பவர்புல் மல்ட்டி மீடியா ஸ்லைடர்

பவர்புல் மல்ட்டி மீடியா ஸ்லைடர்
சாக்லேட், வியூட்டி, ஷைன் எனப் பல ஸ்பெஷல் மாடல் போன்களை வெளியிட்ட எல்.ஜி. மீண்டும் தன் எல்.ஜி. – கே.எப். 600 போனுடன் மார்க்கட்டை கலக்கி உள்ளது. எல்.ஜி.யிடமிருந்து வந்துள்ள இந்த லேட்டஸ்ட் போன் சிறந்த தோற்றத்துடன் நவீன யூசர் இன்டர்பேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு வண்ணத்தில் சில்வர் லைனிங் மேலாக ஓடும் வகையில் கவர்ச்சியான தோற்றத்தில் இந்த போன் உள்ளது. மற்ற போன்களிடமிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுவது இதன் டிஸ்பிளே ஸ்கிரீன் தான். 3.5 அங்குல திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது

மேலாக 2 அங்குல வழக்கமான திரையும் கீழாக 1. 5 அங்குல திரை டச் ஸ்கிரீன் திரையாகவும் உள்ளது. மற்ற ஸ்லைடர் போன்களில் உள்ளதைப் போல மேலாக உள்ள பேனலில் ஒரு சிறு கீ கூட பதிந்து வைக்கப்படவில்லை. இந்த மேலாக உள்ள பேனலின் கீழாகத்தான் எண்களும் எழுத்தும் கொண்ட கீ பேட் தரப்பட்டுள்ளது. கீழாக இருக்கும் டச் ஸ்கிரீன் நம் விரல்களின் தொடுதலை விரைவாக உணர்ந்து கொள்கிறது. இதன் தன்மை நம்மைச் சில நேரம் ஏமாற்றி மேல் உள்ள திரையையும் தொட்டுப் பார்க்க வைக்கிறது.

இந்த போனில் நிறைய மல்ட்டி மீடியா வசதிகளும் தரப்பட்டுள்ளன. பிளாஷ் இணைந்த 3 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது. இதில் வழக்கமான ஒயிட் பேலன்ஸ் மற்றும் எபக்ட்ஸ் வசதிகளுடன் போர்ட்ரெய்ட் என்ஹேன்ஸ் மென்ட், ஷாட் மோட் மற்றும் ஷேக் நீக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. கீழேயுள்ள திரையை விரலால் தொட்டால் போட்டோ ஸூம் ஆவது நல்ல ஏற்பாடு. மியூசிக் பிளேயர் மற்றும் வீடியோ ரெகார்டர், வாய்ஸ் ரெகார்டர் மற்றும் எப்.எம். ரேடியோவும் சிறப்பாகச் செயல்படுகின்றன. எட்டு வகையான தீம்கள் தரப்பட்டுள்ளன. காக்டெயில் தயாரிப்பது குறித்த வழிகள், தகவல் தாங்கும் பர்ஸ் மற்றும் யோகாசனங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. போன் மெமரி 20 எம்பி என்றாலும் ஒரு ஜிபி வரை கூடுதலாக்க வழி தரப்பட்டுள்ளது. பேட்டரியும் நமக்கு ஏமாற்றம் தராமல் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய் தால் கேமரா,மியூசிக் மற்றும் டச் ஸ்கிரீன் என அனைத்தும் பயன்படுத்தினாலும் ஒரு நாள் முழுவதும் தாங்குகிறது. இதன் மார்க்கட் விலை ரூ.14,990. இதற்கு இணையான போன்கள் என்றால் சோனி எரிக்சன் டபிள்யூ 890 ஐ (ரூ. 14,895) மற்றும் சாம்சங் ஐ–450 (ரூ.13,942) ஆகிய இரண்டையும் காட்டலாம். ஆனால் எதுவுமே டச் ஸ்கிரீன் கொண்டவை அல்ல.

%d bloggers like this: