சிறுநீரகத்தில் கல் ஏன் தோன்றுகிறது? இதன் அறிகுறிகள் என்ன? இதற்கும் தொற்றுக்கிருமிகளுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா?

ஆமாம் உண்டு. இவற்றைச் சற்று விவரமாகப் பார்ப்போம்.

i)சிறுநீரகக் கல்லுக்கு ரீனல் கால்குலி (Renal Calculi) என்று பெயர். இது பெரும்பாலும் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்பாதையில் ஏற்படுகிறது. இதன் காரணம் என்ன என்று உறுதியாகக் கூறமுடியவில்லை. பல காரணங்கள் உண்டு. உதாரணமாக ஹார்மோன்களின் சமச்சீர் இன்மை, சிறுநீரகத்தொற்று (Infections) சிறுநீரகத்தில் அதிக உப்பு, வைட்டமின் ஏ குறைவு, பாராதைராய்டு அதிகமாகச் சுரத்தல், பரம்பரை மரபணுக்கோளாறு இப்படிப் பல.

ii. இந்த சிறுநீரகக் கற்களில் யூரிக் அமிலம், கால்சியம் ஆக்ஸலேட் (Calcium Oxalate), கால்சியம் பாஸ்பேட் (Calcium Phosphate) போன்றவையும் இன்னும் சில பொருட்களும் கலந்திருக்கின்றன.

iii. இது சிறுநீரகப்பகுதியில் மிகுந்த வலியை ஏற்படுத்தும். இது சிறுநீர்ப் பாதையை (Urether) அடைத்துவிட்டால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும். சிறுநீர் வெளியேறாது. இது பல பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதைத்தவிர, இந்தக் கற்கள் சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை போன்றவற்றின் உட்புறத்தில் புண்களை உண்டாக்கி தொற்றுக்கிருமிகள் எளிதாக வேலை செய்ய உதவுகின்றன.

iv.இதற்கு இப்பொழுது பல நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. முக்கியமாக அல்ட்ரா ஒலி முறை (Ultra Sound Method) கற்களின் அளவைப் பொறுத்து அவற்றைத் தூள் தூளாக்கி வெளியே கொண்டுவந்துவிடுகிறார்கள். அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை! சிறுநீர்க்கற்கள் பெரிய அளவில் இருந்தால் அறுவை சிகிச்சை தேவை.

நீங்கள் செய்யவேண்டியது, சிறுநீரகத்தில் சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் டாக்டரை உடனே பார்க்கவேண்டும். மற்றவற்றை டாக்டர் பார்த்துக்கொள்வார்!

சிலபேருக்கு, கற்களை ஒரு தடவை அகற்றினாலும், அது மீண்டும், மீண்டும் வரலாம். இதற்கு பாரா தைராய்டுவைப் பரிசோதிக்க வேண்டும். நீரை நிறைய அருந்தவேண்டும்.

 டாக்டர் எஸ்.ஏ.பி.

%d bloggers like this: