இன்ப துன்பம் காரணத்தோடு வருகிறது-(புத்தரின் பொன்மொழிகள் )

இன்ப துன்பம் காரணத்தோடு வருகிறது


தர்மம் உங்கள் துன்பத்தையும், துயரத்தையும் போக்கும்.
அறவாழ்வின் அம்சங்களை, அதன் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச்
சொல்லுங்கள்.

‘நான்’ என்ற அகந்தையை விடுங்கள். உங்களுடைய அகந்தையும்
பொறாமையும் அல்லவா என்னுடைய தவவலிமையை ஒப்புக் கொள்ளத்
தயங்குகிறது. அகந்தையில் உங்கள் மனம் அலைபாயும்.
அமைதியிழக்கும். உங்களுடைய உண்மையான இயல்பை உணர்ந்து
கொள்ளும் வரை ‘நான்’ என்ற மயக்கம் இருக்கும்.

வீணான ஆராய்ச்சியில் காலத்தை வீணாக்காதீர்கள். உங்கள்
அறிவின் துணை கொண்டு உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
வாழ்வுக்காகட்டும், மரணத்துக்காகட்டும் காரணம் இருக்கிறது.
காரணமில்லாமல் எதுவும் நிகழ்வதில்லை. இன்பமோ துன்பமோ ஒரு
காரணத்தோடுதான் வருகிறது.

கடல்நீர் ஆவியாகி, வானமண்டலத்தில் மேகமாய்
உருவெடுக்கிறது. பின்பு, அது மழையாகி மலைச்சரிவின் வழியே
உருண்டோடி ஆறாகிறது. ஆறு கடலில் கலக்கிறது. இது ஒரு
சுழற்சி, இடையறாத இயக்கம். எல்லா நிகழ்வுகளிலும் இதனை
நீங்கள் காணமுடியும்.

நடுக்கடலின் ஆழம் கரையோரத்தில் இல்லை. கரையில் நிற்பவர்
கொஞ்சம் கொஞ்சமாய் கடலினுள் செல்லும் போது அதன் ஆழம்
அதிகரிப்பதை அறியலாம். அதுபோலவே படிப்படியாகத்தான்
தர்மத்தில் மேன்மை அடைய முடியும். பயிற்சியைத் தொடர்வதன்
மூலமே ஒழுக்கத்தில் உணர்வு காணமுடியும்.

கடல் மரித்தவைகளை தன்னுள் வைத்துக் கொள்ளாது. கரையோரம்
ஒதுக்கிவிடும். ஒழுக்கமற்றவர் கூட்டுறவை நாம் அவ்விதமே
ஒதுக்கிவிட வேண்டும்.

One response

  1. மிகவும் அருமையான பதிவு …..வாழ்த்துக்கள்

%d bloggers like this: