உங்கள் நினைவிற்கு -ஷார்ட் கட் கீகள்

உங்கள் நினைவிற்கு ஷார்ட் கட் கீகள்

வேர்ட் தொகுப்பில் நாம் அடிக்கடி மேற்கொள்ளும் சில செயல்பாடுகளுக்கான ஷார்ட் கட் கீகள் –– உங்கள்நினைவில் புதுப்பிக இங்கு தரப்படுகின்றன:

டெக்ஸ்ட் அமைந்த பாராவில்

கண்ட்ரோல் + எல் : பாராவில் உள்ள டெக்ஸ்ட்டை இடது ஓரமாகச் சீராக்கும்
கண்ட்ரோல் + ஆர்: பாராவில் உள்ள டெக்ஸ்ட்டை வலது ஓரமாகச் சீராக்கும்.
கண்ட்ரோல் + இ: பாராவில் உள்ள டெக்ஸ்ட்டை நடு மையமாக மாற்றும்.
கண்ட்ரோல் + ஜே: இடமும் வலதுமாக ஓரம் வரை டைப் செய்யப்பட்ட பாராவில் உள்ள டெக்ஸ்ட்டை இரு புறமும் சீராக உள்ளபடி அமைத்திடும்.

கண்ட்ரோல் + பி: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது இனி டைப் செய்யப்போவதனை அழுத்தமானதாக அமைக்கும்.
கண்ட்ரோல் + ஐ: மேலே சொன்ன டெக்ஸ்ட்டை சாய்வாக அமைக்கும்.
கண்ட்ரோல் + யு: மேலே குறிப்பிட்டுள்ளபடி டெக்ஸ்ட்டின் கீழாக அடிக்கோடிடும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + டி மேலே குறிப்பிட்டுள்ளபடி டெக்ஸ்ட்டில் இரு அடிக்கோடுகள் இடும்.
கண்ட்ரோல் +ஷிப்ட்+ டபிள்யூ: மேலே குறிப்பிட்டுள்ளபடியான டெக்ஸ்ட்டில் சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியை விட்டுவிட்டு அடிக்கோடிடும்.
கண்ட்ரோல் + சமன் குறி (=): தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை சப்ஸ்கிரிப்ட் என்று சொல்லக் கூடிய கீழான சிறிய எழுத்துக்களிலான டெக்ஸ்ட்டாக அமைக்கும்.
கண்ட்ரோல் + கூட்டல் குறி (+): தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை சூப்பர் ஸ்கிரிப்ட் என்று சொல்லக் கூடிய மேலான சிறிய எழுத்துக்களிலான டெக்ஸ்ட்டாக அமைக்கும்.
பாராக்களில் லைன் ஸ்பேசிங்: பாராக்களில் வரிகளுக்கு இடையேயான இடைவெளியை, ஸ்பேஸ், அமைத்திட ஷார்ட் கட் கீகள் உள்ளன. ஒரு வரி ஸ்பேஸ் அமைக்க கண்ட்ரோல் +1 (Ctrl + 1)  தர வேண்டும். இரண்டு வரிகளுக்கு (Ctrl + 2)  மற்றும் ஒன்றரை வரி இடைவெளிக்கு (Ctrl + 5) தர வேண்டும்.

One response

  1. very nice tips thank u.

%d bloggers like this: