சேஜம் பிளா 453 எக்ஸ் தொலைந்த போனை செயலிழக்க செய்யலாம்

சேஜம் பிளா 453 எக்ஸ்
தொலைந்த போனை செயலிழக்க செய்யலாம்
இந்த போன் தொலைந்து போனால் இதற்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். அதன்பின் அந்த போனை யாரும் பயன்படுத்த முடியாது தொடக்கநிலை போன் வரிசையில் மார்க்கட்டில் அண் மைக் காலத்தில் கலக் கும் போன்களில் சேஜம் பிளா 453 எக்ஸ் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த ஜி.எஸ்.எம். வகை போனில் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. சிறிய கைக்கடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனில் 1.5 அங்குல வண்ணத்திரை 128 து128 என்ற ரெசல்யூசனில் உள்ளது. இதன் வேறு வசதிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. புளுடூத் இணைந்த ஏ2டிபி வசதி உள்ளதால் வயர்லெஸ் இணைப்பில் ஹெட்செட் பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் வசதியுடன் கூடிய விஜிஏ கேமரா உள்ளது. இவற்றுடன் எப்.எம். ரேடியோ மற்றும் எம்பி3 மியூசிக் பிளேயர் தரப்பட்டுள்ளது.

3ஜிபி, ஏ.வி.ஐ. மற்றும் எம்பி4 பார்மட்டுகளை இந்த பிளேயர் கையாள்கிறது. இதில் உள்ள மொபைல் ட்ரேக்கர் நவீன தொழில் நுட்பத்தில் புதிய வகை வசதியுடன் உள்ளது. இந்த போன் தொலைந்து போனால் இதற்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். பின்னர் அந்த போனை எடுத்தவர் / திருடியவர் பயன்படுத்த முடியாது. கூடுதல் மெமரிக்கு மைக்ரோ எஸ்.டி. கார்டினைப் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் குறியிட்ட விலை ரூ. 3,350 மட்டுமே. இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. தொடக்க விலையில் இவ்வளவு வசதிகளுடன் இந்த போன் வடிவமைக்கப்பட்டு கிடைப்பது இதன் சிறப்பு.

%d bloggers like this: