கம்ப்யூட்டருக்குள் இருப்பதெல்லாம் சரியா இருக்கா?

கம்ப்யூட்டருக்குள் இருப்பதெல்லாம் சரியா இருக்கா?
கம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருப்போம். இதனுடன் பல துணை சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுஸ் போன்றவை பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா? அல்லது பிரச்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவா ? திடீரென நம் காலை வாரிவிடுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது? அல்லது அவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்கான தன்மையுடன் இயங்குகின்றனவா? என்று எப்படித் தெரிந்து கொள்வது? இதற்கு இணையம் ஒரு புரோகிராமினைத் தருகிறது.

PC Wizard  என்ற இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கினால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். இதனை http://www.cpuid.com/pcwizard.php   என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். உங்களுடைய கம்ப்யூட்டரின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை சிறிது ஆழமாகத் தெரிந்துகொள்ள இந்த புரோகிராம் பயன்படுகிறது. அவற்றின் செயல் திறன் பொதுவான இவற்றின் செயல் திறனுடன் ஒப்பிடுகையில் சரியாக உள்ளதா? என்பதனையும் அறியலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடும். பின் ஒவ்வொரு சாதனமும் எந்நிலையில் இயங்குகின்றன என்று தொழில் நுட்ப ரீதியில் தகவல் தரப்படும். எந்த சாதனங்கள் சரியில்லை என்று கண்டறிந்து இவற்றை எல்லாம் மாற்றிவிடுங்கள் என்று அட்வைஸ் தரும். அப்படியா சேதி! என்று இவற்றை எல்லாம் பார்த்த பிறகு அங்குள்ள  Benchmarks  என்ற பட்டனை அழுத்தவும். இது கீழாக இடது புறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதனங்களுக்கான செயல்திறன் சோதனையை மேற்கொண்டு அதன் பொதுவான தன்மையுடன் ஒப்பிட்டு காட்டும். இவை மட்டுமல்லாது உங்கள் கம்ப்யூட்டர் குறித்த இன்னும் பல தகவல்களையும் சோதனைகளையும் மேற்கொள்ளலாம். பிசி விஸார்ட் புரோகிராமினை இயக்கிப் பார்த்து ரசித்துப் பாருங்கள்.

    ஒரிஜினல் அதே இடத்தில் அப்படியே

எம்.எஸ். வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் பைல்களைக் கையாள்கையில் சில வேளைகளில் பைல் ஒன்றில் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உங்கள் நோக்கம் பழைய பைலை அப்படியே வைத்துக் கொண்டு மாற்றங்களுடனான புதிய பைல் வடிவத்தினை புதிய பெயரில் வைத்திட வேண்டும் என்பது. ஆனால் ஏதோ எண்ணத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் சேவ் அஸ் செல்லாமல் கண்ட்ரோல் + எஸ் கீகளை அழுத்தி ஒரிஜினல் பைலை மாற்றங்களுடன் சேவ் செய்து ஒரிஜினல் பைலை கோட்டைவிட்டுவிடுவீர்கள். இதற்கு தவறே ஏற்படுத்த முடியாத ஒரு வழி ஒன்று உள்ளது.  File  மெனு திறந்து Open  பிரிவு செல்லுங்கள். இந்த விண்டோவில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பைலைத் தேடுங்கள். பைலைக் கண்டுபிடித்தவுடன்  Open   பட்டனை அழுத்தும் முன் சற்று தாமதப்படுத்துங்கள். எப்போதாவது அந்த பட்டனில் கீழ் நோக்கி ஒரு அம்புக் குறி இருப்பதனைப் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது பாருங்கள். இது போன்ற அம்புக் குறி இருப்பது எதனைக் குறிக்கிறது? சம்பந்தப்பட்ட பட்டனுக்கு இன்னும் சில சாய்ஸ் இருப்பதனைக் காட்டுகிறது. இப்போது அந்த அம்புக் குறியினை கிளிக் செய்திடுங்கள்.

ஒரு சிறிய மெனு விரியும். அதில் “Open as Copy” என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் புரோகிராம் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் காப்பி ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். இந்த பைலில் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் எடிட் வேலைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் ஒரிஜினல் பைல் அப்படியே இந்த மாற்றங்கள் இன்றி இருக்கும்.

    வேர்டில் பார் டேப்

வேர்ட் தொகுப்பில் டேப் பயன்படுத்துகையில் பெரும்பாலும் இடது, வலது, சென்டர் மற்றும் டெசிமல் டேப் நிறுத்தங்களைக் கையாண்டிருக்கிறோம். எப்படிப்பட்ட டேப் வரவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க வேர்ட் பிரேமில் இடது மேல் மூலையில் டேப் அடையாளம் இருக்கும். இதன் அருகே கர்சரைக் கொண்டு சென்றால் என்ன வகையான டேப் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது என்று காட்டப்படும். அதனைப் பயன்படுத்தலாம்; அல்லது வேறு வகையான டேப்பிற்கு அதன் மீது கர்சரைக் கிளிக் செய்து தேவையான டேப் கிடைத்தவுடன் அதனைப் பயன்படுத்தலாம்.

டேப்பின் உருவைக் கொண்டு அது இடதா, வலதா அல்லது சென்டரா என்று கவனிக்கலாம். ஆனால் பலர் இவை எதுவும் இல்லாத பார் டேப் என்று ஒன்று இருப்பதனைக் கண்டிருக்க மாட்டார்கள். அது இப்படி காட்சி அளிக்கும்.
இதன் பயன் என்ன? என்ற கேள்வி எழுகிறதா? நானும் உங்களைப் போலத்தான் கேள்வியைக் கேட்டுக் கொண்டு அதனை இயக்கிப் பார்த்தேன். இந்த படம் காட்டும் செயலைத்தான் இந்த வகை டேப் மேற்கொள்கிறது. இந்த டேப்பை எங்கு செட் செய்கிறீர்களோ அந்த இடத்தில் ஒரு நெட்டுக் கோட்டினை இந்த டேப் உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக பார் டேப்பினைத் தேர்ந்தெடுத்து ரூலரில் இரண்டு அங்குல அளவில் இதனை செட் செய்தால் கர்சர் இருக்கும் இடத்தில் ஒரு நெட்டுக் கோடு ஒன்று அமைக்கப்படும். டாகுமெண்ட்டில் இருக்கும் டெக்ஸ்ட் இந்த நெட்டுக் கோடு உருவாவதில் எந்த பிரச்னையையும் ஏற்படுத்துவதில்லை. டெக்ஸ்ட் இந்த கோட்டின் ஊடாகவும் அமைக்கப்படும். இவ்வாறு நெட்டுக் கோடு அமைப்பதனால் நாம் டெக்ஸ்ட்டை அட்டவணை ஏற்படுத்தாமலேயே ஓர் ஒழுங்குக்குக் கொண்டு வரலாம். டேப்களை இடம் மாற்றுவது போல இதனையும் மாற்றலாம். இந்த கோடுகளைக் கொண்டு டெக்ஸ்ட் அமைத்தபின் அல்லது இந்த கோடுகள் தேவையில்லை என்று உணர்ந்த பின் இவற்றை நீக்கிவிடலாம். இந்த கோட்டினைக் கொண்டு பல்வேறு செயல்பாடுகளை டெக்ஸ்ட் அமைப்பதில் மேற்கொள்ளலாம். செயல்படுத்திப் பாருங்கள். இதன் பல்வேறு பயன்பாடுகள் புரிய வரும்..

    வரிசை எண்ணுக்கு பிரேக் கொடுக்க

வேர்ட் டாகுமெண்ட்டில் அல்லது பிரசன்டேஷன் ஸ்லைட்களில் வரிசையாக 1,2,3 அல்லது  a, b, c   என அமைக்கும்போது தானாக இந்த வரிசை எண்கள் அல்லது வரிசையான எழுத்துக்கள் அமைக்கப்படும். ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் ஒரு பிரேக் கொடுத்து புதிய வரிசையிலோ அல்லது லைன் ஸ்பேஸ் பிரேக் கொடுத்து அதே வரிசையைத் தொடரவோ திட்டமிடலாம்.

எடுத்துக் காட்டாக

1. Item A
2. Item B
3. Item C
4. Item D
5. Item E

என அமைக்கலாம்.
இந்த பிரேக் அமைத்திட என்ன செய்கிறீர்கள்? புல்லட் அல்லது நம்பரிங் வசதியை எடுத்துவிட்டு பின் நோக்கிச் சென்று ஒரு லைன் ஸ்பேஸை உருவாக்கிப் பின் மீண்டும் அமைக்கிறீர்கள். எண்கள் தொடர்ந்து வர வேண்டும் என்றால் மீண்டும் அந்த எண்ணுக்கு புல்லட் லிஸ்ட்டைத் தயார் செய்கிறீர்கள். தலைவலி தரும் வேலை தானே! இந்த சுற்று வழி தேவையில்லை. இன்னொரு வேகமான வழி உள்ளது. ஷிப்ட் கீயைப் பயன்படுத்துவதுதான். எங்கு இடைவெளி லைன் ஸ்பேஸ் தேவைப்படுகிறதோ அங்கு ஷிப்ட் + என்டர் கீகளை அழுத்தவும். அது அடுத்த வரியை தொடர் எண் அல்லது புல்லட் இல்லாமல் டேட்டாவினை அமைத்திட உதவும். இப்போது மீண்டும் என்டர் கீயை அழுத்துங்கள். ஒரு லைன் ஸ்பேஸ் கொடுத்து மீண்டும் அதே புல்லட் அல்லது தொடர் எண்ணோடு பட்டியல் அமைத்திட வழி கிடைக்கும். எவ்வளவு எளிது என்பதை நீங்கள் வேகமாக இது போன்ற பணிகளில் ஈடுபடும் போதுதான் தெரியும்.

%d bloggers like this: