Monthly Archives: ஓகஸ்ட், 2008

இயற்கையோடு பழகி வர தேக்கடி

இயற்கையோடு பழகி வர தேக்கடி
தமிழக எல்லையில் கேரளப்பகுதியில் அமைந்திருக்கும் அழகான இடம் தேக்கடி. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் எல்லையில் குமுளியையொட்டி கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அமைந்துள்ளது. இயற்கையுடன் கொஞ்சம் பழகிட்டு வரலாமே என நினைப்பவர்களுக்கு எழில் கொஞ்சும் தேக்கடி நல்ல சாய்ஸ்.

வனவிலங்கு சரணாலயம்:

எழில் கொஞ்சும் தேக்கடியில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. 673 சதுர கி.மீ பரப்பளவில் பச்சைப் பசேலென பரந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. யானைகள், பைசன்கள், மான்கள், Continue reading →

அந்தமான் அற்புத தீவு

அந்தமான் அற்புத தீவு

வங்கக்கடல் தனது மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டிருக்கும் வனப்புமிக்க தீவுக்கூட்டம்தான் அந்தமான், நிகோபர். இவை இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. வங்கக்கடலில் வடக்கில் இருந்து தெற்காக சுமார் 700 கி.மீ நீளத்துக்கு விரிந்து கிடக்கும் இந்த தீவுக்கூட்டங்களில் மொத்தம் 36தீவுகளில்தான் மனிதர்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். பிற தீவுகள் அடர்ந்த காடுகளைக் கொண்டவை. இவற்றில் அரிய வகை விலங்குகளும், பறவைகளும், தாவர வகைகளும் நிறையவே உண்டு. அழகு மிளிரும் அந்தமான் நிகோபர் தீவுகளில் கண்டு களிக்க நிறைய இடங்கள் உள்ளன. Continue reading →

அழகு, அமைதி தவழும் புதுச்சேரி

அழகு, அமைதி தவழும் புதுச்சேரி

இந்தியாவின் தெற்கு கடற்கரையில் வங்கக் கடற்கரையில் அமைந்துள்ள அழகான நகரம் புதுச்சேரி. அமைதியான கடற்கரை பகுதிகள், அழகான சாலைகள், நேர்த்தியான தெருக்கள் என புதுச்சேரியின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்ததால் புதுச்சேரியில் பிரெஞ்சு சாயல் அதிகம். யூனியன் பிரதேசமாக இருந்து வரும் புதுச்சேரியின் கட்டுப்பாட்டில் காரைக்கால், ஆந்திர பகுதியில் உள்ள மாஹே மற்றும் கேரளப்பகுதியில் உள்ள ஏனாம் ஆகிய பகுதியும் இருந்து வருகிறது. புதுச்சேரியில் பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன. Continue reading →

மெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர்

மெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர்

நம்மில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வீட்டில் நம் கம்ப்யூட்டரில் நாம் விரும்பும் பிரவுசரில் இணைய உலா வருவோம்; அதில் புக்மார்க் செய்த தளங்களை மட்டுமே பார்ப்போம்.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நம் பிரிய இமெயில் கிளையண்ட் புரோகிராமினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து பயன்படுத்துவோம்.

சரி, அதற்கென்ன என்கிறீர்களா! திடீரென வெளியூர் செல்கிறோம். அல்லது உங்கள் ஊரிலேயே வேறு ஒரு நண்பர் வீட்டிற்குச் செல்கிறோம். அங்கு இன்டர்நெட்டில் ஒன்றை உங்கள் நண்பருக்குக் காட்ட விரும்புகிறீர்கள். நண்பரின் கம்ப்யூட்டரில் வேறு ஒரு பிரவுசர்; பட்டன்களெல்லாம் மாறி இருக்கிறது. புக்மார்க் எல்லாம் எப்படி இருக்கும்? தடுமாறுகிறீர்கள், இல்லையா? அதே போலத் தான் இமெயில் கிளையண்ட் புரோகிராம் மற்றும் வேர்ட் புராசசிங் சாப்ட்வேர் தொகுப்புகளும். Continue reading →

ஆசிய நாடுகளில்தான் அதிக பிராட்பேண்ட்

ஆசிய நாடுகளில்தான் அதிக பிராட்பேண்ட்

இன்டர்நெட்டுக்காக பிராட் பேண்ட் இணைப்பு பெறுவது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான குறியீடு என உறுதி செய்யப்பட்டுள்ளது. தகவல் தேடல் மற்றும் பகிர்ந்து கொள்ள இன்றைய உலகில் இது அடிப்படையான ஒரு தேவையாகும்.

அவ்வகையில் உலக நாடுகளில் ஆசிய நாடுகளில்தான் அதிக அளவில் இன்டர்நெட்டி ற்கான பிராட்பேண்ட் இணைப்பு பயன்படுத்தப்படுகிறது என்று அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு தெரியப்படுத்துகிறது. இவற்றில் முதல் இரண்டு நாடுகளாக இடம் பெற்றிருப்பது தென் கொரியா மற்றும் ஹாங்காங் நாடுகள் தான். 2007 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் 93 சதவிகித மக்கள் பிராட் பேண்ட் இணைப்பு வைத்திருந்தனர். இது வரும் 2012 ஆம் ஆண்டில் 97 Continue reading →

பிராட் பேண்ட் ஹெல்ப் லைன்

பிராட் பேண்ட் ஹெல்ப் லைன்

பிராட் டேண்ட் இன்டர்நெட் இணைப்பு பெறுவது எதிர்பார்த்த அளவில் உயரவில்லை என்றாலும் தொடர்ந்து பலரும் இதற்கு மாறிக் கொண்டுதான் இருக்கின்றனர். பிராட் பேண்ட் இணைப்பிற்கு மாறியபின் அதற்கு அடிமையாகி தினந்தோறும் சில தளங்களைப் பார்க்காவிட்டால், இமெயில்களை செக் செய்யாவிட்டால், நண்பர்களுடன் அரட்டையில் இறங்காவிட்டால் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடுகின்றனர்.

எனவே தான் திடீரென பிராட் பேண்ட் இணைப்பு கிடைக்காவிட்டால் எரிச்சல், கோபம்,ஏன் இரத்த அழுத்தமும் எகிறத் தொடங்குகிறது. 100 நாள் சரியாக இணைப்பு கிடைத்தபின்னர் ஏதேனும் ஒரு நாளில் இணைப்பு கிடைக்கவில்லை என்றால் உடனே “இணைப்பினை தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் சுத்த மோசம்; Continue reading →

. எம்.பி.3 பிளேயர் வாங்கலாமா….

எம்.பி.3 பிளேயர் வாங்கலாமா….

மிக பிரபலமான மியூசிக் சாதனமாகவும் அனைவரும் பயன்படுத்தும் ஒரு எளிதான டிஜிட்டல் பொருளாகவும் இன்று அனைவரிடமும் காணப்படுவது எம்பி3 பிளேயராகும். இவற்றில் பல்வேறு மாடல்கள் பலவகை வசதிகளுடன் இன்று மார்க்கட்டில் கிடைக்கின்றன. ஒரு எம்பி3 பிளேயரை வாங்குவது என்று முடிவெடுத்தால் அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று பார்ப்போமா!! Continue reading →

எக்ஸெல் தொகுப்பில்ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற

    எக்ஸெல் தொகுப்பில்ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற

எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஒர்க் ஷீட்களை அதன் ஒர்க் புக்கில் இடம் மாற்றி வைக்கலாம். வேறு ஒர்க் புக்கிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அப்படியே கொண்டு செல்லலாம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். அதே ஒர்க் புக்கில் ஒர்க் ஷீட்டின் இடத்தை மாற்ற அதற்கான ஷீட் டேபில் கிளிக் செய்திடவும். கிளிக் செய்தவாறே மவுஸை விடாமல் இழுக்கவும். இழுத்து வந்து எந்த இடத்தில் ஒர்க் புக்கினை வைத்திட வேண்டுமோ அந்த இடத்தில் வைத்திட வும். அப்படி இழுக்கையில் எக்ஸெல் சிறிய முக்கோணம் ஒன்றைக் காட்டும். எந்த இடத்திற்கு ஒர்க் புக் இழுத்துச் செல்லப்படுகிறது என்பதைக் காட்டும். இன்னொரு ஒர்க்புக்கிற்கு எப்படி ஒர்க் ஷீட்டை இழுத்துச் செல்வது என்று பார்ப்போம். Continue reading →

பைல்களைப் பாதுகாப்பாக மறைத்து வைத்திட….

பைல்களைப் பாதுகாப்பாக மறைத்து வைத்திட….

நம் செயல்பாடுகளை எல்லாருக்கும் காட்டிக் கொண்டிருக்க முடியாது. நாம் கையாளும் தகவல்கள் பல நமக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்க வேண்டும் என பல நிலைகளில் நாம் முடிவெடுக்கிறோம். ஆனால் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஒரே கம்ப்யூட்டரைப் பலர் பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் நம் தகவல்களை எப்படி பாதுகாப்பாகப் பிறர் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

இது போன்ற மறைத்து வைக்க வேண்டிய செயலை மேற்கொள்ள பல சிறிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை தேர்ட் பார்ட்டி புரோகிராம் என அழைக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்துவது நூறு சதவிகிதம் பாதுகாப்பு எனச் சொல்ல முடியாது.

எனவே விண்டோஸ் இயக்கம் தரும் பாதுகாப்பு வழியை இங்கு காணலாம்.இந்த செயலை மேற்கொள்ள நமக்கு கிடைக்கும் கட்டளை Attrib  என்பதாகும். இந்த சொல் ஒரு பொருளுக்கு நாம் அமைக்கும் பண்பினைக் Continue reading →

கம்ப்யூட்டர் கேள்வி – பதில்களும்

கம்ப்யூட்டர்  கேள்வி – பதில்களும்

கேள்வி: C:/Temp, C:/Windows/Temp போன்ற போல்டர்களில் ஏராளமான பைல்கள் உள்ளன. அவற்றை அழிக்கலாமா?

பதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பல அப்ளிகேஷன்களும் தங்கள் தேவைக்கேற்ப பல தற்காலிக பைல்களை உருவாக்கி இந்த போல்டர்களில் போட்டு வைத்திருக்கும்.

இந்த பைல்களை அவை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது அழிக்க முடியாது; பயன்படுத்தாத பைல்களை அழிக்கலாம். கம்ப்யூட்டர் பூட்டாகும் பொழுது F8 கீயை அழுத்தி Command Prompt மெனுவைத் தேர்வு செய்து டாஸில் நுழையுங்கள். அங்கிருந்து மேற்கூறிய டைரக்டரிகளில் உள்ள பைல்களை அழியுங்கள். அதற்கான கட்டளையைச் சரியான பாத் இணைத்து கொடுக்க வேண்டும். Continue reading →