வேர்டில் பட குழப்பம் ரீசெட் செய்திடலாமா?

வேர்டில் பட குழப்பம் ரீசெட் செய்திடலாமா?

வேர்ட் டாகுமெண்ட்டில் படத்தை ஒட்டுவது குறித்த பல தகவல்கள் முந்தைய இதழ்களில் வெளியாகியுள்ளன. இருப்பினும் பல வாசகர்கள் இன்னும் டெக்ஸ்ட்டுடன் இணைந்து படம் அமைப்பதில் தடுமாறுகின்றனர். படத்தை நன்றாக அமைத்த பின்னரும் இன்னும் சரியாக அமைக்கலாமே என்று முயற்சிக்கின்றனர். நீட்டிப் பார்க்கின்றனர்; குறுக்கிப் பார்க்கின்றனர். ஒன்றும் சரியாக அமையவில்லை. வந்த மாதிரியே இருந்தால் தேவலாம் என்று பார்க்கிறார்கள்.

கண்ட்ரோல் + இஸட் அழுத்தலாம் என்றால் எத்தனை முறை அழுத்தி பின்னால் செல்வது என்ற தயக்கம். இருந்த நல்ல நிலையும் போய் சரியாக படம் அமர்ந்திருக்காது. எனவே நாங்கள் அமைத்து பார்த்துவிட்டோம். ஆனால் சரியாக வரவில்லை. எனவே மீண்டும் படத்தை பழைய நிலைக்குக் கொண்டு வர என்ன செய்திட வேண்டும் என கடிதம் எழுதுகின்றனர். இவர்களுக்கான குறிப்புகளை இங்கு தருகிறேன்.
நீங்கள் வேர்ட் 2007 தொகுப்பு பயன்படுத்துபவராக இருந்தால் Picture Tools, Format   ஆகிய மெனுக்களுக்குச் செல்லவும். இவை உள்ள ரிப்பன் நீங்கள் படத்தை அல்லது கிளிப் ஆர்ட்டை செலக்ட் செய்தவுடன் தோன்றும். இடது ஓரத்தில்  Adjust section என்ற பிரிவு இருப்பதனைப் பார்க்கலாம்.

அங்குதான் Reset Picture button  என்ற பட்டன் இருக்கிறது. அதில் கிளிக் செய்தால் படம் பழைய ஒரிஜினல் நிலைக்குத் திரும்பிவிடும். நீங்கள் வேர்ட் 2003 அல்லது அதற்கும் முந்தைய பதிப்பைப் பயன்படுத்துபவராக இருந்தால் படத்தை தேர்ந்தெடுத்தவுடன் ஒரு Picture toolbar  தென்படும். அப்படி ஒரு பிக்சர் டூல் பார் கிடைக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.

படத்தின் மீது ரைட் கிளிக் செய்துவிடவும். பின் கிடைக்கும் மெனுவில்  Show Picture Toolbar  என்பதில் கிளிக் செய்தால் Picture Toolbar  கிடைக்கும். அல்லது View  மெனு சென்று அதில் Toolbars  என்னும் துணை மெனு பெற்று அதில் கடிஞிtதணூஞு என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். எப்படி கிடைத்தாலும் டூல்பார் திறக்கப்பட்டுவிட்டால் மீண்டும் படத்தை பழையபடி அமைத்திட ஒரே ஒரு பட்டன் தான் பாக்கி. அது வலது கோடியில் Reset Picture button  என்ற பெயரில் இருக்கும். அதில் கிளிக் செய்துவிட்டால் முதல் முதலில் படம் எப்படி இருந்ததோ அந்த தோற்றத்தில் இருக்கும்

<span>%d</span> bloggers like this: