Category Archives: படித்த செய்திகள்

திருமணத்திற்காக ஹெலிகாப்டரில் பறக்கும் மணமக்கள்

காரைக்குடி: ஹெலிகாப்டரில் பெண் அழைப்பு, திருமணம் முடிந்து மறுவீடு வரை ஹெலிகாப்டர் பயணம், என ஊரையே வியந்து பார்க்க வைத்துள்ளனர் காரைக்குடி அருகே எஸ்.ஆர்.பட்டணத்தைச் சேர்ந்த ஆறுமுகம் குடும்பத்தினர்.
காரைக்குடியிலிருந்து 12 கி.மீ., தூரத்தில் உள்ள கல்லல் ஒன்றியத்தை சேர்ந்தது எஸ்.ஆர்.பட்டணம். இந்த ஊரை சேர்ந்தவர் ஆறுமுகம். 40 ஆண்டுக்கு முன்பு பிரான்ஸ் சென்று அங்கு குடியுரிமை பெற்றார். இவரது மூத்தமகன் திருவாசகம் (எ) ரெமி. இவர் தற்போது பிரான்சில் உள்ளார். இளையமகன் கவுதமன். எம்.காம்., முடித்து பிரான்சில் உள்ள ஐரோப்பிய கோர்ட்டில் சட்ட ஆலோசகர், மொழி பெயர்ப்பாளராக உள்ளார்.இவருக்கும் அறந்தாங்கி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன் மகள் பானுப்பிரியாவுக்கும் இன்று எஸ்.ஆர்.பட்டணத்தில் திருமணம் நடக்கிறது.
இந்த திருமணத்துக்கான பெண் அழைப்பு, ஊர்வலம், மறுவீடு செல்தல் யாவும் பெங்களூருவை சேர்ந்த ‘டகெ்கான் சாட்டர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் ஹெலிகாப்டர் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக எஸ்.ஆர்.பட்டணம், அறந்தாங்கி ஆகிய இடங்களில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

Continue reading →

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் 627 பேர்: பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு

புதுடில்லி : சுவிஸ் வங்கியில், கறுப்பு பணம் பதுக்கியுள்ள, 627 இந்தியர்களின் பட்டியலை, மத்திய அரசு, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. ஆனாலும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வி.வி.ஐ.பி.,க்கள் யார் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்களால், 30 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, நீண்ட நாட்களாக புகார் உள்ளது. வரி செலுத்துவதை தவிர்க்கும் வகையில், ஏராளமான வி.வி.ஐ.பி.,க்கள், இந்த வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பணத்தை, இந்தியாவுக்கு மீட்டு வரக் கோரியும், இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரியும், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, 2009ல், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

Continue reading →

எச்சரிக்கை… எபோலா!

துவரை உலகத்தில் கண்டறிந்தவற்றில் அபாயகர ஆட்கொல்லி நோய் இதுதான்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். ‘இது ஒரு மனிதப் பேரழிவு’  என்று வர்ணிக்கின்றன உலக ஊடகங்கள். இதற்கு முன்தடுப்பு மருந்துகள், குணப்படுத்தும் மருந்துகள் என எதுவும் இல்லை. மரணத்தை நிச்சயப் பரிசாகக் கொண்டுவருகிறது எபோலா. ஆப்பிரிக்காவில் தொடங்கிய இந்த நோய், இப்போது ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களுக்கும் பரவி… அகில உலகத்தையும் அச்சுறுத்துகிறது.

கடும் அசதி, திடீர் காய்ச்சல், தசை வலி, தொண்டையில் புண் எனத் தொடங்கி, கடும் வயிற்றுப்போக்கு, உடல் துவாரங்களில் இருந்து ரத்தம் கசிவது வரை சென்று இறுதியில் மரணம்… இதுதான் எபோலா இயங்குமுறை! எய்ட்ஸ் தாக்கினால்கூட, பல ஆண்டுகள் உயிர் வாழ முடியும். ஆனால், எபோலா தாக்கினால் சில மாதங்களில் மரணம் நிச்சயம். நோய் எதிர்ப்பு சக்தி அபாரமாக இருப்பவர்கள் மட்டுமே இதன் தாக்குதலில் இருந்து பிழைக்கின்றனர். சிம்பன்ஸி குரங்குகள், பழந்தின்னி வெளவால்கள், காட்டு மான்கள் போன்றவற்றை எபோலா வைரஸ் தாக்கி, இவற்றின் உடல் திரவங்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. ஒரு மனிதனிடம் இருந்து மற்றவருக்குப் பரவுவதும் உடல் திரவங்கள் மூலம்தான். காற்றின் மூலம், தண்ணீரின் மூலம் இந்த நோய் பரவுவது இல்லை.

Continue reading →

ஆப்பிள் போன் அதிர்ச்சி!

நியூட்டன்’… இந்தப் பெயரை வாசித்ததும்  புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் மெகா தோல்வி பற்றி அறியாதவர் நீங்கள்! 90-களின் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட மொபைல் சாதனம் ‘நியூட்டன்’. அலைபேசி, டிஜிட்டல் இசைப் பேழை என்பது எல்லாம் என்னவென்றே அறியாத அந்த நாட்களில் Personal Digital Assistant, சுருக்கமாக ‘PDA’ என்ற வகையறாவை அறிமுகப்படுத்தியதே ஆப்பிள்தான். 20 வருடங்களுக்கு முன் இருந்த கணினி தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது அற்புதமான சாதனம் நியூட்டன். பிரத்யேகத் தகவல்களைச் சேகரிக்கும் பேழையாக மட்டும் இல்லாமல், திரை மீது எழுதப்படும் கையெழுத்தைப் புரிந்துகொள்ளும் மென்பொருள், ஃபேக்ஸ் அனுப்பும் வசதி என அப்போது அது அதிநவீனம்.  அந்த நாட்களில்  கவர்ச்சிகரமான தனது மேக்கிண்டோஸ் கணினிகளால் மதிக்கப்பட்டிருந்த ஆப்பிள், சந்தையின் கவனத்தையும் நியூட்டனுக்கு ஈர்த்தது. ஆனால், சாதனத் தயாரிப்பில் இருந்து, என்ன வகையான மென்பொருட்கள் இருக்க வேண்டும் என்பது வரை நியூட்டன் சம்பந்தப்பட்ட அனைத்திலும் ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது ஆப்பிள்.

Continue reading →

ஆவின் பால் விலை உயர்வு

சென்னை: ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை, தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. நவ., 1ம் தேதி முதல், பசும் பாலுக்கு கொள்முதல் விலையாக லிட்டருக்கு, 5 ரூபாய்; எருமை பால் லிட்டருக்கு, 4 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதேபோல், சமன்படுத்திய பாலின் விற்பனை விலையை, லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளது.

Continue reading →

வாயைப் பிளக்கவைத்த வைர கம்பெனி!

வீடு இல்லாதவர்களுக்கு வீடு… வீடு வைத்திருந்தால் கார்…. வீடும் காரும் வைத்திருப்பவர்களுக்கு வைர நெக்லஸ்…. என்று தீபாவளி போனஸ் கொடுத்திருக்கிறது மும்பை நிறுவனம் ஒன்று. 50 கோடி ரூபாய் மதிப்பிலான போனஸை, வைரம் வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம் வாரி வழங்கி உள்ளது!

 

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனத்தின் பெயர், ‘ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்’. தரமான வைரங்களை

Continue reading →

வெளியேற்றுவோம் அழுக்கை

தவனின் உதயம்
தினம் தினம் தீபாவளி
முழு மதியாய் பவுர்ணமி
திங்கள் தோறும் தீபாவளி
தீப ஒளியாய் ஒளிரும் தினமாம்
வருடம் தோறும் தீபாவளி!

தீபாவளி என்றால் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது புத்தாடை, பலகாரங்கள், பட்டாசு, ‘டிவி’ நிகழ்ச்சிகள். ஆனால், போன தலைமுறையினரைக் கேட்டால் அதிகாலை 3:௦௦ மணிக்கு எழுந்து
நல்லெண்ணெய் தேய்த்து, சிகைக்காய், அரப்பு போட்டு குளிரில் நடுங்கிக் கொண்டே குளித்தது தான் ஞாபகமாய் பதிவாகியிருப்பதாக கூறுவர்.
Continue reading →

தீபங்கள் பேசும்!

தீபாவளித் திருநாளில் வீட்டில் விளக்கேற்றுவது வழக்கம்தான். ஆனால்… எண்ணெய், திரி, திசை, முகம் என அந்த விளக்குகளுக்கு உண்டான தாத்பர்யங்கள் அனைத்தும் அறிந்து ஏற்றுவது இன்னும் சிறப்பல்லவா! இதோ… விளக்கு பற்றிய ஆன்மிக விளக்கங்களை உங்களுக்காக வழங்குகிறார் ஆன்மிக சொற்பொழிவாளர் பி.என்.பரசுராமன்!

விளக்குகள் பல வகை!

மண் விளக்கு, வெண்கல விளக்கு, வெள்ளி விளக்கு, பஞ்சலோக விளக்கு, எவர்சில்வர் விளக்கு (சனிக்கிழமை மட்டும் தோஷ சாந்தி செய்பவர்கள் இதை ஏற்றலாம்) என, எந்த விளக்காக இருந்தாலும், அதில் காமாட்சி அம்மன் அல்லது அஷ்டலக்ஷ்மிகளின் உருவம் இருப்பது நல்லது.

Continue reading →

மோடியின் மேக் இன் இந்தியா சாத்தியம் ஆகுமா?

மேட் இன் அமெரிக்கா, மேட் இன் ஜெர்மனி என்கிற வார்த்தைகள் ஒரு காலத்தில் நம்மவர்கள் இடையே படுபிரபலம். இதனை உணர்ந்த பிரதமர் மோடி இதே பாணியில் மக்களைக் கவரும் விதமாக  சமீபத்தில் அறிவித்திருக்கும் திட்டம் தான் ‘மேக் இன் இந்தியா’. உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்தியாவில் பொருளைத் தயாரித்து, அதை உலகம் முழுக்க கொண்டு சென்று விற்கலாம். இதன்மூலம் பல கோடி வேலைவாய்ப்பு களை உருவாக்கலாம் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தை முழுமையாக விளக்கும் வகையில் ஒரு தனி இணையதளத்தையே திறந்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

Continue reading →

பர்ஸை பதம்பார்க்கும் பண்டிகை ஆஃபர்கள்! நிஜமா, விற்பனை தந்திரமா?

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் பண்டிகை ஆஃபர்கள் நம் வீட்டின் கதவைத் தட்ட தொடங்கியுள்ளன. முன்பு கடைகளுக்குச் சென்று பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவதை வழக்க மாகக் கொண்டிருந்தனர் நம் மக்கள்.

ஆனால், தற்போது வீட்டிலிருந்தபடியே பண்டிகை பர்ச்சேஸை பக்காவாக முடித்துக்கொள்ளும் வசதியை ஆன்லைன் நிறுவனங்கள் கொண்டுவந்துவிட்டன. புத்தாடைகள் தொடங்கி, டிவி, ஃபிரிட்ஜ் என அனைத்துப் பொருட் களையும் கணினி திரையில் பார்த்தபடி வாங்கிக் குவிக்கிறது இளைஞர் கூட்டம்.

Continue reading →

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,044 other followers