போல்டர் டூல் பார்

போல்டர் டூல் பார்

சில நாட்களுக்கு முன் தற்செயலாக ஒரு விபத்து போல இதனைக் கண்டுபிடித்தேன். டெஸ்க் டாப்பில் இருந்த போல்டர் ஒன்றை ரீசைக்கிள் பின்னுக்கு இழுத்துச் சென்றேன். குப்பைத் தொட்டியில் போடுவதற்குப் பதிலாக திரையின் மேலாக விட்டுவிட்டேன். ஆச்சரியமான ஒரு விஷயம் நடந்தேறியது. மேலாக ஒரு டூல் பார் தோன்றியது. அதில் அந்த போல்டரில் இருந்த பைல் ஐட்டங்களெல்லாம் காட்டப்பட்டன. உற்றுப் பார்க்கையில் அனைத்து பைல்களும் காட்டப்படுவதனை அறிந்தேன். இன்னும் அருகே தெளிவாக அதனைப் பார்க்கையில் வலது பக்கம் இரு அம்புக் குறிகள் இருப்பதனைப் பார்த்தேன். அதில் கிளிக் செய்த போது அங்கே காட்டப்படாத பைல்களெல்லாம் காட்டப்படுவதனைப் பார்த்தேன். டூல் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் டூல்பார்ஸ் என்பதைத் தேர்ந்தெடுத்தால் அதில் இந்த போல்டரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். உங்களுக்கு இந்த டூல் பார் பிடித்திருந்து ஆனால் தொடர்ந்து அதனைப் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை என்றால் “autohide” என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். என்ன அதிர்ச்சியான சந்தோஷம் பாருங்கள்.

One response

  1. […] போல்டர் டூல் பார் […]

%d bloggers like this: