தொடரும் தீராத புதிர்கள்

கேள்வி: டிஜிட்டல் போட்டோ அல்லது படங்கள் உள்ள போல்டரில் Thumbs.db என்ற பைல் உள்ளது? ஏன்? இதனை அழிக்கலாமா?
பதில்: Thumbs.db என்பது விண்டோஸ் சிஸ்டம் பைல். குறிப்பிட்ட போல்டருக்கான தம்ப் பெயில் படங்களை உள்ளடக்கிய பைலாகும். இதனை அழிக்கலாம்.

கேள்வி: என் ஸ்மார்ட் போன் மற்றும் கேமராவில், படங்கள் அனைத்தும் ஏன் DCIM என்ற போல்டரிலேயே வைக்கப்படுகின்றன?
பதில்: டிஜிட்டல் கேமராவில் இது வரையறுக்கப்பட்ட ஒரு ஸ்டாண்டர்ட் போல்டர். Digital Camera IMages என்பதன் சுருக்கமே இது. இப்படி ஒரே மாதிரியான வரையறை உள்ளதால் தான், அனைத்து டிஜிட்டல் கேமராக்களிலும், படங்களை நாம் இந்த போல்டரில் தேட முடிகிறது.

கேள்வி: சில பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விநோதமான போர்ட்கள் உள்ளன. இவை எதற்கானது என எப்படித் தெரிந்து கொள்வது?
பதில்: தற்போது வரும் பல வசதிகளைப் பயன்படுத்த, இது போன்ற புதிய போர்ட்கள் தேவைப்படுகின்றன. இவற்றின் பயன் என்ன என்பதனை, இணைய தளத்தில் இந்த போர்ட் களைப் பற்றிக் கூறும் இணையப் பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். படங்களுடன் விளக்கம் கிடைக்கும்.

கேள்வி: குயிக் டைம் சாப்ட்வேர் எப்படி கம்ப்யூட்டரில் வந்தது எனத் தெரியவில்லை. இதனை நான் வைத்திருக்க வேண்டுமா?
பதில்: உங்கள் கம்ப்யூட்டரில் ஐட்யூன்ஸ் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். அதனுடன் இணைந்து வந்திருக்கும். இது உங்களுக்குத் தேவை இல்லை எனில் நீக்கிவிடலாம்.

கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில், காசு கொடுத்து வாங்கிய எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.வேர்ட் நன்றாக இயங்குகிறது. ஆனால் என் நண்பர் அனுப்பிய .docx பார்மட் பைல் இதில் திறந்து படிக்க இயலவில்லை. ஏன்?
பதில்: நீங்கள் இன்ஸ்டால் செய்திருப்பது எம்.எஸ். ஆபீஸ் 2003. இதன் பின்னர் வந்த ஆபீஸ் 2007 தொகுப்பில் உருவானதே, உங்கள் நண்பர் அனுப்பியது. இதனைத் திறந்து பார்க்கும் வசதி கிடைக்காது. நீங்கள் புதிய தொகுப்பிற்கு மாற வேண்டும். அல்லது உங்கள் நண்பர் வேர்ட் 2007ல் கிடைக்கும் வேர்ட் 2003 .doc பார்மட்டில், பைலை சேவ் செய்து உங்களுக்கு அனுப்ப வேண்டும். அல்லது இந்த பார்மட் மாற்றத்தினை ஏற்படுத்தித் தரும் இலவச இணைய தள வசதியைப் பயன்படுத்தலாம்.

கேள்வி: சில சாப்ட்வேர் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்த பின்னரும், அதனைச் சார்ந்த சில புரோகிராம்கள், கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு அழிய மறுக்கின்றன. காரணம் என்ன?
பதில்: புரோகிராம்களுடன் வரும் அன் இன்ஸ்டால் வசதியைப் பயன்படுத்தினாலும், இந்த பிரச்னை ஏற்படுவதுண்டு. எனவே, அன் இன்ஸ்டால் செய்திட வேறு சில தர்ட் பார்ட்டி புரோகிராம்களைப் பயன்படுத்திப் பார்க்க வும்.

கேள்வி: ஜாவா மற்றும் அடோப் ரீடர் அடிக்கடி அப்டேட் செய்யப்படுகிறதே, ஏன்? இவற்றை நானும் அப்டேட் செய்திட வேண்டுமா?
பதில்: இவற்றில் உள்ள சில பலவீனமான இடங்களைப் பயன்படுத்தி மால்வேர்கள் நுழைந்து உங்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்கும் என்பதால், இந்த அப்டேட் பைல்கள் தரப்படுகின்றன. பாதுகாப்பாக இயங்க வேண்டும் எனில், அப்டேட் செய்து கொள்வதே நல்லது. இதே போல, எந்த புரோகிராம் பயன் படுத்தினாலும், அவற்றிற்கென அப்டேட் வருகையில் கட்டாயம் நாம் அப்டேட் செய்து கொள்வது நமக்கு நல்லது.

கேள்வி: விண்டோஸ் சிஸ்டத்தினை அப்டேட் செய்திட வேண்டுமா?
பதில்: முந்தைய கேள்விக்கான பதிலைப் படிக்கவும். கட்டாயம் அப்டேட் செய்திட வேண்டும்.

கேள்வி: சில பைல்களை ஏன் என் இமெயிலுடன் அனுப்ப முடிவதில்லை?
பதில்: பல காரணங்கள் உண்டு. பைல் பெரிதாக இருக்கலாம். சில பைல்களை (font file, exe file etc.) அனுப்ப முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கலாம். சில பைல்களை அதன் போல்டரிலிருந்தபடி (font file) இணைக்க முடியாது. காப்பி செய்து வேறு டைரக்டரியில் வைத்துத்தான் அனுப்ப முடியும். exe பைல்களை அதன் துணைப் பெயர் மாற்றி அனுப்பும் கில்லாடிகளும் இருக்கின்றனர்.

One response

  1. en mobile il folder i open seithal NOT ENOUGH MEMORY APADI NU VARUGIRADHU ATHAI EPADI COORECT SEIRADHU

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,883 other followers

%d bloggers like this: