Daily Archives: ஜூன் 14th, 2008

பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்


இது பரப்பளவு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட உலகநாடுகளின் பட்டியலாகும்.

அரசுரிமை (இறையாண்மை) பெற்றுள்ள நாடுகளை மட்டுமே இங்கு எண்ணிக்கையுடன் தொகுத்துள்ளோம். அரசுரிமை (இறையாண்மை) இல்லாத நிலப்பரப்புகளை, வாசகர்கள் பொருந்தி காண்பதற்காக, சாய்வெழுத்துக்களில் தொகுத்துள்ளோம். குளங்கள், நீர்தேக்கங்கள், ஆறுகள் போன்ற நிலம்சார்ந்த நீர்நிலைகளும் இப்பரப்பளவுகளில் அடக்கம். அண்டார்டிகாவின் சில பகுதிகளை பல நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அப்பகுதிகளின் பரப்பளவுகளை இங்கு கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. இப்பட்டியலின் வரைகலையை காண்க பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (படிமம்). Continue reading →

மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல

மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

பரப்பளவின் அடிப்படையில் நாடுகள்

தனி நாடுகளிலும் சில ஆட்சிப்பகுதிகளிலும் 2005 ஆண்டிற்கான மக்கள்தொகைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாட்டுகள் சபையின் 191 உறுப்பினர் நாடுகள் மற்றும் சீனக் குடியரசு, தைவான், வாட்டிக்கன் நகரம் ஆகியவை மட்டுமே எண்வரிசை இட்டுக் காட்டப்பட்டுளது. பிற ஆட்சிப்பகுதிகள் எண்வரிசைப் படுத்தாமல் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளன. Continue reading →

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ஒரு பார்வை

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் ஒரு பார்வை

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் உள்ளடக்கும் பிரதேசங்களை விபரிக்கும் படம்

பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் (ஆதாம் பாலம், Adam’s Bridge) பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம். இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும். Continue reading →

சோனி எரிக்சன் கே 660ஐ

சோனி எரிக்சன் கே 660ஐ
சந்தைக்கு புதுசு
ரூ. பத்தாயிரத்திற்கும் குறைவான விலையில் ஏதாவது ஒரு மாடலை வெளியிட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் அனைத்து மொபைல் நிறுவனங்களும் உள்ளன. இந்திய நடுத்தர மக்களின் மொபைல் ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஈடு செய்திட இந்த அளவிலான விலையில் கட்டாயமாக ஒரு போன் மாடல் ஒவ்வொரு மாதமும் வருகிறது. அவ்வகையில் சென்ற மே மாதம் முதல் வாரத்தில் சோனியால் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் போன் கே 660ஐ ஆகும். Continue reading →

சோனி எரிக்சன் டபிள்யூ 380

சோனி எரிக்சன் டபிள்யூ 380

ஸ்டைலாக மொபைல் போனைப் பயன்படுத்த விரும்பும் இளைஞர்களுக்கான போனாக சோனி எரிக்ஸன் டபிள்யூ 380 வடிவமைக்கப்பட்டுள்ளது. வளைவுகள் இல்லாத முனைகளுடன் இந்த சோனி வெளியாகியுள்ளது. வழக்கமான சோனி அளவில் இல்லாத வண்ணத்திரை 1.9 அங்குல அளவில் உள்ளது. இதன் ரெசல்யூசன் 176 து 220 பிக்ஸெல் என்ற அளவில் இருக்கிறது. வெளியே காணும் வகையில் 128 து 36 என்ற ரெசல்யூசனில் இன்னொரு சின்ன திரை உள்ளது. வெளியே உள்ள டிஸ்பிளே திரையின் கீழாக மூன்று ஆடியோ கீகள் தரப்பட்டுள்ளன Continue reading →

வோடபோன் கடன் தருகிறது

வோடபோன் கடன் தருகிறது


நம் மொபைல் போன் பிரி பெய்ட் அக்கவுண்ட்டில் நிறைய பணம் இருக்கிறது என்று கன்னா பின்னா என்று பேசிக் கொண்டிருப்போம். ஒரு நாள் திடீரென்று முக்கியமான செய்தி குறித்து பேசும்போதுதான் அக்கவுண்ட்டில் உள்ள பணம் தீரப் போகிறது என்று தெரியும். அல்லது தீர்ந்துவிடும். கடைக்குச் சென்று வாங்கும் வரை பேசுவதற்கு என்ன செய்வது.அல்லது கடை அடைத்திருந்தால் என்ன செய்வது? Continue reading →

நோக்கியா புதிய மொபைல் வரிசைகள்

தொடக்க நிலை போன்களாக இரண்டு புதிய போன்களை நோக்கியா விற்பனைக்கு தந்துள்ளது. நோக்கியா 2600 கிளாசிக் மற்றும் நோக்கியா 1209 என இந்த இரண்டு போன்களும் தொடக்க நிலை போன்கள் என்றாலும் பல வசதிகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. Continue reading →

எல்லைகளைக் கடந்த ஏர்டெல்

எல்லைகளைக் கடந்த ஏர்டெல்

வயர்லெஸ் இணைப்பு போன் குறித்து மக்கள் கனவில் மட்டுமே எண்ணிக் கொண்டிருந்த போது தன் தொலைதொடர்பு துறையைத் தொடங்கிய ஏர்டெல் இன்று அதனை நனவாக்கி ஒவ்வொரு இந்தியனின் அன்றாட சாதனமாக மொபைல் போனை மாற்றி சரித்திரமும் சாதனையும் படைத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 லட்சம் இணைப்புகளைத் தரும் நிறுவனமாகத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. Continue reading →

சாம்சங் தரும் நவரத்னங்கள

சாம்சங் தரும் நவரத்னங்கள்
சாம்சங் D 780

3 பேண்ட் இயக்கத்தில் செயல்படும் போனாகும். இதில் இரண்டு சிம் கார்டுகளை இயக்கலாம். சிம் மாற்றிப் பயன்படுத்த கீ பேடில் ஒரு டாகிள் கீ தரப்பட்டுள்ளது. 2.1 அங்குல வண்ணத்திரை,

2 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். அலாரம், எம்பி 3 பிளேயர், இமெயில் வசதி, புளுடூத் மற்றும் புளுடூத் மூலம் பிரிண்டிங் ஆகியவற்றுடன் 11 மணி நேரம் தாங்கக் கூடிய பேட்டரி பேக்கப் வசதியும் கொண்டுள்ளது. Continue reading →

கலோரி “எரிக்க…’ கொழுப்பு குறைய… ட்ரெட்மில், பெடோமீட்டர் கைகொடுக்குது!

கலோரி “எரிக்க…’ கொழுப்பு குறைய… ட்ரெட்மில், பெடோமீட்டர் கைகொடுக்குது!

உடலில் கொழுப்பு சேர்ந்தால், கொலஸ்ட்ரால் அதிகமாகிறது; கொலஸ்ட்ரால் அதிகமானால், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது; அதோடு விடுவதில்லை…சர்க்கரை நோயும் ஆரம்பிக்கிறது. போதாதா…அப்புறம் டாக்டரிடம் அடிக்கடி “விசிட்’ அடிக்க வேண்டும்; தினமும் காலை, இரவில் மாத்திரைகளை பட்டியல் போட்டு விழுங்கத்தான் வேண்டும். இதை அனுபவித்த வருபவர்களுக்கு இதெல்லாம் பழகி விட்டது. என்ன சாப்பிட வேண்டும், எந்த மாத்திரையை விழுங்காவிட்டால் ரத்த அழுத்தம் எகிறும், சர்க்கரை அளவு கூடும் என்பதெல்லாம் அத்துபடி. Continue reading →