Daily Archives: ஏப்ரல் 19th, 2008

சந்தேகங்களும் விளக்கங்களும

  • சந்தேகங்களும் விளக்கங்களும்
  • கேள்வி: சாப்ட்வேர் பற்றி நீங்கள் எழுதுகையில் அப்ளிகேஷன் சாப்ட்வேர் என்றும் சிஸ்டம் சாப்ட்வேர் என்றும் எழுதுகிறீர்கள். எல்லா சாப்ட்வேர் தொகுப்புகளும் சிஸ்டத்தில் தானே பயன்படுத்துகிறோம். அப்ளிகேஷன் சாப்ட்வேரை சிஸ்டம் சாப்ட்வேர் என்று ஏன் சொல்லக் கூடாது?
  • பதில்: நல்ல கேள்வி. நாம் நம் தேவைகளுக்குக் கம்ப்யூட்டரில் இயக்கிப் பயன்படுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பாகும்.அவற்றை அடையாளம் கண்டு வேலை வாங்குதல், நிறுவப்பட்டுள்ள சாப்ட்வேர்களை தேவைக்கேற்ற படி இயக்குதல், Continue reading →

என்ன விபரம்? யார் பைலை எழுதியது?

  • என்ன விபரம்? யார் பைலை எழுதியது?

உங்கள் வர்த்தக நிறுவனம் அல்லது அலுவலகத்தில் பல்வேறு எக்ஸெல் பைல்களை உருவாக்கிக் கையாண்டு வருவீர்கள். அலுவலக தகவல்களைப் பலர் பல நாட்களில் மாற்றியும் அதிகப்படுத்தியும் கையாளுவார்கள்.
இது பற்றிக் குறித்து வைத்திட பைல் புராபர்ட்டீஸ் என்று ஒரு விண்டோ ஒவ்வொரு பைலிலும் உள்ளது. இதில் பைல் குறித்த பல்வேறு தகவல்களைத் தர முடியும். பைலைக் கையாளும் ஒவ்வொருவரும் இதில் என்று யாரால் பைல் படிக்கப்பட்டது மற்றும் திருத்தப்பட்டது என எழுத முடியும். Continue reading →

நெட்டில் அரட்டை

  • நெட்டில் அரட்டை

இன்றைய செய்தித்தாள்களில் பல மோசடிகள், குறிப்பாக பாலியல் மோசடிகள் குறித்துப் படிக்கையில் பலர் இன்டர்நெட் சாட் ரூமில் தொடங்கிய பழக்கமே குற்ற வலையில் விழ தொடக்கமாயிருந்தது என வாக்குமூலம் கொடுத்திருப்பதைப் படித்திருக்கலாம். இன்டர்நெட்டில் சாட் ரூம் வழியே அரட்டை அடிப்பதைப் பல பள்ளி சிறுவர்களும் கல்லூரி மாணவர்களும் ஒரு போதையான பழக்கம் போல கொண்டுள்ளனர். தாமாகச் சென்று விழுந்தவர்கள் சிலர்; ஆனால் பலரும் குறிப்பிட்ட சில கிரிமினல்களின் வலையில் விழுந்தவர்களாகவே இருப்பார்கள். காரணம், இவர்கள் சாட் அறையில் பாதுகாப்பு வழிகளைக் கடைப் பிடிக்காதவர்களாக இருந்திருப்பார்கள். இந்த வழிகள் என்னவென்று பார்க்கலாம். Continue reading →

வேர்ட்… வேர்ட்…. வேர்ட்….

வேர்ட்… வேர்ட்…. வேர்ட்….

சவேர்ட் டேபிளில் ஹெடர்கள்

வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். அதனை பிரிண்ட் எடுக்க முயற்சிக்கையில் அது பல பக்கங்களில் அமைந்திருப்பதனையும் அடுத்த அடுத்த பக்கங்களில் டேபிளில் உள்ள வரிசைகளுக்கான தலைப்புகள் இல்லை என்பதனையும் உணர்கிறீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஹெடர்கள் வந்தால் தானே ஒவ்வொரு காலமும் எது குறித்த தகவல்களைக் கொண்டுள்ளன என்று எளிதாகத் தெரியும். உடனே முதல் பக்கத்தில் இருக்கும் டேபிள் தலைப்பு உள்ள படுக்கை வரிசையினை அப்படியே காப்பி செய்து ஒவ்வொரு பக்கத்தின் முதல் வரிசையிலும் புதிய வரிசையினை ஏற்படுத்தி பேஸ்ட் செய்திடலாம். ஆனால் இது இன்னும் பிரச்னையை ஏற்படுத்தும். Continue reading →

விண்டோஸுக்கு டானிக

விண்டோஸுக்கு டானிக்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சில சிஸ்டம் பயன்பாடுகளை எளிதாகவும் வேகமாகவும் இயக்க பல நிறுவனங்கள் தங்கள் இணைய தளங்களில் புரோகிராம்களை அளிக்கின்றன. இவற்றில் இலவசமாகக் கிடைக்கும் சில புரோகிராம்கள் இங்கு தரப்படுகின்றன. இவற்றை இறக்கிப் பயன்படுத்து முன் சம்பந்தப்பட்ட பைல்களுக்குப் பேக்கப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

1. இயர் பான் வியூ (Irfanview): இதனை http://www.irfanview.com/ என்ற இணையதளத்தில் பெறலாம். கிராபிக்ஸ் வியுவர் புரோகிராம். ஒரே கிளிக்கில் உங்கள் இமேஜ் பைல் மற்றும் பலவகையான Continue reading →

RAM அண்ட் ROM வித்தியாசம் தெரியுமா?

  • RAM அண்ட் ROM வித்தியாசம் தெரியுமா?

கம்ப்யூட்டரைப்பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன் பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின் கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த இரண்டையும் பைனரி (இரண்டு) டிஜிட் (இலக்கங்கள்) என அழைக்கின்றனர். இந்த சொல்லின் சுருக்கமே பிட். இந்த இரு எண்கள் (பைனரி டிஜிட்கள்) மொத்தமாக எட்டுமுறை எழுதப்பட்ட கூட்டே ஒரு பைட். எனவே ஒரு பைட் என்பது எட்டு பைனரி டிஜிட் அடங்கிய ஒரு தொகுப்பு. கம்ப்யூட்டருக்கு ஒரு எழுத்து அல்லது எண்ணை எழுதி வைக்க ஒரு பைட் போதும். இப்படியே மொத்த மொத்தமாய் எழுதுகையில் 1024 பைட்கள் ஒரு கிலோ பைட் Continue reading →

எக்ஸெல் தெரிந்ததம்… தெரியாததும்…

எக்ஸெல் தெரிந்ததம்… தெரியாததும்…

எக்ஸெல் டேபிளை வேர்டில் பொருத்த: எக்ஸெல் ஒர்க் ஷீட்டிலிருந்து டேபிள் ஒன்றை வேர்ட் தொகுப்பிற்கு மாற்றுகிறீர்கள். என்ன நடக்கிறது? சில வேளைகளில் சில கட்டங்களில் இருந்த டேட்டாவில் பாதியைக் காணவில்லை. எங்கு போயிற்று இந்த டேட்டா? என்ற கேள்வியுடன் வேர்ட் பைலின் பக்கத்தை போர்ட்ரெய்ட் லிருந்து லேண்ட்ஸ்கேப் ஆக மாற்றிப் பார்க்கிறீர்கள். அல்லது டேபிளின் அகலத்தை அதிகப்படுத்தி டேட்டாவைப் பெற முயற்சிக்கிறீர்கள். ஆனால் இந்த செயல்கள் எல்லாம் டாகுமெண்ட்டின் மற்ற பகுதிகளைப் பாதிக்கும். அல்லது மவுஸின் கர்சரை மேலாக வைத்து இழுத்து செல்களை அகலமாக்கிப் பார்க்க முயற்சிப்பீர்கள்.

இதுவும் பிரச்னைக்குரியதே. உண்மையான பிரச்னை என்னவென்றால் ஒரு செல்லில் அடைபடுவதற்கு மேலாகவே டெக்ஸ்ட் உள்ளது. இதனை வேறு சில இடங்களில் மவுஸால் கிளிக் செய்வதன் மூலம் மாற்றலாம். டேபிளை செலக்ட் செய்து பின் அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின் Autofit என்பதற்கு மவுஸை உருட்டி AutoFit to Window என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இன்னமும் டேபிளின் அகலம் மார்ஜின் கோடுகளைத் தாண்டி தோற்றமளித்தால் Continue reading →

மானிட்டர் நீங்கள் வைத்துள்ள இடம் சரிதானா?

  • மானிட்டர் நீங்கள் வைத்துள்ள இடம் சரிதானா?

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மானிட்டர் முக்கிய இடம் வகிக்கிறது. பயன்பாட்டில் மட்டுமின்றி பயன்படுத்துபவரின் உடல் நலத்திலும் இது முக்கிய பங்காற்றுகிறது. சரியான நிலையில் இது அமைக்கப்பட வேண்டும். இல்லையேல் நம் பார்வை, கழுத்து மற்றும் தோள் பகுதிகளில் பிரச்னைகள் உருவாகும். சுழற்றி ஒரு சில கோணத்தில் வைக்கும் படியாகத்தான் மானிட்டர் தரப்படுகிறது. ஆனால் இந்த சுழற்சி முறை சரியாக அமைக்கப்படாமல் திருப்பப்பட்டு ஓரக் கோணத்தில் பல மானிட்டர்கள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இது தவறு. மேலும் பல மானிட்டர்கள் மிக அருகேயோ அல்லது சற்று தள்ளியோ இருக்கும் நிலையிலும் உள்ளன.

இதுவும் தவறு. சரியான வழிகளை இங்கு காணலாம்.
1. மானிட்டர், இயக்குபவரின் ஒரு கை தூரத்தி

1. மானிட்டர், இயக்குபவரின் ஒரு கை தூரத்தில் இருக்க வேண்டும். அதாவது கையை முழுமையாக எதிரே நீட்டினால் தொடும் தொலைவில் இருக்க வேண்டும். இது ஒரு பரிந்துரை தான். கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். ஆனால் வெகு அருகிலோ அல்லது தொலைவிலோ இருப்பது கண்களுக்கு நல்லதல்ல. Continue reading →

குறுக்கீடுகள் இல்லாத ஸ்லைட் ஷோ

குறுக்கீடுகள் இல்லாத ஸ்லைட் ஷோ


உங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்தி அருமையான ஸ்லைட் ஷோ ஒன்றை அமைத்திருக்கிறீர்கள். இதனைப் பார்க்க வேண்டியவர்களின் முன்னால் உங்கள் சுவையான விளக்கத்துடன் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது நீங்கள் தவறுதலாக மவுஸின் ரைட் கிளிக் செய்துவிட்டால் உடன் ஒரு பாப் அப் மெனு வரும். பின் அவசர அவசரமாக எஸ்கேப் கீ அழுத்தி அதனை நீக்குகிறீர்கள். இது உங்கள் இமேஜை பார்ப்பவர்கள் முன் கெடுக்கிறதே என நினைக்கிறீர்களா? இந்த பாப் அப் மெனு வராமல் செய்திடலாம். பின் வரும் வழியை மேற்கொள்ளுங்கள். முதலில் செல்லவும்.
Options அழுத்தியவுடன் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் “View” என்னும் டேபினை அழுத்தினால் புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று காட்டப்படும். இந்த பெட்டியில் “Slide show” என்னும் டேபைக் கிளிக் செய்தால் இன்னும் ஒரு பெட்டி கிடைக்கும்.


இதில் உள்ள பல பிரிவுகளில்
“Show menu on right mouse click” என்பதனைத் தேடிக் காணவும். இ தன் முன் உள்ள கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் இனி இந்த பாப் அப் மெனு தொல்லை எல்லாம் இருக்காது. மீண்டும் இது வேண்டும் என எண்ணினால் மேலே கூறியபடி சென்று அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். சரியான அளவுகளில் டெக்ஸ்ட் மற்றும் படங்கள்: பவர்பாய்ண்ட் ஷோவிற்கான ஸ்லைடுகளை அமைப்பதில் மிகச் சரியான அளவில் அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என எண்ணினால் உங்களுக்கு அதில் ரூலர்கள் தேவை. டெக்ஸ்ட், படங்கள், சார்ட்கள் மற்றும் போட்டோக் களை சரியான அளவெடுத்து ஸ்லைடுகளில் அமைக்க இந்த ரூலர்கள் உங்களுக்கு உதவும்.ரூலர் மட்டுமின்றி கைட் மற்றும் கிரிட்லைன் ஆகியவையும் இதில் அடங்கும். ஜியோமெட்ரி பாக்ஸ் டூல்ஸ் போல இவற்றைப் பயன்படுத்தலாம். முதலில் இவற்றைப் பெற சில செட் அப் வழிகளை மேற்கொள்வோம்.


1. முதலில் ரூலர் பெறும் வழியைப் பார்ப்போம்.
2.
“View” என்பதைத் தேர்ந்தெடுத்தால் ரூலர் லைன் கிடைக்கும்.


அடுத்து இவற்றைச் சீர்படுத்தத் தேவையான சாதனங்களைப் பெறலாம். அடுத்ததாக ““View” “Grid and Guides கிளிக் செய்திடவும். ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில்
“Snap objects to grid” என்ற பிரிவின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இதனால் ஸ்லைடில் பயன் படுத்தப்படும் ஆப்ஜெக்ட்களை சரியாக வைத்திடுமாறு பவர் பாய்ண்ட்டுக்கு கட்டளையினை ஏற்படுத்துகிறீர்கள். வைக்கப்படும் ஆப்ஜெக்ட்ஸ் ஒன்றுக்கொன்று அருகே இணையாக இருக்க Continue reading →

ஹார்ட் டிஸ்க்கில் சேரும் குப்பை பைல்களை அகற்றிடுக

ஹார்ட் டிஸ்க்கில் சேரும் குப்பை பைல்களை அகற்றிடுக

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பைல்களை ஆசை ஆசையாய் உருவாக்குவது மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் செயல் தான். ஆனால் அந்த பைல்கள் தேவைப்படாத போது அவற்றை ஹார்ட் டிஸ்க்கில் இருந்து அழித்து விட வேண்டும். 60 வயது வந்த பின்னும் 25 வயதில் போட்ட சட்டையை தூக்கி எறியாமல் சென்டிமென்ட்டாக சிலர் வைத்திருப்பார்கள். அதே போல இந்த பைல் எல்லாம் நான் கம்ப்யூட்டர் வாங்கிய போது உருவாக்கியது என ஹார்ட் டிஸ்க்கிலேயே வைத்திருக்கக் கூடாது. ஒரு சிலர் அவ்வப்போது இன்டர்நெட் பிரவுசிங்கில் ஏற்படும் தற்காலிக பைல்களைக் கூட வைத்திருப்பார்கள். இறுதியில் ஒரு நாளில் ஹார்ட் டிஸ்க் குறித்த எச்சரிக்கை கிடைக்கும். இடம் காலியாகிக் கொண்டிருக்கிறது. பைல்களை நீ எடுக்கிறாயா அல்லது நான் காலி செய்திடவா என்றெல்லாம் எச்சரிக்கை கிடைக்கும். இதை எல்லாம் அவ்வப்போது எப்படி காலி செய்திட வேண்டும்; ஹார்ட் டிஸ்க்கை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதனை இங்கு பார்க்கலாம்.

ரீசைக்கிள் பின்: நாம் அழிக்கும் பைல்கள் எல்லாம் ரீ சைக்கிள் பின்னில் சென்று தங்குகின்றன. இதனை அவ்வப்போது காலி செய்திடாவிட்டால் அவை ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடத்தைக் கைப்பற்றிவிடும். எனவே திரையில் தெரியும் ரீசைக்கிள் பின் ஐகானில் இரு முறை கிளிக் செய்திடுங்கள். அதில் அழித்த பைல்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். இதில் ஏதாவது தேவை என்றால் உடனே ரெஸ்டோர் பிரிவில் கிளிக் செய்தால் அந்த பைல் எந்த டைரக்டரியிலிருந்து எடுக்கப்பட்டதோ அதில் மீண்டும் வைக்கப்படும். ரீசைக்கிள் பின்னில் உள்ள பைலை அங்கிருந்தவாறே படித்தறிய முடியாது. மற்ற பைல்களை டெலீட் பட்டன் அழுத்தி நீக்கிவிட வேண்டும். இதனை வாரம் ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும். Continue reading →