குவிந்த ஐகான்களை கிளீன் செய்க

குவிந்த ஐகான்களை கிளீன் செய்க


நம் டெஸ்க் டாப்பில் ரீசைக்கிள் பின் என்னும் குப்பைத் தொட்டி இருந்தாலும் நம்மில் பலர் டெஸ்க் டாப்பையே குப்பைத் தொட்டி போல பயன்படுத்துவார்கள். ஐகான்கள் பல தேவையற்ற நிலையில் குவிந்து கிடக்கும். பயன்படுத்தாமலேயே பல ஐகான்கள் இருக்கும். பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில் அவை அவற்றை இயக்க பல ஐகான்களை உருவாக்கும். சில புரோகிராம்கள் துணையாக வேறு கூடுதல் வசதிக்கான ஐகான்களையும் உருவாக்கி வைக்கும். இவற்றை நாம் பயன்படுத்துவது அரிது. இருந்தாலும் அப்படியே வைத்திருப்போம்.

விண்டோஸ் எக்ஸ்பி இது போல பயன்படுத்தாத ஐகான்கள் இருந்தால் அதற்கென ஒரு மெசேஜைக் காட்டி இவற்றை எல்லாம் எடுத்துவிடவா என்று கேட்கும். அப்போதும் நாம் அந்த செயல்பாட்டினைத் தடுத்துவிடுவோம். பயன்படுத்துகிறோமோ இல்லையோ அவை அப்படியே இருக்கட்டும் என விட்டுவிடுவோம். இதனை எப்படி சரி செய்திடலாம். ஐகான்களும் வேண்டும்; ஆனால் திரையும் சுத்தமாகக் காட்சி அளிக்க வேண்டும். இதற்கு ஒரு வழி உள்ளது. டெஸ்க் டாப்பிலேயே ஒரு புதிய போல்டர் ஒன்றை உருவாக்குங்கள்.

இது மிக எளிது. ஐகான்கள் இல்லாத இடத்தில் திரையில் கர்சரைக் கொண்டு சென்று ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் New   கிளிக் செய்து பின் Folder   என்பதைத் தேர்ந்தெடுங்கள். New Folder    என்ற பெயரில் போல்டர்  உருவாகும். இப்போது இந்த போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Rename  என்பதைக் கிளிக் செய்தால் போல்டரின் ஐகான் கீழாக உள்ள பெயரில் கர்சர் நிற்கும். இதில் Unused Icons   என டைப் செய்து என்டர் தட்டுங்கள். புதிய போல்டர் “Unused Icons”   என்ற பெயரைக் கொண்டிருக்கும். பின் இந்த போல்டரைத் திறந்து நீக்க வேண்டிய ஐகான்களை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து புதிய போல்டரில் விட்டு விடுங்கள். இவற்றில் ஏதாவது ஐகானை அழுத்தி புரோகிராம் ஒன்றினை இயக்க வேண்டும் என்றால் போல்டரைத் திறந்து ஐகானில் கிளிக் செய்திடலாம்.

%d bloggers like this: