Daily Archives: மே 6th, 2008

உலகைத் தாங்குவது அன்பு–காந்தியின் பொன்மொழிகள்

உலகைத் தாங்குவது அன்பு

* அணுக்களிடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான், உலகம்
பொடிப்பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப்பதாக விஞ்ஞானிகள்
கூறுகிறார்கள். அது போலவே, உயிர்களிடத்தும் அன்பு என்னும்
இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். அன்பு உள்ள இடத்திலேயே,
உயிர் இருக்கிறது. பகைமை அழிவையே தருகிறது. மனித ஜாதி
அழியாமல் ஜீவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், இணைக்கும்
சக்தியே. இது பிரிக்கும் சக்தியை விடப் பெரியது.

* உண்மை இன்றேல் அன்பும் இல்லை. உண்மை இல்லாமல் பாசம்
இருக்கலாம். உதாரணம், பிறர் கெடத் தான் வாழும் தேசபக்தி.
உண்மை இல்லாமல் மோகம் இருக்கலாம். எடுத்துக்காட்டு, ஓர்
இளம் பெண்ணிடம் ஒரு வாலிபன் கொள்ளும் காதல். உண்மை
இல்லாமல் வாஞ்சை இருக்கலாம். உதாரணமாக, பெற்றோர்
பிள்ளைகளிடம் காட்டும் அன்பு மிருகத்தன்மைக்கு
அப்பாற்பட்டது. அது ஒரு போதும் பாரபட்சமாய் இருக்காது.
உலகத்தை தாங்கி நிற்பது அன்பு ஒன்றே என்பது என் திடமான
நம்பிக்கை. அன்புள்ள இடமே வாழ்வுள்ள இடம். அன்பில்லா
வாழ்வு மரணமே. Continue reading →

கீதையை படியுங்கள் மாணவர்களே!–காந்தியின் பொன்மொழிகள்

கீதையை படியுங்கள் மாணவர்களே!

கீதையின் 18 அத்தியாயங்களையும் படித்து ஆராய்ச்சி
செய்வது உங்களுக்கு கடினமாக இருந்தால், முதல் மூன்று
அத்தியாயங்களையாவது கவனமாக படியுங்கள். இந்த மூன்று
அத்தியாயங்களிலிருந்து சில ஸ்லோகங்களை தேர்ந்தெடுத்துக்
கொள்வதின் மூலம் அந்த அத்தியாயங்களின் சாரத்தை தெரிந்து
கொள்ளலாம். கீதையின் மூன்று இடங்களில், எல்லா
கொள்கைகளையும் விட்டுவிட்டு இறைவனையே சரணம் அடைந்துவிட
வேண்டும் என்று உபதேசிக்கப்பட்டிருக்கிறது.

கீதை எல்லோருக்கும் அன்னை. அவள் யாரையும் பிடித்து
வெளியே தள்ளுவதில்லை. கதவைத் தட்டுவோருக்கு அவள் அன்புடன்
கதவை திறந்து அடைக்கலம் அளிக்கிறாள். கீதையை உண்மையாக
படிப்பவன் ஏமாற்றம் என்பதை அறியான். அறிவுக்கே எட்டாத
ஆனந்தமும், சாந்தியும் அந்த பக்தனுக்கு ஏற்படுகிறது.
எனினும் அத்தகைய சாந்தியும், ஆனந்தமும் சந்தேகவாதிக்கோ
அல்லது அறிவையும் புலமையையும் குறித்து இறுமாப்பு
அடைபவனுக்கோ ஏற்படுவதில்லை. பணிவுள்ளவனுக்கும், மனதை
சிதறவிடாமல் முழு நம்பிக்கையுடன் கீதை அன்னையை
வணங்குபவனுக்கும்தான் அத்தகைய அமைதியும், ஆனந்தமும்
உண்டாகின்றன. Continue reading →

சோர்வை அகற்றும் பிரார்த்தனை–காந்தியின் பொன்மொழிகள்

சோர்வை அகற்றும் பிரார்த்தனை

* என் உயிரையே காப்பாற்றி வந்திருப்பது
பிரார்த்தனைதான். பிரார்த்தனையின்றேல், நீண்டகாலத்திற்கு
முன்பே எனக்குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டுமென பொது
வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகக் கசப்பான
அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன என்பதை என் சுயசரிதையிலிருந்து
நீங்கள் அறிந்து கொள்ளலாம். அவை எனக்குத் தற்காலிகமாக மனச்
சோர்வை உண்டாக்கின. எனினும் நான் அந்தச் சோர்வை அகற்றும்
ஆற்றல் பெற்றிருந்தேனெனில் அதற்குக் காரணம் பிரார்த்தனை
தான்.

* சத்தியம், எனது வாழ்க்கையின் ஓர் அம்சமாகவே இருந்து
வந்திருக்கிறது. ஆனால், பிரார்த்தனை அவ்விதம் இல்லை.
அவசியம் காரணமாகவே என் வாழ்க்கையில் பிரார்த்தனைக்கு இடம்
ஏற்பட்டது. பிரார்த்தனை இன்றேல், நான் மன நிறைவுடன் இருக்க
முடியாது என்ற நிலை ஏற்பட்டதே அதற்குக் காரணமாகும். Continue reading →

தன்னடக்கம் நிச்சயம் வேண்டும்–காந்தியின் பொன்மொழிகள்


தன்னடக்கம் நிச்சயம் வேண்டும்

தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான
அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப்
போகிறது என்பதை விட உள்ளம் எப்படி சமாளிக்கப்போகிறது
என்பதை வெளிக்காட்டுவது தான் தற்காப்புக்கலை. இதைத்தான்
அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்.

தற்காலத்தில் தங்களை, எல்லாம் தெரிந்துவிட்ட
பெரியவர்களாகக் கருதிக் கொள்கிற வழக்கம் நம்
வாலிபர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. உண்மையான
தன்னடக்கமுள்ளவனுக்கு நாளுக்கு நாள் பலம் அதிகரித்துக்
கொண்டே போகும். அமைதியிலிருந்து அதிகமான அமைதிக்கு அவன்
வளர்ந்து கொண்டே போகிறான். Continue reading →

மனைவியிடம் கோபிக்காதீர்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

மனைவியிடம் கோபிக்காதீர்கள்

நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி
வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும்
பன்மடங்கு வளர்ந்து வரும்.

பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,
எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு
அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.

மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்
பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி
கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.

ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால்
வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே
வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து
பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.

நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன்
எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம். Continue reading →

இன்சொல் மட்டுமே பேசுங்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

இன்சொல் மட்டுமே பேசுங்கள்

எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச்
சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.

திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா
உலகங்களையும் அளந்தவர். Continue reading →

ஒரே நிமிடத்தில் புண்ணியம்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்


ஒரே நிமிடத்தில் புண்ணியம்

* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம்
கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின்
புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு
குறைந்தும்தான் வரும்.

* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும்
கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக
கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும்
இயலாது.

* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை
காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம் Continue reading →

கடவுளிடம் பயம் வேண்டும்-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

கடவுளிடம் பயம் வேண்டும்

* ஒரே பரம்பொருளை ‘முருகா!’ என்றாலும், ‘சிவனே!’ என்று
துதித்தாலும் ‘திருமாலே’ என்று வணங்கினாலும், ‘கணபதியே’
என்று அழைத்தாலும் ஏன் என்கிறார்கள் மானிடர்கள். ஒவ்வொரு
சுவாமிக்கும் தேங்காய் உடைக்கச் சொல்கிறீர்களே என
வருத்தப்படுகின்றனர். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படாமல் இருக்கும். அதை
தந்தை ‘கண்ணே’ என்பார். தாய் ‘மணியே’ என்பாள். தாத்தா
‘முத்தே’ என்பார். பக்கத்து வீட்டுக்காரர் ‘ராஜா’ என்பார்.
இப்படி அவரவர் வசதிப்படி குழந்தையைக் கொஞ்சுவதில்லையா? அது
போல பாசத்திற்குரிய இறைவன் ஒருவன் தான். பெயர்கள் தான்
பல.

* இறைவனின் பரதநாட்டிய தத்துவம் கேளுங்கள். ஆண்டவன்,
மாயையை எடுத்து உடுக்கையினால் உதறுகிறார். ஆன்மாக்களின்
வல்வினைகள் என்னும் சஞ்சிதத்தைத் தமது திருக்கரத்தில் உள்ள
நெருப்பினால் சுட்டுச் சாம்பலாக்குகிறார். ஆணவமாகிய
முயலகனை மேலெழாவண்ணம் கிரியா சக்தியாகிய வலப்பாதத்தினால்
மிதித்திருக்கிறார். ஆனந்த அனுபவத்தை தமது தூக்கிய Continue reading →

துன்ப அனுபவம் நன்மைக்காகவே!-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்


துன்ப அனுபவம் நன்மைக்காகவே!

கண்ணுக்கு தெரிந்த இந்த உலக மக்களுக்கு சேவை செய்வதோடு,
கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்வது நம்
கடமையாகும். நம்மைப் பெற்ற தாய், தவமிருந்து, கருவுற்று,
தாலாட்டி சீராட்டி வளர்த்ததை நம் கண்ணால் கண்டதில்லை.
அதுபோல், கடவுளின் அன்பையும் கண்ணால் கண்டதில்லை. எனவே,
கடவுளும் நம் தாய் போன்றவர் தான்! கோவில் வாசலில்
துவாரபாலகர் இருவர் இருப்பதை நாம் பார்க்கிறோம். அதில்
ஒருவர் ஆள்காட்டி விரலைக் காட்டி நிற்பார். Continue reading →

நன்றி மறப்பது நன்றன்று -கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

நன்றி மறப்பது நன்றன்று

இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இறைவனை வணங்காவிடில்
கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி
இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை நாத்திகப்
பெருமக்கள் கேட்கிறார்கள்.

விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன;
இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம்.
உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம்பெருக்குகிறோம். இவை
விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே
அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து
விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும். Continue reading →