Monthly Archives: ஏப்ரல், 2008

வில்லேந்திய வேலவன்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பஸ்ஸ்டாண்டிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் வில்லுடையான்பட்டு. இங்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் வேலுடன் வில்லையும் ஏந்திஅருள்பாலிக்கிறார். அத்துடன் பாதங்களில் குறடு அணிந்து காணப்படுவதால்,இங்கு வழிபடும் பக்தர்கள் பாதக்குறடுகளை காணிக்கை பொருளாக செலுத்துகின்றனர். இந்த வில்லேந்திய வேலவனைப்பற்றி Continue reading →

அதென்ன “பயோனிக் ஐ!’

அதென்ன “பயோனிக் ஐ!’

கண் பார்வையை தருவதில் அமல்படுத்தப்பட்டு வரும் புரட்சிகரமான ஆராய்ச்சி பலன்களில் அடுத்தது “பயோனிக் ஐ!’
விழித்திரை பாதிப்பு தொடர்பாக, வளர்ச்சி பெறாத நிலையில் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு “பயோனிக் ஐ’ முறை பெரிதும் பயன் தருகிறது. அவர்கள் இழந்த பார்வையை மீட்டுத்தருகிறது. உலகில் முதல் செயற்கைக்கண் இது. அமெரிக்க, பிரிட்டன் நிபுணர்கள் சேர்ந்து இதை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கைக்கண், விழித்திரையில் பொருத்தப்படுகிறது.

அதில் மிக நுண்ணிய வீடியோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பார்க்கும் எதையும் அது படம் பிடித்து, பார்வை நரம்புகள் மூலம் , மூளைக்கு அனுப்புகிறது. அதற்கேற்ப மூளை உத்தரவிடுகிறது. சர்வதேச அளவில், முதன் முறையாக இந்த அறுவை சிகிச்சை, லண்டன் மூர்பீல்டு கண் மருத்துவமனையில், சமீபத்தில் செய்யப் பட்டது. இந்த செயற்கை கண்ணுக்கு “ஆர்கஸ்’ என்று பெயர். இதில் பொருத்தப்படும் கேமரா, எள் அளவுக்கு தான். இருக்கும். “வயர்லஸ்’ மூலம் கேமரா இயங்குகிறது. “இந்த ஆராய்ச்சியை இன்னும் முடிக்கவில்லை. விழித்திரையில் பொருத்தப்படும் கேமரா வேலை செய்வதில் உள்ள சில சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். இயற்கையான கண் போல தெரியும் வகையில் வீடியோ கேமரா வடிவமைக்கப்பட உள்ளது. அதற்கு போதுமான மின்சக்தியையும் மூளையில் உள்ள நரம்பு மண்டலம் தான் தருகிறது. இதில் எந்த குறைபாடும் ஏற்படாத வண்ணம் முழுமையாக சோதனை செய்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக, இறுதி வடிவம் கிடைக்கும்’ என்று தெரிவித்தனர்.

குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! : வாய் வழி ஆபரேஷன் நடப்பது இப்படித்தான்!

குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! : வாய் வழி ஆபரேஷன் நடப்பது இப்படித்தான்!

ீகுடல்முனையில் வீக்கம் – குடல் அழற்சி என்று கூறப்படும் தேவையற்ற குடல் சதை தான் “அப்பெண்டிக்ஸ்!’ இதை அகற்ற, அடிவயிற்றில் துளை போட்டு ஆபரேஷன் செய்ய வேண்டும்; மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற வேண்டும். ஆனால், இப்போது வயிற்றில் ஆபரேஷன் செய்வதுபோய், வாய் வழி ஆபரேஷன் செய்யும் முறை வந்து விட்டது. வாயில் சிறிய குழாய் செலுத்தி, தானியங்கி நுண்ணிய கேமரா மூலம், கம்ப்யூட்டரில் பார்த்து சிறிய கீறல் கூட இல்லாமல், குடல் முனையை துண்டித்து சரி செய்யும், நவீன அறுவை சிகிச்சை வந்து விட்டது. உலகில் முதன் முறையாக அமெரிக்காவில் உள்ள சான்டியாகோ மருத்துவமனை நிபுணர்கள், இப்படி வாய் வழி ஆபரேஷன் செய்து சாதித்துள்ளனர். 42 வயதான துணி வியாபாரி ஜெப் ஸ்காலட்சுக்கு இந்த முறையில் ஆபரேஷன் செய்து வெற்றி கண்டுள்ளனர். பெரிய குடலின் இறுதியில், புழு போன்று வளர்ந்திருப்பது தான் குடல் அழற்சி (அப்பெண்டிக்ஸ்) என்பது. பல காரணங்களால் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இதை தடுக்க மருந்துகள் பயன்படாது; அறுவை சிகிச்சை தான் ஒரே வழி. Continue reading →

தெரியுமா – தெரியுமா? -இந்த புகையை சுவாசித்தால்…

தெரியுமா – தெரியுமா?

A . இந்த புகையை சுவாசித்தால்…


அன்றாடம் பயன்படுத்தும் காஸ் ஸ்டவ்வில் உள்ள “காஸ் பர்னர்’ ஹீட்டர், பல்பு, ட்யூப் லைட், அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் ஆகியவற்றை பயன்படுத்தும் போது வெளிப்படும் ஒரு வித நெடியை நீங்கள் அனுபவப்பட்டிருப்பீர்கள்!
ஆனால், இந்த நெடி, ஒரு வித ரசாயன நெடி என்று மட்டும் சிலருக்கு தெரிந்திருக்கும். அந்த நெடி பெயர், பி.டி.எப்.இ., அதாவது, “பாலி டெட்ரா ப்ளோரோ எதிலின்’ என்பதன் சுருக்கம் தான் இது. இந்த புகையை தொடர்ந்து சுவாசித்தால், கூண்டில் அடைக்கப்பட்ட பறவை இறந்து விடும். அப்படியானால், இந்த நெடி எவ்வளவு விஷத்தன்மை கொண்டது என்று எண்ணிப்பாருங்கள். Continue reading →

ஏசர் நிறுவனத்தின் ஜெம்ஸ்டோன் புளூ

ஏசர் நிறுவனத்தின் ஜெம்ஸ்டோன் புளூ
ஆஸ்பயர் 6920 மற்றும் ஆஸ்பயர் 8920 என்ற இரு லேப்டாப் கம்ப்யூட்டர்களை அண்மையில் ஏசர் நிறுவனம் வெளியிட்டது. ஜெம்ஸ்டோன் புளூ என்ற பிராண்ட் பெயரில் இவை வெளிவந்துள்ளன. இந்த இரு லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் மல்ட்டி மீடியா வசதிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளன. டோல்பி ஹோம் தியேட்டர் அனுபவத்தினை இந்த இரு கம்ப்யூட்டர்களும் தருகின்றன.

இன்டெல் கோர் டூயோ 2 புராசசர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மொபைல் இன்டெல் டி 5550 மற்றும் டி 7500 சிப்செட்கள் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு தனி வேகத்தைத் தருகின்றன. இவற்றில் முறையே 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ராம் மெமரி உள்ளது. ஹார்ட் டிஸ்க் கொள்ளளவு முறையே 250 ஜிபி மற்றும் 350 ஜிபி ஆகும். முதன் முதலில் 16 அங்குலம் மற்றும் 18 அங்குல நோட்புக் வகைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தின. Continue reading →

ஐ-பாட் அதிசயங்கள்

ஐ-பாட் அதிசயங்கள்
இ-மெயில் பார்க்கலாம்… பேப்பர் படிக்கலாம்…

பாடல்களை எளிதான ஒரு சாதனத்திலிருந்து எந்தவிதப் பிரச்னையுமின்றி கேட்க வேண்டும் என்றால் ஐ–பாட் அதற்கு ஒரு சிறந்த சாதனமாகும். தற்போது அனைவரும் வாங்கும் வகையில் பல்வேறு கொள்ளளவில் ஐ–பாட் சாதனங்கள் வந்துள்ளன. அலுவலகம் செல்ல அதிக நேரம் எடுத்துக் கொள் வோர், கல்லூரியில் பயிலும் பெண்கள், அடுத்தவர் தொண தொணப்பிலிருந்து தப்பிக்க வழி தேடுபவர்கள் யாவரும் ஐ–பாட் ஒன்றை கையிலும் அதன் ஹெட்செட்டை காதுகளிலும் வைத்துக் கொண்டு இசையை ரசிப்பதைப் Continue reading →

பட்ஜெட் விலையில் 20 போன்கள்

பட்ஜெட் விலையில் 20 போன்கள்


மொபைல் போன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன் நம்மை செயல்படவிடாமல் தடுக்கும் ஒரு சங்கதி நம் பட்ஜெட் தான். ஒவ்வொருவருக்கும் ஒரு பட்ஜெட் இருக்கும். அதிக விலை போன் வைத்திருப்பவர் உபரியாக மிக மிகக் குறைந்த விலை போனை நாடுவார். தங்களிடம் பணியாற்றும் வேலைக்காரர்களிடம் தொடர்பு கொள்ள குறைந்த விலையில் அதே நேரம் ஒரு சில கூடுதல் வசதிகளுடன் கூடிய போனை சிலர் விரும்புவார்கள். மொபைல் மார்க்கட்டில் அலசியபோது பல்வேறு விலைகளில் அதே நேரத்தில் ஓரளவிற்குக் கூடுதலான வசதிகளுடன் கூடிய போன்களைப் பார்க்க நேர்ந்தது. அவற்றை இங்கு பட்டியலிடுகிறோம். இந்த போன்களின் விலையில் முன்னே பின்னே சற்று வித்தியாசம் இருக்கலாம். உங்களின் சாமர்த்தியத்தைப் பொறுத்து பேரம் செய்து வாங்குங்கள். Continue reading →

கம்ப்யூட்டர் டிப்ஸ்….

கம்ப்யூட்டர் டிப்ஸ்….

1. வெப் பேஸ்டு இமெயில்

வெப் பேஸ்டு இமெயில் என்பது ஒரு வெப் சர்வரில் உங்களுக்காக நீங்கள் அமைத்துக் கொண்ட இமெயில் வசதி ஆகும். இந்த இமெயில் கணக்கில் வரும் இமெயில்களை ஒரு வெப் பிரவுசர் துணையுடன் அந்த வெப் தளத்தில் நுழைந்து காண வேண்டும். அங்கிருந்தபடி தான் அவற்றைக் கையாள முடியும். கூகுள், விண்டோஸ் லைவ், யாஹூ ஆகியன இந்த வகையைச் சேர்ந்தவையே.

2. பைலை அழிக்க…

ஒரு பைலை அழிக்கிறீர்கள். அது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும்; ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனை Continue reading →

கேள்வி – பதில்

கேள்வி – பதில்

  • கேள்வி: விசுவல் பேசிக் புரோகிராமிங்கில் பிராஜக்ட் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இதனை மற்றவர்கள் தெரிந்து மாற்ற முடியாதபடி எக்ஸிகியூட்டபிள் பைலாக மாற்ற வேண்டும். இதற்கு வழி என்ன?
  • பதில்: நீங்கள் பயன்படுத்தும் விசுவல் பேசிக் பதிப்பு எது என்றுகுறிப்பிடவில்லை. விசுவல் பேசிக் பதிப்பு 5 அல்லது அதற்கும் பிந்தையதாக இருந்தால் அதில் நீங்கள் கேட்கும் வசதி தரப்பட்டுள்ளது. அதிலும் professinal அல்லது Enterprise பதிப்பு இருக்க வேண்டும்.முதலில் நீங்கள் தயாரித்துள்ள புராஜக்டைத் திறந்து கொள்ளுங்கள். பின்பு பைல் மெனு சென்று அதில் என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸிகியூடபிள் பைலாக உங்கள் Continue reading →

ஸ்கிரீன் ஷாட்

ஸ்கிரீன் ஷாட்

திரைக் காட்சியில் சில விஷயங்கள் உங்களுக்கு வேண்டாததாகத் தெரிகிறது. அதில் குறிப்பிட்ட விண்டோ தான் உங்களுக்குத் தேவை என்று நினைக்கிறீர்கள்
பல நேரங்களில் ஸ்கிரீன் ஷாட் என்ற சொற்களைக் கேட்டிருப்பீர்கள். பலர் இது ஏதோ கம்ப்யூட்டர் மானிட்டருடன் சேர்ந்த சொற்கள் என்று விட்டிருப்பார்கள். அடிப்படையில் ஸ்கிரீன் ஷாட் என்பது ஒரு படம். நீங்கள் ஷாட் எடுக்கையில் உங்கள் கம்ப்யூட்டரின் மானிட்டரின் திரையில் என்ன காட்சி அளிக்கிறதோ அது படமாய்க் கிடைப்பது தான் ஸ்கிரீன் ஷாட். Continue reading →