Daily Archives: ஜூலை 30th, 2008

“நமக்கேன் இந்த வாழ்க்கை…’ என்று சலிக்காமல் மன தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்

“நமக்கேன் இந்த வாழ்க்கை…’ என்று சலிக்காமல் மன தைரியத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள்

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கவே அனைவரும் விரும்புகிறோம். ஆனால், அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதில்லை. பலரும், “எனக்கு மட்டும் ஏன் இந்த கடன் தொல்லை? இந்த வியாதி…’ என்று நம் பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகிறோம். பல நேரங்களில் பிரச்னைகளை நினைத்து கடவுளை நொந்து கொள்கிறோம். ஆனால், நாம் எப்போதாவது, “கடவுளே எனக்கு ஏன் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை? நான் ஏன் இதில் வெற்றி பெற்றேன்? என் தோழிக்கு வந்த அந்த நோய் எனக்கு ஏன் வரவில்லை?’ என்று நினைக்கிறோமா? ஒரு போதும் இல்லை. வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் இரண்டும் இணைந்தது தான். இரண்டையும் சரிசமமாக எண்ண வேண்டும். Continue reading →

பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? : நீங்களும் அழகு ராணி தான்

பருக்கள் உங்கள் அழகை கெடுக்கிறதா? : நீங்களும் அழகு ராணி தான்

பெண்களுக்கு டீன்ஏஜ் வயது தொடங்கிவிட்டாலே, நாம் அழகாக இருக்கிறோமோ இல்லையா என்ற சந்தேகம் வந்துவிடும். கண்ணாடி முன் நின்று அடிக்கடி முகத்தை பார்த்து கொள்வர். முகத்தில் ஒன்றிரண்டு பருக்கள் வந்தாலே போதும், தனது அழகே போய் விட்டதாக எண்ணி மிகவும் வருத்தப்படுவர். டீன் ஏஜில் பருக்கள் வருவது இயல்பு தான். அதை தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம். Continue reading →

என்ன…? எப்படி…? ஏன்?

என்ன…? எப்படி…? ஏன்?

கால் வீங்குவது ஏன்? : அறுவை சிகிச்சைக்கு பின், சிலருக்கு கால் வீங்கி விடும். தொடர்ந்து படுக்கையில் படுத்தபடியே இருப்பவர்களுக்கும் இப்படி பிரச்னை ஏற்படும். இதற்கு பெயர், டீப் வெய்ன் த்ரோம்போசிஸ். கால் நரம்புகளில் ஓடும் ரத்தம் ஒரே இடத்தில் கட்டிவிடுவதால் ஏற்படும் கோளாறு தான் இது. காலில் இப்படி ரத்தம் கட்டிவிடுவதால், மற்ற விரல் பகுதிகளிலும் ஒரு வித இறுக்கம் காணப்படும்; ரத்தம் செல்லாததால் அந்த பகுதிகளும் வீக்கம் காணும். Continue reading →

படுக்கையை நனைப்பது குட்டீஸ் மட்டுமா? : பரம்பரையாகவும் தொடரும்

படுக்கையை நனைப்பது குட்டீஸ் மட்டுமா? : பரம்பரையாகவும் தொடரும்

என்யுரிசிஸ் – படுக்கையை நனைக்கும் கோளாறுக்கு மருத்துவப் பெயர் இது. பெரும்பாலும், குழந்தைகள் தான் படுக்கையை நனைப்பதுண்டு. ஐந்து, ஆறு வயதில் தானாகவே இந்த பழக்கம் நின்று விடும்! அதற்கு பின், பத்து வயது வரை கூட சிலருக்கு படுக்கையை நனைக்கும் பழக்கம் நீடிக்கும். இன்னும் சிலருக்கோ, பெரியவனாக வளர்ந்த பின்பும் கூட, ஏன் திருமணம் ஆன பின்னும் கூட படுக்கையை நனைக்கும் பிரச்னை ஏற்படும்.இதற்கு நோய் பாதிப்பு மற்றும் மரபு வழி தான் காரணம். பரம்பரையாக இருந்தால், அந்த வம்சத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பத்து வயது வரை கூட படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏற்படும். Continue reading →

சந்தேகமும் விளக்கமும் –

சந்தேகமும் விளக்கமும்

கேள்வி : எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சில வேளைகளில் ஓரிரு வரிசைகளில் மட்டும் டேட்டாக்களை அமைத்து ஒர்க் ஷீட் உருவாக்குகிறோம். இதனை பிரிண்ட் செய்கையில் அவை இடது மேல் மூலையில் அச்சிடப்படுவதால் பைல் செய்வது சிரமமாகிறது. இதனை அச்சிடும் பக்கத்தில் நடுவில் அமைக்க முடியுமா?

பதில்: எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் டேட்டாவை சென்டர் செய்து பிரிண்ட் செய்திடக் கேட்கிறீர்கள். இது எளிதுதான். முதலில் அந்த ஒர்க் ஷீட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின் பேஜ் செட் அப் விண்டோவினைத் திறந்து கொள்ளுங்கள். Continue reading →

சுருட்டும் கீ போர்டு

சுருட்டும் கீ போர்டு

2.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் இந்த மல்ட்டிமீடியா வயர்லெஸ் ரோல் அப் யு.எஸ்.பி. கீ போர்டில் தண்ணீர் பட்டால் ஒன்றும் கெட்டுப் போகாது. இதனை உடைக்கவும் முடியாது. தண்ணீர், அமிலம், தூசு மற்றும் அல்கலைன் ஆகியவற்றால் கெட்டுப் போகாத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய கட்டடம் ஒன்றின் பிளான் பேப்பர் எடுத்துச் செல்வது போல கைகளில் சுருட்டி எடுத்துச் செல்லும் வகையில் கீ போர்டு ஒன்று வடிவமைக்கப்பட்டு அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இது விரைவில் இந்தியாவிலும் கிடைக்கும். இது ஒரு வயர்லெஸ் கீ போர்டு. யு.எஸ்.பி.போர்ட்டிலும் இணைத்து செயல்படுத்தலாம். Continue reading →

கூகுள் தேடுதல் சில வழிகள்

கூகுள் தேடுதல் சில வழிகள்

தேடுதல் பிரிவில் இன்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி இயங்கும் இஞ்சின் கூகுள் சாப்ட்வேர் ஆகும். இந்த தேடுதலிலும் விரைவாக நாம் விரும்பும் தேடுதலை மட்டும் மேற்கொள்ளும் சாதனமாக கூகுளை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான சில நடைமுறை வழிகளைப் பார்க்கலாம். 1. மிகச் சரியாக நாம் விரும்பும் சொற்கள் உள்ள இடங்களை மட்டும் கண்டறிய அந்த சொற்களை டபுள் கொட்டேஷன் (“ ”) குறிகளுக்குள் கொடுக்க வேண்டும். எடுத்துக் காட்டாக  Women who love football  என்று கொடுத்தால் 3 கோடியே 46 லட்சம் இடங்களில் உள்ளதாகக் காட்டுகிறது. இதே சொற்களை கொட்டேஷன் குறிப்புகளுக்குள் கொடுத்தால் “Women who love football”  என்று கொடுத்தால் 45,500 இடங்களில் உள்ளதாக முடிவு தெரிவிக்கிறது. இரட்டை மேற்குறிகள் கொடுப்பதன் மூலம் தேவையற்ற முடிவுகளை நாம் நீக்குகிறோம். Continue reading →

குவிந்த ஐகான்களை கிளீன் செய்க

குவிந்த ஐகான்களை கிளீன் செய்க


நம் டெஸ்க் டாப்பில் ரீசைக்கிள் பின் என்னும் குப்பைத் தொட்டி இருந்தாலும் நம்மில் பலர் டெஸ்க் டாப்பையே குப்பைத் தொட்டி போல பயன்படுத்துவார்கள். ஐகான்கள் பல தேவையற்ற நிலையில் குவிந்து கிடக்கும். பயன்படுத்தாமலேயே பல ஐகான்கள் இருக்கும். பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில் அவை அவற்றை இயக்க பல ஐகான்களை உருவாக்கும். சில புரோகிராம்கள் துணையாக வேறு கூடுதல் வசதிக்கான ஐகான்களையும் உருவாக்கி வைக்கும். இவற்றை நாம் பயன்படுத்துவது அரிது. இருந்தாலும் அப்படியே வைத்திருப்போம். Continue reading →

சர்ஜ் புரடக்டர் – கவனிக்க வேண்டிய அம்சங்கள்

ர்ஜ் புரடக்டர் – கவனிக்க வேண்டிய அம்சங்கள்

யு.பி.எஸ். உடனே வாங்க முடியாதவர்கள் அடுத்ததாகத் தங்கள் கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பு என எண்ணுவது சர்ஜ் புரடக்டர் என்னும் சாதனத்தைத்தான். யு.பி.எஸ். உடன் ஒப்பிடுகையில் இது சற்று விலை குறைவு. எனவே வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களில் கணிசமானவை இது குறித்த கேள்விகளோடு வருகின்றன. சர்ஜ் புரடக்டரை வாங்குகையில் என்ன அம்சங்களைக் கவனித்துப் பார்க்க வேண்டும் என இங்கு பார்க்கலாம்.

மின்சாரம் சீராக இல்லாமல் அடிக்கடி வோல்டேஜ் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது கம்ப்யூட்டரில் குறிப்பாக மதர்போர்டிலும் மற்ற துணை சாதனங்களிலும் உள்ள சிறிய Continue reading →

போட்டோ ஷாப் அழகாய்க் கத்துக்கலாம்

போட்டோ ஷாப் அழகாய்க் கத்துக்கலாம்

கற்றுக் கொண்டதைக் கற்றுக் கொடுப்போம் என்ற உயர்ந்த நோக்கத்தை இலக்காய்க் கொண்டு அடோப் போட்டோ ஷாப்பின் அனைத்து நுணுக்கங்களையும் மிகச் சிறப்பாக ஆப்ஜெக்ட் விளக்கங்களோடு தமிழில் தந்துள்ளது எக்ஸ்ட்ரீம் ட்ரெய்னிங் நிறுவனம். இதனை உருவாக்கியவர் மோகன் பாபு. Continue reading →