ரைட் கிளிக் எத்தனை முறை?

ரைட் கிளிக் எத்தனை முறை?

கம்ப்யூட்டர் செயல்பாட்டில் ரைட் கிளிக் என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வசதியாகும். டெஸ்க்டாப்பில் புதிய போல்டர் வேண்டுமா? ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் சென்று புதிய போல்டரைத் தயார் செய்கிறோம். பைல்களின் பெயர்கள் மீது ரைட் கிளிக் செய்து அதனை அழிக்கிறோம்; காப்பி செய்கிறோம்; சேவ் செய்கிறோம்; மறு பெயர் கொடுக்கிறோம். டெக்ஸ்ட் மற்றும் படங்களைத் தேர்வு செய்து அவற்றையும் மேலே சொன்ன அனைத்து செயல்பாடுகளுக்கும் உட்படுத்துகிறோம். இது ஒரு சில தான். எத்தனையோ செயல்பாடுகளுக்கு நாம் ரைட் கிளிக்கினைத்தான் சார்ந்திருக்கிறோம். சரி, உங்கள் மவுஸ் ஒரு நாள் தகராறு செய்து ரைட் கிளிக் பயன்பாட்டை மேற்கொள்ள மறுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு ஏன் சார் இந்த விபரீத ஆசை என்று ஒரு வாசகர் கார்டு எழுத உட்காருவது எனக்குத் தெரிகிறது. எனவே உடனே அதற்கான தீர்வைச் சொல்லிவிடுகிறேன்.

அதாவது ரைட் கிளிக் செய்வதற்குப் பதிலாக மவுஸ் பயன்படுத்தாமல் வேறு ஒரு மாற்று வழி உள்ளது. என்ற பட்டன்களை ஒரு சேர அழுத் துங்கள். நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கான ரைட் கிளிக் மெனு உங்களுக்குக் கிடைக்கும். பின் என்ன? தேவையான செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டியதுதானே. இது ஒரு சரியான ஷார்ட் கட் தீர்வு இல்லையா? மவுஸ் நன்றாக இருக்கும்போதே இதனை ஒருமுறைக்கு இரு முறையாக சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

2 responses

  1. […] ரைட் கிளிக் எத்தனை முறை? […]

  2. அதாவது ரைட் கிளிக் செய்வதற்குப் பதிலாக மவுஸ் பயன்படுத்தாமல் வேறு ஒரு மாற்று வழி உள்ளது. என்ற பட்டன்களை ஒரு சேர அழுத் துங்கள். நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கான ரைட் கிளிக் மெனு உங்களுக்குக் கிடைக்கும்.

    எந்த பட்டன்களை அழுத்த வேண்டும்?

%d bloggers like this: