தெரியுமா – தெரியுமா? -இந்த புகையை சுவாசித்தால்…

தெரியுமா – தெரியுமா?

A . இந்த புகையை சுவாசித்தால்…


அன்றாடம் பயன்படுத்தும் காஸ் ஸ்டவ்வில் உள்ள “காஸ் பர்னர்’ ஹீட்டர், பல்பு, ட்யூப் லைட், அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர் ஆகியவற்றை பயன்படுத்தும் போது வெளிப்படும் ஒரு வித நெடியை நீங்கள் அனுபவப்பட்டிருப்பீர்கள்!
ஆனால், இந்த நெடி, ஒரு வித ரசாயன நெடி என்று மட்டும் சிலருக்கு தெரிந்திருக்கும். அந்த நெடி பெயர், பி.டி.எப்.இ., அதாவது, “பாலி டெட்ரா ப்ளோரோ எதிலின்’ என்பதன் சுருக்கம் தான் இது. இந்த புகையை தொடர்ந்து சுவாசித்தால், கூண்டில் அடைக்கப்பட்ட பறவை இறந்து விடும். அப்படியானால், இந்த நெடி எவ்வளவு விஷத்தன்மை கொண்டது என்று எண்ணிப்பாருங்கள்.

இந்த நெடி பரவும் பட்டியலில் சமீப காலமாக சேர்ந்து கொண்டிருப்பது, “நான் ஸ்டிக் குக்வேர்!’ உணவு அவசரமாக தயார் செய்ய வேண்டும், தோசை, அடை சூப்பராக வர வேண்டும் என்று அதிக சூட்டில் காயவைத்தால், இதில் இருந்து அதிக நெடி வெளிப்படும். இப்படி பல வகையிலும் நெடி கிளம்பும் வசதிகள் தான் இப்போது சமையல் அறையில் நிரம்பியுள்ளன. அதனால் தான், “எக்சாஸ்ட்’ மின்விசிறியை போட்டு சமைக்க வேண்டும் என்று சொல்கின்றனர் டாக்டர்கள். சரி, நீங்கள் எப்படி …? இப்படி இல்லாவிட்டால், இனியாவது நிதானமாக பிளான் பண்ணி சமையுங்கள். விஷ நெடி பாதிக்காமல் இருக்கும். ஒரு சுற்று போய்விட்டு, இப்போது பலரும் பானையை வைத்து தான் சமைக்கின்றனர். “மைக்ரோ அவன்’ கூட பயன்படுத்துகின்றனர். ஆனால், முடிந்தவரை ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல், காஸ்ட் அயர்ன், செராமிக், டைட்டானியம் போன்றவற்றாலான பாத்திரங்களை பயன்படுத்தலாம். மொத்தத்தில், எப்படிப்பட்ட நெடியும் உடலுக்கு கெடுதல் தான். அதனால், சமையல் அறையில் வெளிச்சம் இருக்கட்டும்; புகை போகட்டும்; “எக்சாஸ்டர்’ மின்விசிறியை பயன்படுத்துங்கள்.

01 B . உலர்ந்த பிரஷ் பயன்படுத்தினால்…
காலை, இரவு இரண்டு வேளையிலும் பல் துலக்கியதுண்டா? அப்படி செய்தால் நல்லது தான். ஆனால், ப்ளோரைடு பற்பசை கொண்டு தான் துலக்க வேண்டும் என்று நினைப்பதும் சரி தான். அளவுக்கு மிஞ்சினால் எதுவும் விஷம் தானே. அதிக ப்ளோரைடால், பற்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு என்று சொல்கின்றனரோ அந்த அளவுக்கு கெடுதலும் உள்ளது என்பது பலருக்கு தெரியாது. பற்களில் பாதிப்பு மட்டுமல்ல, அலர்ஜி, மூட்டு பாதிப்பு போன்றவையும் ஏற்படும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக, குழந்தைகள், ப்ளோரைடு பற்பசையை பயன்படுத்தும் போது, அதை விழுங்கி விடுவர். அதனால், அது உடலுக்குள் போய் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதனால், குழந்தைகள் விஷயத்தில் உஷார் தேவை. இந்த ப்ளோரைடு அதிக அளவில் உடலுக்குள் போனால், அது மூளைக்குள் போய் படிந்து, குழந்தையின் அறிவுக்கூர்மையை பாதிக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். அது மட்டுமல்ல, பற்பசையை போட்டு தேய்ப்பதால் அழுக்கு, காரை போன்ற பாதிப்புகள் போவதாக கூறுவதும் உண்மையல்ல என்கின்றனர். பிரஷ்ஷை எடுத்தவுடன், அதில் பேஸ்ட் போட வேண்டாம்; உலர்ந்த பிரஷ்ஷால் பற்களை முழுமையாக தேய்க்க வேண்டும்; பல்லின் இடுக்கில் சேர்ந்த எல்லாவற்றையும் நீக்கி விடும். அதன் பின், பற்பசையை போட்டு தேய்க்கலாம். இது தான் நல்லது என்பதும் நிபுணர்கள் கண்டுபிடிப்பு. முயற்சி பண்ணிப்பாருங்களேன்.

01 C . “டை’யை இறுக்காதீங்க!

நீங்கள் “டை’ கட்டும் பழக்கம் உண்டா? கழுத்தில் இறுக்கி கட்டுவீர்களா? சற்று தளர்த்தி கட்டுவீர்களா? இறுக்கினால் தான் சரியாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்து அப்படியே செய்து வருகிறீர்கள் என்றால், முதலில் அந்த பழக்கத்தை மாற்றுங்கள். “டை’யை கழுத்தில் அதிகமாக இறுக்கி கட்டினால், பார்வை நரம்புகளை பாதிக்கும்; அதனால் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். “டை’ கட்டுவோருக்கு பார்வை நரம்பு பாதிப்பதுடன், கண்களில் பிரஷர் அதிகமாகி விடும். அதனால், கண் பார்வை பாதிக்கிறது என்பதை “ஆன் லைன்’ சர்வேயில் கண்டுபிடித்துள்ளனர்

“டை’ கட்டும் பழக்கம் இருந்து, கண் பார்வை பாதிப்பு இருப்பதாக எண்ணினால், உடனே டாக்டரிடம் ஆலோசியுங்கள். இல்லாவிட்டால், கண்களில் அழுத்தம் அதிகமாகவதுடன், சில டாக்டர்கள், அதை தவறாக “க்ளூகோமா’ என்று கண்டுபிடிக்க வழியுண்டு. அப்படி முடிவு செய்தால், அதனால், வேறு பாதிப்பு வரும். கண்களில் பிரஷர் இருக்கவே கூடாது; அதை அனுமதிப்பது தான் ஆபத்தே. அதனால், “டை’ காரணமாக கண்களில் அழுத்தம் இருந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம்…சரியா? தினமும் ஆபீஸ் கிளம்பும் போது, அவசர அவசரமாக “டை’ கட்டாமல், நிதானமாக, கழுத்தை இறுக்காமல் கட்டிக்கொண்டு செல்லுங்கள்

One response

  1. உங்கள் பதிவுகளில் இருந்து நல்ல தகவல்களை என் தளத்தில் இட்டு உங்கள் தளத்தின் பெயரையும் இட்டு உள்ளேன்.

    தொடர்ந்து இதுப்போல் செய்ய உங்க அனுமதி எதிர் பார்க்கிறேன். விருப்பம் இருந்தால் என் தளத்தில் வந்து சொல்லவும்.

    நன்றி நண்பா.

%d bloggers like this: