Daily Archives: ஜூலை 15th, 2008

மைக்ரோசாப்டின் புதிய வெப்கேமரா – ஹெட்செட்

இந்தியாவில் அசூஸ்


தன்னுடைய பிரபலமான பி.டி.ஏ. மொபைல் போனை அசூஸ் நிறுவனம் இந்தியாவிற்கு விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. பி–320 என அழைக்கப்படும் இந்த பி.டி.ஏ.போன் மிக ஸ்டைலாக மொபைல் போனைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புபவர்களுக்கு ஏற்றதாகும். இதில் ஜி.பி.எஸ். நேவிகேஷன், எட்ஜ் / ஜி.பி.ஆர்.எஸ்., மற்றும் வை–பி வசதிகள் தரப்பட்டுள்ளன. 2.6 அங்குல டச் ஸ்கிரீன், 128 எம்பி பிளாஷ் மெமரி, 64 எம்பி டி.டி.ஆர். ராம் மற்றும் 2 எம்பி கேமரா உள்ளன. இதில் ஒரு ஆர்.எஸ்.எஸ். ரீடரும் தரப்பட்டுள்ளது. Continue reading →

சத்தான காய்கறின்னா… என்னென்ன தெரியுமா

சத்தான காய்கறின்னா… என்னென்ன தெரியுமா


காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றனர் டாக்டர்கள். ஆனால், எல்லா காய்கறிகளும், பழங்களும் சத்தானவை என்று சொல்ல முடியாது; நாற்பதை கடந்தால், சிலவற்றை ஒதுக்கி விட வேண்டும். நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் சிலவற்றை தழைகள் என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால், அதில் உள்ள சத்துக்கள் பற்றி அறிவதில்லை. Continue reading →

“ஙே…’ன்னு இருந்தால்…! : ரத்த சோகையாக இருக்கலாம், மருந்தில்லாம குணப்படுத்தலாம்

“ஙே…’ன்னு இருந்தால்…! : ரத்த சோகையாக இருக்கலாம், மருந்தில்லாம குணப்படுத்தலாம்


சிலரை பார்த்தால் “ஙே…’ன்னு இருப்பர்; திடீரென சோர்வடைவர்; தலை கிறுகிறுக்கும்; என்னவென்றே தெரியாமல் திணறுவர். ஆனால், அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் அளவு குறைவாக இருக்கும் என்பது தெரியாது. இப்படி அளவு குறைவாக ரத்த சிவப்பு அணுக்கள் இருந்தால், அனீமியா குறைபாடு உள்ளது என்று பொருள். இதற்காக உடனே “டென்ஷன்’ ஆக வேண்டாம். டாக்டர் சொல்படி, சத்தான உணவுகளை சாப்பிட்டால் போதும்; ஒரு ஆண்டில் ரத்த சோகையை விரட்டி விடலாம்! Continue reading →

கேள்விகளும் பதில்களும்

கேள்விகளும் பதில்களும்

கேள்வி: என் நண்பர் அவரின் விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பில் அட்ரஸ் பார்களில் சிலவற்றிற்கு அந்த முகவரிக்கான எண்களைப் போட்டு வைத்து கிளிக் செய்கிறார். அவருக்கு மட்டும் எப்படி முகவரிக்கான எண்கள் கிடைக்கின்றன? Continue reading →

ஒரே பிரசன்டேஷனில் பல ஸ்லைட் டிசைன்ஸ்

ஒரே பிரசன்டேஷனில் பல ஸ்லைட் டிசைன்ஸ்


ஒரு பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பலர் ஒரே ஒரு ஸ்லைட் டிசைனை மட்டுமே கையாள்வார்கள். ஸ்லைடில் காட்டப்படும் விபரங்கள் முற்றிலும் மாறினாலும் அனைத்து ஒரே வகை ஸ்லைட் டிசைனிலேயே இருக்கும். ஏனென்றால் ஒரே ஸ்லைட் டிசைன்தான் ஒரு பிரசன்டேஷன் பைலில் வர முடியும் என இவர்கள் நம்புவதே இதற்குக் காரணம். வெவ்வேறு ஸ்லைட் பிரசன்டேஷனை ஒரு பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் கொண்டு வர முடியும். அதற்கான வழிகளை இங்கு காண்போம். Continue reading →

அந்நியச் செலவாணி மையம்

அந்நியச் செலவாணி மையம்


வெளிநாடுகளுக்குச் செல்வது, அந்நாட்டு பணத்தில் சம்பாதிப்பது, வெளிநாட்டு கரன்சியை வீட்டில்வைத்திருப்பது எல்லாம் இப்போடு அனைத்து வீடுகளிலும் உள்ள ஒரு பழக்கமாக மாறி வருகிறது.
நகரமானாலும் கிராமமானாலும் பத்து வீடுகளில் ஒன்றில் யாராவது ஒருத்தர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார். வெளிநாடுகளுடனான வர்த்தகம் பெருகும்போதும் சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும் இங்கு வெளிநாட்டு கரன்சி பரிமாற்றம் ஏற்படுகிறது. இந்த வேகத்தில் போனால் மற்ற நாடுகளில் இருப்பது போல நம் ஊர் பெட்டிக் கடைகளில் கூட வெளிநாட்டுக் கரன்சிகளைக் கொடுத்து இந்தியப் பணமாக மாற்றும் காலம் வரும். Continue reading →

வேர்டில் பட குழப்பம் ரீசெட் செய்திடலாமா?

வேர்டில் பட குழப்பம் ரீசெட் செய்திடலாமா?

வேர்ட் டாகுமெண்ட்டில் படத்தை ஒட்டுவது குறித்த பல தகவல்கள் முந்தைய இதழ்களில் வெளியாகியுள்ளன. இருப்பினும் பல வாசகர்கள் இன்னும் டெக்ஸ்ட்டுடன் இணைந்து படம் அமைப்பதில் தடுமாறுகின்றனர். படத்தை நன்றாக அமைத்த பின்னரும் இன்னும் சரியாக அமைக்கலாமே என்று முயற்சிக்கின்றனர். நீட்டிப் பார்க்கின்றனர்; குறுக்கிப் பார்க்கின்றனர். ஒன்றும் சரியாக அமையவில்லை. வந்த மாதிரியே இருந்தால் தேவலாம் என்று பார்க்கிறார்கள். Continue reading →

ஹெல்ப் பக்கத்தின் எழுத்து அளவை மாற்றிட

ஹெல்ப் பக்கத்தின் எழுத்து அளவை மாற்றிட

எக்ஸ்பி சிஸ்டத்தில் அடிக்கடி நாம் தொடர்பு கொள்ளும் பிரிவு அதன் ஹெல்ப் பைல்கள்தான். ஆனால் இவை அளவில் சிறியதாக நம் கண்களைச் சோதிப்பதாக உள்ளது. சில வேளைகளில் இவற்றைப் படித்தறிய முடியாமல் போதுமடா சாமி ! என்று விட்டுவிடும் அளவிற்கு சிறியதாக இருக்கின்றன. இந்த அளவை மாற்றிட முடியுமா? என்று பல வாசகர்கள் கேட்டுள்ளனர். இவர்களுக்கான பதில் எழுத்தின் அளவை மாற்ற முடியும் என்பதுதான். ஆனால் அளவை மாற்றிட சிறிது சுற்றி வளைத்து சில வேலைகளை மேற்கொள்ள வேண்டும். Continue reading →

ஸ்குரோல் வீல் ட்ரிக்ஸ்

ஸ்குரோல் வீல் ட்ரிக்ஸ்

உங்கள் இன்டர்நெட் பிரவுசரில் நிறைய தளங்களைத் திறந்து வைத்து பார்த்து பார்த்து தகவல்களைப் படித்து காப்பி செய்து கொண்டிருக்கிறீர்கள். மவுஸின் ஸ்குரோல் வீலை சுழற்றினால் என்ன நடக்கிறது. பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தில் மேலும் கீழுமாகச் செல்வீர்கள். அப்போது ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு வீலைச் சுழற்றிப் பருங்கள்; சுழற்றும் திசைக்கேற்ப நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளங்கள் அடுத்தடுத்து காட்சி அளிக்கும். Continue reading →

பைலைச் சரியாக அமைக்கும் டிபிராக்ளர்

பைலைச் சரியாக அமைக்கும் டிபிராக்ளர்


அண்மையில் மிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அதுகுறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தக் குறிப்பு. கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் எழுதப்படுகையில் வரிசையாகத்தான் முதலில் எழுதப்படும். காலப் போக்கில் பைல்களை அழித்து அழித்து புதிய பைல்களை எழுதுகையில் அவை ஹார்ட் டிஸ்க்கில் தொடர்ந்த இடத்தில் எழுதப்படாமல் விட்டு விட்டு பல இடங்களில் பிட்டு பிட்டாக எழுதப்படும். ஆனால் கம்ப்யூட்டர் இயக்கம் அவற்றைச் சரியாகக் கோர்வையாகப் படித்து நமக்குத் தரும். இவ்வாறு விட்டு விட்டு பிட்டு பிட்டாக இருக்கும் பைல்களை மீண்டும் சரியாகத் தொடர்ச்சியாக அமைப்பதற்கு உதவிடும் புரோகிரம் தான் டிபிராக் புரோகிராம் ஆகும்.
Continue reading →