Advertisements

எடை குறைப்புக்கு ஏற்ற வழி

உடல் எடை குறைக்க இனி மூச்சு வாங்க ஓடவோ, உடற்பயிற்சி, ஜிம், டயட் என்று சிரமப்படவோ தேவையில்லை. எங்கள் மாத்திரையை மட்டும்
சாப்பிடுங்கள் ஒரே மாதத்தில் எடை குறைந்துவிடும் என்ற விளம்பரங்களை ஆங்காங்கே பார்த்திருப்பீர்கள்.
இந்த விளம்பரங்களைக் கண்டு மயங்கும் பலர் அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக, உடல் எடை குறைக்க விரும்பும் இளம்பெண்களின் லேட்டஸ்ட் சாய்ஸ் டயட் பில்ஸ் என்று

Continue reading →

Advertisements

HAPPY DIWALI

diwalidiwalicardef68e9e5bc279b0ccf4f2e61c1f1f947

தீபாவளி அன்று நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!

தீபாவளி என்றுமே குதூகலமும் குடும்ப ஒற்றுமையையும் பாராட்டும் ஒரு நன்னாள். வருடத்திற்கு ஒரு முறைதான் நாம் தீபாவளியைக் கொண்டாடுகின்றோம்.

அதனால்தான் இந்த திருநாளை எதிர்பார்த்து நாம் புதுத் துணிமணிகளை எடுக்கிறோம்; வீட்டை சுத்தம் செய்கிறோம்; பலகாரங்கள் சுடுகிறோம். வேலை செய்பவர்கள் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே அலுவல் வேலைகளை முடித்துக் கொண்டு தீபாவளிக்காக நீண்ட விடுமுறை எடுத்துக் கொள்கின்றனர்.

இப்படி தீபாவளிக்கு முன்னமே பல முன்னேற்பாடுகளைச் செய்யும் நாம் தீபாவளி அன்று கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

1. காலையிலே எழுந்திருக்க வேண்டும்

Continue reading →

சிரித்தால் மறக்கும் கவலை

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது வழக்குமொழி மட்டும் அல்ல… விஞ்ஞான உண்மையும் கூட. எபிநெப்ரின் நார் எபிநெப்ரின் கார்டிசால் ஆகியவை, மன அழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்கள். மனம்விட்டுச் சிரிப்பதால், இந்த ஹார்மோன்களின் சுரப்பை குறைக்கிறதாம்.

Continue reading →

நோயாளிகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் துவங்கி, நவம்பர் வரை, டெங்குவின் பாதிப்பு இருக்கும். இந்த ஆண்டு மே மாதத்தில், சில நாட்கள் மழை பெய்ததைத் தொடர்ந்து, டெங்கு

Continue reading →

லட்சுமிகுபேர பூஜை!

ஸ்ரீமகாலட்சுமி செல்வத்துக்கு அதிபதி. புகழ், கல்வி, வீரம், வெற்றி, புத்திரபாக்கியம், தைரியம், தனம், தான்யம், சுகம், இன்பம், அறிவு, அழகு, கௌரவம், அறம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் ஆகிய பதினாறு செல்வங்களையும் அருள்பவள் ஸ்ரீமகாலட்சுமி. இவற்றையே, ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’ என்று பெரியோர்கள் வாழ்த்துகின்றனர்.
செல்வத்துக்கு அதிபதி மகாலட்சுமி என்றால், மகாலட்சுமியின் அருள்பெற்றவர்களுக்கு மகாலட்சுமியின் உத்தரவின்படி செல்வங்களை அருள்பவர் குபேரன். பார்வதிதேவியின் கருணையினால், தான் இழந்த கண்பார்வையைப் பெற்ற குபேரன், சிவபெருமானின் அருளால் வடதிசையின் அதிபதி என்ற பதவியையும், செல்வத்தை வழங்கும் அந்தஸ்தையும் பெற்றார். இவரே செல்வத்தைக் காப்பவராகவும் திகழ்கிறார்.
நீரூற்று எவ்வாறு நீரைத்தருகிறதோ, அதுபோன்று மனதார முறைப்படி குபேரனை வழிபடுகிறவர்களுக்கு, தளர்வில்லா தனபாக்கியம் தந்து அவர்களின் வாழ்வை மேன்மையடையச் செய்கின்றார்.

கோதுமை நிறத்தில் குள்ளமான உருவம்கொண்டு, சிரித்த முகத்துடனும் தொப்பையுடனும் காட்சி தரும் குபேரன், வலக்காலை தொங்கவிட்டு, இடக்காலை மடித்துக்கொண்டு அமர்ந்திருப்பார். வலக்கையில் அபய முத்திரையும், இடக் கையில் கீரிப்பிள்ளையும்கொண்டு, வலப்பக்கத்தில் மனைவி கிட்டாரியுடன் காட்சி தருகிறார். கயிலாய மலைக்கு அருகில் இருக்கும் வடக்குப் பகுதியின் உயரமான அளகாபுரிதான் குபேரன் வசிக்கும் நகரமாகும்.
தீபாவளியையொட்டி மகாலட்சுமி குபேர பூஜை செய்வது மரபு. தீபாவளியை முன்னிட்டு மகாலட்சுமி குபேர பூஜையைச் செய்யும் முறைகள், பூஜை ஏற்பாடுகள், தேவையான பொருள்கள் போன்ற விவரங்களைக் காண்போம்.
ஸ்ரீலட்சுமிகுபேர யந்திரம்
ஸ்ரீலட்சுமிகுபேர யந்திரத்தை வெள்ளி அல்லது செம்பில் தயார் செய்துகொள்ள வேண்டும். மூன்றுக்கு மூன்று என்ற அளவில் உள்ள யந்திரத்தை, படத்தில் உள்ளது போல் 9 கட்டங்களில் எண்களைப் பொறித்து தயார் செய்ய வேண்டும்.பிறகு பூஜைக்குத் தேவையான பொருள்களையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.
மஞ்சள்பொடி, பலகை, தண்ணீர், குபேர யந்திரம், புதுத்துணி, யந்திரம் வைக்க, கலசம், மாவிலை, பூக்கள், வாழை இலைகள், சந்தனம், குங்குமம், தேங்காய், வாழைப்பழங்கள், வெற்றிலை, பாக்கு, விளக்கு, நெய், எண்ணெய், தீப்பெட்டி, தேன், தயிர், பஞ்சாமிர்தம், தீபம், தூபம், ஆரத்தி தட்டு, சாம்பிராணி, ஊதுவத்தி, பஞ்சபாத்திரம், உத்திரினி, பூணூல், நகைகள், இனிப்புப் பதார்த்தங்கள், கோதுமை, அரிசி, நவதானியங்கள், நிறைய கிண்ணங்கள் மற்றும் பல பொருள்களை அவரவர் விருப்பத்தின்படி சேர்த்துக் கொள்ளலாம்.

பூஜை செய்யும் முறை
ஸ்ரீலட்சுமிகுபேர படத்தை வைத்து, அதன் முன்பாக கிழக்கு திசையில் பலகையை வைத்து அதன்மீது நெல்லைப் பரப்பி, பின் வாழை இலையை விரித்து வைக்க வேண்டும். வாழை இலையின் மீது புதிய துணியை விரித்து அதில் ஸ்ரீலட்சுமிகுபேர யந்திரத்தை வைக்க வேண்டும். இதற்குப் பக்கத்தில் மாவிலை, பூமாலை மற்றும் குங்குமம் வைத்த கலசத்தைச் சற்று உயரமாக இருக்கும்படி வைக்க வேண்டும்.
முதலில் கணபதியை தியானம் செய்தபின், ஒன்பது நாணயங்களை எடுத்துக்கொண்டு அதை கட்டத்திலுள்ள எண்களை மறைக்காத வண்ணம் வைக்க வேண்டும். பின் சிவப்பு நிற மலர்களை ஒவ்வொன்றாக நாம் வைத்துள்ள நாணயங்கள்மீது சமர்ப்பிக்க வேண்டும். குபேர படத்துக்கு மாலை அணிவிக்க வேண்டும். விளக்கு ஏற்றி வைத்து, ஊதுவத்தி, சாம்பிராணி ஏற்றிவிட்டு, பின் குபேரருக்குரிய மந்திரங்களை 108 தடவை சொல்ல வேண்டும். பிறகு புஷ்பம் சாத்தி, தூப தீபம் காட்டி, இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும். சிரத்தையுடன் ஸ்ரீமகாலட்சுமி குபேர பூஜை செய்து, அளவற்ற செல்வங்களைப் பெற்று சிரமமில்லாமல் வாழ்வோம்.


குபேர காயத்ரி
ஓம் யஷ்யாய ராஜாய வித்மஹே, அலகாதீசாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்…
குபேர ஸ்தோத்திரம்
சங்க பத்மாதி நிதயே குபேராய நமோ நம:
தனதான்ய ஸ்ம்ருத்திஸ்து த்வத் ப்ரஸாதாத் மயிஸ்த்திர:
நவநிதி ஸமோபேதம் தன தம்யாண புஷ்பகம்.
பிங்காக்ஷம் பாவயே நித்யம் ஹைம வர்ண மநோஹரம்…
ஸ்ரீ தனாகர்ஷண ஸ்ரீ மஹாலட்சுமி ஸஹிதம்
ஸ்ரீ குபேர ராஜம் தாயாயாமி
ஸ்ரீ தனாகர்ஷண ஸ்ரீ மஹாலட்சுமி ஸஹிதம் ஸ்ரீ குபேராய நம:

ட்ரிக்கயாசிஸ் – கண்ணிமை முடிகள் சீரற்ற முறையில் அமைந்திருத்தல் பற்றித் தெரிந்துகொள்வோம்

ட்ரிக்கயாசிஸ் என்பது என்ன? (What is trichiasis?)

கண்ணிமை முடிகள் வழக்கத்திற்கு மாறாக் சீரற்ற முறையில் அமைந்திருப்பதையே ட்ரிக்கயாசிஸ் என்கிறோம். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு பொதுவாக கண்ணிமை முடிகள் கண்ணிலிருந்து வெளி நோக்கியபடி இருப்பதற்கு பதிலாக உள்நோக்கியபடி இருக்கும். இவர்களின் கண்ணிமை முடிகள் அவர்களின் கருவிழி, விழி வெண்படலம் மற்றும் கண்ணிமைகளின் உட்புறப் பரப்புகளில் உரசுவதால், கண்களில் எரிச்சல் உண்டாகும்.

காரணங்கள் (Causes)

Continue reading →

திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்னர் யாரை வணங்க வேண்டும்?

திருப்பதி வெங்கடேசப்பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பாக, யாரை வணங்க வேண்டும் தெரியுமா? திருப்பதிக்குச் செல்பவர்கள் திருமலையில் வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வழிபட்டு, தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகின்றனர். அதில் குறையொன்றுமில்லைதான். ஆனால், வேங்கடவனை நாம் தரிசித்து வழிபடுவதற்கு முன்பு மற்றொரு மூர்த்தியை நாம் தரிசித்து வழிபடவேண்டும். 

அப்படி முதல் வணக்கத்துக்கு உரிய மூர்த்தி யார் தெரியுமா?

அவர்தான் வராக மூர்த்தி!

அவரை ஏன் நாம் முதலில் வழிபடவேண்டும்?

திருப்பதி

அவர்தான், கலியின் துன்பங்களில் இருந்து பக்தர்களைக் காப்பதற்காக முதலில் திருமலையில் எழுந்தருளியவர்!
அவருடைய இடத்தில்தான் இப்போது வேங்கடவன் எழுந்தருளி இருக்கிறார்.

முதல் வணக்கத்துக்கு உரிய வராக மூர்த்தியின் திவ்விய வரலாறுதான் என்ன?

ஒருமுறை வைகுண்டவாசனை தரிசிப்பதற்காக சனகாதி முனிவர்கள் வைகுண்டம் சென்றனர். அப்போது பகவான் நாராயணன், மகாலட்சுமி தேவியுடன் ஏகாந்தமாக இருந்த காரணத்தினால், துவாரபாலகர்கள் முனிவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
சினம் கொண்ட முனிவர்கள், அவர்கள் இருவரையும் பூமியில் போய் பிறக்குமாறு சபித்துவிட்டனர்.

முனிவர்களின் வரவை உணர்ந்த பகவான், அவர்களை வரவேற்பதற்காக வாயிலுக்கு வந்தார். துவாரபாலகர்கள் தாங்கள் பெற்ற சாபத்தை பகவானிடம் கூறி முறையிட்டனர். 

பகவான், ”உங்களுக்கு முனிவர்கள் கொடுத்த சாபத்தை என்னால் மாற்ற முடியாது. நீங்கள் பல பிறவிகள் நல்லவர்களாகப் பிறந்து முடிவில் என்னை அடைகிறீர்களா அல்லது மூன்று பிறவிகள் கொடிய அரக்கர்களாகப் பிறந்து, என்னால் வதம் செய்யப்பட்டு என்னை அடைகிறீர்களா?” என்று கேட்டார்.

துவாரபாலகர்கள், ”உங்களை விட்டு நீண்ட காலம் எங்களால் பிரிந்திருக்க முடியாது. நாங்கள் கொடிய அசுரர்களாகப் பிறந்து மூன்று பிறவிகள் முடிந்ததும் தங்களிடம் வரவே விரும்புகிறோம்” என்றனர்.
பகவானும் அப்படியே வரம் கொடுத்தார்.

வராகசுவாமி

அப்படி துவாரபாலகர்கள் எடுத்த முதல் பிறவிதான் இரண்யாட்சன் மற்றும் இரண்யகசிபு என்னும் இரண்டு அசுரர்கள். இவர்களில் இரண்யாட்சனுக்காகத் தோன்றிய அவதாரம்தான் வராக அவதாரம்.

மிகவும் கொடியவனாக இருந்த இரண்யாட்சன் பூமியை ஒரு பாயாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓர் இடத்தில் மறைத்து விட்டான். அப்போது பூமிதேவியின் பிரார்த்தனைக்காக பகவான் வராக மூர்த்தியாக அவதரித்து, இரண்யாட்சனைக் கொன்று, பூமியை மீட்டார்.
அப்போது, பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், வராக சுவாமியைப்பார்த்து, ”கலியுகத்தில் பக்தர்களை காப்பதற்காக, நீங்கள் எப்போதுமே வராகமூர்த்தியாக இருந்து அருள்பாலிக்க வேண்டும்” என்ற கோரிக்கையையும் கூடவே வைத்தனர்.அதற்கு இணங்கிய வராக மூர்த்தி சேஷாத்ரி மலையில் எழுந்தருளினார்.

வராகசுவாமி கோயில்

துவாபரயுகத்தில் கண்ணன் சொல்லியபடியே யசோதை தன் உடலை விட்டு கலியுகத்தில் வகுளாதேவியாக அவதாரம் எடுத்தாள். தன்னுடைய காலத்தை அவள் சேஷாத்திரியில் உள்ள வராக மூர்த்தியின் ஆசிரமத்தில் கழித்து வரலானாள். வராகமூர்த்தி வகுளாதேவிக்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் பற்றி எடுத்துரைத்தார். அவரது சிறந்த பக்தையாக வகுளாதேவி திகழ்ந்தார். அவர் மிகவும் கர்மசிரத்தையுடன்  பகவானுக்கு சேவைகள் செய்து வந்தார். 

மகாலட்சுமியைப் பிரிந்த நாராயணனும் அவரைப் பல இடங்களில் தேடி அலைந்து, சேஷாத்திரி மலைக்கு வந்து சேர்ந்தார்.  சிறிது தூரம் சென்றதும்,  வராக மூர்த்தியின் ஆசிரமம் அவருக்குத் தென்பட்டது. உடனே அங்கு சென்றார். வராகமூர்த்தி, நாராயணனைப் பார்த்தவுடன், அவர் யார் என்பதை  அறிந்து கொண்டார். மிகவும் மரியாதை காட்டினார். அவரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு நாராயணன் அந்த ஆசிரமத்தில் நுழைந்தார். அவர் பூலோகத்துக்கு வந்த காரணம் பற்றி அறிந்துகொள்ள விரும்பி நாராயணனிடம் பூலோகம் வந்த காரணத்தைக் கூறும்படி வேண்டினார் வராகமூர்த்தி.

வைகுண்டம்

அதற்கு நாராயணன் ”வராகக் கடவுளே! மும்மூர்த்திகளையும் சோதனை செய்யும் பொருட்டு வந்த பிருகுமாமுனி என் மார்பில் உதைத்தார். அதற்குத் திருமகள் என்பேரில் கோபம்  அடைந்து என்னைவிட்டு கொல்லாபுரம் அடைந்தாள். அவளில்லாமல்  வாழ என்னால் முடியவில்லை. அதனால்தான் வைகுண்டத்தைவிட்டு, சேஷாத்திரிக்கு வந்துவிட்டேன். ஆனால், தங்குவதற்கு இங்கு எனக்கு இடமில்லை. எனவே, ஒரு புற்றில் வாழத் தொடங்கினேன். அப்போது ஒரு இடையர் தலைவன் கோடாரியால் புற்றை அடிக்கவே, என் தலையில்  ஒரு காயம் ஏற்பட்டது. அதைக் குணப்படுத்த மருந்தைத் தேடும் சமயத்தில் நான் உங்களைக் காணமுடிந்தது. இந்த மலை உங்களின் சொத்து. ஆதலின் எனக்கு இந்த மலையில் சில காலம் தங்க நீங்கள் இடமளிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதைக்கேட்ட வராகமூர்த்தி ”நீங்கள் கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ஆனால், உங்களுக்கு நான் இலவசமாக இடம் தர முடியாது. பணம் கொடுத்தால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்” என்றார்.

திருப்பதி மலை

அதற்கு நாராயணன் ”தாங்கள் பெரியவர்! எல்லாம் அறிந்தவர் தாங்கள்! லக்ஷ்மியைப் பிரிந்த நான் ஏழையாகிவிட்டேன். கையில் ஒரு காசும் இல்லை. இந்நிலையில் உங்களுக்கு எப்படி நான் பணம் கொடுக்க முடியும்? தயை கூர்ந்து நீங்கள் எனக்கு இடமளிக்க வேண்டும். இதற்குக் கைம்மாறாக, என் பக்தர்களை இந்த மலைக்கு வருமாறு செய்வேன். அவர்கள் முதலில் உங்களை தரிசித்து உங்களுக்கு நைவேத்யம், காணிக்கை செலுத்திவிட்டு, அதன் பிறகே என்னை தரிசிக்க வரட்டும். இந்நிலையில், நான் இதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்பதைத் தாழ்மையுடன் சொல்கின்றேன்” என்றார்.  

மாடவீதி

வராகமூர்த்தியும் அதற்கு சம்மதித்தார். நாராயணனுக்கு அந்த மலையில் நிலம் கொடுத்தார். பின்னர் நாராயணனை நோக்கி ”வகுளாதேவி என்னும் ஒரு சிறந்த பக்தை எனக்கு தொண்டு செய்து கொண்டிருக்கிறாள். உனக்கு அவளைக் காண்பிப்பேன். அவள் உன்னை கவனித்துக் கொள்ளட்டும்”  எனக் கூறி வகுளாதேவியை  நாராயணனுக்கு அறிமுகப்படுத்தினார். நாராயணனுக்கு வராகமூர்த்தி இலவசமாக அளித்த இடத்தில் ஓர் ஆசிரமம் நிர்மாணித்துக்கொண்டு அதில் நாராயணனும் வகுளாதேவியும் வாழ்ந்து வரலாயினர். 

வராகமூர்த்திக்கு வேங்கடவன் கொடுத்த வாக்கினை நாம் காப்பாற்றவேண்டுமல்லவா? எனவே, நாம் திருமலைக்குச் சென்றால், வேங்கடவனை தரிசிப்பதற்கு முன்பு வராக மூர்த்தியை தரிசித்து வழிபடுவோம்.

“ஒதுங்கி டெல்லி வந்துவிடுகிறேன்!” – மோடியிடம் பதவி கேட்ட ஓ.பி.எஸ்

விமான நிலையத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறேன்’ என கழுகாரிடமிருந்து வாட்ஸ்அப் மெஸேஜ். சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார். ‘‘டெல்லிக்கும் பெங்களூருக்கும் அலைந்ததில் ஒரே களைப்பாக இருக்கிறது’’ என்றபடி அமர்ந்தார். ‘‘எதற்கும் டெங்கு இருக்கிறதா  எனப் பரிசோதனை செய்துகொள்ளும். ரணம்… மரணம் என மக்கள் பரிதவிக்கிறார்கள். அரசு அலட்சியம் காட்டுகிறது’’ என்றோம்.
‘‘தமிழகத்தை டெங்கு ஜுரம் வாட்டிக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வேறொரு ஜுரம் வாட்டுகிறது.’’

Continue reading →

அதிரடி ஆன்லைன் ஆஃபர்கள்… எந்த மொபைலை எங்கு வாங்கலாம்?

இனி வரும்காலங்களில் தீபாவளி வந்தால் “பட்டாசு வாங்கியாச்சா? துணி வாங்கியாச்சா?” எனக் கேட்க மாட்டார்கள். “மொபைல் என்ன வாங்கின? பவர்பேங்க் என்ன மாடல்?” என்றுதான் கேட்பார்களோ என நினைக்க வைக்கிறது ஆன்லைன் சேல்ஸ். தீபாவளியை முன்னிட்டு அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் ஆஃபர்களை அள்ளிதந்திருக்கிறார்கள். உங்களுக்கு மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த ஆஃபர்களை ஒரு முறை பார்த்திடுங்க.

ஃபிளிப்கார்ட் ஆஃபர்கள்:

Continue reading →