Category Archives: மருத்துவம்

பன்றிக் காய்ச்சல் பயம் வேண்டாம்… பதற்றம் வேண்டாம்!

“இந்த நூற்றாண்டில், திடீர் திடீரென நோய்கள் பரவி, பதற்றத்தை உருவாக்கி வருகின்றன.  நம் முன்னோர்கள், பல காய்ச்சல்களுக்கும் கண்டறிந்துவைத்துள்ள மருந்துகளை நாம்தான் கண்டுகொள்வதும் இல்லை.  உபயோகிப்பதும் இல்லை. வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடிய காய்ச்சல்களை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே `கபசுரம்’ என்று வகை பிரித்து, மருந்தும் சொல்லியிருக்கிறார் யூகி முனி என்ற மாமுனிவர். இப்போது மக்களை பீதிக்கு உள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சலும் இந்த கபசுரத்துக்குள் அடங்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

“பன்றிக்காய்ச்சல் வரக் காரணம் என்ன?”

Continue reading →

டெட்டனஸ் தடுக்கும் வழிகள்!

காயம் ஏற்பட்டால், ஊரில் பலர் உடனே சொல்லும் வாக்கியம் “ஒரு டி.டி. இன்ஜெக்‌ஷன் போடு” என்பதுதான். பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கவல்ல நோய், டெட்டனஸ் (Tetanus). இழுப்புநோய், வில்வாத ஜன்னி, வாய்ப்பூட்டு நோய், ரணவாத ஜன்னி, நரம்பிசிவு நோய் என்று இந்த நோய்க்குப் பல பெயர்கள் உள்ளன. ‘கிளாஸ்ட்ரிடியம் டெட்டனி’ (Clostridium tetani) என்ற பாக்டீரியா கிருமியால் இந்த நோய் ஏற்படுகிறது. மனித மலம், விலங்குகளின் சாணம், துருப்பிடித்த உலோகப் பொருட்கள் போன்றவற்றில், இந்தக் கிருமி உயிர் வாழும். சூரிய ஒளி, அதிக வெப்பம், அதிகக் குளிர்ச்சி, பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றால் அழிந்துவிடும் என்பதால், முழுக் கிருமியாக இதனால் வெகுகாலம் உயிர் வாழ முடியாது. எனவே, இவை எதுவும் தம்மை அழித்துவிடாதபடி, தம் மேல் ஒரு பாதுகாப்பு உறையை உற்பத்தி செய்து ‘டெட்டனஸ் சிதில்களாக’ (Tetanus spores) உருமாறிக்கொண்டு, இவை வெகுகாலம் உயிர் வாழ்கின்றன.

நோய் வரும் வழி:

Continue reading →

பன்றிக்காய்ச்சல்

1 பன்றிக்காய்ச்சல் என, ஆங்கில மருத்துவ முறையில் கூறப்படுவதற்கு, ஆயுர்வேதத்தில், பெயர் என்ன?
இன்று, பரவலாக காணப்படும் ‘ஸ்வைன் ப்ளு’விற்கு காரணமான வைரஸ், இப்போது வேறு பல அவதாரங்களை எடுத்துள்ளது என, கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கப ஜுரம் என்று கூறப்படுவதையே ‘பன்றிக்காய்ச்சல்’ என்கின்றனர்.
2எந்த மாதங்களில், கப ஜுரத்தின் தாக்கம் இருக்கும்?
பொதுவாக, இவை குளிர்காலங்களில் அதுவும், வசந்த காலம் என்று அழைக்கப்படும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகமாக தோன்றும். வசந்த காலங்களில் உடலில், கபம் இயற்கையாகவே அதிகரிக்கிறது. இதனால் சளி, இருமல், தலைக்கனம், தும்மல் மூச்சுத்திணறல், ஜுரம் போன்றவை மக்களிடையே பரவலாக காணப்படும்.
3 கப ஜுரம் எப்படி பரவுகிறது?

Continue reading →

பார்வையை பறிக்கும் கண் அழுத்தம்

ஐம்புலன்களில், முக்கியமானது கண், ‘கண்ணை இமை காப்பது’ என்ற பழமொழியே, கண்ணின் அருமையை உணர்த்தும். கண்ணில் பிரச்னை என்றால், உடனடியாக கவனிக்க வேண்டும்.
உடலில், பாய்ந்தோடும் ரத்தத்தில் மட்டும் அழுத்தம் ஏற்படுவதில்லை; கண்ணிலும் ஏற்படுகிறது. அதுவே, கண் அழுத்த நோய். ஆங்கிலத்தில், ‘க்ளக்கோமா’.
இந்த நோய், முதியோரை மட்டுமல்லாமல், பிறந்த குழந்தைகளையும் தாக்கும்.
நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில், சுரக்கும் நீரின் அழுத்தம் சாதாரண நிலையில் இருந்து படிப்படியாக அதிகரித்து, பார்வை நரம்பினால் தாங்க கூடிய அளவை தாண்டும்போது, ‘க்ளக்கோமா’ பாதிப்பு, தலை தூக்குகிறது

Continue reading →

கணையம்

1.கணையம் என்பது என்ன?
உடலில் ஒரேநேரத்தில், செரிமான நீர் மற்றும் ஹார்மோன்களை சுரக்கும், நாளமில்லா சுரப்பியாக செயல்படும், ஒரே உறுப்பு கணையம். இதற்கு இரட்டை சுரப்பி என, மற்றொரு பெயரும் உண்டு.
2 கணையம் பாதிக்கப்படுவது எதனால்?

Continue reading →

ஹீமோபீலியா…. ரத்தம் உறையாமை

உடலுக்குள் இருக்கும்போது உறையாமலும், வெளியே வரும் போது உறைதலுமே, ரத்தத்தின் இயல்பு. மனிதர்களில் சிலருக்கு, அடிபட்டு அல்லது காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியில் வந்தால், ரத்தம் உறையாமல், வெளியேறி கொண்டே இருக்கும். அதற்கு, ‘ஹீமோபீலியா’ எனும் ரத்தம் உறையாமை நோய் என்று பெயர்.
ரத்தம், முழுமையாக திரவ நிலையில் இருந்தால் மட்டுமே, ஆரோக்கியமான அணுக்கள் இருக்கும். ஆனால் உடலை விட்டு வெளியேறும்போது, வெளிக்காற்றுபட்ட உடன், உறைய வேண்டும். அப்போதுதான் ரத்தப்போக்கு நிற்கும். ரத்தப்போக்கு தொடர்ந்தால், உயிரிழப்பு ஏற்படும்.
‘ஹீமோபீலியா’ மரபணு குறைபாடுகளால் ஏற்படுவது. பத்தாயிரத்தில் ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கும். ஒருவருக்கு அடிபட்டால், மூன்றாவது நிமிடத்தில், ரத்தம் உறைய வேண்டும். ஆனால், ‘ஹீமோபீலியா’ உள்ளோருக்கு, 30 நிமிடங்கள் கடந்த பிறகும், ரத்தம் உறையாது.

Continue reading →

கர்ப்பத்திற்கான அறிகுறிகள்

1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்? என்பது பற்றி  பார்ப்போம்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.

கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.

இவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.

இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :

* மாத விலக்கு தள்ளிப்போகுதல்

* குமட்டல்

* இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

* புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்

* வாசனையைக் கண்டால் நெடி

* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்

* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு

* புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை

– குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில் குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை-கால்களும் உருவாகின்றன.

இந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.

மேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…

1. மாதவிலக்கு நிற்பது

கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.

இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும். குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.

நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி நோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.

2. களைப்பு

பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.

3. மசக்கை

இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.

சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

அதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?

கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின் காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில் நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல் தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள் மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும் தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.

இதற்கு காரணம் என்ன?

இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு பசியின்மையும் உண்டாகும்.

4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.

5. மார்பகப் பகுதி மாற்றங்கள்

முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.

கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்

சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும் துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள். சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையக்கூடும்.

7. வயிறு பெரிதாகுதல்

கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.

கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.

இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.

அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.

பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.

அந்த பரிசோதனை முறைகள் :

1. சிறுநீர்ப் பரிசோதனை

இந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

2. ஹார்மோன் பரிசோதனை

இது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை

மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.

4. கரு நெளிவுப் பரிசோதனை

கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும் பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப் பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.

இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.

உடைந்த இதயம் மரணத்தின் இருப்பிடம்

தனது ரத்த உறவினருக்கு சோக நிகழ்வு ஏற்பட்டால், எனது இதயம் வெடித்து விட்டதே என்பர். உதாரணம்: கணவன் மரணச் செய்தி கேட்டவுடன் அல்லது சில மணி நேரங்களில், சில தினங்களில் மனைவியும் திடீர் மரணமடைவது நாம் பார்க்கும் நிகழ்ச்சிகள் தான். இதற்கு காரணம் உடைந்த உள்ளம், துக்கச் செய்தி கேட்டவுடன் துயரம் அடையும் போது, மனதில் அழுத்தம் ஏற்பட்டு, நமது உடலிலுள்ள சிம்பத்தடிக் சிஸ்டம், ஊர்திகளிலுள்ள வேகத்தைத் தூண்டுவது போல, அதில் உள்ள “கேட்டகால் அமைன்’ வேதியியல் பொருள் சுரந்து, உடலின் செயல்பாட்டை மாற்றும். உலக இதய மையம் இதுபோன்று துக்கத்தில் இருப்பவர்களை ஆய்வு செய்தது. இதன் ஆய்வு முடிவு இதோ

துக்கத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக இதயக் கோளாறு ஏற்பட்டு திடீர் மரணத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்வு இளம் வயதிலிருந்து முதியோர் வரை ஏற்படலாம். நன்றாக எந்தவித கோளாறுமில்லாதவர் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, அதிக கெட்ட கொழுப்புள்ளவர்கள், பை – பாஸ், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென் சிகிச்சைப் பெற்றவர்கள், மிகவும் கவனமாக துக்க நிகழ்வுகளை அனுசரிக்க வேண்டும். முதியோர்கள் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆணும், பெண்ணும் சரி துக்கத்தை கேட்டவுடனே கவனமாக இருக்க வேண்டும்.

உண்மை சம்பவம்
எனது 30 ஆண்டு நண்பர் சம்பத்; அவரது மனைவி லீலா. இருவரும் ஐகோர்ட் வக்கீல்கள்; இதய நோயாளிகள். மனைவி இறந்தவுடன் சம்பத் என்னிடம் “என் மனைவி காலை எழுந்து காலை கடன் கழிக்கச் சென்றவர் மரணமடைந்துவிட்டார்; எனது இதயம் போய்விட்டது’ என்று கூறினார். “இதுபோலவே, ஈ.வெ.ரா., தனது முதல் மனைவி நாகம்மை இறந்தவுடன்,”எனது இதயம், எனது உயிர், என் சொத்து சுகம் எல்லாம் போய்விட்டது. நான் இதயமில்லாதவன்’ என்று, துக்கத்தை வெளிப்படுத்தி கதறி அழுததாக வரலாறு.
சில ஆண்டுகளுக்கு முன், எனது டாக்டர் நண்பர் சேலத்தில் உள்ளவர், இறந்த செய்தி கேட்டு துக்கம் விசாரிக்கச் சென்றபோது, அவர் மனைவி திடீர் மரணமடைந்தார். டாக்டரது மனைவி மரணத்தின் துக்கத்தை விசாரித்து வந்தேன். இப்படி பல சம்பவங்கள் உண்டு.

என்ன நடக்கிறது?
நெருங்கிய உறவினர் மரணம் அடைந்தவுடன் இவர்கள் அளவில்லாத துயரத்தோடு அழுது கொண்டு இருப்பர். இந்த நேரத்தில், உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இதயத் துடிப்பு அதிகமாகிறது. ரத்தத்தில் உறையும் தன்மை அதிகமாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.. இதனால் மாரடைப்பு அதிகமாக வருகிறது.
இது இளம் வயதினருக்கும் வரும், வயதானவர்களுக்கும் வரும். இது எப்படி? துக்கப்படும் போது ரத்தக் கொதிப்பு அதிகமாகிறது. அதே நேரம், ரத்தத்தின் அடர்த்தி தன்மை அதிகமாகிறது. இதனால், ரத்தம் உறைந்து, கரோனரி ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு மரணம் வரும். இது, சர்க்கரை ரத்தக் கொதிப்பு, முன்பே பை – பாஸ், ஸ்டென்ட் சிகிச்சை செய்தவர்களுக்கு மிகவும் எளிதாக வரும்.

துக்கம் ஆட்கொள்ளும் போது
ரத்தக் கொதிப்பு அதிகமாகி ரத்தத்தின் திரவத் தன்மை குறைந்து. சீக்கிரம் உறைந்து கரோனரி ரத்தக் குழாய் அடைத்து மாரடைப்பை உண்டாக்குகிறது. 20 ஆண்டுகளுக்கு முன், நான் கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக பணிபுரிந்த போது, 22 வயதுள்ள இளம் பெண் கூலித் தொழிலாளிக்கு மாரடைப்பு வந்து; ஐ.சி.யூ.,வில் அனுமதித்து வைத்தியம் செய்தேன். இதுபற்றி டாக்டர்களுக்கும், மக்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
இதன் காரணம், அந்த இளம் பெண்ணுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவன் ஓடிப்போய்விட்டான். பெற்றோர் இல்லை. கூலி வேலை செய்து குழந்தையைக் காப்பாற்றி வர வேண்டிய நிலை. எவ்வளவு மனக்கவலை, மன அழுத்தம், சோகமே அவளது வாழ்க்கை. எப்படி அவளது இதயம் சீராக இயங்க முடியும்?

சில வருடங்களுக்கு முன், 28 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு என்னிடம் வந்தார். அவரை சென்னை மையப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து, ஆஞ்சியோகிராம் செய்ததில் கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புள்ளது தெரிந்தது. இரண்டு நாட்கள் கழித்து ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்போன போது, இந்த கரோனரி ரத்தக்குழாய் அடைப்பு இல்லை. எப்படி காணாமல் போனது; இதற்கு காரணம் என்ன?
இந்த இளைஞர் கல்யாணமாகி ஓராண்டில் விவாகரத்து வழக்கு, ஒரு குழந்தையின் தந்தை, நிரந்தரமற்ற ஐ.டி., பணி. இவர் இதயம் எப்படி துயரத்தையும் வேதனையும் தாங்கும்; இவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு. இது கரோனரி ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்து கட்டியாகி அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தது. குறிப்பிட்ட சில மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியதால் ரத்த உறைவு குறைந்து. அடைப்பு சீராக்கப்பட்டுள்ளது. இதை முன்கூட்டியே அறிந்து ஆலோசனை செய்பவர் தான், நவீன இதய நோய் நிபுணர்.
பை-பாஸ் கிராப்ட், ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட் செய்தவர்கள், மற்றும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோயுள்ளவர்கள், அதிக கொழுப்புள்ளவர்கள் இதயத்தில், சில பகுதிகள் இஸ்கிமியா என்ற ரத்தக் குறைபாடுள்ள இடங்கள் இருக்கும், இந்த இடங்கள், மிகவும் ஆபத்தான இடங்கள். இந்த இடத்திலிருந்து தான், அரித்மியா என்ற, தத்தளித்து தடுமாறும் துடிப்புகளின் உறைவிடம். அதாவது மரணத்தின் இருப்பிடம்.
நீங்கள் உங்கள் இதய நோயின் அறிகுறிகளை தகுந்த நேரத்தில் அறிந்து கொண்டு, தகுந்த மருத்துவரிடம் சிகிச்சை செய்து கொண்டால் நலமுடன் வாழலாம் நோயாளிகளே!
1.டாக்டர் சொல்வதை கேட்டு நடங்கள்.
2.வியாதியைப் பற்றிய பயத்தைப் போக்கி அமைதி காக்கவும்.
3. வியாதியால் நம்பிக்கை சோர்ந்து வாழாதீர்.
4. எதையும் ஏற்காமல் எதிர்பதமாக பேசி வாழாதீர்.

டாக்டர் சு.அர்த்தநாரி, எம்.டி.டி.எம்.,

ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?

ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?

நோய்க்கான காரணத்தைப் பொருத்து ஆஸ்துமாவை இரண்டாகப் பிக்கிறார்கள்.

Allergic Asthma எனும் முதல் வகையினருக்குக் காரணம் ஒவ்வாமை. பாரம்பயமாக நோய் வருதல், மூக்கடைப்பு, தோல் அலர்ஜி நோய்கள் போன்ற குறிகுணங்களை இப் பிவினர் பெற்றிருப்பர். ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட அணுக்களுக்கு Ig என்று பெயர். நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொடுக்க டி, ஏ, எம், ஜி, ஈ என ஐந்து வகையான வெள்ளை அணுக்கள் உள்ளன. இவற்றில் சுவாச மண்டல நோய்களை எதிர்க்கவும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருள்களை எதிர்க்கவும் IgE என்ற வகை வெள்ளை அணுக்கள் உள்ளன. ஒவ்வாமைத் தன்மையைக் கொண்ட முதல் வகை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ரத்தப் பசோதனை செய்யும் நிலையில் IgE வகை ரத்த வெள்ளை அணுக்கள் அதிகமாக இருக்கும்.

இந்த காரணங்கள் எதுவுமே இல்லாமல் IgE -ம் அளவுடன் இருந்து மேல்சுவாச மண்டல அழற்சியைத் தொடர்ந்து இரைப்பு வருவது Idiosyncratic asthma எனும் இரண்டாவது வகை.

முதல் வகை ஆஸ்துமா பெரும்பாலும் இள வயதிலேயே வந்துவிடும். இரண்டாம் வகை ஆஸ்துமா வாலிப வயதையொட்டி துவங்குகிறது.

ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறி என்ன?

மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றுடன் இருமல் ஆரம்பிக்கும். இருமல் தொடங்கியவுடன் நெஞ்சில் உள்ள சளியைத் துப்புவதற்காக நோயாளி எழுந்திருப்பார். ஆனால் சளி எளிதில் வராது. கொஞ்சம் கஷ்டப்பட்டு சளியைத் துப்பும்போது சளியின் தன்மை ஜவ்வசி கஞ்சி போன்று இருக்கும்; ஒரு சிலருக்கு சேமியா போன்று சிறிதளவு சளி வெளியேறும். கொஞ்சம் தூரம் நடந்தால்கூட இரைப்பு ஏற்படும். இளங்காலைப் பொழுது, இரவில் அதிகம் இரைப்பு இருக்கும். இவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள்.

ஆஸ்துமாவா, சைனுசைட்டீஸô–அறிகுறிகளைக் கொண்டு வித்தியாசப்படுத்தித் தெந்துகொள்வது எப்படி?

கண் எச்சல், தலைவலி, மூக்கடைப்பு, தும்மல் ஆகியவை சைனுசைட்டிஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். சைனுசைட்டிஸ் நோய் இருந்தால் இரைப்பு இருக்காது. தலைவலி, தலையில் நீர் கோர்த்து கனமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை சைனுசைட்டீஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். மேலும் மூக்கு, தொண்டை ஆகியவற்றை உள்ளடக்கிய மேல் சுவாசப் பாதை நோய் (Upper Respiratory Tract Disease)  என சைனுசைட்டீஸ் அழைக்கப்படுகிறது.

ஆஸ்துமாவின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?

பொதுவாக எந்த அன்னியப் பொருளையும் உள்ளே அனுமதிக்காமல் வெளியே தள்ளிவிடும் தன்மை நுரையீரலுக்கு உண்டு. இதனால்தான் தும்மல் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயின் ஆரம்ப அறிகுறியாக தொடக்கத்தில் நுரையீரல் பாதை லேசாகச் சுருக்கமடைந்து, மூக்கடைப்பு, தும்மல் ஏற்படும். அதிகாலை, இரவில் மூக்கடைப்பு, தும்மல் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பு, தும்மலுடன் நெஞ்சை இறுக்கிப் பிடித்ததுபோன்ற உணர்வு இருக்கும். ஆரம்பத்தில் ஒரு வாரத்துக்கு இவ்வாறு பிரச்சினை இருக்கும்.

நோய் தீவிரமடையும் நிலையில் இரைப்பு (Wheezing) ஏற்படத் தொடங்கும். நோயாளி தன் காதுகளை இரண்டு கைகளால் மூடிக்கொண்டால் இரைப்பின் ஒலியைக் கேட்க முடியும். அது யாழ் ஒலிபோல இருக்கும்.

ஆஸ்துமாவா, சைனுசைட்டீஸô–அறிகுறிகளைக் கொண்டு வித்தியாசப்படுத்தித் தெந்துகொள்வது எப்படி?

கண் எச்சல், தலைவலி, மூக்கடைப்பு, தும்மல் ஆகியவை சைனுசைட்டிஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். சைனுசைட்டிஸ் நோய் இருந்தால் இரைப்பு இருக்காது. தலைவலி, தலையில் நீர் கோர்த்து கனமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை சைனுசைட்டீஸ் நோயின் முக்கிய அறிகுறிகள். மேலும் மூக்கு, தொண்டை ஆகியவற்றை உள்ளடக்கிய மேல் சுவாசப் பாதை நோய் (Upper Respiratory Tract Disease) என சைனுசைட்டீஸ் அழைக்கப்படுகிறது.

ஆஸ்துமாவில் தலைவலி, கண் எச்சல், கண்ணீல் நீர் வடிதல் ஆகியவற்றுக்கு இடமில்லை. எனவே ஆஸ்துமாவையும் சைனுசைட்டீஸ் நோய்களுக்கான அறிகுறிகளையும் வேறுபடுத்திப் பார்ப்பது எளிது.

ஆஸ்துமாவுக்கு மன அழுத்தத்துக்கும் (Stress) தொடர்பு உண்டா?

தொடர்பு உண்டு. இதை பதினெண் சித்தர்களில் ஒருவரான யூகி சித்தரே குறிப்பிட்டுள்ளார். அதாவது “மா துக்கம்’ (பெரிய துக்கம்) இரைப்பை நோய்க்கு வழி வகுக்கும் என அக் காலத்திலேயே அவர் கூறியுள்ளார். மன அழுத்தம் காரணமாக ஆஸ்துமா அதிகமாகக்கூடும் என்பதை அலோபதி மருத்துவர்களும் ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் ஆஸ்துமா நோய்க்கான சித்த மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாக நோயாளியின் மன நிலைக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு ஆலோசனை அளிக்கப்படுகிறது.

ஆஸ்துமா காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுமா?

உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. தீவிர ஆஸ்துமா நோய் காரணமாக நுரையீரலுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படும். நோயாளியின் உதடு, நாக்கு, நகங்கள் நீல நிறமாக மாறும். மூளை பாதிப்படையக்கூடும். இத்தகைய நிலைக்கு ‘Status Asthmaticus’ என்று பெயர். சில நேரங்களில் மூச்சு அடைப்புடன், வியர்வை, படபடப்பு ஆகியவையும் சேர்ந்து இருந்தால் அது ஆஸ்துமாவாக இல்லாமல் மாரடைப்பாகக்கூட இருக்கலாம். இந் நிலையில் நோயாளியை உடனடியாக அலோபதி மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிவில் சேர்ப்பது அவசியம்.

“ஆஸ்துமா அட்டாக்’ நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு செய்ய வேண்டிய முதலுதவி என்ன?

நோயாளியை நல்ல காற்றோட்டத்தில் தலையை சற்று தூக்கினாற்போல் படுக்க வைக்க வேண்டும். சுய நினைவுடன் நோயாளி இருந்தால் சிறிதளவு வெந்நீரை குடிக்கச் செய்யலாம்; இது மூச்சுக் குழலை விவடையச் செய்யும். பின்னர் காலதாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

ஆஸ்துமா நோயாளிகள் எந்த வகையான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவையே ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டும். அதாவது இட்லி, இடியாப்பம், புட்டு, ஆப்பம் போன்ற ஆவியில் வெந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. பரோட்டா, சப்பாத்தி, பியாணி போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடுடன் மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்) உதவுமா?

நிச்சயம் உதவும். பெங்களூல் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதற்கென பிரத்தியேக நாற்காலி சுவாசப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்தகைய நாற்காலி சுவாசப் பயிற்சி ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவது நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து சித்த மருத்துவத்தில் நாற்காலி பிராணாயமப் பயிற்சி பந்துரைக்கப்படுகிறது.

ஆஸ்துமா நோயாளிகள் மோர் சாப்பிடக்கூடாதா?

நமது நாடு வெப்பம் மிகுந்த நாடு என்பதால் மோரை அறவை தவிர்ப்பது மற்ற உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கலாம். எனவே ஆஸ்துமா நோயாளிகள் பகல் நேரத்தில் மட்டும் மோர் சாதம் சாப்பிடலாம். மோல் கொஞ்சம் மிளகைக் கலந்து சாப்பிட வேண்டும்; வயிற்றுப் புண் பிரச்சினை உள்ள நோயாளிகள் மிளகுக்குப் பதிலாக மஞ்சள்தூள் கலந்த மோரை ஊற்றி பகலில் சாதம் சாப்பிடலாம்.

மூச்சுக் குழலை நேரடியாக விவடையச் செய்யவும் (Broncho-dilation) சளியை இளக்கி எளிதாக வெளியேற்றவும் (Mucolytic) மிளகு அல்லது மஞ்சள் உதவும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

ஆஸ்துமா இருந்தால் ஐஸ்கிரீம் உள்பட குளிர்ச்சியான பொருள்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமா?

ஆம். ஏனெனில் குளிர்ச்சியான பொருள்கள் காரணமாக நுரையீரலின் சுவாசப் பாதை சுருங்கி மூக்கடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஐஸ்கிரீம் உள்பட நீர்ச்சத்து மிகுந்த வெள்ளக்காய், பூசணி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

இதேபோன்று எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருள்களையும் தவிர்க்க வேண்டும். பால், வெண்ணெய், நெய் உள்பட கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது அவசியம்.

ஆஸ்துமாவை “சித்தம்’விரட்டும்!

மனித உடலில் உள்ள பெய உறுப்புகளில் நுரையீரலும் ஒன்று. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பித்தெடுத்து அதை ரத்தத்தோடு கலந்து சுத்தமாக இதயத்துக்கு அனுப்பும் பணியை செவ்வனே செய்துவருவது நுரையீரல்தான்.

மேலும் ஆக்சிஜன் என்ற பிராண வாயுவுடன் தொடர்புள்ளதால் மனிதனின் உயிர் இயக்கத்துக்கும் நுரையீரலுக்கும் உள்ள தொடர்பைச் சொல்லத் தேவையில்லை. மூளை, இதயம், கல்லீரல் போன்ற மற்ற உறுப்புகளுக்கும் வெளி உலகுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஆனால் காற்றுடன் நேரடித் தொடர்பு நுரையீரலுக்கு உள்ளதை மறந்துவிடக்கூடாது. எனவே நுரையீரலை நோய் தாக்காமல் பார்த்துக்கொள்வதில் கவனம் அவசியம். குறிப்பாக புகை பிடித்தல் பழக்கம் நுரையீரலுக்கு நல்லது அல்ல.

நுரையீரல் தொடர்பான நோய்களில் ஆஸ்துமா குறிப்பிடத்தக்கது. மூக்கடைப்பு, தும்மலில் தொடங்கி மார்புச் சளியை வெளியேற்ற முடியாமலும் இரைப்புடனும் ஆஸ்துமா நோயின் தாக்கம் தொடரும். உணவுக் கட்டுப்பாடு உள்பட தொடர் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் ஆஸ்துமா நோயைக் குணப்படுத்த முடியும்.

சித்த மருத்துவத்தில் ஆஸ்துமா நோய்க்குப் பெயர் என்ன? இந் நோய் எந்த வயதினரை அதிகம் தாக்குகிறது?

ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவத்தில் “இரைப்பு நோய்’ என்று பெயர். இந் நோய்க்கு “மந்தார காசம்’ என சித்தர்கள் பெயட்டனர். உலகம் முழுவதும் 5 சதவீதம் பேர் ஆஸ்துமா நோயால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50 சதவீதம் பேர் குழந்தைகள் (2:1 ஆண், பெண் விகிதம்.). நகரங்களின் வளர்ச்சி, தொழில் பெருக்கம் காரணமாக கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது; இதனால் சுற்றுச்சூழல் மாசடைவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

ஆஸ்துமா நோயினால் பெரும்பாலும் 3 முதல் 7 வயது வரை உள்ள நகர்ப்புறக் குழந்தைகளே பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் மண் தூசு அதிகம் உள்ள இடங்களில் விளையாடுதல், பள்ளிக்கூடங்களின் புதிய சூழல் ஆகியவை காரணமாக குழந்தைகள் ஆஸ்துமா பிரச்சினைக்கு உள்ளாகின்றனர்.

ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை என்ன?

ஆஸ்துமா நோய் இருப்பது தெயவந்தவுடன் மேற்சொன்ன உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம். நோயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து முழுமையாகச் சிகிச்சை அளிக்க சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.

1. முசுமுசுக்கை, கசலாங்கண்ணி இலைகளை (இவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.) நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆஸ்துமாவுக்கான மூலிகை டீ தயார். இதை தினமும் காலையிலும் இரவிலும் சாப்பிடுவது சிகிச்சையின் ஒரு பகுதி. மூச்சுக் குழலை விவடையச் செய்து மூக்கடைப்பைத் தவிர்க்கவும் சளியை எளிதாக வெளியேற்றவும் இந்த மூலிகை டீ உதவும்.

2. மிளகு கல்பம் (தூள்). இது மிளகுடன் கசலாங்கண்ணிச் சாறு, தூதுவளைச் சாறு, ஆடாதொடைச் சாறு ஆகியவற்றைக் கொண்டு தயாக்கப்படுகிறது. காலை, இரவு ஆகிய இரு வேளையும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு இந்த மிளகு கல்பத்தை தேனுடன் கலந்து அரை டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.

3. பூரண சந்திரோதயச் செந்தூரம் (தூள்), வாசாதி லேகியம்: இவற்றை காலை, இரவு இரு வேளையும் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டும். பூரண சந்திரோதயச் செந்தூரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். வாசாதி லேகியத்தை நெல்லிக்காய் அளவு எடுத்துச் சாப்பிட வேண்டும்.

எவ்வளவு நாள் சித்த மருந்துகளைச் சாப்பிட வேண்டும்?

ஆஸ்துமா நோய்க்குத் தொடர்ந்து 48 நாள் (ஒரு மண்டலம்) மேற்சொன்ன சித்த மருந்துகளைச் சாப்பிட்டு வந்தாலே நல்ல நிவாரணம் கிடைக்கும். எனினும் நோய் தீவிரமாக உள்ள நிலையில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்த (Immuno Modulation)  சித்த மருந்துகளைத் தொடர்ச்சியாக ஓர் ஆண்டுக்குச் சாப்பிட வேண்டும்.

நுரையீரலின் முக்கியப் பணி என்ன?

ஆக்சிஜன், கார்பன்-டை ஆக்ûஸடு, நைட்ரஜன் உள்பட பல்வேறு வாயுக்கள் அடங்கிய வெளிக் காற்று சுவாசக் குழாய் வழியே நுரையீரலுக்குள் நுழைகிறது. இவ்வாறு வெளிக் காற்று வந்தவுடன் அதில் பெரும்பகுதியாக உள்ள ஆக்சிஜனை மட்டும் பித்தெடுத்து ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றி இதயத்துக்கு அனுப்பும் முக்கியப் பணியை நுரையீரல் செய்கிறது. இதயத்திலிருந்து தொடங்கி உடல் முழுவதுக்கும் பயணம் செய்துவிட்டு வரும் கெட்ட ரத்தத்தை மீண்டும் சுத்திகத்து ஆக்ஸிஜன் கலந்து நல்ல ரத்தமாக மாற்றி அனுப்புவதையும் நுரையீரல் செய்கிறது.

உடலில் நுரையீரலின் (Lung) அமைப்பு என்ன?

உடலில் வலதுபுறம், இடதுபுறம் என இரண்டு பக்கமும் நுரையீரல் பரவி உள்ளது. வலதுபுறம் மூன்று பகுதிகளாகவும் (Lobes) இடதுபுறம் இரண்டு பகுதிகளாகவும் (Lobes)  நுரையீரல் அமைந்துள்ளது. மூன்று பகுதிகள் உள்ளதால் வலதுபுறம் நுரையீரலின் அளவு சற்று பெதாகக் காணப்படும். நுரையீரலின் மொத்தம் உள்ள 5 பகுதிகளில் 4 பாதிக்கப்பட்டு, ஒன்று நல்ல நிலையில் இருந்தால்கூட ஒருவரை வாழ வைக்க முடியும்.

புகை பிடிப்பதால் ஆஸ்துமா அதிகக்குமா?

அதிகக்கும். புகை பிடிப்பதால் மூச்சுக் குழல், நுரையீரலில் நிரந்தர அழற்சி (Inflammation) ஏற்படுகிறது. இது ஆஸ்துமாவை அதிகக்கச் செய்யும். எந்த மருந்துகள் சாப்பிட்டாலும் புகை பிடிப்பதை நிறுத்தாவிடில் ஆஸ்துமா பிரச்சினை நீடிக்கும். புகை பிடிப்பவர் அருகிலிருந்து புகையை சுவாசிப்பதாலும் Passive smoking ஆஸ்துமா அதிகக்கும்.

மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வழி என்ன?

பீன்ஸ் உள்பட நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் காலையில் எழுந்தவுடனும் தண்ணீர் குடிப்பது அவசியம்.

இதேபோன்று வாயுக் கோளாறைத் தவிர்க்க உருளைக் கிழங்கு உள்பட கிழங்கு வகைகளை உணவில் தவிர்ப்பது அவசியம்.

ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,373 other followers