Daily Archives: ஓகஸ்ட் 6th, 2008

மற்றவர் பார்த்து பொறாமைப்படும் கூந்தல் வேண்டுமா?

மற்றவர் பார்த்து பொறாமைப்படும் கூந்தல் வேண்டுமா?

ஆரோக்கியமே அழகுக்கு அடிப்படை. எனவே, அழகாக இருப்பதற்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அழகு என்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறக்கும் போது ஒருவரின் தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது தான். கூந்தலை பராமரிப்பதற்கான எளிய முறைகளை காணலாம்.

கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்

*ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும்பு சத்து குறைவான உணவு பழக்கவழக்கம்.
* மன உளைச்சல், கோபம், படபடப்பு.
* கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.
* கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது. Continue reading →

.மூட்டு மாற்று ஆபரேஷன் : லேட்டஸ்ட் இது தான்!

.மூட்டு மாற்று ஆபரேஷன் : லேட்டஸ்ட் இது தான்!

* இமூட்டு வலி – வயதானவர்களுக்கு தான் வரும் என்பதெல்லாம் பழைய காலம். இப்போது, குழந்தைகளுக்கு கூட வருகிறது. “லைப் ஸ்டைல்’ மாற்றத்தால், இளம் வயதினருக்கு அதிகமாகவே ஏற்படுகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் எவ்வளவோ முறைகள் வந்தாலும், இப்போது லேட்டஸ்ட்டாக வந்திருப்பது, கம்ப்யூட்டர் திரையில் பார்த்து துல்லியமாக செய்யும் தொழில்நுட்பம் தான். மற்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளில் உள்ள கஷ்டங்கள், இதில் முழுமையாக போக்கப்படுகிறது; எளிதில் சிகிச்சை முடிந்து பழையபடி காலை நீட்டி, மடக்க முடிகிறது. Continue reading →

கேள்விகளும் பதில்களும்

கேள்விகளும் பதில்களும்
கேள்வி: ஒருநாள் நான் கம்ப்யூட்டரில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென ஒரு பாப் அப் விண்டோ வந்தது. அதனை அதுவரை நான் பார்த்தது இல்லை என்பதால் பக்கத்திலிருந்த என் நண்பனிடம் கேட்டேன். அவன் உடனே கம்ப்யூட்டரை ரீ பூட் செய்து கவலைப்படாதே, இதன் பெயர் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்றான். இது குறித்து விளக்கம் தரவும்.

பதில்: புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்பது ஒருவகையான எர்ரர் மெசேஜ் எனப்படும் கம்ப்யூட்டர் இயக்க பிழை செய்தியாகும். இதனை ஸ்டாப் எர்ரர் என்றும் கூறுவார்கள். ஏதேனும் சிஸ்டம் எர்ரர் ஏற்பட்டு அதிலிருந்து எந்த வழியிலும் கம்ப்யூட்டர் மீள முடியவில்லை என்றால் இந்த புளு Continue reading →

கம்ப்யூட்டருக்குள் இருப்பதெல்லாம் சரியா இருக்கா?

கம்ப்யூட்டருக்குள் இருப்பதெல்லாம் சரியா இருக்கா?
கம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருப்போம். இதனுடன் பல துணை சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுஸ் போன்றவை பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா? அல்லது பிரச்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவா ? திடீரென நம் காலை வாரிவிடுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது? அல்லது அவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்கான தன்மையுடன் இயங்குகின்றனவா? என்று எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு இணையம் ஒரு புரோகிராமினைத் தருகிறது.
Continue reading →

ஒன்றுக்கு இரண்டாய் வைரஸ் புரோகிராம்

ஒன்றுக்கு இரண்டாய் வைரஸ் புரோகிராம்

கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்டி வைரஸ் புரோகிராம்களை பின்னணியில் இயக்கலாமா . இதற்கு சுருக்கமாய் பதில் சொல்வதென்றால் “கூடாது; ஒன்றுக்கு இரண்டாய் இத்தகைய புரோகிராம்களை இயக்கக் கூடாது”..’
ஏன்? கூடாது என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் அல்லவா? இதோ. இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர் தான். பொதுவாக யாருமே நாம் வீட்டுக்கு ஒன்றுக்கு இரண்டு, மூன்று எனப் பூட்டு போடுவதில்லையா? அது போல இரண்டு வைரஸ் புரோகிராம் இருந்தால் என்ன? என்று கேட்கலாம். ஒன்றுக்கு அகப்படாத வைரஸ் இன்னொன்றுக்கு அகப்படுமே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் அது சரியல்ல. ஆர்க்யுமெண்ட் சரிதான். ஆனால் கொஞ்சம் உள்ளே பார்த்தால் உண்மை விளங்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ் புரோகிராம்கள் மட்டுமல்ல, ஒரே புரோகிராமின் பல்வேறு பதிப்புகள் இருந்தால் கூட அவை நமக்கு பிரச்னை தரும். அவை என்ன?
1. கம்ப்யூட்டர் மெமரி காலியாகுதே! ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம் ஒரே வேலையைச் செய்தாலும் அவை கம்ப்யூட்டர் மெமரியில் எடுத்துக் கொள்ளும் இடம் அநாவசியம் தானே. இதனால் மற்ற புரோகிராம்களுக்கு மெமரி இடம் கிடைப்பது தடைப்படுகிறதே. Continue reading →

நார்டன் தரும் புதிய தொகுப்புகள்

நார்டன் தரும் புதிய தொகுப்புகள்
வைரஸ்களுக்கு எதிரான தொகுப்புகளைத் தயாரித்து வழங்குவதில் முன்னணியில் இயங்கும் நார்டன் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் தொகுப்புகளின் சோதனைத் தொகுப்புகளை வாடிக்கையாளர்களுக்கென தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

Norton Internet Security 2009  மற்றும் Norton AntiVirus 2009  என இவை அழைக்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ள தொகுப்புகளின் மீதாக ஏறத்தாழ 300 புதிய வசதிகள் இதில் தரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது Continue reading →

உங்கள் நினைவிற்கு -ஷார்ட் கட் கீகள்

உங்கள் நினைவிற்கு ஷார்ட் கட் கீகள்

வேர்ட் தொகுப்பில் நாம் அடிக்கடி மேற்கொள்ளும் சில செயல்பாடுகளுக்கான ஷார்ட் கட் கீகள் –– உங்கள்நினைவில் புதுப்பிக இங்கு தரப்படுகின்றன:

டெக்ஸ்ட் அமைந்த பாராவில்

கண்ட்ரோல் + எல் : பாராவில் உள்ள டெக்ஸ்ட்டை இடது ஓரமாகச் சீராக்கும்
கண்ட்ரோல் + ஆர்: பாராவில் உள்ள டெக்ஸ்ட்டை வலது ஓரமாகச் சீராக்கும்.
கண்ட்ரோல் + இ: பாராவில் உள்ள டெக்ஸ்ட்டை நடு மையமாக மாற்றும்.
கண்ட்ரோல் + ஜே: இடமும் வலதுமாக ஓரம் வரை டைப் செய்யப்பட்ட பாராவில் உள்ள டெக்ஸ்ட்டை இரு புறமும் சீராக உள்ளபடி அமைத்திடும்.

கண்ட்ரோல் + பி: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது இனி டைப் செய்யப்போவதனை அழுத்தமானதாக அமைக்கும்.
கண்ட்ரோல் + ஐ: மேலே சொன்ன டெக்ஸ்ட்டை சாய்வாக அமைக்கும்.
கண்ட்ரோல் + யு: மேலே குறிப்பிட்டுள்ளபடி டெக்ஸ்ட்டின் கீழாக அடிக்கோடிடும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + டி மேலே குறிப்பிட்டுள்ளபடி டெக்ஸ்ட்டில் இரு அடிக்கோடுகள் இடும்.
கண்ட்ரோல் +ஷிப்ட்+ டபிள்யூ: மேலே குறிப்பிட்டுள்ளபடியான டெக்ஸ்ட்டில் சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியை விட்டுவிட்டு அடிக்கோடிடும்.
கண்ட்ரோல் + சமன் குறி (=): தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை சப்ஸ்கிரிப்ட் என்று சொல்லக் கூடிய கீழான சிறிய எழுத்துக்களிலான டெக்ஸ்ட்டாக அமைக்கும்.
கண்ட்ரோல் + கூட்டல் குறி (+): தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை சூப்பர் ஸ்கிரிப்ட் என்று சொல்லக் கூடிய மேலான சிறிய எழுத்துக்களிலான டெக்ஸ்ட்டாக அமைக்கும்.
பாராக்களில் லைன் ஸ்பேசிங்: பாராக்களில் வரிகளுக்கு இடையேயான இடைவெளியை, ஸ்பேஸ், அமைத்திட ஷார்ட் கட் கீகள் உள்ளன. ஒரு வரி ஸ்பேஸ் அமைக்க கண்ட்ரோல் +1 (Ctrl + 1)  தர வேண்டும். இரண்டு வரிகளுக்கு (Ctrl + 2)  மற்றும் ஒன்றரை வரி இடைவெளிக்கு (Ctrl + 5) தர வேண்டும்.

எங்கிருந்து வந்தாய் என் செல்லமே? ஜிமெயில் டிப்ஸ்

எங்கிருந்து வந்தாய் என் செல்லமே? ஜிமெயில் டிப்ஸ்

நீங்கள் கூகுள் தரும் ஜிமெயில் புரோகிராமினை ஆர்வத்துடன் தொடர்ந்து பயன்படுத்துபவரா?
உங்களுக்கு வரும் ஸ்பேம் மெயில் அல்லது புதிய இமெயிலினை அது எங்கிருந்து வந்தது என்று அறிந்து கொள்ள ஆவலா? அப்படியானால் இதனை நீங்கள் நிச்சயமாய்ப் படிக்க வேண்டும். இந்த விபரத்திற்கான அடிப்படை விபரங்கள் இமெயிலின் ஹெடரில் இருக்கும். முதலில் எந்த மெயில் குறித்துத் தெரிய விரும்புகிறீர்களோ அந்த இமெயில் மெசேஜைத் திறந்து கொள்ளவும். அதன்பின் மேலாக வலது மூலையினைப் பார்க்கவும். Continue reading →

மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த

மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த

சில வேளைகளில் மவுஸ் மயக்க மருந்து சாப்பிட்டது போல என்ன செய்தாலும் நகராது. கர்சர் ஒரே இடத்தில் அப்படியே இருக்கும். வெகுநாட்கள் மவுஸைச் சுத்தம் செய்யாமல் விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சிறிய பாகங்கள் மவுஸினுள் மோசமாகிப் போனாலோ அல்லது மவுஸ் சார்ந்த சாப்ட்வேரில் பிரச்னை ஏற்பட்டாலோ இந்த நிலை ஏற்படலாம். அப்போது மவுஸ் கர்சரின் நகர்த்தலை கீ போர்டு மூலம் மேற்கொள்ளலாம். இந்த கீ போர்டு மவுஸ் மூலம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். கீ போர்டு மவுஸை இயக்கத்திற்குக் கொண்டு வரக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும். Continue reading →

Firefox மொஸில்லா டிப்ஸ்

Firefox  மொஸில்லா டிப்ஸ்

பயர்பாக்ஸ் 3 பதிப்பு பெற்ற சாதனை விளம்பரத்திற்குப் பின் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த பிரவுசரைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்

நமக்கு வரும் கடிதங்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன. பல வாசகர்கள் இந்த பிரவுசருக்கான டிப்ஸ் மற்றும் ஷார்ட் கட் கீ தொகுப்புகளைக் கேட்டு எழுதி உள்ளனர். ஏற்கனவே பல ஷார்ட் கட் கீகளுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து இவை தரப்படும். இதோ இங்கே கொஞ்சம் பார்க்கலாம். Continue reading →