உள்ளம் தூய்மை பெற வழி-(அதிவீரராமபாண்டியன்)

* வானம், நெருப்பு, நீர், காற்று, மண் என்கின்ற பஞ்ச
பூதங்களுக்கு அமைந்த முக்குணங்களும், அந்த கரணங்கள்
நான்கும் ஆகிய இவை முதலிய யாவுமாய், தனக்கு
ஆதியுமில்லாமல், அந்தமுமில்லாமல், உடலுக்கு உயிராய்,
உயிருக்கு உணர்ச்சியாய் ஒன்றினும் தோய்வின்றி நிற்பவனே
அறிவுமயமான ஆண்டவன்.<BR>

* ஆண்டவனை வணங்கத் தலை இருக்கிறது. வாழ்த்த வாய்
இருக்கிறது. மனமும் இருக்கிறது. ஆனால், அந்த மனம்
கட்டுக்கடங்காமல் திரியும் காட்டுக் குரங்கினைப் போன்றது.
ஆகவே, இறைவனை எப்போதும் எண்ணிக்கிடக்க இறைவனடியார்களிடம்
எக்காலத்தும் பழகியிருக்க வேண்டும்.

* இறைவனை வழிபட்டால் உள்ளம் தூய்மை பெறும். உள்ளம்
தூய்மையடைபவன் செல்வத்தைப் பெறுவான். சிறப்பினைப்
பெறுவான். அல்லலைத் தவிர்ப்பான். அறிவு நிரம்பப் பெறுவான்.
கல்வியில் சிறந்து விளங்குவான். நற்கதி அடைவான்.

* தாம் விரும்பியதை முன்னமேயே பெற்றுக் கையில்
வைத்திருக்க, அதைப் புரிந்துகொள்ளாமல் விரும்பியது இன்னும்
கிடைக்கவில்லையே என்று வருந்துகிறவனைப் போல், படைத்த
பரமனின் அருளைப் பெற்றும் பெறாதவர் போல் அறியாமல்
வருந்துகிறவர்கள் அநேகர் உண்டு.

* ஆணவ மலத் துன்பத்தில் அழுந்திய மன ஆசையினால் அறிவு
மயங்குபவன், வெவ்வேறு உருவமாகப் பிறந்து குயவன் சுழற்றும்
சக்கரத்தைப் போலப் பிறவிக் கடலில் சுழன்று கிடப்பான்.

* செம்பில் களிம்பு போல் மலமானது ஆத்மாவை ஆதிமுதலே
பற்றிக் கொண்டிருக்கும்.

* பொன்னை விரும்புதல், பூமியை விரும்புதல், பெண்
மயக்கத்தை விரும்புதல் ஆகியவை ஒருவனுடைய மனவலிமையை
அயர்வுறச் செய்வனவாகும்.

%d bloggers like this: