Daily Archives: ஜூலை 23rd, 2008

பேஜ் பிரேக் அடிப்படைக் கூறுகள்

பேஜ் பிரேக் அடிப்படைக் கூறுகள்

வேர்ட் தொகுப்பில் மிக முக்கியமான ஒன்று, பக்க பிரிவு ஆகும். இதனை பேஜ் பிரேக் எனக் குறிப்பிடுகின்றனர். எளிதாகக் கூறுவதென்றால் பேஜ் பிரேக் என்பது ஒரு பக்கம் முடிந்து இன்னொரு பக்கம் தொடங்குவதைக் குறிக்கின்றது. இதனை நாமாக மேற்கொள்ள வேண்டியதில்லை. வேர்ட் தொகுப்பு ஒரு பக்கத்தில் டெக்ஸ்ட் அமைந்து முடியும் போது தானாக இந்த இடைவெளியை உருவாக்கி அடுத்த பக்கத்திற்கு டெக்ஸ்ட்டை கொண்டு போய் அமைக்கிறது. இவ்வாறு வேர்ட் அமைக்கும் பக்க பிரிவை சாப்ட் பேஜ் பிரேக் (soft page break)  என்று கூறலாம்.
Continue reading →

தற்காலிக இமெயில் முகவரிகள்

தற்காலிக இமெயில் முகவரிகள்
நமக்கு தொல்லை தரும் வகையில் தொடர்பே இல்லாமல் பல இமெயில்கள் வருகின்றன. அதற்காக நாம் விரும்பும் புரோகிராம்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பொருள்களை ஆன்லைனில் வாங்கிட விரும்புகையில், பயணங்களுக்கான டிக்கட்களை புக் செய்திட எண்ணுகையில் இமெயில் முகவரிகளைத் தராமல் இருக்க முடியாது. Continue reading →

எக்ஸெல் செல்களை வேர்டில் ஒட்ட…

எக்ஸெல் செல்களை வேர்டில் ஒட்ட…

எப்போதாவது எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள செல்களை வேர்ட் தொகுப்பில் கொண்டு சென்று ஒட்ட முயற்சி மேற் கொண்டிருக்கிறீர்களா?  செய்திருப்பீர்கள். இதற்கு ஒர்க் ஷீட்டைத் திறந்து தேவையான செல்களைத் தேர்ந்தெடுத்து பின் வேர்டில் பைல் ஒன்றை உருவாக்கி அதில் அப்படியே பேஸ்ட் செய்திருப்பீர்கள். அதுவும் சரியாக ஒட்டப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் வேர்ட் மற்றும் எக்ஸெல் 97 பயன்படுத்துபவராக இருந்தால் சில பிரச்னைகளைச் சந்தித்திருப்பீர்கள். செல்களை நகர்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல என்று உணர்ந்திருப்பீர்கள். Continue reading →

பயர்வால்கள் எப்படி செயல்படுகின்றன?

பயர்வால்கள் எப்படி செயல்படுகின்றன?

உங்களுக்கும் இன்டர்நெட்டுக்கும் இடையே ஒரு பாதுகாப்பு அரணாக இயங்க வேண்டுவதே பயர்வால் தொகுப்பின் தன்மையாகும். இது உங்கள் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிக்கும் வைரஸ்களை தடுக்கும் செயலை முழுமையாக மேற்கொள்ளவில்லை.  குறிப்பிட்ட சில போர்ட்டுகள் மூலம் வரும் வைரஸ்களை மட்டுமே இதனால் தடுக்க முடியும்.

இன்டர்நெட்டில் நம் கம்ப்யூட்டரை இணைத்து செயல்படுகையில் அது பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்கள் இணைந்த நெட் வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் இந்த Continue reading →

பில் கேட்ஸின் புதிய தளம்

பில் கேட்ஸின் புதிய தளம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவி, உலகின் முதல் பணக்காரராகத் தன்னையும், சாப்ட்வேர் துறையில் முதல் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் நிலைப்படுத்திய பில் கேட்ஸ் சென்ற ஜூன் 27ல் தன் தலைமைப் பதவியிலிருந்து தானாக வெளியேறினார்.

ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டிருந்த படிப்பை பாதியில் விட்டு வெளியேறி, வீடுகளுக்கும் சிறிய அலுவலகங்களுக்கும் கம்ப்யூட்டரை ஓர் இன்றியமையாத சாதனமாக Continue reading →

மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம்

மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டம்

மேக் கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை அந்த கம்ப்யூட்டர் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்பதைக் காட்டிலும் அது எப்படி நம்மை மகிழ்விக்கிறது என்று உணர்வதே ஒரு பெரிய விஷயம். நீங்கள் முற்றிலும் கம்ப்யூட்டருக்குப் தியவர் என்றாலும் மேக் கம்ப்யூட்டரை ஒன்றிரண்டு வாரத்தில் கற்றுக் கொள்ளலாம். வெறும் கருப்பு திரையில் எழுத்துக்கள் மட்டுமே டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டர் அச்சு போல தோன்றி இயங்கியது டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் Continue reading →

நோக்கியா என் 78 புதிய வசதிகள்

நோக்கியா என் 78 புதிய வசதிகள்

நோக்கியா என் 78 மொபைல் போன் குறித்த புதிய தகவல் ஒன்று வெளிவந்துள் ளது. இந்த போன் முதலில் வடிவமைக்கப் பட்ட போது இதில் ஒரு எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர் இருந்தது. இந்த வசதியின் மூலம் இதில் பதிந்து இயக்கப்படும் பாடல்களை ஒரு எப்.எம். ரேடியோவை குறிப்பிட்ட அலை வரிசையில் ட்யூன் செய்து கேட்கலாம். இந்தியாவில் அண்மையில் இந்த போன் விற்பனைக்கு வந்த போது அதில் எப்.எம். ட்ரான்ஸ்மீட்டர் வசதி இல்லை. ஏனென்றால் இந்தியா உட்பட சில நாடுகளில் அரசின் அனுமதி இல்லாமல் எப்.எம். ட்ரான்ஸ் மீட்டர்களை இயக்கக் கூடாது.
Continue reading →

சிஸ்டம் டிப்ஸ்

சிஸ்டம் டிப்ஸ்

மை கம்ப்யூட்டருக்கு புதிய வழி

நாம் எல்லாரும் அடிக்கடி பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பிரிவு மை கம்ப்யூட்டர் ஆகும். ஏனென்றால் இதன் மூலமே நாம் நம் ஹார்ட் டிஸ்க்கை அணுகுகிறோம். சிடி மற்றும் இயக்கி எடுக்கக் கூடிய பிளாஷ் டிரைவ்களையும் அணுகுகிறோம். மை கம்ப்யூட்டர் போல்டரைப் பெற டெஸ்க் டாப்பில் உள்ள அதன் ஐகானைக் கிளிக் செய்கிறோம். Continue reading →

பக்கங்களை வேகமாக நகர்த்த

பக்கங்களை வேகமாக நகர்த்த

உங்களிடம் ஸ்குரோலிங் வீல் உள்ள மவுஸ் உள்ளதா? அப்படியானால் இந்த டிப்ஸை அவசியம் நீங்கள் படிக்க வேண்டும். டாகுமெண்ட்டில் ஒரு இடத்தில் உள்ள நீங்கள் 12 பக்கங்கள் முன்னரோ பின்னரோ உள்ள இடத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள்.

என்ன செய்கிறீர்கள்? வேகமாக பக்கம் தாண்டிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபடுகிறீர்கள். சைட் பாரில் உள்ள கட்டத்தினை அழுத்தி இழுக்கப் பார்க்கிறீர்கள். என்ன ஆகிறது? நீங்கள் எதிர்பார்த்த Continue reading →

வேர்ட் – தெரிந்ததும் தெரியாததும்…

வேர்ட் – தெரிந்ததும் தெரியாததும்…

* வேர்டில் ஒரு டாகுமெண்ட் பைலில் ஒரு சொல் எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டிருக் கிறீர்களா? தொடர்ந்து அதே சொல்லைத் தேட Find and Replace விண்டோவினை திறந்தே வைத்திருக்க வேண்டியதில்லை. ஜஸ்ட் ShiftF4 அழுத்தினால் போதும். தொடர்ந்து அந்த சொல் தேடப்பட்டு முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும். Continue reading →