சிறுநீரக அழற்சிகள் (Nephritic and Nephrotic Syndromes) என்றால் என்ன?

இது இரு வகைப்படும். . சிறுநீரக அழற்சி (Nephritic Syndrome)  சிறுநீரக அழற்சி (Nephrotic Syndrome) என்று இருவகைப்படும். சிறுநீரக அழற்சியை, பொதுவாக ஆங்கிலத்தில் Urinary Inflamation என்றும் கூறுவர்.

 ஏ. சிறுநீரக அழற்சி _ I  (i) (Nephritic Syndrome

II) இது சிறு குழந்தைகளையும், பள்ளிச் சிறுவர்களையும் பாதிக்கிறது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சொறி, சிரங்கு, கொப்பளம் மற்றும் தொண்டைப்புண் போன்றவை மூலமாக ஸ்ட்ரேப்டோக்காக்கஸ் (Streptocococcus) என்ற விண்கிருமிகள் முக்கியமாக ரெப் ரிடோஜெனிக் ஸ்ட்ரேப் டோக்காக்கஸ் (Repriotogenic Streptocococcus) என்ற கிருமி இரத்தத்துடன் கலந்து சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

III) இக்கிருமிகளை எதிர்க்க, வெள்ளை அணுக்கள் உண்டாக்கும் எதிர்ப்பு சக்தியுடன் (Antibiotics இக்கிருமிகள் உண்டாக்கும் எதிர் சக்தியும் (Antigen) சேர்ந்துகொண்டு (இதை அழிப்பதற்குப் பதிலாக) கூட்டாக ஒரு அணி சேர்த்துக் கொள்ளுகிறது. இதை ஆற்றல் இல்லாத கூட்டுப்பொருள் (Immune Complex) என்று அழைக்கலாம். இது சிறுநீரகத்தினுள் சிறுநீரை வடிகட்டும் ஆற்றல் உள்ள மிகமிக நுண்ணிய இரத்தக் குழாய்களில் (Glomeruli) படிந்து அதனுடைய வடிகட்டும் ஆற்றலைக் குறைக்கிறது. இதற்கு குளோமருலினஸ் (Glomerrullinus) என்று பெயர்.

IV இதனால் சிறுநீரக அழற்சி ஏற்பட்டு, சிறுநீரகத்தின் வடிகட்டும் ஆற்றல் குறைந்து, சிறுநீருடன் புரதம் மற்றும் இரத்தமும் கலந்து வெளியேறி விடுகிறது. அடுத்ததாக, புரதம் இப்படி வெளியேறிவிடுவதால், இரத்த பிளாஸ்மாவில் உள்ள சோடியம் திசுக்களின் வெளியே உள்ள நீருடன் கலந்து உடல், முகம், கை_கால்கள் போன்றவை ஊதிப் பெருத்து விடுகின்றன. அதாவது, திசுக்களினால் நீர் கோர்த்துக்கொண்டு விடுகிறது.

V இந்நோய் கண்டவர்கள் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். சிறுநீரில் உள்ள புரதம், யூரியா, கிரியேட்டினின் (Creatinine) போன்றவைகளை பரிசோதனை செய்ய வேண்டும். இவர்களுக்குப் பொதுவாக இரத்த அழுத்தம் கூடுதலாகவே இருக்கும். ஆகவே, அதைக் குறைக்கவும் மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டை சரிசெய்யவும் தக்க மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

வி. உப்பை மிகக்குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பு உள்ள பொருட்கள் முக்கியமாக ஊறுகாய், அப்பளம், இளநீர் போன்றவற்றை அறவே ஒதுக்க வேண்டும். சிறுநீரகம் சரிவர இயங்க குறைந்தது ஒரு மாதம் ஆகலாம். அதுவரை வியாதியஸ்தரை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.

ப. சிறுநீரக அழற்சி

II (Nephrotic Syndrome)

I)   இதற்குச் சரியான காரணம் தெரியவில்லை. ஆனால், பலவகையான தொற்றுக்கிருமிகளாலும், தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்ளுவதாலும், ஒவ்வாத தாதுப்பொருட்கள் கொண்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளுவதாலும், மற்ற சில வியாதிகளுடன் இதுவும் சேர்ந்தே வருவதாலும், அடுத்து சிறுநீரக அழற்சியோடும் வருவதாலும், இதை அலட்சியப்படுத்துவதாலும் வருகிறது என்று பலவாறாகக் கூறுகிறார்கள்.

ii. இந்நோய் கண்டால், திடீரென்று கை கால்கள் மற்றும் உடல் முழுவதும் வீக்கம் கண்டு, கண் இமையில் வீக்கம் கண்டு இமை தொங்குதல், சிறுநீர் சரிவர போகாது. சிறுநீரில் புரதம் மிக அதிகமாக வெளியேறுதல், இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருத்தல், இரத்தத்தில் புரதம் மிகக் குறைவாக இருத்தல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

சாதாரணமாக, சில வேளைகளில் 150லிருந்து 200 மி.கி. அளவு புரதம் வெளியாகலாம். ஆனால், இந்த வியாதி கண்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 3லிருந்து 4 கிராம் அளவு புரதம் சிறுநீரில் வெளியாகும்! இந்தச் சிறுநீரகச் செயல் இழப்பால் பல தொற்றுக்கிருமிகள் சிறுநீரகத்தைத் தாக்கும்.

iii. சிறுநீரகத்திலிருந்து, சிறு சதையினை எடுத்து பரிசோதனை செய்து (Biopsy), நோயாளியின் உண்மையான பாதிப்பு என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும். இந்தப் பரிசோதனைதான் சிறுநீரகப் பாதிப்பை சரியாக எடுத்துக்காட்டும்.

சிறுநீரகக் கோளாறுகள் எலும்புகளை எப்படிப் பாதிக்கிறது?

i)எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமான மூலப்பொருட்கள் கால்சியம் (சுண்ணாம்பு) பாஸ்பரஸ், புரதம் போன்றவை. கால்சியம் வேலை செய்ய வைட்டமின் D தேவை. இந்த D வைட்டமின் சூரிய ஒளியிலிருந்தும், நாம் உண்ணும் ஆகாரத்திலிருந்தும் கிடைக்கிறது. இது ஈரலில் (Liver) சில மாறுதலுக்கு உட்பட்டு, சிறுநீரகத்தில் சுத்தமாக்கப்படுகிறது. அப்பொழுதுதான் அது சக்தியுடையதாகி வேலை செய்யும் தன்மையை அடைகிறது. இதற்கு D3 என்று பெயர்.

ii) இந்த D3 தான் குடலிலிருந்து கால்சியத்தை எடுக்க மிகவும் உதவுகிறது. இது குறைந்தால் இரத்தத்திலும் கால்சியம் அளவு குறைந்துவிடும். இதன் விளைவாக பாரா தைராய்டு (Paratharmoan) சுரப்பிகள், பாராத்தார்மோன் (Paratharmoan) என்ற ஹார்மோனை அதிகமாகச் சுரந்து, எலும்பிலுள்ள கால்சியத்தைக் கரைத்து இரத்தத்தில் அதன் அளவைச் சமன்செய்கிறது. இதனால் எலும்புகள் பாதிக்கப்பட்டு, வளர்ச்சி இன்றி வலுவிழந்து விடுகின்றன. இதற்கு ரிக்கெட்ஸ் (Ricketis) என்று பெயர்.

iii). சிறுநீரகச் செயல்இழப்பு சிறுகுழந்தைகளுக்கு ஏற்பட்டால், முக்கியமாக தொற்றுக்கிருமிகளால் பல பின்விளைவுகளில் எலும்பு வளர்ச்சி பாதிப்பும் ஒன்று.

இதன் அறிகுறிகள்:

a.ஒன்றரை வயதில் மூடவேண்டிய தலைக்குழி மூடாமல் இருத்தல்.

b. தலை எலும்புகளின் வளர்ச்சி குன்றி, முன் மண்டை பெரிதாக இருத்தல்.

சத்து குறைவான நிலை, முக்கியமாக இரும்பு மற்றும் புரதக்குறைவு.

கால், கை, முட்டி தட்டி இருத்தல், நெஞ்சு எலும்புக் கூடாக இருத்தல், கூன் விழுந்த முதுகு… இவை அனைத்தும் ரிக்கெட்ஸ்ஸின் அறிகுறிகளாகும்.

iv இந்த D3 வைட்டமின் உற்பத்தி, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் பாதிக்கப்பட்டு, வயதான காலத்தில் எலும்புகள் வலுவிழக்கின்றன. ஆகவேதான் வயதானவர்களுக்கு, சற்றுகீழே விழுதல்கூட, எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும். இதற்கு இரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் அமிலத்தன்மை மாறுபாடும் ஒரு காரணமாகிறது. இதற்கு ரீனல் ஆஸ்ட்ரோடிஸ்ட்ரோப்பி (Renal Ostro Dystrophy) என்று பெயர்.

V. இதற்குத் தக்க மருந்துகளும், டயாலிசிஸ் போன்றவைகள் தகுந்த பலன் கொடுக்கும்.

One response

  1. It’s very good to know about this problem. Averagely none cares about this syndromes.

%d bloggers like this: