பைலைச் சரியாக அமைக்கும் டிபிராக்ளர்

பைலைச் சரியாக அமைக்கும் டிபிராக்ளர்


அண்மையில் மிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அதுகுறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தக் குறிப்பு. கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் எழுதப்படுகையில் வரிசையாகத்தான் முதலில் எழுதப்படும். காலப் போக்கில் பைல்களை அழித்து அழித்து புதிய பைல்களை எழுதுகையில் அவை ஹார்ட் டிஸ்க்கில் தொடர்ந்த இடத்தில் எழுதப்படாமல் விட்டு விட்டு பல இடங்களில் பிட்டு பிட்டாக எழுதப்படும். ஆனால் கம்ப்யூட்டர் இயக்கம் அவற்றைச் சரியாகக் கோர்வையாகப் படித்து நமக்குத் தரும். இவ்வாறு விட்டு விட்டு பிட்டு பிட்டாக இருக்கும் பைல்களை மீண்டும் சரியாகத் தொடர்ச்சியாக அமைப்பதற்கு உதவிடும் புரோகிரம் தான் டிபிராக் புரோகிராம் ஆகும்.

இதில் என்ன பிரச்னை என்றால் டிபிராக் செய்கையில் ஹார்ட் டிஸ்க் முழுவதும் அல்லது ஒரு குறிப்பிட்ட டிரைவ் முழுவதும் இந்த பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அளவில் பெரிய பைல் ஒன்றை அமைக்கிறீர்கள். நீங்கள் டிபிராக் செய்து நாள் ஆகிவிட்டது என்றால் நிச்சயமாய் அந்த பைல் பல பிட்டுகளாகத்தான் எழுதப்படும். இந்த பைலை மட்டும் டிபிராக் செய்து சரியாக ஓரிடத்த்தில் அமைக்க முடியுமா? முடியும் என்கிறது அண்மையில் நான் பார்த்த டிபிராக்ளர்  (Defraggler)  என்ற புரோகிராம். இனிமேல் அனைத்து பைல்களையும் நீங்கள் டிபிராக் செய்திடத் தேவையில்லை. குறிப்பிட்ட பைலை மட்டும் இந்த புரோகிராம் மூலம் டிபிராக் செய்து கொள்ளலாம். முழு டிரைவினையும் டிபிராக் செய்திடவும் இந்த புரோகிராம் வழி வகுக்கிறது. இந்த புரோகிராமின் இன்னொரு வசதி என்னவென்றால் இதனை எளிதில் எடுத்துச் செல்லலாம். மிகச் சிறிய கட்டமைப்பில் இது உருவாக்க பட்டுள்ளது. அதனால் ஒரே ஒரு சிறிய எளிய இ.எக்ஸ்.இ. பைலாக இது நமக்குக் கிடைக்கிறது. எனவே இதனை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துச் சென்று எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம். இந்த பைல் 1 எம்பி அளவிலேயே இருக்கிறது.

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எப்படி இந்த அளவிலான சிறிய பைல் டிபிராக் பணியை மேற்கொள்கிறது? என்ற கேள்வி எழலாம். இதற்கு நீங்கள் செயல்முறையிலேயே தெரிந்து கொள்ளலாம். டிபிராக்ளர் புரோகிராமினை முதலில் http://www.defraggler.com/download  என்ற இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். அதன்பின் மற்ற புரோகிராம்களை இயக்குவது போல இயக்குங்கள். அதன்பின் உங்கள் கம்ப்யூட்டரில் எந்த எந்த புரோகிராம்களை அல்லது போல்டர்களை டிபிராக் செய்திட வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் அவற்றை டிபிராக் செய்திட கட்டளை கொடுக்கலாம். டிபிராக்ளர் அந்த பைல்களை டிபிராக் செய்துவிட்டு வெற்றிகரமாக செய்ததாக உங்களுக்கு அறிவிக்கும். டிபிராக் செய்திட முடியாத பைல்களின் பட்டியலைத்தரும். அத்துடன் இன்னும் டிபிராக் செய்யப்பட வேண்டிய பைல்கள் என்று ஒரு பட்டியலையும் தரும். பட்டியலில் உள்ள அந்த பைல்களின் மீது கிளிக் செய்தால் அந்த பைல்கள் எங்கு இருக்கிறது என்பதனையும் அவை ஏன் டிபிராக் செய்யப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும். டிபிராக்ளர் விண்டோஸ் 2000, 2003, எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் செயல்படுகிறது.

அண்மையில் 64 பிட் சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும் டிபிராக்ளர் மாற்றம் செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது. CCleaner  என்ற புரோகிராம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த புரோகிராமினைத் தயாரித்து வழங்கிய  Piriform  என்ற நிறுவனம் தான் இதனையும் தயாரித்து வழங்குகிறது. இந்த இரண்டுமே இலவசம் என்பதை இங்கு நம் வாசகர்களுக்குச் சொல்லத் தேவையில்லை.

%d bloggers like this: