Category Archives: உபயோகமான தகவல்கள்

வெயிலுக்கு மோர்தான் பெஸ்ட்!

கோடை வெயில் தகிக்கிறது. எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும், மோர், தயிருக்கு இணையாகாது. இதில், தயிரை ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது.
கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்க முடியாதபடி இருக்கும் கொழ கொழ தயிரையும் சாப்பிடக்கூடாது என ஆயுர்வேதத்தில் ஒரு பட்டியலே சொல்லப்படுகிறது. தயிரோடு ஒப்பிடும்போது மோர் சிறந்தது. வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றிவிட்டால் அது மோர் இல்லை. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில் சரி பங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

Continue reading →

குழந்தைகள் முன் கவனம் சிதறினால் போச்சு!

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், கவனமாக பேசுங்கள். நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை, குழந்தை புரிந்துகொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவின் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், ஆறு மாத குழந்தைகள் கூட உணவுகள், உடல் பாகங்களுக்கான வார்த்தைகளைப் புரிந்துகொள்கின்றன என்று கூறுகிறார்கள்.

Continue reading →

அப்பப்பா என்ன சூடு… எண்ணெய் குளியல் போடு!

மண் நனைய, கோடை மழை எப்போது வரும் என, அண்ணாந்து பார்க்கும் வெயில் காலம் வந்தாச்சு. உடல் சூட்டை தணிக்க ஏதேனும் வழி உள்ளதா? ஒரே தீர்வு வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் போடுவதுதான். எந்தெந்த நாட்கள் எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும்? அதனால், ஏற்படும் பயன்கள் என்ன?
* ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிக்க வேண்டும். எண்ணெய் குளியல், சரும பாதுகாப்புக்கு சிறந்த சிகிச்சை. தோலுக்கும் பதமானது. எண்ணெய் குளியலுக்கு ஏற்ற எண்ணெய், நல்லெண்ணெய் தான். அதை சிறிது சூடாக்கி, முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும், மெதுவாக தேய்க்க வேண்டும். நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும், இரண்டு சொட்டு எண்ணெய் விட வேண்டும்.

Continue reading →

காதுக்குள் எண்ணெய் ஊற்றுவது சரியா?

நம் உடலில் உள்ள உறுப்புக்களில், தலை மிக முக்கியமான உறுப்பாகும். தலையில் தான் கண், காது, மூக்கு, நாக்கு, மூளை போன்ற முக்கிய உறுப்புகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தனி கவனத்துடன் பராமரிக்கப்பட வேண்டிய உறுப்புகளாகும்.
வாரத்தில் மூன்று முறை, குளித்து முடித்ததும் சுத்தமான பஞ்சால் காதுகளை சுத்தம் செய்ய வேண்டும். கையில் கிடைத்த பொருட்களை, காதில் விட்டு குடைந்து அழுக்குகளை நீக்கக்கூடாது.

Continue reading →

ஹலோ லேடீஸ்… எடை குறைக்கணுமா?

உடல் பருமன் உள்ள பெண்களின் எண்ணிக்கை, தற்போது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெண்களுக்கு திருமணத்துக்கு பிறகும், பிரசவத்துக்குப் பிறகும் உடல் எடை அதிகரித்து விடுகிறது. இதற்கு, போதிய உடல் உழைப்பும், உணவு கட்டுப்பாடும் இல்லாததே காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதனால், உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றால், ஐந்து வகை உணவை பெண்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என, உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கீரை வகைகள்:

Continue reading →

இரைச்சல் இசை காதுக்கு பகை

அதிரும் இசை கேட்கும் விருப்பமுடையவரா… காதில் ஹெட்போன் மாட்டி உச்ச பட்ச இசையைக் கேட்பவரா… திருவிழாக்களில்
கடவுளே பயந்து ஓடுமளவுக்கு, சத்தமாக பக்திப் பாடல்களை மெய்மறந்து கேட்பவரா… இவை காதைச் செவிடாக்கும் அபாயம் உண்டு என எச்சரிக்கிறது ஒரு ஆராய்ச்சி. குறிப்பாக, இன்றைய இளைஞர்களிடையே பரவி வரும் இரவு விடுதி ஆட்டங்களும், அதில் போதையுடன் கேட்கும், 100 டெசிபல் இரைச்சலும், உச்சஸ்தாயி இசையும், காதுகளை முடமாக்கிவிடுகிறதாம்.

Continue reading →

உப்பை குறைத்தால் தொப்பை வராது

தொப்பை குறைய, உணவில் சேர்க்கும் உப்பின் அளவை குறைக்க வேண்டும். ஏனெனில், அதிகப்படியான உப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் செய்வதோடு, தொப்பை குறையவும் தடையாக இருக்கும். உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பாகற்காய், முட்டைகோஸ், ப்ரோக்கோலி ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடிக்கலாம். எடையும் குறையும். தொப்பையும் கரையும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை தொடக்கூடாது. குறிப்பாக சிப்ஸ், பர்கர், பிரெஞ்ச் பிரை ஆகியவற்றை மறந்து விட வேண்டும்.

Continue reading →

ஆரோக்கியத்தின் அவசியங்கள்

நம் வாழ்வின் ஜீவ நாடியான, தண்ணீரை காய்ச்சி ஆறவைத்த நீரை பருகுவது நலம். காலை ஆகாரத்தை தவிர்த்து விடாதீர்கள். சீரான இடைவெளிகளில் சரியாக உணவு உண்ணுங்கள். ஒருவேளை முடியவில்லையெனில் நல்ல நீரையாவது பருகுங்கள்.
புகை பிடித்தலை முழுவதுமாக விட்டு விடுங்கள். மது அருந்துதல் மூளையை வேலை செய்யவிடாமல் செய்து விடும். மனைவி இருக்கும்போது வேறு உறவை நாடாதீர்கள். எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பிக்க இது ஒன்றே சிறந்த வழி.

Continue reading →

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!

உடல் ஆரோக்கியத்துக்கு முக்கிய பங்கு வகிப்பன நகங்கள். நகங்களை, முறையாக பராமரிப்பது அவசியம். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில், நகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால், நகம் அதை வெளிப்படுத்தி விடும். நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

Continue reading →

வேலை மாறுகிறீர்களா? முதலில் நிதி சார்ந்து திட்டமிடுங்கள்!

கேஷ், தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் திறமையான பணியாளன். அனைத்து விஷயங்களிலும் தன்னை அப்டேட்டாக வைத்துக்கொள்வான். வேலையில் படுசுட்டியாக இருந்தாலும், குடும்பப் பொருளாதாரத்தில் கோட்டைவிட்டுவிடுவான்.

சேமிப்பதில் கொஞ்சம்கூட அக்கறை கிடையாது அவனுக்கு. சம்பாதிக்கும் பணத்தில் குடும்பத்துக்குக் கொடுத்தது போக, மீதியுள்ள பணத்தையெல்லாம் செலவு செய்தே வீணடிப்பான்.

இப்படியே பல வருடங்கள் ஓடிவிட, மகேஷுக்கு திருமணமும் நடந்துமுடிந்தது. திருமணத்துக்குப் பிறகு முன்பு போல, அவனால் அதிகமாகச் செலவு செய்ய முடியவில்லை. இருப்பினும் பொறுப்புகளும் எதிர்காலத் தேவைகளும் அதிகரித்ததால் தற்போதைய வருமானம் போதவில்லை.

Continue reading →

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,410 other followers