அதென்ன “பயோனிக் ஐ!’

அதென்ன “பயோனிக் ஐ!’

கண் பார்வையை தருவதில் அமல்படுத்தப்பட்டு வரும் புரட்சிகரமான ஆராய்ச்சி பலன்களில் அடுத்தது “பயோனிக் ஐ!’
விழித்திரை பாதிப்பு தொடர்பாக, வளர்ச்சி பெறாத நிலையில் கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு “பயோனிக் ஐ’ முறை பெரிதும் பயன் தருகிறது. அவர்கள் இழந்த பார்வையை மீட்டுத்தருகிறது. உலகில் முதல் செயற்கைக்கண் இது. அமெரிக்க, பிரிட்டன் நிபுணர்கள் சேர்ந்து இதை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கைக்கண், விழித்திரையில் பொருத்தப்படுகிறது.

அதில் மிக நுண்ணிய வீடியோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பார்க்கும் எதையும் அது படம் பிடித்து, பார்வை நரம்புகள் மூலம் , மூளைக்கு அனுப்புகிறது. அதற்கேற்ப மூளை உத்தரவிடுகிறது. சர்வதேச அளவில், முதன் முறையாக இந்த அறுவை சிகிச்சை, லண்டன் மூர்பீல்டு கண் மருத்துவமனையில், சமீபத்தில் செய்யப் பட்டது. இந்த செயற்கை கண்ணுக்கு “ஆர்கஸ்’ என்று பெயர். இதில் பொருத்தப்படும் கேமரா, எள் அளவுக்கு தான். இருக்கும். “வயர்லஸ்’ மூலம் கேமரா இயங்குகிறது. “இந்த ஆராய்ச்சியை இன்னும் முடிக்கவில்லை. விழித்திரையில் பொருத்தப்படும் கேமரா வேலை செய்வதில் உள்ள சில சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். இயற்கையான கண் போல தெரியும் வகையில் வீடியோ கேமரா வடிவமைக்கப்பட உள்ளது. அதற்கு போதுமான மின்சக்தியையும் மூளையில் உள்ள நரம்பு மண்டலம் தான் தருகிறது. இதில் எந்த குறைபாடும் ஏற்படாத வண்ணம் முழுமையாக சோதனை செய்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக, இறுதி வடிவம் கிடைக்கும்’ என்று தெரிவித்தனர்.

%d bloggers like this: