புற்றுநோயைத் தடுக்கும் தக்காளி!

`புராஸ்டேட் கேன்சர்’ என்பது ஆண்களை அதிகளவில் தாக்கும் புற்றுநோய். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் அதிகம் ஏற்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

புராஸ்டேட் புற்றுநோய், ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பித் திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியைத் தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. விளைவு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போலத் தோன்றும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படும். சிறுநீருடன் ரத்தம் கலந்துபோகும் அறிகுறியும் ஏற்படலாம்.

இந்நிலையில், புராஸ்டேட் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக டாக்டர் மைக்கேல் டபிள்யூ ஸ்மித் கூறுகிறார். தக்காளிக்கு, அதுவும் சமைத்த தக்காளிக்கு புராஸ்டேட் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக அவர் கூறுகிறார்.

தக்காளியில் காணப்படும் `லைக்கோபீன்’ என்ற பொருள்தான் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகிறது. தர்ப்பூசணி பழம், இளஞ்சிவப்பு திராட்சைப் பழங்களிலும் லைக்கோபீன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,786 other followers

%d bloggers like this: