இறைவனின் வடிவங்கள்-(அமிர்தானந்தமயி)

* நாம் விரும்பி நினைக்கிற வடிவில் கடவுள் நமக்குக்
காட்சியளிப்பார். அவரை வணங்கும் போது, ”படைப்பும் நீயே,
படைப்பாளியும் நீயே. சக்தியாகவும், சத்தியமாகவும்
நீதானிருக்கிறாய். நீயே தொடக்கம். நீயே முடிவு. தாயே!
ஆன்மாவின் சாரமாகவும், ஐம்பூதங்களின் ரூபமாகவும்
நீதானிருக்கிறாய்” என சொல்ல வேண்டும்.<BR>

* நாம் நினைக்கிற வடிவில் கடவுள் காட்சியளிப்பார்
என்றாலும், அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு
முன்பாகவே, அவரைக் காண்கிற விருப்பத்தோடு நாம்
தயாராயிருக்க வேண்டும்.

* இறைவன் தனக்கென்று குணங்களேதும் இல்லாதவனாயினும்,
தன்னுடைய பக்தர்களின் விருப்பத்திற்கிணங்க எந்த வடிவையும்
எடுப்பான். பனிக்கட்டி தண்ணீராகவோ, வெண்ணெய் நெய்யாகவோ
மாறுவது போலத்தான் அதுவும். தனது பக்தனின்
பற்றின்மையையும், பக்தியையும் சோதிப்பதற்காக இறைவன் எந்த
வடிவத்தையும் எடுப்பான்.

* நம்முடைய வாழ்வில் எத்தனையோ தடைகள் வரலாம். நாம்
நம்பிக்கையோடும், எச்சரிக்கையோடும் இருந்தால் எளிதில்
கடக்க முடியும். இந்த ஜென்மத்தில் நாம் செய்கிறதெல்லாம்
போன ஜென்மக் காரியத்தின் விளைவாகும்.

* திருமணம் செய்துகொண்ட ஐந்தாறு ஆண்டுகளிலேயே ஆண்கள்
வெளிநாடுகளுக்குச் சென்று விடுகிறார்கள். தங்கள் மனைவியை
மட்டும் இங்கேயே விட்டுச் செல்கிறார்கள். பணம்
சம்பாதிப்பதன் பொருட்டு குடும்ப வாழ்க்கையில்
கிடைக்கக்கூடிய சுகங்களைக் கைவிடுகிறார்கள். மனதைக்
கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். தேவைக்கேற்ப வாழ்க்கை
முறையை மாற்றிக்கொள்ளவோ, மாறுதல்களில் பொருந்திக் கொள்ளவோ
ஆணுக்கு முடிகிறது.

%d bloggers like this: