தேசிய கீதங்களுக்கான வெப்சைட்

தேசிய கீதங்களுக்கான வெப்சைட்


நம் நாட்டின் தேசிய கீதம் நமக்குத் தெரியும். அதே போல ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேசிய கீதம் இருக்குமே. அவற்றை அறிந்து கொள்ள என்றாவது முயற்சி செய்திருக்கிறீர்களா! வெளி நாட்டிற்கு விடுமுறைக்கு அல்லது அலுவல் காரணமாகச் செல்கிறீர்கள். அந்நாட்டின் தேசிய கீதத்தை அறிந்துகொண்டு செல்வது எவ்வளவு நல்ல செயலாக இருக்கும். அது கிடக்கட்டும் விடுங்க.

நம் நாட்டின் தேசிய கீதத்தின் டெக்ஸ்ட் சரியாக உங்களுக்குத் தெரியுமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறும் வகையில் இணைய தளம் ஒன்று இயங்குகிறது. இதன் முகவரி http://david.nationalanthems.net/index.html. இதில் ஏறத்தாழ 400 நாடுகளின் தேசிய கீதங்கள் பதியப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேசிய கீதத்தின் சரித்திரப் பின்னணி தரப்படுகிறது. MIDI வடிவிலான பாடல் பைல் பதியப்பட்டு கிடைக்கிறது. பாடல் எந்த மொழியில் இருந் தாலும் அதன் மொழி பெயர்ப்பு ஆங்கிலத்தில் தரப்படுகிறது.

இந்த தளத்தை ஏற்படுத்தியவர் தான் ஓர் ஆராய்ச்சியாளராகத்தான் இந்த தளத்தை ஏற்படுத்தியதாகவும் எந்த நாட்டிற்கும் முன்னுரிமை தந்து இதனை அமைக்கவில்லை என்றும் அறிவித்துள்ளார். தவறுகள் இருந்தாலும் மாற்றங்கள் தேவைப்பட்டாலும் உடனே தொடர்பு கொண்டு தெரிவித்தால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதில் காணப்படும் தேசிய கீதங்களின் நாடுகளுக்கான பட்டியல் இந்த தளத்தின் இடது பக்கம் அட்டவணையாகத் தரப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பெயரைக் கிளிக் செய்தால் தேசிய கீதம் அந்நாட்டு மொழியிலும் ஆங்கிலத்தில் அதன் மொழியாக்கமும் தரப்பட்டுள்ளது. உடன் தேசிய கீதம் இசைக்கப்படும் பாடலின் டிஜிட்டல் பைலுக்கான லிங்க் உள்ளது.

இதனைக் கிளிக் செய்து பாடப்படுவதனை கேட்கலாம். அல்லது கம்ப்யூட்டரில் சேவ்செய்து எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம். இதே தளத்தில் தேசிய கீதங்கள் குறித்த நூல்கள் மற்றும் சிடிக்கள் குறித்த தகவல்களும் அவற்றிற்கான லிங்க்குகளும் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தில் உள்ள தகவல்களை மேம்படுத்த ஆலோசனை வழங்கி அவை ஏற்றுக் கொள்ளப்படுகையில் உங்கள் பெயரும் இந்த தளத்தில் சம்பந்தப்பட்ட தேசிய கீதப் பக்கத்தில் இடம் பெரும். தளத்தைப் பாருங்கள். பிற நாடுகளின் தேசிய கீதம் எப்படி உள்ளது என்று கண்டறிந்து கொள்ளுங்கள்.

One response

  1. […] தேசிய கீதங்களுக்கான வெப்சைட் […]

%d bloggers like this: