போட்டோ ஷாப் அழகாய்க் கத்துக்கலாம்
கற்றுக் கொண்டதைக் கற்றுக் கொடுப்போம் என்ற உயர்ந்த நோக்கத்தை இலக்காய்க் கொண்டு அடோப் போட்டோ ஷாப்பின் அனைத்து நுணுக்கங்களையும் மிகச் சிறப்பாக ஆப்ஜெக்ட் விளக்கங்களோடு தமிழில் தந்துள்ளது எக்ஸ்ட்ரீம் ட்ரெய்னிங் நிறுவனம். இதனை உருவாக்கியவர் மோகன் பாபு.
படங்களை வரைவது, அழகாக தத்ரூபமாக அமைப்பது, மனதிற்குப் பிடித்த வகைகளில் படங்களை மாற்றுவது ஆகிய பணிகளுக்கு இன்றைய கம்ப்யூட்டர் உலகில் டெக்னீஷியன்கள் விரும்பிப் பயன்படுத்துவது அடோப் போட்டோஷாப் தொகுப்பாகும். இதனைக் கசடறக் கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஏனென்றால் அச்சுத் தொழில், போட்டோ எடிட்டிங் வேலை, படங்களை அமைக்கும் பணி ஆகியவை இன்று பல வகையான செயல்பாடுகளில் தேவையாய் உள்ளன. வீடியோவிற்கான காட்சிகளை அமைப்பதற்கும் இந்த பணிகள் தேவைப்படுகின்றன. ஆனால் இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பைக் கற்றுக் கொள்வது எப்படி? இதற்கென உள்ள பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால் அங்கே கூட்டமாகத்தான் கற்றுக் கொள்ள முடியும்.
பிறரின் முன்னால் நம் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்குக் கூச்சப்படுபவர்க்கு இந்த வகுப்புகள் அவ்வளவாகப் பயன்படாது. இத்தகைய மனப்பாங்கு உள்ளவர்கள் மட்டுமின்றி அடோப் போட்டோஷாப் கற்றுக் கொள்ள முயற்சிப்பவர் அனைவருக்கும் அதன் அனைத்து நுணுக்கங்களையும் பக்கத்தில் ஓர் அண்ணன் போல, நண்பன் போல கற்றுக் கொடுக்கிறது எக்ஸ்ட்ரீம் ட்ரெய்னிங் நிறுவனம் வழங்கியுள்ள இந்த சிடி. உங்கள் கம்ப்யூட்டரில் அடோப் போட்டோ ஷாப் தொகுப்பு இல்லாமலேயே அதனைக் கற்றுக் கொள்ளும் வகையில் இந்த சிடி தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த பிரிவைக் கற்றுக் கொள்ள வேண்டுமோ அதன் மெனு நம் கண் முன் விரிகிறது. கூடவே அந்த பிரிவைப் பயன்படுத்தி ஏதேனும் ஒரு அடோப் ஆப்ஜெக்ட் பைல் செயல்படுத்தப்பட்டு காட்டப்படுகிறது.
உங்கள் நண்பர் அருகே இருந்து சொல்லிக் கொடுத்தால் எப்படி உங்களிடம் பேசி சொல்லிக் கொடுப்பாரோ அதே போல தோழமையுடன் விளக்கம் தருவது இந்த சிடியின் சிறப்பு. அடோப் போட்டோ ஷாப் கற்றுக் கொண்டவர்கள் கூட அதனைப் பயன்படுத்துகையில் ஏற்படும் சந்தேகங் களுக்கு இந்த சிடியைப் போட்டு தெளிவு செய்து கொள்ளலாம். இதன் அண்மைக் கால பதிப்பு அடோப் போட்டோஷாப் சி.எஸ்.3 தொகுப்பாகும். இந்த தொகுப்பை மையப்படுத்தித்தான் இந்த பயிற்சி சிடி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தயாரித்த மோகன்பாபு பாராட்டுக்குரியவர். இதன் விலை ரூ.249 எனக் குறியிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு extremetraining@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதிக் கேட்டுக் கொள்ளலாம்.
போட்டோ ஷாப் CD தேவைபடுபவர்கள் கீழ் கண்ட Email id இல் தொடர்புகொள்ளவும்.
extremetraining@gmail.com
Iwant photoshop cd in tamil.cell no : 9965860761
Hi
I want photoshop tutorial cd in tamil. Can you please send me the details
9688032455
Thanks & Regards
Murugan M
[…] போட்டோ ஷாப் அழகாய்க் கத்துக்கலாம் […]
I want photoshop tutorial cd in tamil. contact cell no.9840953719
i want photoshop tutorial cd in tamil
please mail me how to purchse the CD
hi
sent me details how can i bought that CD
I want photoshop tutorial cd in tamil.
contact cell no. 9655089689
i want photoshop cd- 9840035480. saravanan
I am from Srilanka
I want to Details Please
i want photoshop cd