குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! : வாய் வழி ஆபரேஷன் நடப்பது இப்படித்தான்!

குடல் வீக்கத்தை துண்டிக்க வாய் வழி ஆபரேஷன்! : வாய் வழி ஆபரேஷன் நடப்பது இப்படித்தான்!

ீகுடல்முனையில் வீக்கம் – குடல் அழற்சி என்று கூறப்படும் தேவையற்ற குடல் சதை தான் “அப்பெண்டிக்ஸ்!’ இதை அகற்ற, அடிவயிற்றில் துளை போட்டு ஆபரேஷன் செய்ய வேண்டும்; மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற வேண்டும். ஆனால், இப்போது வயிற்றில் ஆபரேஷன் செய்வதுபோய், வாய் வழி ஆபரேஷன் செய்யும் முறை வந்து விட்டது. வாயில் சிறிய குழாய் செலுத்தி, தானியங்கி நுண்ணிய கேமரா மூலம், கம்ப்யூட்டரில் பார்த்து சிறிய கீறல் கூட இல்லாமல், குடல் முனையை துண்டித்து சரி செய்யும், நவீன அறுவை சிகிச்சை வந்து விட்டது. உலகில் முதன் முறையாக அமெரிக்காவில் உள்ள சான்டியாகோ மருத்துவமனை நிபுணர்கள், இப்படி வாய் வழி ஆபரேஷன் செய்து சாதித்துள்ளனர். 42 வயதான துணி வியாபாரி ஜெப் ஸ்காலட்சுக்கு இந்த முறையில் ஆபரேஷன் செய்து வெற்றி கண்டுள்ளனர். பெரிய குடலின் இறுதியில், புழு போன்று வளர்ந்திருப்பது தான் குடல் அழற்சி (அப்பெண்டிக்ஸ்) என்பது. பல காரணங்களால் இந்த வீக்கம் ஏற்படுகிறது. இதை தடுக்க மருந்துகள் பயன்படாது; அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.

உடலை கீறி அறுவை சிகிச்சை செய்வதெல்லாம் குறைந்து வருகிறது. சில ஆபரேஷன்களுக்கு “கீ ஹோல்’ என்ற முறையில் துளை போட்டு செய்யப் படும் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடல் முனை அறுவை சிகிச்சையும் அப்படித்தான் செய்யப்படுகிறது. இது குறித்து நிபுணர்கள் கூறுகையில்,”வாய் வழியே செலுத்தப்படும் நுண்ணிய குழாயில், மிக நுண்ணிய கேமரா பொருத்தப்படுகிறது. குழாய் வழியாக, இரண்டு சிறிய குழாய்கள் அனுப்பப்படுகின்றன. ஒன்றின் மூலம் சிறிய கத்தி போன்ற கூரிய சாதனம் அனுப்பப்படுகிறது. இன்னொன்றில் ஒரு சிறிய பை அனுப்பப்படுகிறது. கம்ப்யூட்டர் மூலம் நுணுக்கமாக பார்த்து, இந்த கத்தி மூலம், குடல்முனை துண்டிக்கப் பட்டு, அது, அந்த சிறிய பையில் போடப்படுகிறது. மீண்டும் வயிறு, வாய் வழியாக வெளியே எடுக்கப்படுகிறது. இதற்கெல்லாம் சில நிமிடங்கள் தான் ஆகிறது. ஒரு சிறு கீறல் கூட இல்லை. வயிற்றில் மட்டும் சிறிய துளை போடப்படுகிறது’ என்றனர். அமெரிக்கா, பிரிட்டனில் இந்த முறை இப்போது பரவ ஆரம்பித்துள்ளது. விரைவில் இந்தியாவில் பெரிய மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்படலாம்.

<span>%d</span> bloggers like this: