மரணமே வந்தாலும் கலங்காதீர்கள -(புத்தரின் பொன்மொழிகள் )

மரணமே வந்தாலும் கலங்காதீர்கள்

* நாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக.
லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது
பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். லட்சியத்தை நாம்
இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். லட்சியத்தைத் தாழ்ந்த
நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் வேண்டாம்.

* முன்னேறிக் கொண்டேயிரு! முறையற்ற ஒரு செயலைச் செய்து
விட்டதாக நீ நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க
வேண்டாம். அவை போன்ற தவறுகளை முன்பு செய்யாமல்
இருந்திருந்தால்; இன்று நீ இருக்கும் நிலையை அடைந்திருக்க
முடியும் என்று இப்போது நம்புகிறாயா? அந்தத் தவறுகளே தான்
நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாகும். உன் நிலை
எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதைக் குறித்து நீ கவலைப்பட
வேண்டாம். லட்சியத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு
முன்னேறியபடியே இரு!

* இந்திய இளைஞர்களே! பெருஞ்செயல்களைச் செய்து
முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள்.
ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும்
இரக்கம் காட்டும் போது, நமக்கு மரணமே வாய்த்தாலும் கூட,
அவர்களுக்கு இரக்கம் காட்டுவதே நமது லட்சியமாகும்.

* என்னுடைய லட்சியத்தை, உண்மையில் சில சொற்களில் சொல்லி
முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத்
தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வோர்
இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதை
எடுத்துச் சொல்வது தான் அது.

* எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! நீங்களும்
விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள்.
உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால்
மனிதப் பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை
அடையுங்கள்.

%d bloggers like this: