பில் கேட்ஸின் புதிய தளம்

பில் கேட்ஸின் புதிய தளம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவி, உலகின் முதல் பணக்காரராகத் தன்னையும், சாப்ட்வேர் துறையில் முதல் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் நிலைப்படுத்திய பில் கேட்ஸ் சென்ற ஜூன் 27ல் தன் தலைமைப் பதவியிலிருந்து தானாக வெளியேறினார்.

ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டிருந்த படிப்பை பாதியில் விட்டு வெளியேறி, வீடுகளுக்கும் சிறிய அலுவலகங்களுக்கும் கம்ப்யூட்டரை ஓர் இன்றியமையாத சாதனமாக உருவாக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவி, உலகின் முதல் பணக்காரராகத் தன்னையும், சாப்ட்வேர் துறையில் முதல் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் நிலைப்படுத்திய பில் கேட்ஸ் சென்ற ஜூன் 27ல் தன் தலைமைப் பதவியிலிருந்து தானாக வெளியேறினார்.

தர்ம சிந்தனையுடன் மற்றவருக்கு உதவும் பணிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். படிப்பை பாதியில் விட்ட தன் பழைய மாணவர் பில் கேட்ஸுக்கு ஹார்வேர்ட் பல்கலைக் கழகம் பின்னாளில் கவுரவ டாக்டர் பட்டம் அளித்து தன்னை உயர்த்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

1955 ஆம் ஆண்டு அக்டோபர் 28ல் பிறந்தவர் பில் கேட்ஸ். இன்று உலகச் சாதனையாளர்களில் ஒருவராக விளங்குவதற்குக் காரணம் அவருடைய தீர்க்கமான எதிர்கால இலக்குகளும் அவற்றை ஈடேற்ற அவர் எடுத்த முயற்சிகளும் தான். தன் 13 ஆவது வயதில் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான புரோகிராமினை எழுதினார். 1975ல் தன் இளம்பிராய நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவினார். தன் எதிர்காலக் கனவான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வளப்படுத்தவே ஹார்ட்வேர்ட் பல்கலையிலிருந்து வெளியேறினார். அப்போதே ஒவ்வொரு வீட்டிலும், அலுவலகத்திலும், பெர்சனல் கம்ப்யூட்டர் தனி ஒரு மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் துணையாக இருந்து மாபெரும் மாறுதலை உண்டு பண்ணும் என்று உறுதியாக நம்பி அதற்கான வழிகளைக் கண்டறிவதில் இறங்கினார்.

முதலில் ஐ.பி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற் கொண்டு அந்நிறுவனத்தின் கம்ப்யூட்டர் இயங்குவதற்குத் தேவையான டாஸ்  (MSDOS Microsoft Disk Operating System)   இயக்கத் தொகுப்பினை வழங்கினார். தான் விற்பனை செய்திடும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஐ.பி.எம். மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் பணம் செலுத்தியது. இதன் மூலம் சாப்ட்வேர் சந்தையில் தனி ஆளாக முதல் இடத்தைப் பிடித்தது மைக்ரோசாப்ட். அது இன்றும் தொடர்கிறது.

1983ல் வேர்ட் தொகுப்பினை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. அப்போதே விண்டோஸ் இயக்கத் தொகுப்பு தயாரிப்பிற்கான அறிவிப்பு வெளியானது. 1985ல் விண்டோஸ் வெளியானது. பின் 10 ஆண்டுகள் கழித்து விண்டோஸ் 95 பலத்த ஆரவாரத்திற்கிடையே வெளியானது. தொடர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 2 வெளியானது. 1999ல் பில் கேட்ஸ் எழுதிய  Business @ the Speed of Thought என்ற நூல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் வர்த்தக நிறுவனங்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் என்று உலகிற்கு எடுத்துச் சொல்லியது. 60 நாடுகளில் 25 மொழிகளில் இன்றும் இந்த நூல் விற்பனையாகிறது.

பலர் பலவிதமாகக் குற்றங்க ளை, குறைகளைத் தெரிவித்தாலும், பல்வேறு இயக்கத் தொகுப்புகள் பெர்சனல் கம்ப்யூட் டர்களுக்கெனத் தோன்றி சிலரால் பயன்படுத்தப்பட்டாலும், விண்டோஸ் இயக்கத் தொகு ப்பு இன்றும் உலகின் பெரும் பான்மையான கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. அதன் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அக்டோபர் 25, 2001ல் விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பு வெளியானது. 2003ல் கரங்களில் வைத்துப்பயன்படுத்தும் சிறிய கம்ப்யூட்டர்களுக் கும் மொபைல் போன்களுக்குமான ஆப்பரேட் டிங் சிஸ்டமான விண்டோஸ் மொபைல் தொகுப்பு வெளியானது. எக்ஸ்பாக்ஸ் 360 என்ற பெயரில் விளையாட்டுகளுக்கான ஒரு பொழுது போக்கு சாதனத்தை உருவாக்கி மைக்ரோசாப்ட் அளித்தது. 2007 ஜனவரி 13ல் விண்டோஸ் விஸ்டா மற்றும் ஆபீஸ் 2007 வெளியானது. மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாகி வளரும்போதே பில் கேட்ஸ் சமுதாய நலப் பணிகளுக்காக பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற பெயரில் ட்ரஸ்ட் ஒன்றை உருவாக்கினார்.

எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரச்சாரம், ஏழ்மை நாடுகளுக்கு உதவி, கம்ப்யூட்டர் கல்வி அளித்தல் எனப் பல்வேறு பிரிவுகளில் அனைத்து நாடுகளுக்கும் இந்த ட்ரஸ்ட் உதவி வருகிறது. அவருடைய  நிறுவனத்தைப் போலவே இந்த தர்ம ஸ்தாபனமும் மிகப் பெரிய அளவிளான நிதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 2006 ஜூன் 15ல் பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து படிப்படியாக விலகி சமுதாய நலப் பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஜூன் 27ல் அந்த முடிவினைச் செயல்படுத்தினார். இருந்தாலும் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல்படா தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார். தொழில் நுட்ப திட்டங்களில் அவ்வப்போது தன்னை ஈடுபடுத்திக் கொள்வார் என்றே தெரிகிறது. அவரை வாழ்த்துவோம்.

இனி அடுத்த வளர்ச்சி எப்படி?

சாதாரண கம்ப்யூட்டரில் தொடங்கி இன்று பிராட்பேண்ட் பயன்படுத்தும் நாள் வரை வந்துவிட்டோம். இனி அடுத்த வளர்ச்சி எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு பில் கேட்ஸ் கூறியது: இன்று கம்ப்யூட்டரால் பார்க்க முடியவில்லை; பேச இயலவில்லை; நாம் பேசுவதைக் கேட்க முடியவில்லை. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் அவை பார்க்கும், பேசும், நாம் பேசுவதைக் கேட்டுச் செயல்படுத்தும். இன்னும் சொல்லப் போனால் இந்த செயல்களில் மனிதர்களைக் காட்டிலும் சிறப்பாகவே ஈடுபடும்.

One response

  1. […] பில் கேட்ஸின் புதிய தளம் […]

<span>%d</span> bloggers like this: