அந்நியச் செலவாணி மையம்

அந்நியச் செலவாணி மையம்


வெளிநாடுகளுக்குச் செல்வது, அந்நாட்டு பணத்தில் சம்பாதிப்பது, வெளிநாட்டு கரன்சியை வீட்டில்வைத்திருப்பது எல்லாம் இப்போடு அனைத்து வீடுகளிலும் உள்ள ஒரு பழக்கமாக மாறி வருகிறது.
நகரமானாலும் கிராமமானாலும் பத்து வீடுகளில் ஒன்றில் யாராவது ஒருத்தர் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார். வெளிநாடுகளுடனான வர்த்தகம் பெருகும்போதும் சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும் இங்கு வெளிநாட்டு கரன்சி பரிமாற்றம் ஏற்படுகிறது. இந்த வேகத்தில் போனால் மற்ற நாடுகளில் இருப்பது போல நம் ஊர் பெட்டிக் கடைகளில் கூட வெளிநாட்டுக் கரன்சிகளைக் கொடுத்து இந்தியப் பணமாக மாற்றும் காலம் வரும்.

நான் இங்கே சொல்ல வந்தது அண்மையில் நான் சென்ற வெளிநாடு குறித்து அல்ல; பல நாட்டு கரன்சிகளுக்கான மாற்று விகிதம் குறித்து அறிவிக்கும் ஓர் இணைய தளமாகும்.  Forex Flower  என்ற பெயரில் இயங்கும் இந்த இணைய தளம்  http://www.forexflower.com/ என்ற முகவரியில் இயங்குகிறது. வேகமாக இந்த தளத்தில் அன்றைய நிலவரப்படியான கரன்சி மாற்ற விகிதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டின் கரன்சிக்கான அடுத்த நாட்டு கரன்சி மதிப்பு எனத் தெரிந்து கொள்ளலாம். இந்த தளத்தில் சென்று அங்கு கிடைக்கும் விரியும் மெனு பெட்டியில் எந்த கரன்சிக்கு மாற்று வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து எவ்வளவு என்று அமைக்கவும். தொடக்கத்தில் மெனுவில் 1 என இருக்கும். அடுத்து எந்த கரன்சியில் மதிப்பு வேண் டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்ததாக உள்ள அட்ணிதணt ஞணிது நீங்கள் விரும்பும் கரன்சியில் மதிப்பு காட்டப்படும். அவ்வப்போது உலக அளவில் கரன்சி விகிதங்கள் மாறும்போது இந்த தளத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே அன்றாடம் இந்த தளம் காட்டும் மாற்று கரன்சி மதிப்பை சரியானதாக நீங்கள் எடுத்துக் கொண்டு கையாளலாம். இவை எத்தனை தசம ஸ்தானத்தில் வேண்டும் என்பதனையும் நீங்கள் அமைக்கலாம். இந்த தளத்தின் வலது பக்கத்தில் இந்த தளம் குறித்த செய்திகளைக் காணலாம். அத்துடன் உங்கள் கருத் துக்களை அமைக்கவும் சிறிய பெட்டி தரப்பட்டுள்ளது.உங்களிடம் வெளிநாட்டு கரன்சி இருக்கிறதோ இல்லையோ இந்த தளம் சென்று அது செயல் படுவதைப் பாருங்களேன்.

மைக்ரோசாப்ட் அடிபணிந்தது


விண்டோஸ் எக்ஸ் பி வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு மைக்ரோசாப்ட் அடிபணிந்தது. விஸ்டா வந்தபிறகு அதனை மக்களிடையே கொண்டு செல்ல பல முயற்சிகளை மைக்ரோசாப்ட் எடுத்து வந்தது. மற்ற விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் மக்களிடையே பரவியதைப் போல விஸ்டா பரவவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. குறிப்பாக அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் விஸ்டாவுடன் இணைந்து இயங்காதது ஒரு காரணம்.

இதனால் மக்களைக் கட்டயாமாக விஸ்டா பயன்படுத்த வழி நடத்தும் வகையில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு இனிமேல் மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஆதரவு கொடுக்காது. அதில் பிரச்னைகள் இருந்தால் அதற்கான தொழில் நுட்ப அறிவுரைகளை வழங்காது என அறிவித்தது. ஆனால் உலகின் பல நாடுகளில் இருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சில மாதங்கள் நீட்டிப்பு செய்து மைக்ரோசாப்ட் அறிவிப்பு வழங்கியது. இதனை மீண்டும் மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் உதவி வழங்கிடும் காலத்தினை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இப்போது ஏப்ரல் 2014 வரை செக்யூரிட்டி பேட்ச் பைல்கள் மற்றும் எக்ஸ்பிக்கான அப்டேட் பைல்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் எக்ஸ்பி தொகுப்பு விற்பனை சென்ற ஜூன் 30 உடன் மூடப்பட்டுவிட்டது. இருப்பினும் டெல், எச்பி, லெனோவா மற்றும் பிற முன்னணி நிறுவனங்கள் எக்ஸ்பி தொகுப்பினைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் பதிந்து தர முன்னதாகவே வாங்கி வைத்திருப்பதனால் அவை தீரும் வரை இந்த டீலர்களிடம் கிடைக்கும்.  இன்னொரு அறிவிப்பினையும் மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. விஸ்டா பெற்றவர்கள் மீண்டும் எக்ஸ்பிக்கு மாற வேண்டும் என்றால் அதன் வழியாகவே எக்ஸ்பிக்கு இறங்கிக் கொள்ளும் வழியையும் அறிவித்துள்ளது. விஸ்டாவிற்குப் பெற்ற லைசன்ஸ் இதற்கும் செல்லுபடியாகும். எனவே விஸ்டா வாங்கினால் அவர்கள் எக்ஸ்பி தொகுப்பினை எந்தவித கூடுதல் கட்டணம் இன்றி பயன்படுத்தலாம்.

எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ்

இந்தியாவில் தன் தொழிற்சாலையின் உற்பத்தி யை பல மடங்கு பெருக்கிட எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் முடிவெடுத்துள்ளது.
இங்கிருந்து பெருமளவில் மொபைல் போன்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடவும் திட்டம் கொண்டுள்ளது. அண்மையில் எல்.ஜி. சீக்ரெட் கே.எப்.750 போனை அறிமுகப்படுத்திய விழாவில் இந்த தகவல்கள் தரப்பட்டன. இத்துடன் எல்.ஜி. தயாரிக்கும் புளுடூத் மற்றும் ஹெட்செட் போன்ற மொபைல் துணை சாதனங்களின் உற்பத்தியும் உயர்த்தப்படவுள்ளன. எல்.ஜி. நிறுவனத்திற்கு சீனா, பிரேஸில் மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்தியாவில் புனே அருகே இதன் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு போன்கள் ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இனி ஐரோப்பா மற்றும் பிற மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான போன்கள் இங்கு தயாராகும்.

உலகின் மிகச் சிறிய ட்ரான்சிஸ்டர் வடிவமைப்பு

மிக மிகச் சிறிய ட்ரான்சிஸ்டர் ஒன்றை மான்செஸ்டர் பல்கலை கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். ஒரு மாலிக்யூலைக் காட்டிலும் கொஞ்சம் பெரிய அளவில் இது அமைந்துள்ளது. இதன் மூலம் மிக அதிக வேகத்தில் செயல்படும் சூப்பர் பாஸ்ட் கம்ப்யூட்டர்களை வடிவமைக்கமுடியும். மிக மிக மெல்லிய கிராபீன் என்னும் பொருள் கொண்டு இந்த ட்ரான்சிஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தடிமன் ஒரு அணுவின் அளவிற்கும் அகலம் நான்கு அணுவின் அளவிற்கும் உள்ளது. இந்த ட்ரான்சிஸ்டரே முதல் நானோ பகுதியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் கிராபீன் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பயன்பாடு இன்று முழுமையடைந்துள்ளது. ஒரு சிறிய கிராபீன் கிறிஸ்டலிலிருந்து இதனை உருவாக்கினோம் என்று ஆண் ட்ரூ கெய்ம் மற்றும் கோஸ்ட்யா நோவேசெலவ் அறிவித்துள்ளனர்.

இப்படியும் சிலர்

தொழில் நுட்ப வளர்ச்சியில் அமெரிக்க நாடும் அதன் மக்களும் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். உலகிற்கு கம்ப்யூட்டரையும் இன்டர்நெட்டையும் தந்து இன்று உலக அளவில் இத்துறையில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்கள் அமெரிக்காவில் தான் தலைமையிடத்தைக் கொண்டுள்ளன. ஆனால் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 20 சதவிகித அமெரிக்கர்கள் இமெயில் என்பதைபார்த்ததே இல்லை என்று கூறியுள்ளனர். அதே அளவிலான எண்ணிக்கையிலான மக்கள் எந்த தகவலுக்கும் இன்டர்நெட்டைப் பயன்படுத்தியதே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

One response

  1. […] அந்நியச் செலவாணி மையம் […]

%d bloggers like this: