பைல்கள் ஏன் காப்பி ஆகின்றன?

பைல்கள் ஏன் காப்பி ஆகின்றன?

சில வேளைகளில் பைலை இழுத்துச் சென்று பிறிதொரு இடத்தில் வைக்க இழுக்கையில் அந்த பைலுக்கான காப்பி பைல்கள் உருவாவதைப் பார்க்கலாம். பல வாசகர்கள் இதனைக் குறிப்பிட்டு எழுதி இது எதனால் ஏற்படுகிறது? பைலை இழுக்கையில் மேற்கொள்ள வேண்டிய வழிகள் என்ன வென்று கேட்டுள்ளனர்.

பைலை மவுஸ் பிடித்து இழுக்கையில் ஒரே சீராக இழுத்துக் கொண்டே வர வேண்டும். இவ்வாறு இழுக்கையில் இடையே சிறிது நொடிகள் இடைவேளை வந்தாலும் உடனே காப்பி பைலை உருவாக்கும் முயற்சியில் விண்டோஸ் ஈடுபடுகிறது.

அதாவது அப்போது ஒரு பைலை அதன் போல்டரில் கண்டுபிடித்து அதே போல்டரில் அதற்கான காப்பி பைலை உருவாக்க நாம் முயற்சிப்பதாக விண்டோஸ் இயக்கம் எடுத்துக் கொள்கிறது. இதனை எப்படி தவிர்ப்பது எனப் பார்க்கலாம். ஒரு போல்டர் அல்லது டைரக்டரியில் உள்ள நீங்கள் காப்பி செய்ய விரும்பும் பைலைக் கிளிக் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறே வைத்திருக்கவும். இவ்வாறு அழுத்தியவாறே பைல் பட்டியலில் ஆரோவினை அழுத்தி செல்லவும்.

இவ்வாறு அழுத்துகையில் பைல்கள் அனைத்தும் தேர்வு செய்யப்படும். இவற்றின் வண்ணம் வேறாக மாறுவதனை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் இன்னொரு பைலின் இடத்தை அடைகிறீர்கள். அப்போது ஸ்பேஸ் பாரை அழுத்தவும். இவ்வாறு அனைத்து பைல்களும் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறே சி கீயை அழுத்தவும். இப்போது தேர்ந்தெடுக்கப் பட்ட பைல்கள் அனைத்தும் காப்பி ஆகிவிடும். இனி இவற்றை எந்த டைரக்டரி அல்லது போல்டரில் ஒட்ட வேண்டுமோ அங்கு ஒட்டலாம்.

%d bloggers like this: