சர்ஜ் புரடக்டர் – கவனிக்க வேண்டிய அம்சங்கள்

ர்ஜ் புரடக்டர் – கவனிக்க வேண்டிய அம்சங்கள்

யு.பி.எஸ். உடனே வாங்க முடியாதவர்கள் அடுத்ததாகத் தங்கள் கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பு என எண்ணுவது சர்ஜ் புரடக்டர் என்னும் சாதனத்தைத்தான். யு.பி.எஸ். உடன் ஒப்பிடுகையில் இது சற்று விலை குறைவு. எனவே வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களில் கணிசமானவை இது குறித்த கேள்விகளோடு வருகின்றன. சர்ஜ் புரடக்டரை வாங்குகையில் என்ன அம்சங்களைக் கவனித்துப் பார்க்க வேண்டும் என இங்கு பார்க்கலாம்.

மின்சாரம் சீராக இல்லாமல் அடிக்கடி வோல்டேஜ் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது கம்ப்யூட்டரில் குறிப்பாக மதர்போர்டிலும் மற்ற துணை சாதனங்களிலும் உள்ள சிறிய சர்க்யூட் போர்டுகளில் பாதிப்பு ஏற்படலாம். எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களில் சூடு பரவலாம்; மிகப் பெரிய அளவில் மின்சாரம் உயருகையில் சிறிய வெடிப்பு ஏற்படலாம்; குறைவான நிலையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால் சர்க்யூட்களில் நிரந்தரமாக பாதிப்பு ஏற்படலாம்.பல சமயங்களில் இது போன்ற ஏற்றத்தாழ்வு அடிக்கடி ஏற்பட்டு, அதனால் கம்ப்யூட்டரில் எதிர்பாராத மற்றும் விநோதமான செயல்பாடுகள் ஏற்படலாம். திடீரென செயலின்றி உறைந்து போதல், ரீ பூட் ஆதல் மானிட்டரில் இதுவரை கண்டிராத கோலங்கள் என எது வேண் டுமானாலும் நடக்கலாம். இவை எல்லாம் இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்துக் கூறமுடியாதவையாகும். இன்ன வகையில் நடக்கும் என்று கால அல்லது விளைவுகளையும் வரையறை செய்திட இயலாது. அதற்காக கம்ப்யூட் டரில் ஏதாவது எதிர்பாராத செயல்பாடுகள் இருந்தால் (உடனே அது சர்க்யூட் கோளாறு என்று முடிவு செய்துவிடாதீர்கள். மைக்ரோசாப்ட் விண்டோஸ் அதைக் காட்டிலும் கெட்டிக் காரத்தனமாக இது போன்ற செயல்களைச் செய்ய வல்லது.)

நம்மில் பலர் வெளியே இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்தால் உடனே டிவி, கம்ப்யூட்டர், பிரிட்ஜ் போன்ற சாதனங்களுடன் உள்ள மின் இணைப்புகளை எடுத்துவிடுவோம். இவற்றால் மின்சார சப்ளையில் மாற்றம் ஏற்பட்டு சர்க்யூட்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றார். லும் கம்ப்யூட்டரில் பாதிப்பு ஏற்பட இது தேவையில்லை. வீட்டில் உள்ள பிரிட்ஜ், மைக்ரோவேவ் அடுப்பு, ஏர்கண்டிஷனர், எலக்ட்ரிக் அடுப்பு, ஏன் ஹேர் டிரையர் இயக்கம் கூட கம்ப்யூட்டரின் சர்க்யூட்டில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவைகளே. இந்த சாதனங்களைத் தவிர மின்சார டிரான்ஸ் பார்மர்களிலிருந்து அதிக மின்சாரம் இழுப்பதால் (எடுத்துக் காட்டாக அனைவரும் ஏர் கண்டிஷனர் பயன்படுத்தினால்) ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளும் பிரச்னையை ஏற்படுத்தலாம்.
பவர் சர்ஜ் புரடக்டர் வாங்குகையில் குறைந்த விலையில் பிளாட்பாரத்தில் கிடைக்கிறதே என எதனையும் வாங்க வேண்டாம். இவற்றின் வடிவம் தான் சர்ஜ் புரடக்டர் போல இருக்கும். உள்ளே அதன் செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் சாதாரண எக்ஸ்டென்ஷன் பாக்ஸ் போலவே இருக்கும். எனவே இதற்கென பெயர் பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் சர்ஜ் புரடக்டரையே வாங்கவும். இன்றையச் சந்தையில் பல ஐ.எஸ்.ஐ. அத்தாட்சி பெற்ற சர்ஜ் புரடக்டர்கள் கிடைக்கின்றன. விலை ரூ.450 முதல் ரூ.900 வரை இருக்கலாம்.

சர்ஜ் புரடக்டரில் அது இயங்காத போது எரியக் கூடிய சிகப்பு விளக்கு இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் கவனமாக இருக்க முடியும். அடுத்ததாக விற்பனை செய்யப்படும் கடைகளில் சர்ஜ் புரடக்டரைச் சோதனை செய்து காட்டும் சிறிய சாதனம் ஒன்றை வைத்திருப்பார்கள். அவர்களே மின்சக்தியில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி எப்படி சர்ஜ் புரடக்டர்கள் இவற்றைத் தடுக்கின்றன என்று காட்டுவார்கள். அவற்றை நம்பி வாங்கலாம். சர்ஜ் புரடக்டர்களில் ப்யூஸ் இருக்கிறதா என்று பார்க்கவும். பிரச்னை என்று வந்தால் உடனே ப்யூஸ் கட் ஆகும். அதனால் மின்சக்தி ஏற்றத்தாழ்வு உள்ளே சாதனத்திற்குச் செல்லாது. உடனே அதனைச் சரி செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.  சர்ஜ் புரடக்டரிலிருந்து மின்சாரம் பல சாதனங்களுக்குச் செல்லும் வகையில் 5 ஆம்பியர் ப்ளக் அவுட்லெட் தரப்பட்டிருக்கும். இது அளவோடு 3 அல்லது 5 இருக்க வேண்டும். அனைத்திற்கும் தனித்தனியே ஸ்விட்ச் இருப்பது நல்லது. சர்ஜ் புரடக்டருக்கு வாரண்டி எவ்வளவு காலம் என்பதனையும் அதற்கான அட்டை அல்லது ரசீது கேட்டுப் பெறவும்.

%d bloggers like this: