உயரும் மொபைல் விற்பனை

உயரும் மொபைல் விற்பனை

பன்னாட்டளவில் தொடர்ந்து மொபைல் போன் விற்பனை அதிகரித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 29 கோடியே 43 லட்சம் மொபைல் போன்கள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் மட்டும் 11 கோடியே 44 லட்சம் போன்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26.6% கூடுதலாகும். இந்தியாவும் தென் கொரியாவும் கூடுதல் போன் விற்பனையில் முதல் இடங்களைப் பிடித்துள்ளன. புதிய இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள், புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய குறைந்த விலை போன்கள், குறைந்த விலையில் ஜி.எஸ்.எம் மற்றும் சி.டி.எம்.ஏ. வகை போன்கள் எனப் பல காரணங்கள் இதற்கு துணையாய் இருந்து வருகின்றன என்று இந்த துறையில் மேற்கொ ள்ளப் பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கணக்கெடுக் கப்பட்ட இந்த மூன்று மாதங்களில் புதிய தொழில் நுட்ப வசதி எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

சென்ற ஆண்டில் பல வசதிகள் இவ்வகையில் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மொபைல் போன் தயாரிப்பைப் பொறுத்தவரை தொடர்ந்து பின்லாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நோக்கியா முதல் இடத்தைப் பெறுகிறது. இந்நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையில் தயாரித்து வழங்கிய போன்களின் எண்ணிக்கை 11 கோடியே 52 லட்சமாகும். அடுத்த இடத்தில் சாம்சங் 4 கோடியே 24 லட்சம் போன்களைத் தயாரித்து வழங்குகியது. மூன்றாவது இடத்தில் மோட் டாரோலா 2 கோடியே 99 லட்சம் போன்களுடனும் எல்.ஜி. நான்காவது இடத்தில் 2 கோடியே 36 லட்சம் போன் களுடனும் மற்றும் சோனி ஐந்தாவது இடத்தில் 2 கோ டியே 21 லட்சம் போன்களுடனும் உள்ளன. மற்ற நிறுவனங்கள் 6 கோடியே 11 லட்சம் போன்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளன.

3ஜி போன் இந்த ஆண்டு இறுதிக்குள்

வேகமாகவும் விதம் விதமாகவும் தொலை தொடர்புகளைத் தரவல்ல 3ஜி மொபைல் போன் சர்வீஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கிடைக்கும் என தகவல் தொழில் நுட்ப மத்திய அமைச்சர் ராஜா அறிவித்துள்ளார். 3ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசையைப் பெறுவதற்கான டெண்டரில் வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கு கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

UASL என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த வழி சேவை உரிமம் (Unified Access Service License) பெற்ற நிறுவனங்கள் மட்டுமே 3ஜி ஸ்பெக்ட்ரம் இணைப்பு அலை வரிசைக்கான போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என ட்ராய் அமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த சேவை தரும் லைசன்ஸ் பெற்றவர்கள் தரும் பிராட்பேண்ட் இணைப்பு மூலம் ஒரு இணைப்பில் வாய்ஸ், வீடியோ மற்றும் டேட்டா பரிமாற்றத்தினை மேற்கொள்ள முடியும். எனவே ட்ராய் அமைப்பு 3 ஜி அலைவரிசையினை முதல் கட்டமாக இந்த லைசன்ஸ் பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என எண்ணுகிறது. ஆனால் பொதுவாக இந்திய தொலை தொடர்புத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் 74% மூலதனத்துடன் நிறுவனங்களின் பங்கு கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.

1. C . குரு சீரிஸ் மொபைல்

குரு சீரிஸ் வரிசையில் சாம்சங் மேலும் இரண்டு போன்களை வெளியிட்டுள்ளது. குரு 145 மற்றும் குரு 300 என இந்த இரண்டும் பெயரிடப்பட்டுள்ளன. குரு 145 போன் விலை ரூ. 1,696. வண்ணத்திரை, 8 மணி நேர பேட்டரி பேக் அப், ஸ்பீக்கர் போன், மொபைல் ட்ரேக்கர் ஆகியவற்றுடன் 16 பாலிபோனிக் ரிங் டோன்களுடன் இது கிடைக்கிறது. சாம்சங் குரு 300 ஒரு பிளிப் போன். எப்.எம். ரெகார்டிங் ரேடியோ, எம்பி 3 ரிங் டோன், இந்தி ஆங்கில எஸ்.எம்.எஸ். வசதி, இந்திய காலண்டர், ஜாவா விளையாட்டுக்கள் ஆகிய வசதிகளுடன் ரூ. 2,999 என இந்த போன் விலையிடப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து சாம்சங் குரு மாடல் வரிசையில் குரு 145,குரு 100, குரு200 மற்றும் குரு 300 என நான்கு போன்கள் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ.1,696லிருந்து ரூ. 2,999 வரை உள்ளது. சாம்சங் புதுவகையான மொபைல் போன்கள் மட்டுமின்றி அவற்றிற்கான துணை சாதனங்கள் விற்பனையிலும் இறங்கி உள்ளது. புளுடூத் ஹெட்செட், மோனோ மற்றும் ஸ்டீரியோ போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள், ஹேண்ட்ஸ் பிரீ ஹெட்செட், கார் அடாப்டர் மற்றும் வழக்கமான ஸ்டாண்டர்ட் துணை சாதனங்களை வெளியிட்டுள்ளது.

%d bloggers like this: