நெட்டில் சில சந்தேகங்களும்… விளக்கங்களும்….

நெட்டில் சில சந்தேகங்களும்… விளக்கங்களும்….

கேள்வி: பயர்பாக்ஸ் தொகுப்பினை இன்டர் நெட் பிரவுசிங்கிற்குப் பயன்படுத்துகிறேன். அதில் உள்ள டேப்டு பிரவுசிங் பயன்படுத் துகையில் வேறு சில புரோகிராம்கள் குறுக்கிடு கின்றன. இதனை எப்படி தடுப்பது? தயவு செய்து உதவிக் குறிப்புகள் தரவும்.

பதில்: என்னைப் போல் தான் நீங்களும். நானும் பயர்பாக்ஸ் பிரவுசர் டேப் பிரவுசிங் தந்த நாளிலிருந்து அதனை விரும்பிப் பயன்படுத்தி வருபவகளில் ஒருவன்.

விண்டோஸ் வந்த நாளில் இருந்து மல்ட்டி டாஸ்க்கிங் எனப்படும் ஒரே நேரத்தில் பலவகை செயல்பாடுகளில் ஈடுபடுவது என்பது கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒரு விரும்பத்தக்க செயலாகத்தான் உள்ளது. வேர்டில் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கையில் விண் ஆம்ப் பாடலும், வந்த இமெயில் பார்த்தலும், அந்த இமெயில் செய்திகளில் ஒன்றில் உள்ள லிங்க் இணைய தளம் திறக்கப்படுவதும் அதே நேரத்தில் முக்கியமான தளச் செய்தி ஒன்று பிரிண்ட் செய்யப்படுவதும், ஆஹா ! எவ்வளவு குஷியாக இவ்வளவும் செய்கிறோமே என்று ஆனந்தப்படுவதில்லையா! அது போல் தான் இதுவும்.

ஆனால் சில நேரங்களில், சிலருக்கு, இது எரிச்சலாக இருக்கலாம். குறிப்பாக நீங்கள் எதிர்பாராத நேரத்தில், ஆசையாக தளம் ஒன்றில் உள்ள தகவல்களைப் படித்துக் கொண்டிருக் கையில் தேவையற்ற தளம் ஒன்று திறக்கப்படு வதும் அதில் உள்ள அனிமேஷன் நம் கவனத்தைத் திருப்புவதும் நீங்கள் விரும்பாத ஒன்றாக இருக்கலாம். எனவே இதனை எப்படி தடுக்கலாம்? முதலில் Tools, Options செல்லுங்கள்.

அடுத்ததாக Advanced என்னும் ஐ கானில் கிளிக் செய்திடுங்கள். இங்கு  Tabbed Browsing  என்னும் பிரிவில் மற்ற லிங்க்குகள் சார்ந்த தளங்கள் எப்படி திறக்கப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்து அதற்கேற்றபடி அமைத்திடுங்கள். புதிய விண்டோவில் திறக்கப்பட வேண்டுமா அல்லது புதிய டேப்பில் திறக்கப்பட வேண்டுமா என்பதனை அங்கு தீர்மானம் செய்திடலாம். தீர்மானித்துவிட்டு தேர்ந்தெடுத்து அமைத்து விட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள்.

கேள்வி: நான் அடிக்கடி பல பாடல்களை இன்டர்நெட்டில் இருந்து எம்பி3 பைல்களாக இறக்கி வைத்திருக்கிறேன். ஆனால் சில தளங் களில் தேர்ந்தெடுத்தவுடன் பாடத் தொடங்கு கிறது. இது ஏன்?

பதில்: பாடலுக்கான லிங்க்கில் நீங்கள் இருமுறை கிளிக் செய்திருப்பீர்கள். அதனால் அது பாடத் தாடங்கியிருக்கும். சிரமமில்லாமல் ஒன்று செய்யலாம். பாடல் பைல் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். மெனு ஒன்று கீழாக விரியும். அதில் Save target as என்று இருக்கும் இடத்தில் அழுத்தினால் உடனே File Save விண்டோ கிடைக்கும். இதனை நீங்கள் ஏதேனும் பெயர் கொடுத்து அதற்குரிய டைரக்டரியில் பதிந்து வைக்கலாம். டைரக்டரியைத் தேடவெல்லாம் நேரம் பிடிக்கும் என்றால் டெஸ்க்டாப்பில் அப்படியே பதிந்து பின் பாட்டிற்கேற்ப வேறு பெயர் கொடுத்து டைரக்டரியில் பதிந்து கொள்ளலாம்.

%d bloggers like this: