எம்பி4 பைல்கள்

எம்பி4 பைல்கள்

பலரும் எம்பி 4 பைல் என்பது எம்பி3 பைலின் மேம்படுத்தப்பட்ட ஒரு வடிவம் என்றே எண்ணிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. எம்பி 4 பற்றிய சிறு குறிப்பு இதோ. எம்பி 4 பைல் என்பது சுருக்கப்பட்ட வீடியோ பைலாகும். வீடியோ பைலின் ஒரிஜினல் அளவு மிகப் பெரியதாக இருக்கும் என்பதால் அதனைச் சுருக்கி எடுத்துச் சென்று பின் இயக்குகையில் விரித்து இயக்கும் வகையில் இந்த வடிவம் உருவாக்கப்படுகிறது.

எனவே சுருக்கமாக எம்பி3 என்பது ஆடியோ பைல் என்றும் எம்பி4 என்பது வீடியோ பைல் என்றும் நினைவில் கொள்ளலாம். எம்பி 4 என்பதை MPEG4 AVC என்றும் கூறுவார்கள். இதில் AVC என்பது advanced video coding என்பதன் சுருக்கமாகும்.

எம்பி4 பைல்கள் வீடியோ சம்பந்தப்பட்டது என்பதால் அவை எம்பி3 மியூசிக் மற்றும் ஆடியோ பைல்களைக் காட்டிலும் சிறிது சிக்கலானவை. இருந்தாலும் சில சிறப்பு உத்திகளைப் பயன்படுத்தி அவை சுருக்கப்படுகின்றன. பல்வேறு நிலைகளில் இவை மேற்கொள்ளப்படுகின்றன. நகரும் காட்சிகள் மற்றும் வெவ்வேறான அலைவரிசைகள் என அனைத்தையும் இந்த சுருக்கு வேலைகளில் கையாள வேண் டியுள்ளது. பல நிலைகளில் இந்த பைல்களில் சுருக்கும் வேலை யும் விரிக்கும் வேலையும் மேற் கொள்ளப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் codec என்று சொல்வார்கள்.

நீங்கள் எண்ணலாம்? எம்பி3 பிளேயர் என்று இருக்கையில் எம்பி4 பிளேயர் என்று ஏன் தனியாக இல்லை என்று. இந்த லேபல் தான் பிரபலமாக வில்லையே தவிர இத்தகைய பிளேயர்களும் இருக்கத்தான் செய்கின்றன. எலக்ட்ரானிக் கடைகளில் கேட்டால் தருவார்கள். இதனை வாங்கி டிவி அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்து பயன்படுத்தலாம். எம்பி3 பிளேயரைப் போல இதுவும் எளிது தான்.

மற்ற தொழில் நுட்பங்களைப் போல எம்பி4 தொழில் நுட்பத்திலும் சில நிறைகள் மற்றும் குறைகள் உள்ளன. எம்பி4 மூலம் வீடியோ காட்சிகள் 1 Mbps வேகத்தில் காட்டப்படுகின்றன. இதற்கு உங்களிடம் பிராட்பேண்ட் இணைப்பு இருக்க வேண்டும். எம்பி4 பிளேயர் இதே வேகத்தில் பதிந்த பைல்களை கம்ப்யூட் டருக்கும் டிவிக்கும் அனுப்புகிறது. எம்பி4 பிளேயரில் எம்பி3 பைல் களை யும் இயக்கலாம். குறைகள் என எடுத்துக் கொண்டால் இதிலும் திருட்டுத்தனமாக நகல் எடுக்கும் வேலை எளி தாக மேற்கொள்ளப்படுகிறது. இன்டர்நெட்டில் கிடைக்கும் இன்றைய மூவிக்களே இதற்கு சாட்சி. இருந்தாலும் இதனைத் தடுக்க தொழில் நுட் பத்தைத் தொடர்ந்து வளப்படுத்தி வரு கின்றனர்.

%d bloggers like this: