Category Archives: யோகாசனம்

மேரு தண்டாசனம்

செய்முறை:

விரிப்பில் கால்களை முன்புறம் நீட்டி அமர வேண்டும்
படத்தில் காட்டியவாறு முழங்கால்களை மடக்கி, கால் விரல்களை கைகளால் பிடிக்க வேண்டும்
பார்வையை முன்புறம் ஒரே இடத்தில் பதிக்க வேண்டும். பயிற்சி முடியும் வரை பார்வையை திருப்பக் கூடாது
மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, கால்களை உடம்பிற்கு முன்னே உயர்த்தி, பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முடிந்தவரை இரண்டு கால்களையும் நன்றாக விரிக்க வேண்டும்
கை, கால்களை மடக்கக் கூடாது. சிறிது நேரம் ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், சாதாரண நிலைக்கு வர வேண்டும்

பயன்கள்:

Continue reading →

வலிமையாக்கும் மண்முத்திரை

ஞ்சபூதங்களில் ஒன்றான நிலம்தான் நம் தாய்மடி.  உணவும் உடையும் உறைவிடமும் நமக்குத் தரும் பேரியற்கை. உடலுக்குத் தேவையான தாதுக்கள், உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் மண்ணில் இருந்தே கிடைக்கின்றன. மனித உடலின் பல பகுதிகள் நிலத்தின் தன்மை கொண்டவை. திடமும் வளர்ச்சியும் நிலத்தின் பண்புகள். அதுபோல நம்மைத் திடப்படுத்தவும், வளர்ச்சி அடையவைக்கவும் மண் முத்திரை உதவுகிறது.

Continue reading →

உடல் எடை குறைக்கும் சூரிய முத்திரை

டல்பருமனாக இருப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம். அதிக உடல் எடையால் இதய நோய், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வலி, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் வருகின்றன. உடல் எடையைக் கட்டுக்குள்வைத்தாலே, பல்வேறு நோய்கள் வராமல் தடுத்துவிடலாம். இதற்குத் துணைபுரிவது சூரிய முத்திரை. யோகப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் செய்யும் பலனை இந்த முத்திரை அளிக்கும்.

பஞ்ச பூதங்களில் ஒன்றான தீ, கழிவுகளை எரித்து அழிக்கும் தன்மைகொண்டது. உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் இந்த முத்திரைக்கு, ‘சூரிய முத்திரை’ என்று பெயர். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை. உண்ணும் உணவில் முழுமையாகச் செரிக்கப்படாதவை, கொழுப்பாக மாறுகின்றன. நெருப்பு என்னும் சக்தியே செரிமானத்துக்குத் துணைபுரிந்து, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்க உதவுகிறது.

கட்டளைகள்

Continue reading →

பாவன்முக்தாசனா (Pawanmuktasana)

தரைவிரிப்பின் மீது படுத்துக்கொள்ள வேண்டும். கைகள் உடலுக்கு அருகில் பக்கவாட்டில் தரையின் மேல் பதிந்திருக்க வேண்டும். மூச்சை இழுத்தபடி, கால்களை 90 டிகிரிக்கு செங்குத்தாக உயர்த்த வேண்டும். இப்போது, மூச்சை வெளியே விட்டபடி இரு கால்களையும் மடக்கி, கைகளை முட்டியுடன் கோத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

மூச்சை உள்இழுத்தபடியே தலை, தோள்பட்டை, மேல் உடலை முடிந்த அளவுக்கு முட்டி நோக்கிக் கொண்டுவர வேண்டும்.

10 விநாடிகள் அப்படியே இருந்துவிட்டு, மூச்சை விட்டபடியே பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி, தினமும் மூன்று முறை செய்யலாம்.

Continue reading →

வஜ்ராசனம் (Vajrasana)

யோகாவைச் சிறியவர்கள் மற்றும் நடுத்தர வயதினர் மட்டுமே செய்ய வேண்டும் என்கிற தவறான எண்ணம் பரவலாக உள்ளது. வயதானவர்களும் யோகா செய்யலாம், அப்படிச் செய்வதால் அவர்களின் பலதரப்பட்ட வலிகள், பிரச்னைகள் குறைய வாய்ப்புகள் அதிகம். ஆனால், யோகா பயிற்சியாளர் உதவியோடு மட்டுமே ஆசனங்களைச் செய்ய வேண்டும். இதோ நமக்கான எளிய ஆசனங்கள்…

யோகாவுக்குத் தயாராகும் முன்…

கண்களை மூடி, கைகளில் சின்முத்திரை வைத்து (கட்டை விரல் நுனியும் ஆள்காட்டி விரல் நுனியும் ஒன்றை ஒன்று தொட்டபடி மற்ற விரல்கள் நீண்டிருக்கும் நிலை)  10 முறை மூச்சைக் கவனிக்க வேண்டும். இது யோகா செய்வதற்கு முன் மனதை ஓய்வுபெறச் செய்ய உதவும்.

வஜ்ராசனம் (Vajrasana)

Continue reading →

பத்மாசனம்

பொருள்: பத்மம் என்றால் தாமரை, தாமரை இலையில் நீர் ஒட்டாது. அதுபோல் புறப்பொருட்களின் மேல், மனம் ஒட்டாமல், அகத்தில் ஒன்றி, தியானம் செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், இந்த பெயர் பெற்றது.
செய்முறை:
1. விரிப்பில் அமர்ந்து இரண்டு கால்களையும் நேராக நீட்ட வேண்டும்.
2. இடது கையால் வலது கால் பெருவிரலை பிடித்து, இடது தொடையின் மேல் வைக்க வேண்டும்.
3. இடது காலின் பெருவிரலை பிடித்து, வலது தொடையில் வைக்க வேண்டும்.
4. இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்க வேண்டும்.
5. முதுகு நேரான நிலையில் இருக்க வேண்டும்.
6. சிறிது நேரத்திற்கு பின் மெதுவாக விலக்கி, கால்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பலன்கள்
1. தியான நிலைக்கு சிறந்த ஆசனம்.
2. கூன் பிரச்னை விலக்கப்படும்.
3. தொடைகளில் அதிகப்படியான சதை குறையும்.
4. பிராணாயாம பயிற்சிக்கு இந்த ஆசனம் சிறந்தது.
5. அடிவயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை விலகி, வயிறு லேசாகும்.

மூட்டுகளைப் பாதுகாக்கும் சந்தி முத்திரை

ம் உடலின் அசைவுகளுக்கும் இயக்கத்துக்கும் உதவுபவை மூட்டுகள்.  இரண்டு எலும்புகளை ஆதாரமாகக்கொண்டு, நடுவில் வட்ட (Disc) வடிவில் இருக்கும். தசைநார்கள், சவ்வு ஆகியவற்றால் ஒன்றோடு ஒன்று இணைந்து, அதைச் சுற்றிலும் ஈரப்பசையான திரவத்தால் (Synovial fluid) மூடப்பெற்று, ரத்தமும் நரம்புகளும் அதன் வழியாகச் செல்லும் ஓர் அற்புத இயற்கைப் படைப்பு.

ஒரு காலத்தில் 60 வயதில் வந்த மூட்டு வலிப் பிரச்னை, இப்போது 30-40 வயதுக்குள்ளேயே வந்துவிடுகிறது. உடலுக்கு வந்து செல்லும் எத்தனையோ பிரச்னைகளில், மூட்டு வலி மட்டும் நிரந்தரமாகத் தங்கிவிடுகிறது. வலிக்குக் காரணத்தைக் கண்டறிந்து குணப்படுத்தாமல், தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகளை மட்டுமே சாப்பிடுவதால், சிறுநீரகப் பாதிப்பு எனும் பின்விளைவு, நம்மைப் பின்தொடர்கிறது. இதற்குத் தீர்வாக மருந்தில்லா மருத்துவமாக, அதாவது நம் கைகளிலே இருக்கக்கூடிய இயற்கை அளித்த கொடைதான், ‘சந்தி முத்திரை.’

மண் மற்றும் ஆகாயம் ஆகிய இரு பூதங்களும் சமன்படுவதால் வலுவற்ற, தளர்வான மற்றும் இறுக்கமான மூட்டுகளுக்கு நிவாரணம் அளித்து அவற்றை உறுதியாக்கும் வேலையை சந்தி முத்திரை செய்கிறது.

கட்டளைகள்

Continue reading →

சக்ராசனம்

நம் உடலை, சக்கரம் போன்று வளைப்பதால் இந்த பெயர் பெற்றது.
செய்முறை:
1விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும்
2 இரண்டு கால்களையும் மடக்க வேண்டும்
3 கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும்
4கைகளை பின்புறமாக கொண்டு சென்று, கழுத்தின் பக்கவாட்டில் சிறிது இடைவெளி விட்டு, உள்ளங்கை தரையில் படுமாறு வைக்க வேண்டும்
5 உள்ளங்கைகளை அழுத்தியவாறு, மெதுவாக முதுகை உயர்த்தி, பின் தலையை உயர்த்த வேண்டும் (இந்த நிலையில் தலையை கீழே தொங்க விட வேண்டும்.)
6 ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.
குறிப்பு:
வலுவிழந்த மணிக்கட்டு உள்ளோர், இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
பலன்கள்:

* நம் உடம்பிலுள்ள நரம்பு மண்டலம் பலமாகும்
*வயிறு இறுக்கப்படுவதால், உடல் எடை குறையும்
* அஜீரணக் கோளாறு சரியாகும்
* கைகள் மற்றும் மூட்டு வலுப்பெறும்
* பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
* கண் பார்வை திறன் மற்றும்
*முகப் பொலிவு அதிகரிக்கும்.

அர்த்த மச்சேந்திர ஆசனம்

பொருள்:
மச்சேந்திரர் என்ற மாமுனிவர், இந்த ஆசனத்தை செய்து, பலன் அடைந்ததால், அவருடைய பெயரே இவ்வாசனத்துக்கு நிலைபெற்றது.

செய்முறை:

1. இரண்டு குதிகால்களின் மேல் உட்கார வேண்டும்
2. பின், மெதுவாக வலது காலை, இடது கால் தொடைப் பகுதியை ஒட்டியவாறு வைக்க வேண்டும்
3. வலது கை, உடம்பிற்கு பின்னால், உள்ளங்கை கீழே படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்
4. அதன்பின், இடது கையை, வலது காலின் வெளிப் பக்கம் கொண்டு வந்து வலது கணுக்காலை பிடிக்க வேண்டும்
5. மெதுவாக வலது பக்கம் திரும்பி, பார்க்க வேண்டும்
6. ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், சாதாரண நிலைக்கு வர வேண்டும். இதேபோன்று, கால்களை மாற்றி செய்ய வேண்டும்.

பயன்கள்:

1. இடுப்பு சதை குறையும்
2. ‘ப்ராஸ்ட்ரேட்’ சுரப்பி, நன்கு வேலை செய்ய உதவும்
3. ‘இன்சுலின்’ சுரந்து,
உடம்பில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
4. வயிறு சம்பந்தமான பிரச்னைகள் சரியாகும்
5. சிறுநீரகம், நன்கு வேலை செய்ய உதவும்
6. முதுகு வலி குறையும்.

பஸ்சிம உத்தான ஆசனம்

பொருள்:
பஸ்சிமம் – மேற்கு; இங்கு முதுகுப் பகுதி எனப்பொருள். உத்தானம் – நீட்டுவது.
உடலின் மத்திய பகுதி நன்கு இழுக்கப்படுவதால், இந்த பெயர்.

செய்முறை:

தரையில் அமர்ந்து கால்களை நேராக நீட்ட வேண்டும்
கைகளை காதோடு சேர்த்து மேலே தூக்க வேண்டும்
மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முன்புறம் குனிந்து, கால் கட்டை விரலை தொட வேண்டும். அப்போது நெற்றி, முழங்காலில் பட வேண்டும்.
இரண்டு முழங்கைகளும் தரையில் பட வேண்டும்; கால்களை தூக்க கூடாது.
சிரமமான ஆசனமாக இருந்தாலும், செய்யச் செய்ய சுலபமாகும்.
பலன்கள்:
1. ஜீரண உறுப்புகளை பலப்படுத்தி, அவற்றை சீராக இயங்க வைக்கிறது
2. மலச்சிக்கல் நீங்கும்
3. மாதவிடாய் பிரச்னை சரியாகும்
4. இன்சுலின் சரியாக சுரந்து, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
5. உடல் எடை குறையும்

குறிப்பு:
முதுகு வலியுள்ளோர், யோகாசன நிபுணர்களின் ஆலோசனையோடு செய்வது நல்லது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 3,784 other followers