Category Archives: மொபைல் செய்திகள்

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள்

தொடர்ந்த இணையத் தொடர்பு, இக்கால வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையாக மாறிவருகிறது.
இதற்கென அனைவரும் லேப் டாப் கம்ப்யூட்டரையும், இணைய இணைப்பு பெற டேட்டா கார்ட் என அழைக்கப்படும் இணைய சிறிய மோடங்களையும் எடுத்துக் கொண்டு அலைய முடியாது. இந்த தேவையை நிறைவு செய்திடவே, நமக்கு ஸ்மார்ட் மொபைல் போன்கள் அதிக அளவில் வந்துவிட்டன. அனைவரும் வாங்கும் வகையில், பட்ஜெட் விலையிலும் இவை கிடைப்பதால், அநேக மக்கள் இவற்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே பயன்படுத்தப்படுகிறது. அடிப்படை போன்களில் கீ போர்டுடனும், அழைப்புக்கான பட்டன்களுடனும், முகவரிகளில் ஒருவகையான தேடும் வசதியுடனும் மட்டும் பழகி வந்த மக்கள், ஸ்மார்ட் போன்கள் தரும் நவீன வசதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல், குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தரும் வசதிகள் குறித்தும், அவற்றை அமைத்து இயக்கும் வழிகள் குறித்து அறியாமல் இருப்பதுவும் தான். இங்கு அவற்றின் சில முக்கிய வசதிகள் குறித்துப் பார்க்கலாம்.
நிறுவனங்கள் தரும் சில வேறுபாடுகள்: நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் ஸ்மார்ட்

Continue reading →

ஸியோமி எம்.ஐ.3

குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் என்கிற தாரக மந்திரத்தை வைத்து பெரும் நிறுவனங்களுக்கு போட்டி தர வந்திருக்கிறது ‘ஸியோமி’ (Xiaomi) என்னும் சீன நிறுவனம். இது சீனாவின் ‘ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. காரணம், ‘ஆப்பிள்’ போல தனது ஸ்மார்ட் போன்களில் சிறந்த தரத்தையும் தோற்றத்தை யும் தருவதனால் சீனர்கள் இப்படி பெருமையாக அழைக்கிறார்கள். ஆனால், ஒரு ஆப்பிள் போனின் விலையில் குறைந்தபட்சம் நான்கு ஸியோமி ஸ்மார்ட் போன்களை வாங்கிவிடலாம்.

Continue reading →

ஆண்ட்ராய்டு எல் அடுத்த தலைமுறை ஓஎஸ்!

கூகுள் நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ‘ஆண்ட்ராய்டு எல்’ என்கிற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஓஎஸ் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாகத் தொழில்நுட்பத்தில் மட்டுமே கவனத்தைச் செலுத்திவந்த கூகுள், முதல்முறையாக ஓஎஸ் டிசைனிலும் பிரத்யேகமாகக் கவனம் செலுத்தியுள்ளது.

பொதுவாக, ஆண்ட்ராய்டின் ஸ்டேட்டஸ் பார் வசதி மிகவும் பிரசித்தி பெற்றது. காரணம், ஆண்ட்ராய்டின் ஸ்டேட்டஸ் பாரை முன்மாதிரியாகக் கொண்டுதான் ஆப்பிளின் ஐஓஎஸ் மற்றும் மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் ஓஎஸ் தங்களது ஓஎஸ்-ல் ஸ்டேட்டஸ் பாரைக் கொண்டுவந்தது.

ஆனால், தற்போது ஆண்ட்ராய்டு எல் மூலம் ஸ்டேட்டஸ் பார் அடுத்த கட்டத்தைத் தொட்டுள்ளது கூகுள். இந்த ஓஎஸ்-ல் உள்ள ஸ்டேட்டஸ் பார் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் தடவை இழுக்கும்போது மிஸ்டு கால், மெசேஜ், இ-மெயில் போன்ற பொதுவான நோட்டிபிகேஷன்கள் தெரியும். மீண்டும் ஸ்டேட்டஸ் பாரை இழுத்தால், போனுக்கான முக்கிய செட்டிங்குகள் திரையில் தோன்றும். இதை வைத்துக்கொண்டு சில நொடிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல் செட்டிங்கை மாற்றிக்கொள்ளலாம்.

Continue reading →

அமேஸான் நிறுவனத்தின் ஃபையர் ஸ்மார்ட் போன்

அனைத்து மக்களுக்கான ஸ்மார்ட் போன் என தன்னுடைய முதல் ஸ்மார்ட் போனை "Fire” என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது அமேஸான் நிறுவனம். இருபது ஆண்டுகளுக்கு முன்னால், நூல்களை இணையதளம் வழியாக விற்கும் நிறுவனமாக அமேஸான் தொடங்கப்பட்டது. இன்று, உலகின் மிகப் பெரிய வர்த்தக இணைய தளத்தினை நடத்தும் நிறுவனமாக உருவாகியுள்ளது.
தானே தயாரிக்கும் இ-புக் மற்றும் டேப்ளட் பி.சி.க்களை விற்பனை செய்தும் வருகிறது. எலக்ட்ரானிக் நூல்களைத் தயாரித்து வழங்குகிறது. க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் அதிக இடம் தரும் நிறுவனமாகவும் இயங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக, கட்டணம் பெற்றுக் கொண்டு வீடியோ, மின் நூல்கள் மற்றும் இசைக் கோப்புகளை வழங்கி வருகிறது.

Continue reading →

ஐஓஎஸ் 8 சாஃப்ட்வேரில் என்ன ஸ்பெஷல்?

டந்த காலத்தில் ஐபோன், ஐபேட் என தொழில்நுட்ப சாதனங்களில் கவனம் செலுத்திய ஆப்பிள், இந்த ஆண்டு சாஃப்ட்வேர் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துவதாக அறிவித்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் விரைவில் வெளிவர இருக்கும் ஐஓஎஸ் 8 சாஃப்ட்வேர்.

ஆண்ட்ராய்ட்டில் இருந்து சிலவற்றையும், ஆண்ட்ராய்டை மிஞ்சும் சில தொழில்நுட்பங்களையும் புதிதாக இணைத்து ஐஓஎஸ் 8 சாஃப்ட்வேரை உருவாக்கியிருக்கிறது ஆப்பிள்.

நோட்டிஃபிகேஷன்: தற்போதைய ஆப்பிள் ஐஓஎஸ்-படி நீங்கள் போனில் எதாவது படித்துக்கொண்டிருக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வருகிறது

Continue reading →

ஆப்பிள் ஐ போன் 4 மீண்டும் அறிமுகமாகிறது

இந்தியாவில் ஐபோன் 4 ஐ (8 ஜிபி) மீண்டும், ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. ரூ.15,000 என்று விலையிடப்பட்டு, தவணை முறையிலும், பழைய போன்களை வாங்கிக் கொண்டும் இது விற்பனை செய்யப்படும். இது அறிமுகமான போது ரூ.26,500 என விலையிடப்பட்டது. தற்போது ரூ.11,500 குறைக்கப்பட்டுள்ளது.

Continue reading →

ஸ்மார்ட் போன்களில் சென்சார்கள்

திறன் செறிந்த ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். இதனை உணர்வலை தொழில் நுட்பம் என அழைக்கின்றனர். வரும் ஆண்டுகளில், இந்த தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. ஒரு சிக்னல் அல்லது தூண்டுதலைப் பெற்று, அதற்கேற்ற வகையில் இயங்குவதே சென்சார் தொழில் நுட்பமாகும். இது ரேடியோ அலையாகவோ, வெப்பமாகவோ, ஒளியாகவோ இருக்கலாம். தற்போது புழக்கத்தில் இருக்கும் பலவகையான சென்சார் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
1. தேவையான ஒளி உணர்வலை (ambient light sensor): டேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இது பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் இயங்க்கும் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க இது பயன்படுகிறது. டிஸ்பிளேயினைச் சரி செய்து, நாம் நன்றாகப் பார்க்க வசதி செய்கிறது. அதிக ஒளியுடன் திரைக் காட்சி இருந்தால், அதனைக் குறைத்து, காட்சியினைத் தெளிவாகக் காட்டுவதுடன், அதன் மூலம் பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கச் செய்கிறது.

Continue reading →

நடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே

நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக் கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது.

Continue reading →

ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்

அடிப்படை மற்றும் சிறந்த வசதிகளைக் குறைக்காமல், ரூ.10,000க்கும் குறைவாக விலையிட்டு, இந்தியாவில் விற்பனையாகும், ஸ்மார்ட் போன்களை ஒரு பட்டியல் இட்டுப் பார்த்ததில், பல போன்கள் இடம் பெற்றன. இவற்றில் மேலாக வந்த சில போன்கள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. வாசகர்களின் சில குறிப்பிட்ட எதிர்பார்ப்புகளில், வேறு சில போன்களும் இடம் பிடிக்கலாம். இங்கு பொதுவான எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் இவை தரப்படுகின்றன.
1. சாம்சங் காலக்ஸி பேம் (Samsung Galaxy Fame): 3ஜி, வை-பி, இரண்டு கேமரா, 3.5 அங்குல டச் ஸ்கிரீன், இரண்டு சிம், 1,300 பேட்டரி, ஜெல்லி பீன் 4.1 என சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட இந்த போன் விலை ரூ. 8,450.
2. எல்.ஜி. ஆப்டிமஸ் எல் 4 – 2 டூயல் (LG Optimus L4 II Dual): இரண்டு சிம், 512 எம்.பி. ராம் மெமரி, 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஜெல்லி பீன் 4.1.சிஸ்டம், 3,8 அங்குல திரை என நல்ல அம்சங்களுடன் கொண்ட இந்த போன் கடைகளில் ரூ.8,800க்குக் கிடைக்கிறது.
3. நோக்கியா லூமியா 520 (Nokia Lumia 520): இது ஒரு விண்டோஸ் சிஸ்டம் கொண்ட போன். மல்ட்டி டச் வசதி கொண்ட 4 அங்குல திரை. 5 எம்.பி. கேமரா, டூயல் கோர் எஸ்4 ப்ராசசர், 512 எம்.பி. ராம், 1430mAh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது. சில்லரை வர்த்தகர்களிடம் இதன் விலை ரூ. 9,900.
4. பானாசோனிக் டி11 (Panasonic T11): நல்ல விரைவான செயல்பாட்டிற்க்கு குவாட் கோர் ப்ராசசர், 2 கிகா ஹெர்ட்ஸ் சிப்செட், ஜெல்லி பீன் 4.1, 4 அங்குல ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன், 5 எம்.பி.கேமரா, 1500 mAh திறன் கொண்ட பேட்டரி, 1 ஜி.பி. ராம் மெமரி என அம்சங்கள் கொண்ட இந்த போன் ரூ.9,250க்குக் கிடைக்கிறது.
5. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பன் ஏ76 (Micromax Canvas Fun A76): 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், ஜெல்லி பீன் 4.2., டச் ஸ்கிரீன் 5 அங்குல அகலத்தில், 5 எம்.பி.கேமரா, 2000 mAh திறன் கொண்ட பேட்டரி கொண்ட இந்த மொபைல் போனை ரூ.8,300க்கு வாங்கலாம்.

காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் வெளியானது

E_1378639243

சென்ற வாரம், பெர்லின் நகரில், சாம்சங் நிறுவனம், தன் முதல் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. சோனி நிறுவனத்தை அடுத்து, இத்தகைய கடிகாரத்தை அறிமுகப்படுத்திய இரண்டாவது நிறுவனமாக, சாம்சங் பெயர் பெற்றுள்ளது. உடலில் சாதனத்தை அணிந்து கொண்டு, அதன் வழியே கம்ப்யூட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணப் பாங்கு, டிஜிட்டல் உலகில் வலம் வருபவர்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மக்கள் பலரும் இத்தகைய சாதனங்களை எதிர்பார்ப்பதால், இதுநல்ல விற்பனையை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். மேலும், வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம் இதற்கு முழுமையாகக் கை கொடுக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச், இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போனுடன் இணைந்தே செயல்படும். இணையாக்கப்பட்ட ஸ்மார்ட் போனுடன், புளுடூத் வழி தொடர்பு கொண்டு இது இயங்கும்.
இந்த கடிகாரத்தில் வைத்து இயக்கவென, எந்த செல்லுலர் தொடர்பும் இருக்காது. இணையாக்கப்பட்ட போன், இரண்டு மீட்டர் தொலைவிற்குள்ளாக இருக்கவேண்டும். தற்போதைக்கு, இந்த ஸ்மார்ட் வாட்ச், சாம்சங் நோட் 3 சாதனத்துடன் இணைவிக்கப்பட்டே இயங்கும். பழைய சாம்சங் போன் அல்லது, மற்ற நிறுவனங்களுடன் இது இயங்காது என்றே தெரிகிறது.
ஸ்மார்ட் வாட்ச் முன்புறம், சதுர வடிவில் 1.6 அங்குல அகலத்தில் AMOLED டச் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு பட்டன் மூலையில் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால், ஹோம் ஸ்கிரீன் கிடைக்கிறது. இதனை ஸ்வைப் செய்து, பல அப்ளிகேஷன்களைப் பெறலாம். இதன் தொடக்க தோற்றம் ஒரு கடிகாரத்தினுடையதாகத்தான் இருக்கும். பயன்படுத்துபவர், இதனை ஸ்வைப் செய்து, பல பயனுள்ள அப்ளிகேஷன்களைப் பெறலாம். மெசேஜ் மற்றும் அழைப்பு குறித்த அறிவிப்பு இதில் கிடைக்கும். வரும் அழைப்புகளுக்கு, மணிக்கட்டில் உள்ள கடிகாரத்தில் உள்ள, பட்டனை அழுத்திப் பேசலாம். அல்லது அணைத்து ஒதுக்கலாம். இந்தக் கடிகாரத்தில் ஒரு ஸ்பீக்கர் மற்றும் மைக் தரப்பட்டுள்ளது. போனுக்கு வந்திருக்கும் அழைப்புகள் மற்றும் டெக்ஸ்ட் மெசேஜ்களை இதில் பார்க்கலாம். ஆனால், ஜிமெயில், ட்விட்டர் போன்றவற்றிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகள், அறிவிப்புகளாகத்தான் காட்டப்படும். இவை குறித்து கூடுதல் தகவல்கள் அறிய, பயனாளர் போனைத்தான் பார்க்க வேண்டியதிருக்கும்.
இதில் டயலர் வசதி தரப்பட்டுள்ளது. எனவே,இதிலிருந்து அழைப்புகளை ஏற்படுத்தி பேசலாம். போனின் துணையுடன் இதனை ஒரு போனாகவும் பயன்படுத்தலாம். இதில் 1.9 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய கேமரா ஒன்று இயங்குகிறது. இது கடிகாரத்தில் இல்லாமல், தனியே அதனைக் கைகளில் கட்டும்
பட்டையில் உள்ளது. இந்த கேமரா, இதனை அணிந்திருப்பவரைப் பார்க்காது. வாய்ஸ் மெமோ ரெகார்டர், மியூசிக் பிளேயர், அழைப்புகளின் பட்டியல், போன் புக் மற்றும் பிற அப்ளிகேஷன்களுக்கான ஐகான்களைத் தரும் பக்கத்திற்கான ஐகான் என திரையில் காட்சி கிடைக்கிறது.
செப்டம்பர் 25 லிருந்து, இந்த காலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் 140 நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அக்டோபர் தொடக்கத்தில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும். மொபைல் போன் விற்பனை செய்பவர்கள் மூலம் இது விற்பனை செய்யப் படும்.இதன் விலை 300 டாலர் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளுடூத் 4 மட்டுமே இயங்கும் என்பதால், புதியதாக வந்துள்ள காலக்ஸி நோட் 3 மட்டுமே, தற்போதைக்கு இதனுடன் இணையாகச் செயல்பட முடியும். இந்த 5.7 அங்குல பேப்ளட் வாங்குவதற்கும் செலவு செய்திட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வளவு செலவு செய்து இதனைப் பயன்படுத்த வேண்டுமா என்பது இன்றைய கேள்வியாக இருந்தாலும், இது போன்ற ஒன்று வேண்டும் என்பது இன்றைய நிலையில் ஒரு தேவையாகத் தரப்படவில்லை.எனவே, புதியதாக அறிமுகப்படுத்தப்படும் இதனை மக்கள் விரும்புவார்கள் என சாம்சங் எதிர்பார்க்கிறது. எப்படி, கம்ப்யூட்டரில் பார்த்துப் பழகிய மின்னஞ்சல்களை, ஸ்மார்ட் போனில் பார்த்துப் பயன்படுத்த நாம் மாறிக் கொண்டோமோ, அதே போல, மொபைல் போனில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, இனி ஸ்மார்ட் வாட்சில் பார்க்கும் பழக்கம் வந்து விடும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,908 other followers