலி இயங்க வேண்டும் என்றால், அந்த நிறுவனத்தின் இணைய தள முகவரி உள்ள உண்மையான தளம் சென்று, அதற்கான புரோகிராமினைத் தரவிறக்கம் செய்திடவும். நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி

Continue reading →

புகைப்பிடிப்பதை விட சென்ட் அடித்துகொள்வதே உடலுக்கு கேடு விளைவிக்கும்

வாசனைகளுக்கு பழகிவிட்டது நவீன மூக்கு. காலையில் கண் விழிப்பதில் தொடங்கி இரவு இமை மூடும் வரை நம்மை சுற்றி வாசனையாக இருப்பதை போல பார்த்துக் கொள்கிறோம். முன்பெல்லாம் பெட்ரூமுக்கு மட்டும்தான் ரூம் ஃப்ரெஷ்னர். இப்போது காரில்கூட ஃப்ரெஷ்னர் அடித்துவிட்டுதான் வண்டியை ஸ்டார்ட் செய்கிறோம். டூத்பேஸ்டில் தொடங்கி, இரவில் வாய் கொப்பளிக்கும் மவுத்வாஷ் வரை ஒரு நாளைக்கு குறைந்தது பதினைந்து மணி நேரமாவது வாசனையாக இருக்கிறோம். சில பேருக்கு தூக்கத்தில்கூட ஏதோ வாசனையை நுகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். சோப்பு, ஷாம்பூ, ஹேர் ஆயில், ஹேர் க்ரீம், கலோன், ஆஃப்டர் ஷேவ் லோஷன், டியோடரன்ட், சென்ட், பெர்ஃப்யூம், லோஷன், ஃபேஸ் க்ரீம் என்று நம்மை வாசனை ஆக்கிக் கொள்ளதான் எவ்வளவு விஷயங்கள் தயாரிக்கப்படுகின்றன. உலகில் இன்று பல லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நம் மூக்கை மட்டுமே குறிவைத்து நடந்து கொண்டிருக்கிறது. தத்தம் வாசனையை நுகரச் சொல்லி எவ்வளவு கவர்ச்சி யான, குயுக்தியான விளம்பரங்கள்? நாம் அந்த

Continue reading →

சேமிப்பும் முதலீடும்… உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்!

ந்தியர்கள் பொதுவாகவே சேமிக்கும் பழக்கத்தை இயல்பாகக் கொண்டவர்கள். இந்த சேமிக்கும் பழக்கம் ஒருவரை பாதிப்பிலிருந்து நிச்சயம் காப்பாற்றும் என்றாலும் இதுவே ஒருவரை பெரும் பணக்காரராக உயர்த்திவிடாது. இந்தியாவில் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களே அதிகம் என்பதால், அவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக்கொள்ள சேமிக்கும் பழக்கத்தில் இருந்து முதலீடு செய்யும் பழக்கத்துக்கு மாறவேண்டும். சேமிப்பும் முதலீடும் ஒன்று என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்த இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.

 

சேமிப்பு என்பது செலவுகள் போக மீதி உள்ளதை பிற்காலத் தேவைக்காக எடுத்து வைப்பது.  உதாரணமாக, உண்டியலில் போடும் பணம் என்றைக்கும் வளராது. நாம் சிறுக சிறுக சேமிக்கும் பணம் அப்படியே இருக்கும். சிறிது காலம் கழித்து விலைவாசி ஏற்றத்தோடு ஒப்பிடும்போது, அதன் மதிப்பு வெகுவாகக் குறைந்திருக்கும்.

Continue reading →

ஆரோக்கியத்துக்கு அருமையான 5 வழிகள்!

சீராக பராமரிக்கக்கூடிய உடலைக் கொண்டே சிறந்த ஆரோக்கியம் பெற முடியும். அதன் மூலம்தான் அருமையான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இதுதானே புத்திசாலித்தனம்? இனிசிகரெட்டை தொட மாட்டேன்… மது அருந்துவதை அறவே விட்டு விடுவேன்…காபி, டீ குடிக்க மாட்டேன்… எண்ணெயில் வறுத்தெடுத்த பலகாரத்தை தொடவே மாட்டேன்… காலை 5 மணிக்கு எழுந்து இரவு 9 மணிக்கு உறங்கச் சென்று விடுவேன்… தினமும் 2 மணி நேரத்துக்கு மேல் டி.வி. பார்க்க மாட்டேன்… ஆபீஸ் வேலைகளை வீட்டில் செய்யவே மாட்டேன்… லேப்டாப், மொபைலை இரவில் தொட மாட்டேன்… தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வேன்… பரீட்சைக்கு முதல் நாள் மட்டுமே படிக்காமல், அன்றைய பாடங்களை அன்றன்றே படித்துவிடுவேன்… தினமும்

Continue reading →

மாநில மொழிகளும், வேகமும் இணைந்தால் இணைய வழி வர்த்தகம் 20,000 கோடி டாலரை எட்டும்

ஒரு சிறந்த ஓட்டப் பந்தய வீரனின் ஓட்டத்திற்கு இணையானதாக, இந்திய இணையப் பயன்பாடு வளர்ச்சி பெற்று இன்று வேகமாக இயங்கி வருகிறது. முதலில், ஓட்டத்திற்குத் தயாராவது போல, ஒரு கோடி இணையப் பயனாளர்களைப் பெற, பத்து ஆண்டு எடுத்துக் கொண்டது. இது பத்து கோடியை எட்ட, மேலும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன.
ஆனால், அடுத்த ஓட்ட நிலை மிக வேகமாக மாறியது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 2010 முதல் 2013 ஆம் ஆண்டு கால இடைவெளியில், இன்னும் பத்து கோடி அதிகரித்தது. அடுத்த கட்டம் தான், குறிப்பிடத்தக்க வேகத்தினை இணையம் எட்டியது. ஆம், அடுத்த பதினெட்டு மாதங்களில், டிசம்பர் 2013ல், இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை 30 கோடியை எட்டியது. இப்போது மாதந்தோறும், 50 லட்சம் புதிய இணையப் பயனாளர்கள் இணைந்து கொண்டே இருக்கின்றனர். இந்த வேகத்தில் சென்றால், 2018-19 ஆம் ஆண்டில், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 கோடியாக இருப்பார்கள். கூகுள் இந்தியாவின் மேலாண் இயக்குநர் ராஜன் ஆனந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

Continue reading →

மாம்பழம் சாப்பிடப் போறீங்களா? இதை கொஞ்சம் படிங்க…

முக்கனிகளில் முதல் கனி என்ற சிறப்பு கொண்டது மாங்கனி. அதன் பெயரைச் சொன்னாலே வயது வித்தியாசமன்றி அனை வரின் நாக்கிலும் எச்சில் ஊறும். சேலத்து மாம்பழம், மல்கோவா, ராஸ்பூரி என்று மாம்பழம் வகை வகையாய் வந்துகுவியும், மாம்பழ சீசனில். தாய் ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும் என கிராமப்புறங்களில் சொலவடை கூட உண்டு.

கோடைக்காலம் வந்துவிட்டது. இப்போது வீதிக்கு மாம்பழங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எல்லாமே நல்ல பழங்கள் இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல்.

Continue reading →

நெட் நியூட்ராலிட்டியை செயல்படுத்துங்கள்!

ண்பதற்கு உணவு, உடுப்பதற்கு உடை, இருப்பதற்கு இருப்பிடம் ஆகிய மூன்றும் கிடைத்தால் போதும் என்று நினைத்தது அந்தக் காலம். இந்த மூன்றுடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு இன்டர்நெட்டும் கட்டாயம் வேண்டும் என்று சொல்கிற அளவுக்கு நம் வாழ்க்கையில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக மாறியிருக்கிறது. இதனால்தான் ‘நெட் நியூட்ராலிட்டி’ என்று சொல்லப்படும் இணையதள சமநிலைக்கு பாதிப்பு வந்தவுடன்,  இணையத்தைக் காப்போம் என அனைவரும் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
இணையதள சேவையைப் பெறுவது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. உலகின் பல நாடுகளிலும் இந்த உரிமைக்கு எந்தப் பங்கமும் வராமல் பேணப்படுவது போல, நம் நாட்டிலும் பேணப்பட வேண்டும். இந்த விஷயத்தில் ஓ.டி.டி. எனப்படும் ‘ஓவர் த டாப் ஆப்ஸ்களை’ காரணம் காட்டி, இணையதளத்தை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை செல்போன் சேவை தரும் நிறுவனங்கள் உயர்த்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. உதாரணமாக, வாட்ஸ்அப் சேவையைப் பெற அந்த நிறுவனம் கட்டணம் விதிக்கலாமே தவிர, அந்த சேவை செல்போன் மூலம் வருகிறது என்பதற்காக செல்போன் நிறுவனம் கட்டணம் விதிப்பது சரியாகாது. 

இத்தனைக்கும் இன்றைக்கு செல்போன் நிறுவனங்களின் வருமானம் ஏறுமுகமாகவே இருக்கிறது. கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகளின்படி,  ஏர்டெல், ஐடியா ஆகிய செல்போன்  நிறுவனங்களின் வருமானம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அண்மைக் காலமாக குரல்வழி (Voice) சேவை மூலம் கிடைக்கும் வருமானம் கொஞ்சம் குறைந்திருந்தாலும், தகவல் வழி (Data) சேவை மூலம் கிடைக்கும் வருமானம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்த சேவையை இனிவரும் காலத்தில் இன்னும் பல கோடி பேர்  பயன்படுத்தும்போது செல்போன் நிறுவனங்களின் வருமானம் பெருகவே செய்யும். உண்மை இப்படி இருக்க, தங்கள் தொழிலே அழிந்துவிடும் என்கிற மாதிரி செல்போன் நிறுவனங்கள் கூப்பாடு போட வேண்டியதன் அவசியம்தான் என்ன?

பிரதமர் மோடி கனவுகாணும் வளர்ச்சி வெறும் கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியாக இல்லாமல் அனைத்து மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் இணையதள சமநிலை கட்டாயம் காக்கப்பட வேண்டும். இன்று இந்தியர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இணையதள சமநிலைக்கு ஆதரவு அளித்துள்ளதை அரசு ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு ஆதரவான முடிவை எடுக்கத் தவறினால், மோடியின் டிஜிட்டல் கனவு காணாமலே போய்விடும்! 

உறவுகள்

”உன்னை மன்னிக்கிற அளவுக்கு எனக்குப் பெரிய மனது உண்டு. ஆனால், உன்னை மறுபடி நம்புகிற அளவுக்கு நான் முட்டாள் இல்லை…” – நம்பிக்கைத் துரோகத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கான அழகான, அர்த்தமுள்ள வாசகம் இது. துணை தன்னை ஏமாற்றுவதாக, வேறொருவருடன் உறவு கொண்டிருப்பதாக எழுகிற சந்தேக எண்ணம், வாழ்க்கையிலேயே மிகவும் வலி நிறைந்த உணர்வு. அப்படி ஒரு சந்தேகம் எழுகிற போது அது உண்மையாக இருக்குமா இல்லையா என்கிற தவிப்பு இன்னும் கொடியது. அதை எப்படி உறுதி செய்வது? பல நேரங்களில் இந்த சந்தேகம் உண்மையானதாகவே இருக்கும். நம் துணை அப்படிப்பட்டவர் அல்ல என்கிற எண்ணத்தில் அந்த சந்தேகத்தை அலட்சியப்படுத்துவது சரியானதல்ல. அப்படி அலட்சியப்படுத்தும் பட்சத்தில்,

Continue reading →

கோடையில் குளு குளு குளியல்கள்

கோடைகால தட்பவெப்ப நிலைக்கு தகுந்த வாறு உடலை பலப்படுத்தி உடலின் நச்சுத் தன்மை நீங்க புத்துணர்ச்சி குளியல் முறைகள் மிக அவசியம் அவைகள் இதோ,

வாழையிலை குளியல்: உடலில் உள்ள கெட்ட நீரினை வெளியேற்றி உடல், மனம் இவற்றின் இறுக்கத்தை குறைத்து புத்துணர்ச்சி அளித்து நல்ல உறக்கத்தை தரும். உடல் பொலிவை ஏற்படுத்தி உடல் எடை குறைவதோடு தோல் நோய்கள் முக்கியமாக சொரியாஸிஸ் நோய் கட்டுப்படுகிறது.

வேப்பிலை குளியல்: வேப்பிலை இயற்கையிலேயே நல்ல கிருமி நாசினி இக்குளியல் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் உடலில் உள்ள அனைத்து நச்சுக் கிருமிகளை அழிக்கவும் பயன்படுகிறது. உடல் துர்நாற்றத்தை போக்கவும், தோல் வியாதிகளை குணப்படுத்தவும் நல்ல மருந்தாகும்.

Continue reading →

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,416 other followers