Daily Archives: ஏப்ரல் 14th, 2008

மருத்துவ குறிப்புகள்

01. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது ஏன்?

மனித உயிருக்கு உத்திரவாதமில்லை. நேற்று இருந்தவர் இன்றில்லை.
“10 நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக் கொண்டிருந்தவர், திடீரென
போய் விட்டாரே. இன்று காலை கூட என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
இறந்து விட்டதாக செய்தி வருகிறதே. நேற்று நன்றாக நடமாடிக்
கொண்டிருந்தவர் இன்று பக்கவாதம் தாக்கி முடமாகி விட்டாரே’ என்று
பலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கெல்லாம்
காரணம் என்ன? ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான்
காரணம்.இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள்
ஏற்படும்போது அது மாரடைப்பாக உயிரை மாய்க்கிறது. மூளைக்கு
செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது
பக்கவாதமாக பரிமாண மெடுத்து மனிதனை முடக்கி விடுகிறது.துடிக்கும்
மனித இதயம், மனிதனுக்கும் வாழ்வை வழங்குகிறது. மனிதன் வாழ
வேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடித்தே ஆக
வேண்டும். இவ்வாறு துடித்து துடித்து மனிதனுக்கு வாழ்வை வழங்கும்
இதயம் துடிப்பதற்கு சக்தி தேவை. அந்த சக்தி இதயத்திற்கு செல்லும்
ரத்த குழாய்கள் மூலம்தான் இதயத்திற்கு கிடைக்கிறது. இந்த ரத்த
நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் ரத்தம்
தடைபடுகிறது. இதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதனை
போல் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்புகள்
ஏற்படும்போது அது பக்கவாதமாக, பரிமாணம் எடுத்து மனித வாழ்வை
சீர்குலைக்கிறது.
இதயத்திற்கும் மூளைக்கும் ரத்தம் மற்றும் தேவையான
சத்துக்களை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தை போலவே
சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் ரத்த
ஓட்டம் நடைபெறுகிறது.
ரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய “நைட்ரிக் ஆக்சைடு’ என்ற
ரசாயன பொருள் உதவுகிறது. இது நமது உடலிலேயே உற்பத்தி ஆகும்
பொருள். இதுதான் ரத்த குழாய்களுக்குள் சென்று அவற்றை சுருங்கி
விரிய உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும், குருதியில் கொழுப்பு
சத்து மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது
“நைட்ரிக் ஆக்சைடு’ சுரப்பது குறைகிறது. மேலும் மன இறுக்கமும்,
மனக்கவலையும் கூட நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை கெடுக்கிறது. புகை
பிடிப்பது, மது அருந்துதல், அசைவ உணவுகளை அதிகளவு உட்கொள்வது
போன்றவை கூட இந்த நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை குறைக்கிறது.
நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கி
விரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படிய
தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால்
மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட
வாய்ப்பாகிறது.

ரத்தக்குழாய் அடைப்புகள் வராமல்
தடுப்பது எப்படி?


ரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு
அதை சீராக வையுங்கள். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய்,
எண்ணெய், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி இவற் றை
தவிர்த்திடுங்கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள். மதுபாட்டில்களை
காலி செய்வதை நிறுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளையும்,
நெய்யால் செய்த பண்டங்களையும் குறையுங்கள். உப்பு அளவோடு
சேர்த்துக் கொள்ளுங் கள். இனிப்பான பழங்கள்,
கிழங்குகள்,பழச்சாறுகள் இவற்றை நீரிழிவு நோயாளிகள் எடுத்தல்
கூடாது.இவற்றை விட மேலானது உடற்பயிற்சி. நாள்தோறும் காலை, மாலை
அரை மணி நேரம் நடைபயிற்சியை மேற் கொள்ளுங்கள். சைக்கிள்
ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உணவு
வகைகள் அதிகம் உட்கொள்வதை குறையுங்கள். உங்கள் இதயம் பாதுகாப்பாக
இருக்கும்.

02. தழைய, தழைய கேசம்… இப்போதெல்லாம் போயே போச்ச்…
கண்டபடி “டய்’ போட்டால்…

தழையத் தழைய தலைமுடி உள்ள
பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தலைமுடியை
“பாப்’ செய்யும் பழக்கம் வந்து பத்தாண்டு மேலாகி விட்டது.இப்போது
பேஷன், பிஞ்சுக்குழந்தைகளுக்கு கூட, “கலரிங்’ போடுவது தான்.
பள்ளி, கல்லூரி மாணவிகளை கேட்கவே வேண்டாம்; “கலரிங்’ முதல்,
கண்டிஷனர் வரை, சந்தையில் எதெல்லாம் புதிது புதிதாக வருகிறதோ,
அவற்றை எல்லாம் வாங்கி பயன் படுத்துவது பேஷனாகி விட்டது.
இதையெல்லாம் தடுக்க வேண்டிய பெற்றோர்களும், உறவினர், நண்பர்களும்
கூட அடிக் கடி அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.
1,00,000 தலைமுடி : ஒருவரின் தலையில் சராசரியாக
அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர்
உடல்நிலைக்கு ஏற்ப, 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை
பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப்
வெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு , கலரிங் செய்வது போன்றவற் றில்
அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது
வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்.
மிதமான நீரில் : மிதமான நீரில் தான் குளிக்க
வேண்டும்; அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர்
விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும்.
தலைமுடி என்பது, “எலாஸ்டிக்’ தன் மையுள்ளது; மிகவும்
மிருதுவானது. லேசாக இழுத் தால் கூட அறுந் துவிடும். அத னால்
வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள
வேண்டும்.
ஷாம்புவில் உஷார் : விலை மலிவானது, புதிதாக வந்தது
என்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்
படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில்
ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய
வேண்டும்.
நரைமுடி வருவதேன்? : நரை முடி ஏற்படுவதற்கு பல
காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்கு
நரை முடி வளர ஆரம்பிக்கும்.
நரை முடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது.
எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்ல
முடியவில்லை. கருகரு முடிக்கு காரணம் : தலைமுடி கருகருவென
வளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரப்பி தான்.
மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது.
அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது.
நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கண்ட ஆராய்ச்சிகள் இதுவரை
பலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி “கலரிங்’ செய்வது
தான்.
“ஹேர் டய்’ அலர்ஜி : தரமான “ஹேர் டய்’ வாங்கி பயன்
படுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்து
விட்டனர். இதனால், தலைமுடிக்கு தான் பாதிப்பு என்பதை அவர்கள் உணர
வேண்டும். கண்ட கண்ட “ஹேர் டய்’யில், “பாரா பெனிலின் டயாமின்’
என்ற (பி.பி.டி.,) ரசாயனம் உட்பட சில ரசாயனங்கள்
கலக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.
ஹென்னா பயன்படுத்தினால்… : மருதாணி தான்
“ஹென்னா’ என்பது. மருதோன்றிச்செடி இலைகளில் சிவப்பு சாயம்
இருக்கிறது. அது தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதை
பேஸ்ட்டாக பயன்படுத்துவதுண்டு. முன்பெல் லாம் வீட்டிலேயே
தயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பாக்கெட்டாக விற்கப்படுகிறது.
பாக்கெட் “ஹென்னா’வில் கலப்படம் காணப்படுகிறது. இயற்கையான
மருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி.,தான்
பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால்
கையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால், பாக்கெட் “ஹென்னா’
பயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.
அடிக்கடி வாரினால்… : அடிக்கடி தலை
வாரிக்கொண்டிருக்க வேண்டாம்; அப்படி செய்தால், தலைமுடி உதிருவது
அதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒரு முறை தலை வாருவது பரவாயில்லை.
ஆனால், அடிக்கடி தலை வாருவது, அழுத்தம் தந்து வாருவது போன்றவை
தலைமுடி உதிருவது அதிகரிக்கும்.
மொட்டை போட்டால் : மொட்டைபோட் டால் உடனே முடி
அதிகமாக வளரும் என்று பலரும் இன்னமும் நினைத்
துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தலையில்
பரந்து வளரும் போது அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால்,
நுனியில் வளருவது தெரியாது. அதனால் மொட்டை போட்டால், அதிக முடி
வளரும்; நரை போகும் என்பதெல்லாம் தவறான
நம்பிக்கை.

சங்கு சக்கர முருகன்

ஏப்ரல் 13ல் சர்வதாரி தமிழ் வருடம் பிறக்கிறது.
தமிழ்க்கடவுளான முருகனை இந்நாளில் வழிபடுவது விசேஷம். கும்பகோணம்
அருகிலுள்ள அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயிலிலுள்ள முருகன்
கையில் சங்கு, சக்கரம் வைத்தபடி காட்சி தருகிறார். இவரை
தரிசிக்கச் செல்வோமா

தல வரலாறு: கைலாயம் சென்ற பிரம்மாவிடம்,
பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டார் முருகன். அது தெரியாததால்,
அவரைச் சிறையில் அடைத்தார். பின்னர் படைப்புத்தொழில் கருதி அவரை
விடுவித்தார்.

வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்குரிய சாபத்தை அவர்
பெற வேண்டி வந்தது. அதற்காக சிவனை வேண்டி தவமிருந்தார். சிவன்
அவருக்கு காட்சி தந்து, தவறை யார் வேண்டுமானாலும்
சுட்டிக்காட்டலாம், ஆனால், தண்டிக்கும் அதிகாரத்தை
எடுத்துக்கொள்ளக் கூடாது, என்று அறிவுறுத்தினார்.

அவர் எந்த இடத்தில் முருகனுக்கு காட்சி தந்தாரோ அந்த
இடத்திலேயே லிங்கமாக எழுந்தருளினார். அவரை படிக்காசுநாதர் என
அழைத்தனர். அம்பாள் இங்கே அழகம்மை என்ற பெயரில் அருள்
செய்கிறாள்.

சங்கு, சக்கர முருகன்:
ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை
காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க
முருகனை அனுப்பினார். அப்போது திருமால் முருகனுக்கு தனது சங்கு,
சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை
சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள
முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம்
மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். இந்திர மயில்
மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக
சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில்
அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி, தெய்வானை உடனிருக்கின்றனர்.
மகாலட்சுமிக்கும் சன்னதி இருக்கிறது.
நாயனார் அவதார
தலம்:
புகழ்த்துணை நாயனார் இத்தலத்தில் அவதரித்தவர்.
சிவபக்தரான இவர் வறுமையில் வாடினாலும், சிவபூஜையை தொடர்ந்து
செய்தார். ஒருசமயம் பசியால் உடல் தளர்ந்தபோது, கை தவறி தீர்த்த
குடத்தை லிங்கத்தின் மீது போட்டு மயக்கமுற்றார். அப்போது சிவன்
அவரது கனவில் தோன்றினார். சிவபூஜை தடையின்றி நடக்க அருளும்படி
வேண்டினார் புகழ்த்துணையார். சிவன் அவருக்கு தினமும் ஒரு
படிக்காசு தருவதாகவும், அதை வைத்து பூஜை செய்யும்படியும்
கூறினார். அதன்பின் புகழ்த் துணையார் பூஜையை தொடர்ந்தார்.
பலகாலம் இத்தலத்தில் சிவனுக்கு சேவை செய்த புகழ்த்துணையார்,
இங்கேயே முக்தியடைந்தார். நாயன்மார்களில் ஒருவராகவும் இடம்
பிடித்தார்.

சிறப்பம்சம்: சுந்தரர் தன் மனைவி பரவை
நாச்சியாருடன் இருக்கிறார். நவக்கிரக மண்டபத்தில் சூரியனும்,
சந்திரனும் கிழக்கு திசை நோக்கி இருப்பர். இங்கு இருவரும்
எதிரெதிரே பார்த்தபடி இருக்கின்றனர். எனவே இது அமாவாசை திதி
கொடுக்க உகந்த தலமாக இருக்கிறது.
இங்குள்ள விநாயகர் செல்வ
வரம் அருளும், சொர்ணவிநாயகர் என்ற பெயரில் உள்ளார்.
படிக்காசுநாதர் சன்னதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டி, ஒன்றை
மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்கின்றனர். இதனால்,
குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். முருகன்,
சிவனுக்கு குருவாக இருந்து பிரணவ உபதேசம் செய்த சுவாமிமலை தலம்,
இங்கிருந்து 10 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

திருவிழா: மாசிமகம், சிவராத்திரி,
கந்தசஷ்டி, ஆவணி ஆயில்யம் நட்சத்திரத்தில் புகழ்த்துணை நாயனார்
குருபூஜை.

இருப்பிடம்: கும்பகோணத்தில்
இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., தூரத்தில்
இத்தலம் இருக்கிறது. பஸ் வசதி உண்டு.

நடை
திறப்பு:
காலை 7- 12.30 மணி, மாலை 4- 8
மணி.

போன்: 99431 78294.

கன்னட பூமியில் தமிழ் தெய்வம்

தமிழகத்தில் பழநி முருகன் கோயில் பிரசித்தமாக இருப்பது போல, கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் பிரபலமானது “குக்கி சுப்ரமண்யா’ கோயிலாகும். தமிழ் புத்தாண்டான இன்று தமிழ் தெய்வமான முருகனைத் தரிசிப்போமா!

தல வரலாறு: காஷ்யப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில், யாருடையகருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது. இந்த பந்தயத்தில், கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும், அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன், நாகங்களை துன்புறுத்தி வந்தது. வருந்திய நாகங்கள், வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின. சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி, “”எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான், ” என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி, சுப்ரமணியரை வழிபாடு செய்தன. இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு, தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது. குமாரதாரா நதிக்கரையில் சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப் பட்டது.

ஊரின் பெயரே “சுப்ரமண்யா’ என்பது தான். சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன், “குக்குட த்வஜ கந்தஸ்வாமி’ என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில், சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர்.சமஸ்கிருதத்தில் இத்தலம் “குக்ஷி’ என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் “குக்கி சுப்ரமண்யா’ என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன.

தல சிறப்பு: இது பல யுகம் கண்ட கோயிலாகும். கந்தபுராணத்தில் “தீர்த்த ÷க்ஷத்ரா மகிமணிரூபணா’ அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள குமாரமலைப்பகுதியில் இக்கோயில் அமைந்துள் ளது. இயற்கை காட்சிகளை தன்னகத்தே அடக்கியதுஇம்மலை. முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின், தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக் கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.

வழிபாடு: நாகங்களின் தலைவியான வாசுகிக்கு முருகன் அபயம் அளித்துள்ளதால், ராகு, கேது தோஷத்தால் சிரமப்படுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள். பிரம்மஹத்திதோஷம் (கொலை பாவம்), முன் ஜென்ம பாவங்கள், பித்ரு கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது. வயிற்று வலி, தோல் நோய், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.சர்ப்பஹத்தி தோஷம், காலசர்ப்பதோஷ நிவர்த்திக்கு ரூ. 1500 கட்டணத்தில் சிறப்பு பூஜையும், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வேலை வாய்ப்பு வேண்டுபவர் களுக்கு ரூ. 250 கட்டணத்திலும் பூஜை நடத்தப்படுகிறது.

பூஜை, திருவிழா: வைகானஸ ஆகமப்படி 9 கால பூஜை நடக்கிறது. காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, நவராத்திரி ஆகிய விழாக்கள் நடத்தப்படுகிறது.

திறக்கும் நேரம்: காலை 6 – 1.30 மணி, மாலை 3 – 8 மணி.

இருப்பிடம்: மங்களூரூ சென்று, அங்கிருந்து 105 கி.மீ. தூரத்தில் உள்ள குக்கி சுப்ரமண்யாவுக்கு பஸ் அல்லது ரயிலில் செல்லலாம். போன்: 08257 – 281 224, 281 700.

சர்வதாரி புத்தாண்டு சகல வளமும் தரட்டும்

சித்திரை- பெயர்க்காரணம் : சந்திரன், அசுபதி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் சஞ்சரிக்கிறார். இதில் பவுர்ணமியன்று அவர் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதின் அடிப்படையில், மாதங்களுக்கு சமஸ்கிருத மொழியில் பெயர் சூட்டப்பட்டது. அதை தமிழில் மொழி பெயர்க்கும் போது சிறு வித்தியாசம் ஏற்பட்டது. சில மாதங்களின் பெயர்கள் நட்சத்திரத்தின் பெயர்களுடன் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றினாலும், மொழியியல் வல்லுனர்கள் அவை காலப்போக்கில் ஏற்பட்ட மருவலே எனக்கூறுகின்றனர்.சித்திரையைப் பொறுத்தவரை, சித்ரா பவுர்ணமி சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் வரும். சமஸ்கிருதத்தில் இது “சைத்ர மாதம்’ எனப்பட்டு, தமிழில் “சித்திரை’ எனப்பட்டது. தமிழகத்தின் மிக முக்கிய விழாவான மதுரை மீனாட்சி கோயில் திருவிழாவைக் கூட “சைத்ரோற்ஸவம்’ என்றே குறிப்பிடுவர்.

சித்திரை வெயில் சுட்டெரிப்பது ஏன்? : நவக்கிரகங்களின் நாயகன் சூரியன். அதனாலேயே, நாம் கிரகங்களின் கூட்டமைப்பை, “சூரியக் குடும்பம்’ என்கிறோம். கிரகங்களின் பெயரால் வாரத்தின் ஏழு நாட்களும் அமைந்துள்ளன. இதில் சூரியனுக்குரிய முதல் நாளை ஞாயிறு என அதன் பெயரிலேயே அழைக்கிறோம். ஞாயிறு என்றால் சூரியன் என்பது பொருள்.அதுபோல், சூரியன் பன்னிரு ராசிகளில் சுற்றி வரும்போது முதல் ராசியாகிய மேஷவீட்டில் உச்சம் பெறுகிறான். உச்சம் பெறும் நாளில் சூரியனின் முழு தாக்கத்தை நாம் உணரமுடியும்.”அப்பா! வெயில் மண்டையை பிளக்கிறதே’ என்று முணுமுணுப்பது இந்த மாதத்தில் தான். சூரியன் தன் முழுவீரியத்துடன் உச்சம் பெறும் மாதம் சித்திரையே.ஜோதிட ரீதியாக கிரகங்கள் <<உச்சம் பெறும் போது அதன் தாக்கம் கூடுதலாக இருக்கும் என சொல்வார்கள். சூரியன் <உச்சிக்கு போனால் என்னாகும்? சுட்டெரிக்கும். முதல் ராசியான மேஷத்தில் உச்சம்பெறும் போது அந்த தாக்கம் அதிகமாக தெரிகிறது.

சிவாலயங்களில் ஜலதாரை : சித்திரை மாத இறுதியில் கத்திரிவெயில் என்னும் அக்னிநட்சத்திரதோஷம் வருகிறது. இச்சமயத்தில், சூரியன் உக்கிரமாக தன் கதிர்களை வீசும்போது, உஷ்ணம் கூடுகிறது. சிவபெருமான் நெருப்பு
வடிவானவர். நெருப்பை இன்னொரு நெருப்பு சுடும் போது, உலகம் என்னாகுமோ என்ற அச்சம் இயற்கையாகவே ஏற்படுகிறது. மேலும், நம் இறைவனாகிய சிவன், ஏற்கனவே நெற்றிக்கண்ணுடன் சிரமப்படும் போது, இன்னும் அவனை சூடாக்குகிறோமே என்ற அன்புணர்வும் ஏற்படுகிறது. இதனால், இறைவனை குளிர்விக்கும் பொருட்டு, ஒரு செம்பு கலயத்தில் நீர் நிரப்பி சொட்டுசொட்டாக லிங்கத்தின் விழும்படி அமைத்துவிடுவர். அக்னிநட்சத்திர காலத்தில் சிவலிங்கத்திருமேனியை குளிர்விக்கும் பொருட்டு இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதனை “ஜலதாரை’ என்று குறிப்பிடுவர்.ஜலதாரையினால் கருவறையில் குளிர்ச்சியான காற்றலை பரவி பக்தர்களையும் குளிர்விப்பதாக அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட சிவாலயங்களில் 365 நாளும் ஜலதாரை உண்டு.

சித்ரகுப்த பூஜை : நவக்கிரகங்களில் கேதுபகவானுக்கு அதிதேவதை சித்ரகுப்தன். சிவபெருமானின் அருளால் இந்திரனுக்கும் காமதேனுவுக்கும் பிறந்தவர் என்றும், பார்வதிதேவி ஒரு சித்திரத்திற்கு உயிர்கொடுத்து உருவானவர் என்றும் சொல்வர் . சித்ராபவுர்ணமியன்று இவர் அவதரித்தார். இவரே சிவபெருமானின் ஆணைப்படி எமனிடம் தலைமை கணக்கராய் அமர்ந்தார். பிறவி முடிந்த ஜீவன்கள் <பூவுலகில் செய்த நன்மை, தீமைகளை கணக்கிடும் உரிமை பெற்றவர் இவர். ஒரு கரத்தில் பனையோலை சுவடியையும், மற்றொன்றில் எழுத்தாணியும் வைத்திருப்பார். காஞ்சிபுரம் நெல்லுக் காரத்தெருவில் இவருக்கு கோயில் அமைந்துள்ளது. சித்ராபவுர்ணமியன்று அபிஷேகஆராதனை நடக்கும். அன்று மாலை கர்ணாம்பிகை என்னும் தேவியுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. சித்திரகுப்தரை வணங்குவோருக்கு கேதுவினால் துன்பம் இல்லை.

புத்தாண்டு சமையல் : மேஷராசியில் சூரியன் சஞ்சாரம் செய்யும் மாதம் சித்திரை. இந்த நாளில் வீட்டை அழகுபடுத்தி கோலமிட்டு செம்மண்பூசி வர்ணம் தீட்ட வேண்டும். இப்படி செய்தால், நம் வீடு லட்சுமி கடாட்சத்துடன் திகழும் என்பது நம்பிக்கை. அன்று சமையலில் வேப்பம் பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்யப்பட்டிருக்கும். வேப்பம்பூ கசக்கும் தன்மையுடையது. ஆனால், ரத்தத்தை தூய்மைப்படுத்தி பூச்சிகளை அழிக்கவல்லது. வேம்புக்கு நிகரான மூலிகை இல்லை. மாங்காய் புளிக்கும் தன்மையுடையது. வாழ்க்கையில் பலதரப்பட்ட அனுபவங்களை நாம் பெறுகிறோம். ஆனால், எல்லாவற்றையும் சமநோக்கில் காணும்வகையில் மனநிலையை பக்குவப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். இதை உணர்த்தவே, இனிப்பு, கசப்பு<, உவர்ப்பு<, புளிப்பு<, துவர்ப்பு<, கார்ப்பு என வழங்கும் அறுவகை சுவைகளை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். பானகம், நீர்மோர் ஆகிய குளிர்ச்சியான உணவுவகைகளையும் இன்றைய நாளில் உண்பது சிறப்பம்சமாகும்.

புண்ணியம் தேட சுலப வழி : சித்திரை முதல் நாளில் கோயில்களில் பஞ்சாங்கம் வாசிப்பர். பெரும்பாலும் மாலை நேரத்தில் கோயில்களில் இந்நிகழ்ச்சி நடக்கும். அந்த ஆண்டில் நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நடக்கவிருக்கும் பலன்களை இதன் மூலம் மக்கள் அறிந்து கொண்டு தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வர். இது தொன்று தொட்டு தமிழகத்தில் நிகழும் வழக்கமாகும். பஞ்சாங்கம் கேட்பதால் நவக்கிரகங்கள் நமக்கு நல்ல பலன்களை வழங்குவர் என்பது ஐதீகம். <<புது பஞ்சாங்கம் ஒன்றை வாங்கி, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூஜையில் வைத்து வழிபாடு செய்வர். அப்பஞ்சாங்கத்தை நல்ல நேரம் பார்த்து வாசிப்பர். பஞ்சாங்கத்தில் வாரம், திதி, கரணம். நட்சத்திரம் உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கும். புத்தாண்டு தினத்தில் பக்தி சிரத்தையுடன் இவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதால் குறிப்பிட்ட சில பலன்களும் கிடைக்கும். வாரம் (கிழமை)-ஆயுள் விருத்தி, திதி– செல்வம் சேர்தல், நட்சத்திரம் -முன் செய்த பாவம் நீங்குதல், யோகம்- நோயற்ற வாழ்வு, கரணம்- செயல்களில் வெற்றி. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் நினைவாலயம் ஆகிய இடங்களில் புத்தாண்டன்று பஞ்சாங்கம் வாசிப்பது இப்போதும் நடக்கிறது.

கனி காணும் நிகழ்ச்சி : சித்திரை நாளில் “சித்திரை விஷு’ என்ற கனிவகைகளை காணும் சம்பிரதாயத்தை கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பின்பற்றி வருகின்றனர். பங்குனி மாத கடைசிநாள் இரவு பூஜையறையை சுத்தம் செய்து கோலமிடுவர். பொன்நகை, பணம், வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய்,பூ போன்ற மங்கலப்பொருள்களை ஒரு மேஜையில் வைத்து, அதன் முன்னால் ஒரு கண்ணாடியையும் வைப்பர். சித்திரை விசுவன்று காலையில் வீட்டில் உள்ள மூத்தவர் ஒருவர் எழுந்து குளித்து திருவிளக்கேற்றி வைப்பார். பின் ஒவ்வொருவராக எழுப்பி வந்து இம்மங்கலப் பொருள்களைக் காணச் செய்வார். இதனால் ஆண்டு முழுவதும் செழிப்புடன் வாழலாம் என்பது நம்பிக்கை.இவ்வாண்டு சபரிமலையில் நாளை “விஷூ’ கனி தரிசனம் நடக்கிறது. குருவாயூர், குருவாயூரப்பன் கோயிலில் நாளை நடக்கும் கைநீட்டம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

மொபைல் துணுக்குகள்

  • எச்.டி.சி.யின் ஜி.பி.எஸ். போன்

விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பெயர் பெற்ற எச்.டி.சி. மொபைல் போன்கள் வரிசையில் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது எச்.டி.சி. டி.ஒய்.டி.என். போன். இதில் போன் பயன்படுத்து பவரை வழி நடத்த ஜி.பி.எஸ். சிஸ்டம் இணைக்கப் பட்டுள்ளது. 2.8 அங்குல வண்ணத்திரையுடன் டைப்பிங் கீ போர்டும் இணைந்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த கோணத்திலும் இந்த போனின் திரையைத் திருப்பி வைத்துக் கொள்ள முடியும். இதனால் இமெயில் செய்திகளை வசதியாக அமைக்கவும் படிக்கவும் முடியும். அது மட்டுமின்றி இந்த வசதி கேம்ஸ் விளையாடுபவர்களுக்கும் உதவிடுகிறது.

இந்த போன் இன்டர்நெட் இணைப்பிலும் சிறப்பாகச் செயல்படுகிறது. நான்கு பேண்ட் நெட்வொர்க் செயல்பாடு இருப்பதால் எந்த நாட்டின் போனுடன் தொடர்பு கொண்டு எளிதாகச் செயல்பட முடிகிறது. 3.5 ஜி தொழில் நுட்பம் மற்றும் ஹை–பி நெட்வொர்க் தொழில் நுட்பம் ஆகிய இரண்டும் இன்டர்நெட் தொடர்பை வேகமாகத் தருகின்றன.

விண்டோஸ் மொபைல் சிஸ்டம் இருப்பதால் ஆபீஸ் தொகுப்பின் அனைத்து வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளன. வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட், பி.டி.எப். வியூவர் என அனைத்து பிசினஸ் அப்ளிகேஷன்களும் எளிதாக இயக்கக் கிடைக்கின்றன. இதில் பிசினஸ் கார்ட் ஸ்கேனரும் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 33,000.

  • 3ஜி சோதனை இயக்கம்: பார்தி ஏர்டெல் சாதனை

உலகில் பல நாடுகளில் 3ஜி இயக்கத்தில் மொபைல் போன் பயன்பாடு இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் இந்த வசதி இதோ அதோ என்று இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 3ஜி இயக்கத்தை சோதனை முறையில் அனைத்து நிறுவன மொபைல் போன் வழியாக வெற்றிகரமாக இயக்கியதாக அறிவித்துள்ளது. 3ஜி இயக்கத்திற்கான ஸ்பெக்ட்ரம் என்னும் அலைவரிசை ஒதுக்கீடு விரைவில் ஏல முறையில் நடைபெறும் என அரசின் தொலை தொடர்பு துறை அறிவித்துள்ளது. எனவே இதனைப் பெற பல நிறுவனங்கள் தங்களைத் தயார் படுத்திக்கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அதில் பார்தி ஏர்டெல் முந்திக் கொண்டுள்ளது.

மொபைல் போனில் இணைய இணைப்பு மற்றும் தகவல் இறக்கம் மிக வேகமாக நடைபெற 3ஜி உதவும். வயர்லெஸ் இணைய இணைப்பும் மிக திறன் கொண்டுள்ளதாக இருக்கும். ஏற்கனவே செசைல்ஸில் இந்த இணைப்பை பார்தி ஏர்டெல் வழங்கி வருவதால் இந்தியாவில் இதனை எளிதாக இந்நிறுவனம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

  • 25 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட்

பிஎஸ்.என்.எல். நிறுவனம் மேலும் 25 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பைத் தர நோக்கியா சீமென்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே இது போன்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் நோக்கியா சீமென்ஸ் 7 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பைத் தந்தது. அத்துடன் 20 மண்டலங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நகர இணைப்புகளையும் இதே நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 34 லட்சம் பிராட்பேண்ட் இணைப்புகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஏறத்தாழ 17 லட்சம் இணைப்புகளை பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது. 25 ஆயிரம் கிராமங்களுக்கு இணைப்பினை வழங்குவதில் பி.எஸ்.என்.எல். முழுமை யடையும் பட்சத்தில் கிராமங்களை பிராட்பேண்ட் இணைப்பு மூலம் இணைப்பதில் பி.எஸ்.என்.எல். நிறுவனமே முதலிடம் பெறும். நோக்கியா நிறுவனத்தின் புதிய தொழில் நுட்பம் குறைந்த செலவில் அதிக திறன் கொண்ட இணைப்பை வழங்க உதவுவதாகவும் பி.எஸ்.என்.எல். பத்திரிக்கைக் குறிப்பு கூறுகிறது

5.B . புளுடூத் என்ற பெயர் வந்தது எப்படி? 900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.
தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார்.

(இன்றைய நார்வே நாட்டு ஸ்டாம்பில் இதன் படம் இடம் பெற்றுள்ளது) பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென்மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  • பேரட் டி.எப்.7700 டிஜிட்டல் போட்டோ பிரேம் வீடுகளை ஹை டெக்காக மாற்றும் வழிகளில் தற்போது டிஜிட்டல் போட்டோ பிரேம்கள் ஒரு இடத்தைப் பிடித்துள்ளன. அதனால் பல நிறுவனங்கள் இவற்றை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றன. நம் நாட்டிலும் இவை தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அண்மையில் வந்துள்ள பேரட் டி.எப். 7700 தொழில் நுட்ப ரீதியில் இவ்வகையில் முதலில் நிற்கிறது. இதில் இதற்கென ஒரு தொலைபேசி எண்ணும் சிம் கார்டும் இணைந்து தரப்படுகிறது. இதனால் கேமரா இணைந்துள்ள மொபைல் போனில் இருந்து எந்த இடத்தில் போட்டோ எடுத்தாலும் அதனை நேரடியாக டிஜிட்டல் போட்டோ பிரேமிற்கு அனுப்ப முடிகிறது. இந்த வசதி இதுவரை இத்தகைய போட்டோ பிரேமில் இல்லாத ஒன்றாகும்.

.மேலும் வழக்கம் போல மினி யு.எஸ்.பி.போர்ட் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. மினி கார்டுகளில் பதிந்து எடுத்துச் செல்லும் போட்டோக்களை இந்த பிரேமிற்கு மாற்றிக் கொள்ளலாம். கருப்பு லெதர் பிரேமில் 7 அங்குல டி.எப்.டி. திரை பளிச்சென்று போட்டோக்களைக் காட்டுகிறது. இதன் திரை ஒளிரும் தன்மை 720 றூ 480 பிக்ஸெல்களாகும். இதில் பேக்லைட் அட்ஜஸ்ட்மென்ட் தரப்பட்டுள்ளது. பிரைட்னெஸ் கண்ட்ரோல் படங்களின் தன்மைக்கேற்ப இயக்க உதவுகிறது. இதனுடைய மெமரியில் 500 படங்கள் வரை சேமிக்கலாம். இதன் அளவு 193 றூ147றூ 21 மிமீ . எடை 580 கிராம். டிஸ்பிளே டைமன்ஷன் 130 றூ 87 மிமீ. இரண்டு பேண்ட் செயலாக்கத்தில் ஜி.பி.ஆர்.எஸ். இணைப்பு கிடைக்கிறது. இது இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும். அப்போது விலை தெரியவரும்.

  • . மீண்டும் 6300

நோக்கியா நிறுவனம் தன்னுடைய 6300 மொபைல் போனை மீண்டும் சில கூடுதல் வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை 6300 ஐ எனப் பெயரிட்டுள்ளது. இதில் வை– பி மற்றும் வி.ஓ.ஐ.பி. தொழில் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ அண்மையில் நோக்கியா வெளியிட்ட 6301 போலத் தோன்றினாலும் முற்றிலும் வேறுபட்ட வடிவில் உள்ளது. இதன் கிராபைட் கலர் மற்றவற்றிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. முந்தைய மாடலைப் போல இதிலும் 2 அங்குல வண்ணத்திரை உள்ளது.
நெட் இணைப்பிற்கு புளுடூத் மற்றும் ஏ2டிபி வசதி தரப்பட்டுள்ளது. மினி யு.எஸ்.பி., ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 2.5 எம்.எம். ஹெட் செட் சாக்கெட் ஆகியவற் றுடன் கூடுதல் மெமரிக்கான எஸ்.டி. கார்ட் போர்ட் தரப்பட்டுள்ளது. இதன் சிறப்பான அம்சம் இதில் இணைக்கப்பட்டுள்ள நோக்கியா மேப்ஸ் தான். ஆனால் இதில் ஜி.பி.எஸ். சிஸ்டம் பதியப்படவில்லை. ஆனால் ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் கனெக்டிவிடி இணைப்பை எளிதாக்குகிறது. விரைவில் வர்த்தக ரீதியாக வர இருக்கும் இந்த போன் ரூ.11,000 அளவில் விலை யிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 12 கோடியே 50 லட்சம் மொபைல் தயாரித்த நோக்கியா இந்தியா

கடந்த இரண்டு ஆண்டுகள் இயக்கத்தில் நோக்கியாவின் சென்னை தொழிற்சாலை 12 கோடியே 50 லட்சம் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. தொடர்ந்து பெருகி வரும் மொபைல் பயன் பாட்டின் தேவைகளை நிறைவு செய்திட மேலும் 5,000 பேரை வேலைக்கு அமர்த்திட திட்டமிடுகிறது. தற்போது 8,000 பேர் இங்கு பணி புரிகின்றனர். ஏற்கனவே 21கோடி டாலர் முதலீடு செய்திட்ட நோக்கியா இந்த ஆண்டில் மேலும் 7 கோடியே 50 லட்சம் டாலர் முதலீடு செய்திட முடிவெடுத்துள்ளது. இத்துடன் நோக்கியாவின் மொத்த முதலீடு வரும் டிசம்பரில் 28.5 கோடி டாலராக இருக்கும். உற்பத்தி செலவு மற்றும் தரத்தில் மிகச் சிறந்த ஒரு தொழிற்சாலையாக சென்னை தொழிற்சாலை இயங்குவதாக நோக்கியா அறிவித்துள்ளது. நோக்கியாவிற்கு உலகெங்கும் 9 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

புளூடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன.

ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN 0r piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.

புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்:

அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.

பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன.

உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.

புளுடூத் செக்யூரிட்டி:

எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும். உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

மொபைல் டு மொபைல் பண மாற்றம்

அமெரிக்க நிறுவனமான ஒபோ பேயின் இந்தியப் பிரிவும் தனியார் துறையில் இயங்கும் யெஸ் வங்கியும் மொபைல் டு மொபைல் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வசதியினைத் தர ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதற்கான தொழில் நுட்ப வசதியினை ஒபோபே இந்தியா நிறுவனம் வழங்குகிறது. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது.
இதற்கான மொபைல் அப்ளிகேஷனை இவர்கள் பெற்று போனில் பதிந்திருக்க வேண்டும். அல்லது இணைய இணைப்பு வழங்கும் ஜி.பி.ஆர்.எஸ். வசதியினைக் கொண்டிருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாதிருப்பவர்கள் எஸ்.எம்.எஸ். மூலமும் பணப் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம். ஆனால் அதற்கென இந்த திட்டத்தில் பதிந்திருக்க வேண்டும்ஒரு முறை ரூ.25,000 வரை எந்த மொபைல் போனுக்கும் அனுப்ப அனுமதிக்கப்படுகிறது. செய்தி கிடைத்த பின்னர் யெஸ் வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் இந்த பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியைப் பயன்படுத்தத் தேவையான விண்ணப்ப படிவத்தினை யெஸ் பேங்கின் கிளைகளில் அதன் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஏப்ரல் 30க்குள் இந்த வசதியினைப் பயன்படுத்த பதிவு செய்து கொள்பவர்களுக்கு ஒபோபே ரூ.100 வழங்கும். இது பதிவு செய்திடும் போது ரூ.50 மற்றும் அதன்பின் இவ்வகையில் மூன்றாவது முறையாக பணம் பரிமாறும்போது ரூ.50ம் வாடிக்கையாளர்களின் அக்கவுண்ட்டில் சேர்க்கப்படும்.

எந்த பிளான் தேர்ந்தெடுக்கலாம்…

சட்டைப் பையில் பணம் இருக்கிறதோ இல்லையோ? கட்டாயம் மொபைல் போன் ஒன்று தேவையாய் உள்ளது. அதுவே நமக்கு பணம் தரும் கிரெடிட் கார்டாகவும் இப்போது உருவாகி வருகிறது. ஆனால் புதியதாய் மொபைல் இணைப்பு வாங்க விரும்புபவர்களை மொய்த்திடும் விளம்பரங்களும் விற்பனை பிரதிநிதிகளும் வாடிக்கையாளர்களை ஏதோ ஏதோ சொல்லிக் குழப்பத்தான் செய்கின்றனர் என்பது ஒரு குறை. இவர்களுக்கு உதவிட பொதுவான சில வழிகாட்டுதல்கள் இங்கு தரப்படுகின்றன. இந்தியாவில் மொபைல் பயன்பாடு இயங்கும் ஒவ்வொரு மண்டலத்திலும் நான்கு முதல் ஏழு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.
ஒவ்வொரு நிறுவனமும் பத்து முதல் பன்னிரண்டு வகையான சேவைத் திட்டங்களை வழங்குகின்றன. சென்னையில் ஏர்செல் செல்லுலர், ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. முதல் நான்கு நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். வகை இணைப்பினையும் அடுத்த இரண்டு நிறுவனங்கள் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பினையும் தருகின்றன. சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஏர்செல், வோடபோன், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் இயங்குகின்றன. ரிலையன்ஸ் மற்றும் டாட்டா இங்கும் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பினையே தருகின்றன.
முதலில் உங்களுக்கு எந்த வகை இணைப்பு வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளுங்கள். ஜி.எஸ்.எம (GSM – Global System for Mobile Communications) மற்றும் சி.டி.எம்.ஏ (CDMA – Code Division Multiple Access) என்ற இரண்டு வகையான தொழில் நுட்பத்தில் தான் உலக அளவில் போட்டி உள்ளது. இந்த இரண்டின் அம்சங்களையும் வேறுபாடுகளையும் தெரிந்து கொண்டால் நீங்கள் உங்களுக்கான தொழில் நுட்பத்தினைத் தேர்ந்து எடுக்கலாம். ஜி.எஸ்.எம். வகையைப் பொறுத்த வகையில் நிறைய மாடல் போன்கள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரை எகுM 900/1800 என்ற இரண்டு பேண்ட் அளவில் இயங்கும் தன்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவ்வகையில் எக்கச் சக்கமாய் போன் மாடல்கள் உள்ளன. அதன்பின் இதற்கான சிம் கார்டை ஏதேனும் ஒரு சர்வீஸ்புரவைடரிடம் வாங்கி இதில் இணைத்து தொடர்பினை மேற்கொள்ளலாம். இந்த கார்டை எந்த ஜி.எஸ்.எம். வகை போனிலும் பயன்படுத்தலாம்.
இணைப்பு சேவை வழங்குபவர் நீங்கள் எந்த போனைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கவலைப்பட மாட்டார். அதே போல ஒரே போனில் பல சர்வீஸ் புரவைடர் தந்த சிம் கார்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். நீங்கள் நான்கு பேண்ட் ஜி.எஸ்.எம். மொபைல் வைத்திருந்தால் அதனையே எந்த நாட்டிலும் ஜி.எஸ்.எம். இணைப்பு தரும் நிறுவனத்தின் சிம் இணைத்து பயன்படுத்தலாம். சி.டி.எம்.ஏ. வகையில் இப்போது சிம் கார்டு தரப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட போன் வகையுடன் இணைந்தே தரப்படுகிறது. ரிலையன்ஸ் அல்லது டாட்டா இண்டிகாம் நிறுவனங்களிடம் இவை கிடைக்கின்றன. முன்பு ஒரு போனுக்கு ஒரு எண் என்று இருந்தது. இப்போது போன் செட்டை மாற்றிக் கொள்ளலாம். எனவே போன் மாடல்கள் மிகவும் குறைவு. வாங்கிய போனை அதனை வாங்கிய சர்வீஸ் புரவைடர் தரும் இணைப்புடன் மட்டுமே பயன்படுத்த முடியும். எந்த வகை என முடிவு செய்த பின்னர் உங்கள் ஏரியாவில் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் எந்த சர்வீஸ் புரவைடர்கள் இயங்கு கிறார்கள் என்று பார்க்கவும்.

நீங்கள் தொழில் ரீதியாகவோ அல்லது அலுவல் ரீதியாகவோ அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் செல்பவராக இருந்தால் நீங்கள் செல்லும் இடங்களில் இங்கு சேவை வழங்கும் நிறுவனம் மொபைல் சேவையினை வழங்குகிறதா என்று பார்த்துத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இங்குள்ள நிறுவனம் நீங்கள் செல்லக் கூடிய இடங்களில் ரோமிங் வசதியினைத் தருகிறதா என்று கேட்டு அறியவும்.

அடுத்தது உங்கள் மொபைல் போனின் விலை. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் பல மாடல் போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. எனவே உங்களுக்கான விலையில் உள்ள போன்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பின் ஒப்பிட்டு வாங்கவும். அடுத்து போன் பேசுவதற்கான செலவு. மாதம் இவ்வளவு தான் போனுக்கு செலவழிக்க வேண்டும் என முடிவு செய்தால் பிரீ பெய்டு எனப்படும் முன் கூட்டியே பணம் செலுத்தும் கார்டினை வாங்கவும். ஒவ்வொரு முறை பேசி முடித்தவுடன் எவ்வளவு செலவழிந்துள்ளது. கார்டில் எவ்வளவு மிச்சம் உள்ளது என அறியலாம். அதற்கேற்றார் போல் பேசுவதைக் குறைத்துக் கொள்ளலாம்.

அவ்வப்போது சர்வீஸ் புரவைடர்கள் தரும் திட்டங்களுக்கேற்பவும் சலுகைகளுக்கேற்பவும் புதிய இணைப்புகளை வாங்கிப் பயன்படுத்தலாம். நீங்கள் வசிக்கும் ஏரியாவில் எந்த நிறுவனத்தின் சேவை நல்ல முறையில் உள்ளது எனக் கேட்டு அறியலாம். நீங்களும் சோதித்துப் பார்க்கலாம். போஸ்ட் பெய்ட் என்பதில் மாதந்தோறும் அதனைப் பயன்படுத்த லேண்ட் லைன் போல மாதம் ஒரு குறிப்பிட்ட வாடகை கட்டணமும் பயன்படுத்துவற்கான கட்டணமும் கட்ட வேண்டும். இதிலும் உங்களுடைய பயன்பாடு முறைதான் எத்தகையது வேண்டும் என்பதனை முடிவு செய்கிறது. குறைந்த மாதக் கட்டணத்தில் உள்ள ஒரு இணைப்பினை வாங்கி பின் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதனைக் கணக்கிட்டால் போஸ்ட் பெய்ட் இணைப்பினைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம்.

பிரீ பெய்ட் கார்டில் குறிப்பிட்ட அளவிற்கான பணத்திற்கு பேசலாம் என்றாலும் இதற்கான கால அளவு இருக்கும். அதற்குள் பேசாவிட்டால் மீதமுள்ள பணம் கேள்விக் குறியாகிவிடும். நீங்கள் உடனே ரீசார்ஜ் கார்ட் மூலம் புதுப்பித்தால் ஏற்கனவே மீதம் உள்ள பணம் இதில் சேர்ந்துவிடும். இல்லை என்றால் பணம் வீண். ரீசார்ஜ் கூப்பன்களிலும் வேறுபாடு உண்டு. ஒரு சில நிறுவனங்கள் சில வேளைகளில் கார்ட் வேல்யூ முழுவதும் அல்லது சற்று கூடுதலான அளவிற்கு மதிப்பு வழங்குவார்கள். சிலர் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே வழங்குவார்கள். எடுத்துக் காட்டாக ரூ.2,000 க்கு வாங்கி ரீ சார்ஜ் செய்தால் ரூ.2,250க்கு பேசும் திட்டம் உள்ளது. ரூ.300க்கு வாங்கினால் ரூ.185 மட்டுமே பேச முடியும் என்ற திட்டமும் உள்ளது. இரண்டின் கால அளவு வேறுபடலாம்.

சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் மற்ற போன்களுக்கான அழைப்புகளுக்கு மிகக் குறைந்த கட்டணம் விதித்திருப்பார்கள். எனவே நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்பவர்கள் எந்த இணைப்பு வைத்திருக்கிறார்கள் என்று பார்த்து அதே நிறுவன இணைப்பு வாங்க முடிவுசெய்திடுங்கள். வாங்கியவுடன் உங்கள் போன் இணைப்பிற்கான இந்த சலுகைகளுக்கான ஏற்பாடுகளை உங்கள் போனில் செட் செய்திடுங்கள்.

இவ்வளவு விஷயங்களையும் ஆய்வு செய்து ஒப்பிட்டுப் பார்த்து வாங்க வேண்டும். இணைப்பு வாங்கச் செல்கையில் உங்கள் முகவரி, போட்டோ அடையாள அட்டை கேட்பார்கள். போட்டோ ஒன்றும் விண்ணப்பத்துடன் இணைக்கச் சொல்வார்கள். உண்மையான முகவரி, உங்கள் போட்டோ கொடுத்து கார்டை வாங்கிச் சரியான நோக்கத்திற்குப் பயன்படுத்தி தொழில் நுட்பத்தை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் அடுத்தவருக்கு உதவுவதற்கும் பயன்படுத்துங்கள்.

சென்னையும் தமிழ்நாடும்

மொபைல் போன் சேவை உரிமத்தினை தமிழ் நாட் டில் இரண்டு வகையாகத் தந்துள்ளனர். சென்னை ஒரு மண்டலம். இதில் ஏர்செல் செல்லுலர், ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் மற்றும் டாட்டா இண்டிகாம் ஆகிய நிறுவனங்கள் இயங்குகின்றனர். சென்னை அல்லாத மற்ற தமிழகம் ஒரு மண்டலம். இங்கே வோடபோன் எஸ்ஸார், ஏர்செல், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் மற்றும் டாட்டா ஆகிய நிறுவனங்கள் இயங்குகின்றன. இரண்டு மண்டலங்களிலும் டாட்டா மற்றும் ரிலையன்ஸ் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பி னையும் மற்றவை ஜி.எஸ்.எம். வகை இணைப்பினையும் தருகின்றனர்.

டிப்ஸ்…

பஸ்களில் ட்ரெயின்களில் செல்கையில் மொபைல் போனில் பேசுவதைத் தவிருங்கள். பேஸ் மேக்கர் என்னும் இதயத் துடிப்பை இயக்கும் கருவி வைத்திருப்பவர்கள் மொபைல் போனுக்கு வரும் ரேடியோ அலைகளினால் பாதிப்படைந்து உயிருக்கு ஆபத்து வரலாம். மேலும் பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் மொபைல் பேச்சினால் எரிச்சல் அடையலாம்.

சிறுநீரகத்தில் கல் ஏன் தோன்றுகிறது? இதன் அறிகுறிகள் என்ன? இதற்கும் தொற்றுக்கிருமிகளுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா?

ஆமாம் உண்டு. இவற்றைச் சற்று விவரமாகப் பார்ப்போம்.

i)சிறுநீரகக் கல்லுக்கு ரீனல் கால்குலி (Renal Calculi) என்று பெயர். இது பெரும்பாலும் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்பாதையில் ஏற்படுகிறது. இதன் காரணம் என்ன என்று உறுதியாகக் கூறமுடியவில்லை. பல காரணங்கள் உண்டு. உதாரணமாக ஹார்மோன்களின் சமச்சீர் இன்மை, சிறுநீரகத்தொற்று (Infections) சிறுநீரகத்தில் அதிக உப்பு, வைட்டமின் ஏ குறைவு, பாராதைராய்டு அதிகமாகச் சுரத்தல், பரம்பரை மரபணுக்கோளாறு இப்படிப் பல.

ii. இந்த சிறுநீரகக் கற்களில் யூரிக் அமிலம், கால்சியம் ஆக்ஸலேட் (Calcium Oxalate), கால்சியம் பாஸ்பேட் (Calcium Phosphate) போன்றவையும் இன்னும் சில பொருட்களும் கலந்திருக்கின்றன.

iii. இது சிறுநீரகப்பகுதியில் மிகுந்த வலியை ஏற்படுத்தும். இது சிறுநீர்ப் பாதையை (Urether) அடைத்துவிட்டால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும். சிறுநீர் வெளியேறாது. இது பல பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதைத்தவிர, இந்தக் கற்கள் சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை போன்றவற்றின் உட்புறத்தில் புண்களை உண்டாக்கி தொற்றுக்கிருமிகள் எளிதாக வேலை செய்ய உதவுகின்றன.

iv.இதற்கு இப்பொழுது பல நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. முக்கியமாக அல்ட்ரா ஒலி முறை (Ultra Sound Method) கற்களின் அளவைப் பொறுத்து அவற்றைத் தூள் தூளாக்கி வெளியே கொண்டுவந்துவிடுகிறார்கள். அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை! சிறுநீர்க்கற்கள் பெரிய அளவில் இருந்தால் அறுவை சிகிச்சை தேவை.

நீங்கள் செய்யவேண்டியது, சிறுநீரகத்தில் சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் டாக்டரை உடனே பார்க்கவேண்டும். மற்றவற்றை டாக்டர் பார்த்துக்கொள்வார்!

சிலபேருக்கு, கற்களை ஒரு தடவை அகற்றினாலும், அது மீண்டும், மீண்டும் வரலாம். இதற்கு பாரா தைராய்டுவைப் பரிசோதிக்க வேண்டும். நீரை நிறைய அருந்தவேண்டும்.

 டாக்டர் எஸ்.ஏ.பி.

சிறுநீரக அழற்சிகள் (Nephritic and Nephrotic Syndromes) என்றால் என்ன?

இது இரு வகைப்படும். . சிறுநீரக அழற்சி (Nephritic Syndrome)  சிறுநீரக அழற்சி (Nephrotic Syndrome) என்று இருவகைப்படும். சிறுநீரக அழற்சியை, பொதுவாக ஆங்கிலத்தில் Urinary Inflamation என்றும் கூறுவர்.

 ஏ. சிறுநீரக அழற்சி _ I  (i) (Nephritic Syndrome

II) இது சிறு குழந்தைகளையும், பள்ளிச் சிறுவர்களையும் பாதிக்கிறது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சொறி, சிரங்கு, கொப்பளம் மற்றும் தொண்டைப்புண் போன்றவை மூலமாக ஸ்ட்ரேப்டோக்காக்கஸ் (Streptocococcus) என்ற விண்கிருமிகள் முக்கியமாக ரெப் ரிடோஜெனிக் ஸ்ட்ரேப் டோக்காக்கஸ் (Repriotogenic Streptocococcus) என்ற கிருமி இரத்தத்துடன் கலந்து சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

III) இக்கிருமிகளை எதிர்க்க, வெள்ளை அணுக்கள் உண்டாக்கும் எதிர்ப்பு சக்தியுடன் (Antibiotics இக்கிருமிகள் உண்டாக்கும் எதிர் சக்தியும் (Antigen) சேர்ந்துகொண்டு (இதை அழிப்பதற்குப் பதிலாக) கூட்டாக ஒரு அணி சேர்த்துக் கொள்ளுகிறது. இதை ஆற்றல் இல்லாத கூட்டுப்பொருள் (Immune Complex) என்று அழைக்கலாம். இது சிறுநீரகத்தினுள் சிறுநீரை வடிகட்டும் ஆற்றல் உள்ள மிகமிக நுண்ணிய இரத்தக் குழாய்களில் (Glomeruli) படிந்து அதனுடைய வடிகட்டும் ஆற்றலைக் குறைக்கிறது. இதற்கு குளோமருலினஸ் (Glomerrullinus) என்று பெயர்.

IV இதனால் சிறுநீரக அழற்சி ஏற்பட்டு, சிறுநீரகத்தின் வடிகட்டும் ஆற்றல் குறைந்து, சிறுநீருடன் புரதம் மற்றும் இரத்தமும் கலந்து வெளியேறி விடுகிறது. அடுத்ததாக, புரதம் இப்படி வெளியேறிவிடுவதால், இரத்த பிளாஸ்மாவில் உள்ள சோடியம் திசுக்களின் வெளியே உள்ள நீருடன் கலந்து உடல், முகம், கை_கால்கள் போன்றவை ஊதிப் பெருத்து விடுகின்றன. அதாவது, திசுக்களினால் நீர் கோர்த்துக்கொண்டு விடுகிறது.

V இந்நோய் கண்டவர்கள் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். சிறுநீரில் உள்ள புரதம், யூரியா, கிரியேட்டினின் (Creatinine) போன்றவைகளை பரிசோதனை செய்ய வேண்டும். இவர்களுக்குப் பொதுவாக இரத்த அழுத்தம் கூடுதலாகவே இருக்கும். ஆகவே, அதைக் குறைக்கவும் மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டை சரிசெய்யவும் தக்க மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

வி. உப்பை மிகக்குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பு உள்ள பொருட்கள் முக்கியமாக ஊறுகாய், அப்பளம், இளநீர் போன்றவற்றை அறவே ஒதுக்க வேண்டும். சிறுநீரகம் சரிவர இயங்க குறைந்தது ஒரு மாதம் ஆகலாம். அதுவரை வியாதியஸ்தரை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.

ப. சிறுநீரக அழற்சி

II (Nephrotic Syndrome)

I)   இதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. ஆனால், பலவகையான தொற்றுக்கிருமிகளாலும், தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளுவதாலும், ஒவ்வாத தாதுப்பொருட்கள் கொண்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளுவதாலும், மற்ற சில வியாதிகளுடன் இதுவும் சேர்ந்தே வருவதாலும், அடுத்து சிறுநீரக அழற்சியோடும் வருவதாலும், இதை அலட்சியப்படுத்துவதாலும் வருகிறது என்று பலவாறாகக் கூறுகிறார்கள்.

ii. இந்நோய் கண்டால், திடீரென்று கை கால்கள் மற்றும் உடல் முழுவதும் வீக்கம் கண்டு, கண் இமையில் வீக்கம் கண்டு இமை தொங்குதல், சிறுநீர் சரிவர போகாது. சிறுநீரில் புரதம் மிக அதிகமாக வெளியேறுதல், இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருத்தல், இரத்தத்தில் புரதம் மிகக் குறைவாக இருத்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

சாதாரணமாக, சில வேளைகளில் 150லிருந்து 200 மி.கி. அளவு புரதம் வெளியாகலாம். ஆனால், இந்த வியாதி கண்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 3லிருந்து 4 கிராம் அளவு புரதம் சிறுநீரில் வெளியாகும்! இந்தச் சிறுநீரகச் செயல் இழப்பால் பல தொற்றுக்கிருமிகள் சிறுநீரகத்தைத் தாக்கும்.

iii. சிறுநீரகத்திலிருந்து, சிறு சதையினை எடுத்து பரிசோதனை செய்து (Biopsy), நோயாளியின் உண்மையான பாதிப்பு என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும். இந்தப் பரிசோதனைதான் சிறுநீரகப் பாதிப்பை சரியாக எடுத்துக்காட்டும்.

சிறுநீரகக் கோளாறுகள் எலும்புகளை எப்படிப் பாதிக்கிறது?

i)எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமான மூலப்பொருட்கள் கால்சியம் (சுண்ணாம்பு) பாஸ்பரஸ், புரதம் போன்றவை. கால்சியம் வேலை செய்ய வைட்டமின் D தேவை. இந்த D வைட்டமின் சூரிய ஒளியிலிருந்தும், நாம் உண்ணும் ஆகாரத்திலிருந்தும் கிடைக்கிறது. இது ஈரலில் (Liver) சில மாறுதலுக்கு உட்பட்டு, சிறுநீரகத்தில் சுத்தமாக்கப்படுகிறது. அப்பொழுதுதான் அது சக்தியுடையதாகி வேலை செய்யும் தன்மையை அடைகிறது. இதற்கு D3 என்று பெயர்.

ii) இந்த D3 தான் குடலிலிருந்து கால்சியத்தை எடுக்க மிகவும் உதவுகிறது. இது குறைந்தால் இரத்தத்திலும் கால்சியம் அளவு குறைந்துவிடும். இதன் விளைவாக பாரா தைராய்டு (Paratharmoan) சுரப்பிகள், பாராத்தார்மோன் (Paratharmoan) என்ற ஹார்மோனை அதிகமாகச் சுரந்து, எலும்பிலுள்ள கால்சியத்தைக் கரைத்து இரத்தத்தில் அதன் அளவைச் சமன்செய்கிறது. இதனால் எலும்புகள் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி இன்றி வலுவிழந்து விடுகின்றன. இதற்கு ரிக்கெட்ஸ் (Ricketis) என்று பெயர்.

iii). சிறுநீரகச் செயல்இழப்பு சிறுகுழந்தைகளுக்கு ஏற்பட்டால், முக்கியமாக தொற்றுக்கிருமிகளால் பல பின்விளைவுகளில் எலும்பு வளர்ச்சி பாதிப்பும் ஒன்று.

இதன் அறிகுறிகள்:

a.ஒன்றரை வயதில் மூடவேண்டிய தலைக்குழி மூடாமல் இருத்தல்.

b. தலை எலும்புகளின் வளர்ச்சி குன்றி, முன் மண்டை பெரிதாக இருத்தல்.

சத்து குறைவான நிலை, முக்கியமாக இரும்பு மற்றும் புரதக்குறைவு.

கால், கை, முட்டி தட்டி இருத்தல், நெஞ்சு எலும்புக் கூடாக இருத்தல், கூன் விழுந்த முதுகு… இவை அனைத்தும் ரிக்கெட்ஸ்ஸின் அறிகுறிகளாகும்.

iv இந்த D3 வைட்டமின் உற்பத்தி, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் பாதிக்கப்பட்டு, வயதான காலத்தில் எலும்புகள் வலுவிழக்கின்றன. ஆகவேதான் வயதானவர்களுக்கு, சற்றுகீழே விழுதல்கூட, எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும். இதற்கு இரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் அமிலத்தன்மை மாறுபாடும் ஒரு காரணமாகிறது. இதற்கு ரீனல் ஆஸ்ட்ரோடிஸ்ட்ரோப்பி (Renal Ostro Dystrophy) என்று பெயர்.

V. இதற்குத் தக்க மருந்துகளும், டயாலிசிஸ் போன்றவைகள் தகுந்த பலன் கொடுக்கும்.