எல்.ஜி.யின் புதிய 5 எம்பி கேமரா போன்

எல்.ஜி.யின் புதிய 5 எம்பி கேமரா போன்
கே.சி. 550 என்ற பெயரில் 14 மிமீ தடிமனில் அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் எல்.ஜி. நிறுவனம் புதிய போன் ஒன்றை 5 மெகா பிக்ஸெல் கேமராவுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆட்டோ போகஸ் ஆப்டிக்ஸ் மற்றும் இமேஜ் ஸ்டெபிலைசர் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று பேண்ட்களில் இயங்கும் இந்த போனில் மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, வீடியோ மற்றும் இமேஜ் எடிட்டர், மோஷன் சென்சிடிவ் கேம்ஸ் ஆகியன உள்ளன. இதில் புளுடூத் ஏ2டிபி வசதியுடன் தரப்பட்டுள்ளதால் வயர்லெஸ் ஹெட் செட் இணைத்துக் கேட்கலாம். நெட் இணைப்பினைத் தர எட்ஜ் தொழில் நுட்பம் இணைக்கப் பட் டுள்ளது. மெமரி கூடுதலாக்க மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் தரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.14,700 என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்பட் மொபைல் போன்கள்

கடிகாரங்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் பன்னாட்டளவில் புகழ் பெற்ற ஆர்பட் நிறுவனம் இந்தியாவில் மொபைல் போன்களை விற்பனை செய்வதில் இறங்குகிறது. இதற்கென பிலிப்ஸ் குருப்பைச் சேர்ந்த என்.எக்ஸ்.பி. செமி கண்டக்டர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் போன்கள் ஆர்பட் என்ற பெயரில் வெளியாகும். மிகக் குறைந்த விலையில் தொடக்க நிலையில் இயங்கும் போன்களையும் மல்ட்டி மீடியா போன்களையும் இது தயாரிக்கும். இவை கிராமப் புற மக்களையும் சிறிய நகரங்களில் வாழும் மக்களையும் இலக்கு வைத்து தயாரிக்கப்படும். ஸ்டீரியோ ரெகார்டிங் இணைந்த எப்.எம். ரேடியோ, எம்.பி.3 பிளேயர்,வீடியோ இயக்கம், டிஜிட்டல் கேமரா, யு.எஸ்.பி. சார்ஜ், பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் புளுடூத் ஸ்டீரியோ ஆகிய வசதிகள் மல்ட்டி மீடியா போனில் இருக்கும். இதுவரை மொபைல் போன்கள் செல்லாத கிராமங்களுக்கு இவற்றைக் கொண்டு செல்வதில் தன் முழு கவனத்தையும் ஆர்பட் செலுத்தும் என்று இந்நிறுவன இயக்குநர் நெவில் பட்டேல் குறிப்பிட்டுள்ளார். ஆர்பட் நிறுவனத்திற்கு கடிகாரங்களை விற்பனை செய்திட 80 தனி ஷோ ரூம்களும் 50 ஆயிரம் சில்லரை விற்பனை மையங்களும் இயங்குகின்றன. இந்த நெட்வொர்க்கினை ஆர்பட் மொபைல் போன் விற்பனைக்குப் பயன்படுத்தும்.

%d bloggers like this: