Category Archives: குழந்தை பராமரிப்பு

குழந்தைக்கு மலச்சிக்கல் இதோ எளிய தீர்வுகள்

குழந்தைகளுக்கான மலச்சிக்கலை, உடனே கவனிப்பது நல்லது. இல்லையெனில், வயிற்று வலியால் அலற ஆரம்பித்து விடுவார்கள். மலச்சிக்கலுக்கு தீர்வு காண, எளிய மருத்துவ குறிப்புகள் இதோ:
பசலைக் கீரையை எடுத்து, பொடிப் பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன், தினமும் கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு, தேங்காயை வில்லைகளாகச் செய்து, கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலை விட, அதிகச் சத்துக்கள் தேங்காய்ப்பாலில் நிறைந்துள்ளன. சிறு குழந்தைகள் அருகில் இருக்கும் போது, வீட்டை சுத்தப்படுத்தக் கூடாது. ஏனெனில் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.

Continue reading →

பிறந்தது முதல் மூன்று வயது வரை… பாப்பாக்களை வளர்க்க பக்குவமான வழிகாட்டி!

குழந்தை வளர்ப்பை எளிதாகக் கடந்து போனார்கள் சென்ற தலைமுறை அம்மாக்கள். ஆனால், இன்றைய ‘நியூக்ளியர் ஃபேமிலி மம்மி’களுக்கு, குழந்தையைக் குளிப்பாட்டுவதில் இருந்து, சோறூட்டுவது வரை அனைத்திலும் தடுமாற்றங்கள்; இதற்கு என்ன செய்ய வேண்டும், இதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என பல கேள்விகள். பிறந்தது முதல் மூன்று வயது வரை, குழந்தை வளர்ப்பில் அவசியம் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது பற்றி ஆலோசனைகள் வழங்குகிறார்கள், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ரமா மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சுகுமார்.

Continue reading →

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

குழந்தை பிறந்தவுடன் எடையை அறிந்து கொள்வது கட்டாயம். நிறை மாத குழந்தை குறைந்தது, 2.5 கிலோ எடை இருக்க வேண்டும்; அதிக எடையாக, 4 முதல் 4.5 கிலோ இருக்கலாம்.
குழந்தை பிறந்தவுடன், முதலில் நன்கு வீறிட்டு அழ வேண்டும். அப்போது தான், நுரையீரல் நன்கு சுருங்கி, விரிந்து மூச்சு விடுதலும், மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டமும் சீராகும்.
குளிர் காலத்தில், 5 முதல் 6 அடுக்குத் துணி கொண்டு பாதுகாக்கலாம். வெளிர் நிறத்தில், வேலைப்பாடுகள் எதுவும் இல்லாத, பருத்தி சட்டையை முதலில் போட்டு, அதன் மேல் ஸ்வெட்டர் அல்லது கெட்டியான பனியனை போட்டு விடலாம். தலைக்கு பருத்தி குல்லா, கை, கால்களுக்கு உறை போடலாம். குழந்தையின் சட்டையில் பட்டன், கொக்கி, ஜிப் இருக்கக் கூடாது. நாடா அல்லது வெல்க்ரோ நல்லது. கடைகளில் விற்கப்படும், ‘நாப்கின், டயாபர்’களைத் தவிர்க்கலாம். ஏனெனில் குழந்தையின் மலம், சிறுநீர் அதிலேயே ஊறி, பிறப்பு உறுப்பில் கிருமித் தொற்று, புண் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு.
பிறந்த குழந்தைக்கு நீர், மலம், இரண்டுமே அதிகம் வெளியேறும் என்பதால், புண்ணாகும் வாய்ப்பு அதிகம். பெண் குழந்தைக்கு இன்னும் அதிகமாக நோய் தொற்று ஏற்படக் கூடும். சுத்தமான வெள்ளை அல்லது வெளிர் நிற பருத்தி துணிகளை முக்கோணமாக மடித்து, தளர்வாக இடுப்பில் கட்டிவிடலாம்.

ஜெ.குமுதா, பச்சிளம் குழந்தை நிபுணர், பேராசிரியர்.
அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர்.

குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா?

குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியதுதான் தேன். தேனீ மலரில் இருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவீதமே நீர் இருக்கும். தேனின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அப்பகுதியில் உள்ள தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். வெளிர் மஞ்சள் நிறத்தேன் தரம் வாய்ந்ததாக இருக்கும்.
தேன் கலோரி ஆற்றல் மிகுந்த ஒரு உணவாகும். மருத்துவ குணமுடையது. நீர்ம

Continue reading →

விளையாட்டா… விபரீதமா? விஷமாகும் பொம்மைகள்! குழந்தைகளைக் காப்பது எப்படி?

குழந்தைகளின் முதல்  நண்பன் பொம்மை.  குழந்தைகளுக்குப் பொம்மைகளோடு விளையாடுவதும்  உறவாடுவதும் அலாதியான ஆனந்தம். பார்க்கும் ஒவ்வொரு பொம்மையையும் வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிக்காத குழந்தைகளே இல்லை. தூங்கும்போது, குளிக்கும்போது என நாள் முழுக்க பொம்மைகளை உடன் வைத்திருந்தாலும் அவர்களின் ஆசை தீராது.

விலங்குகளை, பறவைகளை, பொருட்களை… மொத்தத்தில் வெளி உலகை குழந்தைகள் தெரிந்துகொள்ள உதவும் முதல் சாதனம் பொம்மைகளே. அந்தக் காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தார்கள். இப்போதோ, பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொம்மைகள்தான் குழந்தைகள் கைகளில் தவழ்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளில் அதிக அளவில் காரீயம் உள்ளிட்ட நச்சுக்கள் கலந்திருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுகள்.

Continue reading →

உங்கள் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கிறதா?

குழந்தையின் வளர்ச்சி என்பதைப் பெரும்பாலான பெற்றோர் அதன் உயரம் மற்றும் எடையைவைத்துக் கணக்கிடுகின்றனர். கொழுகொழுவென இருந்தால், ‘ஆரோக்கியமாக இருக்கிறது’ என நினைத்துக்கொள்கின்றனர். இவை மட்டுமே, சரியான வளர்ச்சி எனக் கூறிவிட முடியாது. குழந்தை வளர்ச்சியில், அதன் ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு மைல் ஸ்டோன்.

Continue reading →

நோ பிராப்ளம்

குழந்தைகள் என்றாலே, விரல் சூப்புவது என்பது இயல்பு தான். நாம் என்னதான் கையை எடுத்து விட்டாலும், மீண்டும், மீண்டும் பழைய செய்கையே தொடரும். குழந்தைகள் விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால் தான் என்கின்றனர், உளவியல் அறிஞர்கள்.

Continue reading →

உங்கள் குழந்தை சேட்டை பண்ணுகிறதா… சந்தோஷப்படுங்கள்!

ங்கள் குழந்தை பள்ளியில் இருந்து வந்தவுடன் ஷூவைத் தூக்கி எறிகிறதா? கண்ணில் படுவதை எல்லாம் எட்டி உதைக்கிறதா? என்ன கொடுத்தாலும் சாப்பிட மறுத்து அடம்பிடிக்கிறதா? சந்தோஷப்படுங்கள்! ‘இதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது?’ என்று எரிச்சலாகிறீர்களா? இதில் எரிச்சலாக என்ன இருக்கிறது… சொல்லுங்கள்! குழந்தை என்றால் அப்படித்தான் சுட்டித்தனம் செய்யும். உங்கள் குழந்தை மட்டுமல்ல… எல்லா குழந்தைகளும் இப்படிச் சேட்டைக்காரர்கள்தான். அதுதான் குழந்தை! ஆனால், 90% மேலான பெற்றோர்கள், அந்தக் குழந்தைத்தனத்தைப் புரிந்துகொள்ளாமல், அவர்களைத் திருத்துவதாக நினைத்து மிரட்டுவது, அடிப்பது, தண்டனை கொடுப்பது என்ற பெயரில், அவர்களின் திறமைகளை, உணர்வுகளை, நல்ல எதிர்காலத்தை முளையிலேயே கிள்ளிவிடுகிறார்கள்.

Continue reading →

கார்ட்டூன் திசைமாறும் குழந்தைகள்

கார்ட்டூன், குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில், தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. குழந்தைகளை, உணவு சாப்பிட வைப்பதற்காகவும், தங்களின் வேலைகளில் தொந்தரவின்றி ஈடுபடவும், கார்ட்டூன் திரைகளின் முன், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர் அதிகளவில் உள்ளனர்.
நீங்கள், அப்படிப்பட்ட பெற்றோரில் ஒருவராக இருந்தால், குழந்தைகளின் வளர்ச்சியில், கார்ட்டூன்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பற்றியும், சிந்திக்க வேண்டிய நேரம் இது.

Continue reading →

அழும் குழந்தைகளை சிரிக்கவைக்க அந்தக்கால ஆலோசனைகள்!

‘`குழந்தை நடுசாமத்துல கண்விழிச்சு `வீல் வீல்’னு அழுதுகிட்டே இருக்கான்… அவனோட அழுகைக்குக் காரணம் என்னனு கண்டுபிடிக்க முடியல டாக்டர்!’’

– இந்தக் காலத்து இளம்தாய்மார்கள் அநேகம் பேர் குழந்தைகள் நல மருத்துவர்களிடம் இப்படிப் புலம்புவதைப் பார்த்திருக்கிறோம். அந்த மருத்துவரும் அவருக்குத் தெரிந்த வரையில் வைத்தியப் புலனாய்வு செய்து அழுகையை நிறுத்த முயற்சிப்பார்.

Continue reading →

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,780 other followers