உடற் பராமரிப்பு குறிப்புகள்:

.உடற் பராமரிப்பு குறிப்புகள்:
A. தலை முடி உதிர்வு : நம் தலை முடி எந்த அளவுக்கு பாதுகாப் பாக வைக்க வேண்டும் என் பது பலருக்கும் தெரிவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 80 முடிகள் உதிர் கின் றன. அதே சமயம், குறைபாடு இருந் தாலோ, பராமரிப்பு போதாமல் இருந்தாலோ இதை விட அதிகமாக உதிரும்.

இப்போது வெயில் காலம்; பாதுகாக்க வேண்டிய பகுதி தலையும் , தலை முடியும் தான். எப்படி பாதுகாப்பீர்கள்? தலைக்கு தொப்பி அணிந்து வெயிலில் செல்லலாம்; குடை பிடித்தபடி செல்லலாம். கண்டகண்ட ஷாம்பு, கலரிங் கண்டிப்பாக நிராகரியுங்கள்; குழந்தைகளுக்கு இவற்றை கண்ணில் காட்டாதீர்கள். தரமான ஷாம்பு பயன்படுத்துங்கள்.

B . தோல் பராமரிப்பு : உடலுக்கு பாதுகாப்பாக உள்ளது தோல் தான். தோலில் வெளியே பார்ப்பதற்கு தெரியாத வகையில் பல துளைகள் உள்ளது. அதன் வழியாகத்தான் வியர்வை வெளியேறும். தோல் பாதுகாப்புக்கு நல்ல சோப்பு பயன்படுத்த வேண்டும். தோல் அலர்ஜி சாதாரணமாக வராது; வந்துவிட்டால், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். கண்ட கண்ட அழகு சாதனங்களை பயன்படுத்தாமல் இருந்தாலே போதும்

C . 60 கி.மீ., நரம்புகள் : உடல் முழுவதும் உள்ள தோலில் எவ்வளவு நரம்புகள் இருக்கின்றன தெரியுமா? 60 கி.மீ., நீள நரம்புகள். என்னது…என்று வியக்க வேண்டாம். உண்மை தான். பார்க்கத்தான் உடல் சாதாரணமாக தெரிகிறது. உள்ளே ஒரு பெரிய மருத்துவமனையே இயங்குகிறது. அந்த அளவுக்கு உடல் தன்னை பாதுகாத்துக்கொள்கிறது. உணவு, பழக்க வழக்கத்தால் கெடுப்பது நாம் தான். ஒரு சதுர அங்குல தோலில் 30 லட்சம் செல்கள் உள்ளன என்பதும் இன்னொரு வியப்புக்குரிய விஷயும்.

D . குட்டீசுக்கு “எக்சிமா’ : குழந்தைப்பருவத்தில் விளையாட்டுத்தனம் அதிகம் இருக்கும். அதனால் அடிபடுவதும், சொறிசிரங்கு வருவதும் அதிகமாக இருக்கும். ஆனால், அடிக்கடி சொறி சிரங்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். குழந்தைப்பருவத்தில் சொறி, சிரங்கு அதிகமாக வந்த குழந்தைகள் , பெரியவர்களாக வளரும் போது ஆஸ்துமா வரும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிபுணர்கள் ஆய்வில், “குழந்தைப்பருவத்தில் சொறி சிரங்கு அதிகமாக வந்த குழந்தைகளுக்கு தோல் திடத்தன்மை குறைகிறது.

அதனால், சுற்றுச்சூழல் காரணமாக எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால் ஆஸ்துமா வருகிறது’ என்று தெரிவித்தனர். பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளுக்கு தான் இப்படி ஆஸ்துமா வருகிறது என்றும் இவர் கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இப் படிப்பட்ட குழந்தைகளுக்கு ஏழு வயதில் ஆஸ்துமா தொல்லை ஆரம்பிக்கிறது. பெண் குழந்தைகளை பொறுத்தவரை, சொறி சிரங்கு கண்டாலும் அவர்களுக்கு வயதாகும் போது ஆஸ்துமா ஏற்படுவதில்லை; உண் மையில் சொன்னால், ஆஸ்துமா வராமல் தடுப்பதே அது தான் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

E . அடம் பிடிக்காதீங்க! : ஹலோ குட்டீஸ், பால் சாப்பிடுவதென்றால் கடுப்பாக இருக்கிறதா? இனிஅப்படி செய்யாதீர்கள்; சிறிய வயதில் பால் சாப்பிடாவிட்டால், உங்களுக்கு கால்சியம் சத்து குறைந்துவிடும்; எலும்புகள் பாதிப்புஅதிகமாக இருக்கும். தெரிந்ததா? அதனால், மற்ற நேரங்களில் பால் சாப்பிடாவிட்டாலும், காலை, மாலையில் பால் கண்டிப்பாக சாப் பிட வேண்டும்.

இரவு தூங்கப்போகும் போதும் பால் சாப்பிடுவது நல்லது. எலும்புகள் திடமாக இருக்க நமக்கு தேவையான முக்கிய உணவுப்பொருள் பால் தான். அதில் தான் வைட்டமின் “டி’ கால்சியம், மற்றும் சத்துக்கள் உள்ளன. சிறிய வயதில் பால் சாப்பிட்டு எலும்புகள் திடமாக இருந்து விட்டால் போதும், அதன் பின் பெரிய வயதில், கால்சியம் மாத்திரைகளை விழுங்க வேண்டாமே! ஆரஞ்சு பழம், ஜூஸ், காய்கறிகள் ஆகியவற்றில் கால்சியம் சத்து இருந்தாலும், பாலில் இருப்பது போல இல்லை என்று தான் கூற வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களில் உள்ளது போல சத்துக்கள் இல்லை. குழந்தைப்பருவத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு பால் மிக முக்கிய உணவாக உள்ளது.

F . மார்க் தானா வரும்! : இரவு பகல் பார்க்காமல், தூங்காமல் , “டிவி”பார்க்காமல் படித்தால் தான் மதிப்பெண் எடுக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் அதைப்போல பெரும் தவறான கருத்து வேறில்லை. மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை கேட்டால், “டிவி பார்ப்பதை நிறுத்தவே இல்லை’ என்று சொல்வர். படிப்பில் சாதிப்பது என்பது ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தது.

குழந்தைப் பருவத்தில் இருந்தே நல்ல உணவுப்பழக்கத்தை கடைபிடிக்கும் எந்த குழந்தையும் கல்வியிலும் , வேலையிலும் சாதிப்பர் என்று கனடா நாட்டு குழந்தை மருத்துவ நிபுணர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எட்டாவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த ஆறாயிரம் குழந்தைகளின், ஆரம்ப கால உணவுப்பழக்கத்தை ஆராய்ந்தனர். சத்தான உணவு, பழங்கள் சாப்பிட்டு வந்தது கண்டுபிடித்தனர்.

%d bloggers like this: