Category Archives: அறிவியல் செய்திகள்

பூமியை போன்று ஒரு புதிய பழமையான பெரிய கிரகம் கண்டுபிடிப்பு

கெப்ளர் விண் தொலைநோக்கி மூலம் பூமியைப் போன்று புதிய கோளை கண்டறிந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்புதிய கோளுக்கு ‘கெப்ளர் 452பி’ என நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளது மற்றும் சூரியனை விட 1.5 ஆண்டுகள் பழமையானது. மேலும், பூமியின் சுற்றளவை விட 60% பெரியது. பூமியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிக்னஸ்(Cygnus) நட்சத்திரக் கூட்டத்தில் இது அமைந்துள்ளது. இதுவரை இந்த தொலைநோக்கி மொத்தம் 1030 புதிய கிரகங்களை கண்டறிந்து உறுதிபடுத்தியுள்ளது. கெப்ளர் 452பி பூமியை விட 5% பெரியதாகும், அதனால் அது சுற்றுப்பாதையில் சுற்றிவர 385 நாட்கள் ஆகும். இக்கிரகத்தில் பூமியின் வெப்பநிலையே நிலவுகிறது, மேலும் பூமியை விட 20% வெளிச்சம் கொண்டது மற்றும் அதன் விட்டம் 10% பெரியதாகும். பூமியைப் போலவே இந்த கெப்ளர் 452பி இல் பாறைகள் மற்றும் தண்ணீர் உள்ளது.

மண்ணில் இருந்தே கேன்சரை குணப்படுத்தும் அடுத்த தலைமுறை மருந்துகள் உருவாக வாய்ப்பு

லண்டன்: அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஐந்து கண்டங்களில் (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா) உள்ள கடற்கரை, மழைக்காடுகள் மற்றும் பாலைவனங்களில் சேகரிக்கப்பட்ட 185 மண் மாதிரிகளை வைத்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில், இதுவரை அறியப்படாத ஆன்டிபயாடிக் மற்றும் கேன்சரை குணப்படுத்தும் மருந்துகளை மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளிலிருந்தே கண்டுபிடிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

Continue reading →

வால்வெளியில் தரை இறங்கி வரலாற்று சாதனை படைத்த ரொசெட்டாவின் ஃபைலீ விண்கலம்

ரொசெட்டாவின் ஃபைலீ தரையிறங்கி வெற்றிகரமாக 67பி என்ற வால்வெளியில் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. வால் நட்சத்திரங்கள் தோன்றியது, அவற்றின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்வதற்காகவும், பூமியில் உயிரினங்கள் தோன்றியது பற்றி ஆராய்வதற்காகவும் 67பி என்ற வால்வெளிக்கு ரொசெட்டா விண்கலம் 2004 ஆம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ரொசெட்டா (Rosetta) விண்கலம் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். ரொசெட்டா விண்கலத்தில் ரொசெட்டா விண்ணாய்வி மற்றும் ஃபைலீ தரையிறங்கி என இரண்டு விண்கலம் உள்ளது. ரொசெட்டா விண்ணாய்வி வால்வெளியில் சுற்று வட்டத்தில் சுற்றி வந்து நீண்ட காலத்துக்கு ஆராயும். அதேபோல் ஃபைலீ தரையிறங்கி

Continue reading →

நிலா அது… வானத்து மேலே..

nila athu... vanathu mele...

பூமி உருவாகி வந்த சமயத்தில் அதன் மீது வேறொரு கிரகம் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னால் அப்போலோ விண்கலத்தில் நிலவுக்கு சென்றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்துவந்த நிலவுப் பாறைகளில் ரசாயன ஆய்வுகளை மேற்கொண்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். நானூற்றைம்பது கோடி ஆண்டுகள் முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கிரகம் பயங்கரமாக மோதி யது என்பதும், அப்படி மோதிச் சிதறிய

Continue reading →

வானிலை அறிக்கை வினோதங்கள்!

vanilai arikkai vinothangal!

இன்சாட் 1B செயற்கைக்கோள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வானிலை மற்றும் மழைக்கான சூழ்நிலை பற்றி தரை நிலையங்களுக்கு தகவல் அனுப்பிக் கொண்டேயிருக்கும். * புயல் பற்றிய எச்சரிக்கைகளை இப்போது நாம் கேட்கிறோமே… அந்த எச்சரிக்கை செய்யும் வழக்கம் முதன்முதலில் 1886ல் துவங்கியது. * மின்னலடிக்கும்போது குடை பிடித்து நடப்பது விபத்தில் முடியும். * கடும் மழையில் காருக்குள் அமர்ந்திருப்பது மிக பாதுகாப்பானது. * சூறைக் காற்றை வங்காளிகள் ‘பைசாகி பேரழிவு’ என்றும் மற்ற வட நாட்டினர் ‘யானையின் தும்பிக்கை’ எனவும் அழைக்கின்றனர். * செயற்கைக்கோள்கள்

Continue reading →

அலிஷா பூமிக்குத் திரும்புவாரா?

லிஷா கார்சன்… 13 வயது அமெரிக்கச் சிறுமி. இப்போது அமெரிக்கப் பிரபலமாக இருக்கும் அலிஷா, இன்னும் சில வருடங்களில் அகில உலகப் பிரபலம் ஆகிவிடுவார். அப்போதைய தலைமுறை மாணவர்கள், ‘செவ்வாய்க் கிரகத்தில் கால் பதித்த முதல் பெண், அலிஷா கார்சன்’ என நெஞ்சில் குத்திக் குத்தி மனப்பாடம் செய்யலாம். அல்லது டேப்லெட்டில் லைவ் வீடியோ பார்த்து லைக்கிட்டு ‘குட் டே அலிஷா’ என கமென்ட்டலாம்.

சிலர் பிறக்கும்போதே ஐ.க்யூ லெவல் எகிறிப் பிறப்பார்களே… அப்படி ஒரு பெண் அலிஷா. ‘நான் விண்வெளி வீராங்கனையாக வேண்டும்’ என அலிஷா சொன்னபோது அவளுக்கு வயது… மூன்று! பள்ளியில் இப்போது செவன்த் கிரேடு படிக்கும் அலிஷா தன் பாடத் திட்டங்களோடு சேர்ந்து விண்வெளி தொடர்பான பாடங்கள், ஸ்பானிஷ், பிரெஞ்சு, சைனீஸ்… மொழிகளையும் கற்றுக்கொண்டுவிட்டாள்.

Continue reading →

தொலைநோக்கி மூலம் படம்பிடிக்கப்பட்ட சூப்பர்நோவா

tolainokki moolam badambidikkappatta soopparnova

முந்தைய காலத்தில் ஏற்பட்ட சூப்பர்நோவாவை சீன விஞ்ஞானிகள் 185எடி யில் பார்த்துள்ளனர், ஆனால் தற்போது நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதை (சூப்பர்நோவா) ஒரு தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. எரிக் கோல்ஸ் என்ற ஒரு மனிதரின் வீட்டுத் தோட்டத்தில் வைத்துள்ள தொலைநோக்கியில் இந்த வியக்கத்தக்க சூப்பர்நோவா புகைப்படங்கள் பதிவாகியுள்ளது. 70 வயதுடைய வேதியியல் ஆய்வாளரான

Continue reading →

உலகின் மிகப்பெரிய அறிய அறிவியல் திட்டத்தில் இந்தியா பங்கேற்பு

ulakin mikapperiya ariya ariviyal tittathil inthiya

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா : தெற்கு பிரான்சிஸில் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவு செய்து உலகின் முதல் அணு உலையை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து உயர்மட்ட விஞ்ஞானிகளை தேர்ந்தெடுத்து ஒரு சிறந்த இரும்பு கொப்பரையை (steel cauldron) உருவாக்கி அணுக்களை இணைப்பதன் மூலம் சுத்தமான அணு ஆற்றலை உருவாக்க முடியும் என்று நம்புகின்றனர். இந்த உலகின் மிகப்பெரிய அறிவியல் திட்டம் இன்று வரை நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த அறிவியல் திட்டத்தின் உலை 23,000 டன்களை கொண்டது, அதாவது மூன்று ஈபிள் கோபுரங்களை போன்ற அளவுடையது. இதில் சுமார் 80,000 கிலோமீட்டர்களுக்கு ஸ்பெஷல் சூப்பர் கன்டக்டிங் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Continue reading →

உங்கள் பெயரை செவ்வாய் கிரகத்தில் பதிக்க ஒரு அரிய வாய்ப்பு: நாசா

ungal beyarai sevvay kirakathil bathikka oru

பெங்களூர்: அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, உங்களது பெயரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றுவதற்கு முன்பு அவர்களின் பெயர்களை சேகரித்து அனுப்புகிறோம் என்று நாசா நிறுவனம் கூறியுள்ளது. முதல் கட்டமாக நாசாவின் ஓரியன் மிஷன் 4 முதல் 5 மணி நேரத்திற்குள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மக்களின் பெயர்களை கொண்டு சென்றுவிடும். பின்பு பசிபிக் பெருங்கடலுக்கு திரும்பி தரையிறங்கும். மேலும் நாசா நிறுவனம் பதிவு செய்த ஒவ்வொரு நபருக்கும் ஒரு போர்டிங் பாஸ் கொடுக்கும். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இதுவரை 5 லட்சத்துக்கு மேல் போர்டிங் பாஸ் சமர்ப்பிக்கப்பட்டது என்று நாஸாவின் இணையதளம் கூறியுள்ளது. நீங்கள் பதிவு செய்தவுடன் உங்களுடைய போர்டிங் பாஸ் 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும். செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயர்களை அனுப்புவதற்கு நீங்கள் விண்ணப்பிக்க http://mars.nasa.gov/participate/send-your-name/orion-first-flight/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின்பு உங்களின் பெயர், இமெயில் அட்ரெஸ் போன்றவற்றை பதிவு செய்து சப்மிட் என்ற பட்டனை அழுத்தவும். பிறகு தானாகவே உங்களுடைய போர்டிங் பாஸ் திரையில் தெரியப்படும், அதனை அடையாளமாக நீங்கள் சேமித்து வைத்துக்கொள்ளலாம். தற்செயலாக உங்களுடைய போர்டிங் பாசை தவறவிட்டால், மீண்டும் அடுத்த மிஷனில் நீங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 30ம் தேதி ஆகும்.

தடுப்பூசி ரகசியங்கள்

நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்!

உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, இவை உண்டாக்கும் நோய்களுக்கு ஆளாகி, பல ஆபத்துகளைச் சந்தித்திருப்போம். ஆனால், மனித இனத்துக்கே கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம், ‘தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்ற தற்காப்புப் படைதான்.

Continue reading →

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,712 other followers